சாமி புத்தகம் – எண்ணத்தின் தோற்றமும் எண்ணத்தின் இயக்கமும்
(பக்கம் 6- 12)
நாம் ஒரு குழம்பு வைக்கக் காரம், புளிப்பு, துவர்ப்பு, உப்பு என்று பலவிதமான
சுவைகளைக் கலந்து தயாரிக்கின்றோம். நாம் குழம்பு வைக்கும் பொழுது, எந்தப் பொருளை அதிகமாகச்
சேர்க்கின்றோமோ, அதாவது மிளகாய் அதிகமாக இருந்தால், மிளகாயின் காரத்தைக் காட்டும்.
உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால், உப்பின் குணத்தைக் காட்டும். அதற்குள் மற்றதையெல்லாம்
சுவையற்றதாக்கி, இந்தச் சுவையே முன்னிலையில் நிற்கும்.
இதைப் போல, பிறர் செய்யும் தவறான உணர்வுகளை நாம் அடிக்கடி பார்க்க நேர்ந்தால்,
அந்த உணர்வின் தன்மை நம் ஆன்மாவில் கலந்துவிடும். ஆன்மாவில் கலந்தவுடன், அன்றைய தினம்,
அவரைக் கோபமாகப் பேசுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம்
கோப உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
அப்பொழுது, ஆன்மாவிலிருக்கும் மற்ற குணங்களுடன் கலந்து, நம் உயிருடன் இணைக்கப்படும்
பொழுது, நம் உடலில் உள்ள கணங்களுக்கு (குணங்களுக்கு) அதிபதியாகிச் செயல்படுகின்றது.
மற்ற உணர்வின் மணங்களை, இது ஒடுக்கிவிடுகின்றது.
பின்னர், அதனின் உணர்வு செயல்பட்டாலும், அந்த உணர்வுகள் அனைத்தும், நம் உடலுக்குள்
இருக்கும் கார குணம், கசப்பான குணம், சங்கடமான குணம், அதிலே கார குணம் அதிகமாகவே எடுத்துக்
கொள்ளும்.
குழம்பில் காரம் அதிகமானால், அனைத்துச் சுவையையும் கெடுத்து, கார உணர்ச்சியைக்
தூண்டுகின்றது. பிறர் செய்யும் தவறின் நிலைகளைப் பார்க்கும் பொழுது, நம் நல்ல உணர்வுக்குள்
கோபம் ஏற்பட்டால், நமக்குள் கார உணர்ச்சிகளைத் தூண்டி, நம்மிடம் நல்ல குணங்களை இயங்கவிடாது,
செய்து விடுகின்றது.
அவ்வாறு, செயல்படுத்தும் கார நிலை, நம் உடலுக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து,
மற்ற குணங்களைச் செயலற்றதாக்கி, இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சுவாசிக்கின்றோம்.
நம் ஆகாரத்தில், அந்தக் காரமான சுவையே
கேட்கும். காரம் அதிகமானால்தான், ருசியே இருக்கும். கோபமாகப் பேசும் குணம் கொண்டவர்களுக்கு,
அடிக்கடிக் கோபமாகப் பேசினால்தான், ரசிப்பே இருக்கும்.
அந்தக் காரமான உணர்ச்சிகள் நமக்குள் இணைந்து, யாராவது ‘சுருக்’ என்று சொன்னால்
போதும், கார உணர்ச்சிகள் அங்கே விளைந்து,
உடனே சண்டை வரும்.
அந்த உணர்வின் தன்மை கொண்டு, சண்டை போடுவதே ரசனையாகும்.
ஏன் சண்டை போடுகிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது.
உணர்வின் இயக்கமாக அது இயக்குகின்றது. தவறு செய்யவில்லை. சண்டை போடுபவர்களை
வேடிக்கைப் பார்த்துப் பார்த்து, கார உணர்ச்சிகள் நமக்குள் ஏற்பட்டு, ஆன்மாவில் பெருகி,
அதனின் உணர்வை அது வளர்க்கத் தொடங்கிவிடும்.
இவ்வாறு அது செய்தாலும், அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படர்ந்து, கார உணர்வுகள்
அதிகமாகப் பெருக்கமாகும் பொழுது, இரத்த அழுத்த நோய் வருகின்றது.
காரத்தைச் சாப்பிட்டால், நாம் எப்படி “ஆ” என்று அலறுகிறோமோ,
இதைப் போல, இந்த உணர்வின் அழுத்த நிலைகள்,
நமது உடலில் வேகமாக ஓடும்.
கவன நரம்புகளில் தாக்கப்படும் பொழுது,
‘கும்’ என்று சிரசில் நரம்பு புடைத்துவிடும்.
அவர் எண்ணிய நிலைகள் சிறிது மாறினால் போதும், உடனே கோபம் தன்னை அறியாமல் வரும்.
உடல் முழுவதற்கும் நடுக்கமாகும்.
கார உணர்ச்சிகள் வரும்பொழுது,
இரத்தத்தை இருதய
வால்வுகள் இழுக்கப்படும் பொழுது, அதனால், நெஞ்சு எரிச்சலாகும். நாம் எதையெடுத்தாலும், நெஞ்சு எரிச்சலாகும்.
அதே சமயத்தில், ஈரல் எரிச்சலும் வந்துவிடும். எரிச்சல்கள் அங்கே சென்றவுடனே,
எதையெடுத்தாலும் எரிச்சல், பார்வையிலும் எரிச்சலான நிலைகளாகும். நாம் தவறு செய்யவில்லை.
நாம் தவறு செய்பவரைப் பார்க்கும் பொழுது, இதைப் போல, அந்த உணர்வின் தன்மை, நம்மை அது
போல ஆக்கிவிடுகின்றது. கடைசியில், இரத்தக்
கொதிப்பாக மாறுகின்றது.
கோப உணர்வுகள் வரப்படும் பொழுது, மற்றவர் மகிழ்ச்சியாக இருக்கின்றார், மகிழ்ச்சியான
செயல்களைச் செய்கின்றார் என்றால், அதைக் கண்டால், இந்தக் கோபக்காரருக்குப் பிடிக்காது.
அதே சமயத்தில், மகிழ்ச்சியின் உணர்வு தூண்டினால்,
இனிமை கலந்த சொல்லின் நாதம் பிறக்கும்.
உதாரணமாக, நாம் இனிப்பைச் சாப்பிட்டவுடன், அந்த உணர்வின் தன்மையால் ரசித்து,
தலையை அசைக்கின்றோம்.
காரத்திற்குள் இனிப்பைப் போட்டால், அதனின் சுவையே தனித்து இருக்கும்.
நமது உடலின் இனிப்பின் சொல்லை அறியச் செய்யும் உணர்வுகள்,
இதற்கும், அதற்கும், ஒத்துவராத நிலைகளில் பிரிக்கும்.
இது இரண்டும் நெகடிவ், பாசிடிவ் என்ற நிலைகள் கொண்டு,
இயக்கப்படும் பொழுது, நமது இருதய வால்வுகள்,
நமது உடலில் காரத்தை ஜீரணிக்க முடியாத
நிலையில், கொதிப்பும்
சுவையான நிலைகளில் பேச முடியாமல்
சர்க்கரைச் சத்தும்
வந்துவிடும்.
ஆக உடல் உறுப்பின் தன்மை ஒடுங்கும் பொழுது,
இந்தக் காரத்துடன் கலக்காததனால்,
சர்க்கரைச் சத்து அதிகமாகின்றது.
அதனால், இருதயத்தின் துடிப்பின் நிலைகள் குறைகின்றது.
ஏனென்றால், இது இரண்டும் போர் செய்யப்படும்போது,
துடிப்பின் இயக்கங்கள் உறுப்புக்கள் சரியாக இயங்காத நிலையும்,
இரத்த வால்வுகள் சரியாக இயங்காத நிலையில்,
தளர்ச்சியடைகின்றது.
இவ்வாறு அடைந்த, அந்த உணர்வுகள்
சர்க்கரையின் சத்து அதிகமானபின்,
இதே இனிப்பின் தன்மை கொண்டு,
எப்படிச் செடிகளில், சில பொருள்கள் சேர்ந்து,
உயிரணுக்கள் உண்டாகின்றதோ, இதைப் போல,
நாம் எடுத்துக் கொண்ட நெகடிவ், பாசிடிவ் என்ற
எதிர் நிலையான உணர்வுகள், போர் செய்யப்படும் பொழுது,
நம் ஆன்மாக்களில் இதே நிலையாகி,
உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
இதனால், காற்றிலிருந்து வரும் தீய உணர்வுகள்,
உடலில் ஒட்டிக் கொள்கின்றன.
இரண்டு நிலைகளை எடுத்தவுடனே, அந்த அணுவின் தன்மையாக உருவாகி, நமது தோலில் அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பின் தன்மையானவுடன்,
இரத்தத்துடன் கலந்து, இரத்தத்தைச் சுவைத்துச் சாப்பிடும். பிறகு, இரத்தத்திற்குள் சீழாக
மாற்றும் நிலை வந்துவிடும்.
ஆக சீழாக மாறிய பிறகு,
இதன் மலம் பட்டவுடன் துரித நிலைகள் கொண்டு,
இரத்த ஓட்டத்தின் இயக்கம் குறைந்து,
உடலில் உள்ள உறுப்புக்களை எடுத்துவிடும் நிலை வருகின்றது.
டாக்டரிடம் சென்றாலோ, தடுப்பு ஊசி போட்டு,
அங்கங்களைக் குறைத்து விடுகின்றனர்.
சர்க்கரைச் சத்தை எதிர்ப்பதற்காக, வேறு மருந்தின் நிலைகளை அதிகமாக்குகின்றனர்.
இவ்வாறு செலுத்தினாலும், சிறிது காலமே, நாம் வாழும் நிலை வருகின்றது.
எதிர்நிலையான மருந்துகள் கொடுக்கப்படும்
பொழுது, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், சிறுநீரகம் விஷத்தன்மை அடைந்து, இரத்தத்தைச்
சுத்தப்படுத்தும் தன்மை இழந்து விடுகின்றது.
பின், நாம் சிறிது காலம் வாழ்வதற்கு, எத்தனை ஊசிகளைப் போட்டு, எத்தனை முறை நம்மை
வேதனைப்படுத்தினாலும், வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் விளைந்து, ஊழ்வினை என்ற அடிப்படையிலே,
நமது ஆன்மாவாக மாற்றிவிடுகின்றது.
நமக்குள் விளைந்த இந்த உணர்வுகள், இந்த உடலில் எப்படி அங்கங்களைக் குறைக்கச்
செய்ததோ, அதே போல், உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஜீவான்மாவாக விளைந்து, இந்த ஜீவான்மாக்கள்
எதனின் நிலை கொண்டு, இந்த உடலில் வளருகின்றதோ, அதற்குத் தக்கவாறு இதில் விளைந்த உணர்வுகள்
உடலைக் குறைக்கும் நிலை கொண்டு, உயிரான்மாவில் சேர்ந்துவிடுகின்றது.
இந்த உடலில் பற்று உள்ள நாம், குழந்தைகளிடமோ, சகோதரர்களிடமோ, மற்றவர்களிடமோ,
பாசத்தை அதிகமாக வளர்த்துக்கொண்டால் “அவர்களுக்கு இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தேன்,
என் செல்வத்தின் நிலைகளை, அவர்கள் காத்துக் கொள்ளவேண்டும். எனக்கு இப்படித் துன்பம்
நேர்ந்துவிட்டதே, இனி இந்தப் பணத்தை, நீங்களாவாது ஒழுங்காக வைத்திருங்கள்”. என்று இந்தச்
சொல்லைச் சொல்லும்போது, யார் மேல் பற்றுதல்
வருகின்றதோ, அவருடைய உணர்வு, இவருடைய உடலில் எடுத்துச் சேர்த்துக் கொள்ளும்.
ஆக, நாம் தவறு செய்யாமலே, இத்தகைய உணர்வு வந்துவிட்டால், அந்த உணர்வின் தன்மை
உடலிலே விளைந்து,
நெகடிவ், பாசிடிவ் என்ற போர்முறை வரும் பொழுது,
கலக்க உணர்வுகள் அதிகமாகத் தோன்றி,
இங்கே, உயிரின் இயக்க நிலைகள்,
அதிகமாக, ஈர்ப்பின்
நிலைக்கு வரவில்லை என்றால், அந்த உயிரான்மா,
உடலை விட்டு வெளியில் சென்றுவிடும்.
நமது உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வு, ஏக்கம் கொண்டு உயிரான்மாவாக விளைந்தபின்,
இந்த உடலை விட்டு வெளியில் வரும் பொழுது., அந்த உடலில் எதை விளைய வைத்ததோ, அதைத் தன்னுடன்
கவர்ந்து, வெளியில் வந்துவிடும்.
யார் மேல் பற்று வைத்து, அந்த மணத்தை இதனுடன் இணைத்துக் கொண்டதோ,
அவர்களின் ஏக்க உணர்வுடன் வெளியில் வரும்.
யார் மேல் பற்று கொண்டிருந்தார்களோ, அவர்கள்,
இவர் உடலை விட்டு இந்த ஆன்மா பிரிந்தபின்,
அந்த உடலின் மேல் இவர் பற்றாக இருப்பார்.
அந்த உடலின் மணம் கொண்டு, இவர் பதிவு செய்த இந்த நிலைகள் கொண்டு, இறந்தவரின் உயிரான்மா, அவர் உடலுக்குள் சென்றுவிடும். பின், மனிதனல்லாத
கீழான உடலாகத்தான், நம் உயிர் உருவாக்கிவிடும்.
இதைப் போன்ற நிலைகளை நாம் அறிந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதும் நமது வாழ்க்கையைத்
தியானமாக்கி, ”அந்த துருவ
நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா” என்று ஆத்ம
சுத்தி செய்து, இந்த உடலில் நோய் நீக்கி, வேதனை நீக்கி, அறியாது வரும் தீமைகளை நீக்கி,
இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறுவதே, நமது வாழ்க்கையின்
அடிப்படை என்று வாழ்ந்து வரும் அனைவருக்கும், எமது அருளாசிகள்.
(பக்கம் 15- 20)
நாம் ஆயிரம் நன்மைகள் செய்தாலும், பிறர் ஏக்க உணர்வுடன் சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள். கொடுத்தவுடன், அவர்கள் “அய்யா, கொடுத்தீர்களே! மகராசன் நன்றாக இருப்பீர்கள்” என்று சொல்லும் பொழுது, நாம் கூர்ந்து கவனித்தால், அவர்கள் கஷ்டம் நமக்கு வந்துவிடும், தர்மம் செய்தும் பயன் இல்லை.
நாம் தவறு செய்யவில்லை. அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகி, அவர் வழியில், நமக்குச்
சிரமங்கள் வருகின்றது. அதற்காக வேண்டி தர்மங்கள் செய்யாமல் இருக்க முடியுமா? மனிதன்
என்றால், தர்மம் செய்ய வேண்டும். அந்த
தர்மம் எதைக் கலந்ததாக இருக்க வேண்டும்?
அவர்கள் வேதனையான நிலைகளை எண்ணினாலும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாலும், அவர்கள் கஷ்டத்தை நீக்கிவிட்டோம் என்று ஆனந்தப்பட்டாலும், வேதனை உணர்வு கலந்தே, அவர்கள்
சொல் தொடர் இருக்கும்.
பாலில் நஞ்சு பட்டால், ருசியாக இருந்தாலும்
குடித்தவுடன் மயக்க நிலை வருவது போலத்தான்,
அதனின் செயல் இருக்கும்.
அந்த உணர்வுகள் நமக்குள் சேர்ந்துவிடுகின்றது.
நல்ல மனதுதான், ஆனால், நல்ல மனதிற்குள்,
நஞ்சான அழுக்குச் சேர்ந்துவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை.
பிறிதொரு நிலையில், நாம் நமக்குள் உணர்ந்து செயல்படும் திறன் பெற்றவர்கள். நாம் பல பொருள்களை இணைத்து, குழம்பு
வைத்து ருசியாகச் சாப்பிடுகின்றோம். மற்ற உயிரினங்களுக்குக் குழம்பு வைக்கவும் தெரியாது.
மனிதனான நாம், இயற்கையில் விளைந்த நிலையை மாற்றி,
அதை வேக வைத்து, திசை திருப்பி, உணர்வின் சுவையாக்கி,
அந்தச் சுவையின் மணத்தால், எண்ணத்தை உருவாக்கி
அந்த எண்ணத்தின் மகிழ்ச்சி நிலைகள் கொண்டு, எண்ணும்பொழுது, மகிழ்ச்சியான உணர்வுகள் உருவாகி, அந்த நிலைகளை, எண்ணத்தால் எண்ணும் பொழுது,
அந்த ஆனந்தமான சுவாசத்தை நாம் எடுத்து,
அந்த உணர்வின் மகிழ்ச்சியால் வரும்
நம் எண்ணம், சொல், இவையெல்லாம் இயக்கச் சக்தியாக மாற்றிக் கொள்கின்றது.
சந்தோஷமாக, சுவையாக அனைத்தையும் சாப்பிட்டாலும், செழிப்பாக இருக்கும்போது, ஒரு பையன் விஷமம் செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அந்த
மகிழ்ச்சியான நேரத்தில் அவனைக் கண்டு, “இப்படிச்
செய்கிறாயே” என்று சொல்லி வேதனைப்பட்டால், அந்த வேதனையான உணர்வு கலந்து, நாம்
சாப்பிட்ட ஆகாரம் திகட்டலாகி, ஜீரணிக்கும் பொழுது சோர்வடையும்.
நாம் ஒரு சுமையை, அதிகமாகத் தூக்கிச் சுமக்கும்போது, அது முடியாத நிலை வரும்போது, நாம் துவண்டுவிடுவது போல, நம் உடலின் உறுப்புக்கள், ஜீரணிக்க முடியாத நிலைகளில், அதுவும் துவண்டு விடுகின்றது.
அந்த சமயத்தில் மற்ற ஒருவன் தவறு செய்வான் என்றால், அந்தத்
தவறான உணர்வை நமக்குள் சுவாசித்து, சுவைமிக்க உணவாக இருந்தாலும், அதற்குள் துவண்ட நிலைகள் கொண்டு, நாம்
வேதனை என்ற நஞ்சினைக் கலந்து, மயக்க
நிலைக்கே வந்துவிடுகின்றோம்.
நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள், நமக்குள் ஒவ்வொன்றாகப் புதிது புதிதாக உருவாகின்றது. இப்படி உருவான உணர்வுகள் அனைத்தும், வித்தாக
உருப் பெறுகின்றது.
விண்ணின் ஆற்றல்,
நமது பூமிக்குள் படரும் பொழுது, பல நிலைகள் ஆனாலும்,
நீர் நிலை இருக்கும் பக்கம்,
மற்ற உணர்வின் தன்மைகள்,
அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து,
பாறைகளின் சத்துக்களை ஒன்றாகச் சேர்த்து
ஒரு அணுவின் ஆற்றலானாலும்,
அந்தச் சத்தின் தன்மை கொண்டு அது வீழ்ந்துவிட்டால்,
அது காளானாக முளைக்கின்றது.
ஆக, பல சத்துக்கள் ஒன்றாகி, இந்த
உணர்வின் சத்து சேர்ந்தபின், மின்னலின் தாக்குதல் வரும்பொழுது, காளான்கள் முளைத்திருப்பதைப் பார்க்கலாம், மழைக்காலங்களில், இதைப் போல ஒன்றுடன் ஒன்று இணைந்து, அது
பாறைகளின் சத்தாக உருவாகும் பொழுது, காளான்கள்
உருவாகும்.
அப்படிக் காளான்கள் உருவான நிலைகள் கொண்டு,
அதிலிருந்து வெளிப்படும் செல்களை, அணுக்களை,
மீண்டும் சூரியனின் காந்த சக்தி கவருகிறது.
நம் பூமியிலிருந்து வெளிப்படும், எத்தகைய மண்ணோ, கற்களோ,
மற்ற அனைத்தும் ஆவியாக வெளிப்படும் பொழுது,
அது சூரியனின் காந்த சக்தியால் கவரப்படும் பொழுது,
ஒன்றுடன் ஒன்று மோதி,
காளான் சத்து, இவைகளுடன் சேர்ந்தவுடனே,
அந்தக் கல், மண் இவைகளிலிருந்து
ஆவியாகி வருவதை
இது நுகர்ந்து, இது பலவிதச் சத்துக்களை நுகர்ந்து,
ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டதோ,
அதனின் உணர்வுகளின் நிலைகளுக்கொப்ப
இது போன்று, புதுப்புதுச் செடிகளாக உருப்பெறுகின்றது.
இதைப் போல, பல செடிகளின் சத்துக்கள் வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும், பல செடிகளின் சத்துக்கள் மோதி, ஒன்றுடன்
ஒன்று இணைந்து கலந்து, ஒரு
புதுவிதமான கரு உண்டாகின்றது. இதைப் போன்ற பலவிதமான, எண்ணிலடங்காச் செடி வகைகளைப் பார்க்கலாம். இதைப் போலத்தான்,
உயிர் அணுக்களின் தோற்றங்களில்,
மற்ற உணர்வின் சத்துக்கள்,
மற்றதைப் பார்த்து, அதனிடமிருந்து தப்பிக்க,
அதனின் உணர்வை இது எடுத்து,
இவ்வாறெல்லாம் பரிணாம வளர்ச்சியில் வருகிறது.
தாவர இனச்சத்து ஐம்புலனறிவு கொண்டது. அந்தப்
புலனின் சத்தை மிருகங்கள் உணவாக உட்கொள்ளும் பொழுது, அதனின்
சத்தே, அதனின் மணமே எண்ணமாக வருகின்றது.
அப்படி எண்ணமாக வந்தாலும், இது
எதை எதையெல்லாம் உணவாக உட்கொண்டதோ, அந்த உணர்வின் தன்மை அதே உணவாக நுகர்ந்து எடுக்கும் பொழுது, அடுத்துத்
தன் மேய்ச்சலுக்குச் செல்லும் பொழுது, அது
நுகர்ந்து பார்த்தே, தன் உணர்வுக்கு ஒத்தச் செடிகளை உண்ணும்.
அது தனக்கு வேண்டியதை எடுக்கும். வேண்டாததை ஒதுக்கும்.
அடிக்கடி நுகர்ந்து பார்த்த, இந்த உணர்வுகள்
ஏற்கனவே தனக்குள் இருக்கும், உணர்வின் சத்துடன் கலந்து,
அதனின் மணத்தைக் கொண்டு,
அதனின் ஞானமாக, அதனின் உணர்வு ஒன்றி,
உணர்வின் எண்ணமாகத் தன்னைக் காத்திடும் நிலையும்,
நுகர்ந்து அறியும் ஆற்றலும், அதனின் மணத்தின் இயக்கமும், அதனின் செயலும் ஆக, இப்படி வளர்ந்து, அந்த உணர்வின் சத்தாக வினையாக வளர்ந்து, இது போன்று எண்ணங்கள் பெருகுகின்றது.
(பக்கம் 26- 32)
தாவர இனங்கள் இரண்டற இணைந்தபின், எப்படித் தாவர இனங்கள் மாறுகின்றதோ, இதைப்போல,
நல்ல குணத்திற்குள், மற்ற குணங்கள் இணைந்து,
எண்ணத்தின் நிலைக்கு வரும்பொழுது,
கோபமான எண்ணம் நமக்குள் இருந்தாலும்,
சாந்தமான குணம் கொண்டிருக்கும் பொழுது, ஒருவன்
அசுர குணம் கொண்டு, தாக்கிவிடுவான் என்று எண்ணினால்,
அந்த உணர்வின் எண்ணத்தை நாம் நுகர்ந்து,
அந்த சாந்தமான குணத்திற்குள் இணையும்போது,
சாந்தமான குணம் நலிந்து கொண்டே இருக்கும்.
எதுவும் நடந்துவிடுமோ, என்ற அச்ச உணர்வின் தன்மையில் பயந்து, காரமான உணர்வின்
தன்மை அதிகமாக எடுத்து, அச்ச உணர்வால், அவன் செய்யும் போக்கிரித்தன்மையால், இந்த உணர்வுகள்
கூடிக் கூடி, கடைசி நிலையில்
“எதுவானாலும் சரி, நான் பார்க்கின்றேன்”,
‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற நிலையும்,
சாந்தமான
உணர்வு இருந்தாலும், ஒருவன் சீறிப்பாயும் நிலைகளில், சாந்தமானவன், அவனின் வலுக்கொண்டு
அவனைத் தாக்கிவிடுவான்.
செயலற்றவனாக இவன் கருதுவான். அவனுடைய உணர்வுகள் இங்கே வந்து, உணர்வின் தன்மை
வலுவாகித் தாக்கும் நிலை வரும். எண்ணத்தின்
உணர்வாக, எந்த மணத்தின் நிலையைக் கொண்டு, உணர்வின் தன்மை வருகின்றதோ, அதனின் செயலாக
இங்கே மாறும்.
இவை அனைத்திற்கும், மூலமாக இருப்பது உயிரே. நாம் பூமியிலே, சூரியனின் காந்த
சக்தியால், ஒன்றுடன் ஒன்று இணைந்து, மூன்றிலும் உள்ள இந்த வெப்பம், அது கடவுளாகின்றது.
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் மீண்டும் சேர்ந்து, ஒன்றாகும் பொழுது, மூன்றின் நிலைகள் மாறி,
அதனின் நிலை வலுவாகின்றதோ, அதனின் நிலையாக அதுவாகின்றது, மற்ற இரண்டும் தேய்வடைகின்றது.
அதனால் தான், இங்கே சிவனின் நெற்றியிலே, பிறைச் சந்திரனைப் போட்டது.
பல சக்திகள் ஒன்றாக இருந்தாலும், உடலான சிவமாக ஆகும் பொழுது, எடுத்துக் கொண்ட உணர்வுகள், ஒன்றுடன் ஒன்று தேய்ந்து, அந்த உணர்வின் சக்தி,
தன் தன் செயலை மாற்றி, உணர்வின் நிலை மாறுகின்றது என்று, தெளிவுற நாம் புரிந்து கொள்ள, ஞானிகள்
இவ்வாறு காட்டினார்கள்.
நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, இயற்கையின் செயலாக்கமும், அதனுடைய மாற்றங்களும்
எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக அகத்திய மாமகரிஷி எடுத்துரைத்துள்ளார்கள்.
அவரைப் பின்பற்றி அவரின் உணர்வை நுகர்ந்தவர்கள், அதனின் அறிவு கொண்டு, பிற்காலங்களில்
தெளிவான நிலைகளில் சொன்னாலும், காலத்தால் மறைந்து, உணர்வின் நிலைகளை நாம் அறிய முடியாதபடி,
புராணக் கதைகளைப் பார்க்கும் பொழுது, எந்தக் காலத்திலோ, ஆணடவனால் எழுதப் பெற்றது என்ற நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.
அந்த இயற்கையின் ஞானங்கள், கடந்த காலங்களில்
வெளியிட்ட அந்தச் சக்திகள் இன்றும் அழியவில்லை. அழியாத பொருளாக அமைந்திருக்கும் இந்த
நிலைதான், நமது குருநாதர் காட்டிய அருள் வழிகொண்டு, தாவர இனச் சத்துக்களும், உயிரின்
இயக்கங்களும், உணர்வின் மாற்றங்களும், எந்த நிலையில் அறிந்து கொள்ள முடியும் என்ற நிலையை,
நமது குருநாதர் பித்தனைப் போல இருந்து, சித்தனாகக் காட்டினார்.
சாக்கடைக்குள் அமர்ந்து, சாக்கடை உபதேசமாகத் தான் எனக்குக் கொடுத்தார். நாம்
இன்று நுகர்ந்து கொண்டு இருக்கும் அனைத்துமே, மனிதனால் வெளியிடப்படும் மூச்சலைகள்,
கொடூரச் செயல்களும் மனிதனால் உற்பத்தி செய்து, மற்றவனை அழித்திடும் ஆற்றல்களும், அழித்திடும்
உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்த்து, இந்த பூமியிலே பரமாத்மாவிலே படர்ந்து கொண்டிருக்கும்
பொழுது,
மனிதன் தூய்மையாக்கும் நிலைகள் கொண்டாலும்,
தூய்மையாக்கும் நிலைகள் மறைந்து,
தூய்மையற்றதாக மாற்றிவிட்டனர்.
பழிதீர்க்கும் உணர்வும், ஒன்றை அழித்திடும் நிலையும், இதைப் போல உணர்வுகளை நமக்குள்
விளையச் செய்து, இதே உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, பூமியிலே பரமாத்மாவாகப்
படர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நமது குருநாதர், சாக்கடைக்குள் அமர்ந்து,
உண்மை நிலையை எமக்கு எடுத்துக் காட்டினார்.
சாக்கடைக்குள் இருக்கும், நல்ல பொருள்களை பன்றி எப்படி நுகர்ந்து எடுத்து,
நல்ல உணர்வைத் தனக்குள் எடுத்து, நாற்றமான உடலில் கலந்து,
நாற்றத்தை நீக்கிடும் உணர்வுகள் வளர்ந்து,
அதே போல, பல சரீரங்களைத் தனக்குள் எடுத்து,
இதே உயிர்தான், நம்மை மனிதனாக ஆக்கியிருக்கின்றது.
மனிதனாக ஆனபின், சந்தர்ப்பத்தால் ஏற்படும்
உணர்வின் நஞ்சு கொண்ட நிலைகளும், உணர்வின் எண்ணத்தால் ஈர்க்கும் செயல்களையும்,
இதை நீ எவ்வாறு மாற்றுவது? என்றும்
மாற்றிக் கொள்ள
முடியும்
என்ற நிலைகளையும்,
தெளிவாக எடுத்துக்
கூறினார், குருநாதர்.
இதனின் உணர்வின் ஆற்றலை, நீ எண்ணத்தால் எப்படிப் பன்றி, சாக்கடையில் உள்ள நாற்றத்தைப்
பிளந்து, நல்ல உணர்வை நுகர்ந்த மாதிரி, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும், சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து,
நல்லவற்றை எடுக்கக் கற்றுக் கொடுத்தார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
இதிலே, நாம் எந்தக் குணத்தைக் கொண்டு எடுக்கின்றோமோ, அதே குணம், அந்தக் குணத்தின்
உணர்வின் தன்மையாக இயங்கி, நமக்குள் எடுத்துக் கொள்ளும். இன்று கழிவுப் பொருள்களை எடுப்பவர்கள்,
கழிவுப் பொருள்களின் நிலைகளில் இருந்தாலும், கழிவுப் பொருளை நுகர்வது இல்லை.
அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,
இருக்கும் பொழுது, கழிவுப் பொருளின் மணம், அவர்களுக்கு வருவதில்லை.
கழிவுப் பொருளை எடுத்ததை நாம் பார்த்தவுடன், “ஐய்யய்யோ நாற்றமாகின்றது” என்று
சொல்லி, இந்த நாற்றத்தை உடலுக்குள் கலக்கவிட்டு, கழிவுப் பொருளின் சத்தையெல்லாம் நமக்குள்
சேர்த்துக் கொள்கிறோம்.
ஆக, எதனின் உணர்வை நாம் சேர்க்கின்றோமோ,
அந்த உணர்வின் தன்மை நமக்குள் சென்று, நமக்குள் நாற்றமாகும் நிலையும்,
நாற்றத்தைக் கண்டு, வெறுப்பின் நிலையில் எண்ணங்கள் உருவாகும் பொழுது,
யாரைப் பார்த்தாலும், அசிங்கமாகத் தெரியும்.
“இது சுத்தம் இல்லை, அது சுத்தம் இல்லை” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் உடலில் பாருங்கள். நாற்றம் வந்து கொண்டே இருக்கும். சட்டைத் துணியினை, நுகர்ந்து
பாருங்கள் நாற்றம் இருக்கும்.நாற்றத்தைப்
பிடிக்கவில்லை என்று, நாற்றத்தைத்தான் நுகருகின்றார்கள்.
இதுவெல்லாம், நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் இயக்கங்கள், சந்தர்ப்பத்தால் உருவாகின்றது.
இவையெல்லாம் இயற்கை நிலைகள், பரப்பிரம்மமாக்கி, ஒரு உயிரணுவிற்குள் வரும்பொழுது பிரம்மமாகி,
அது சிருஷ்டித்தாலும், உடலுக்குள் வந்து, உயிரின் தன்மை அதை பிரம்மமாக்கி, சிருஷ்டிக்கிறது.
மனிதன் ஆறறிவு படைத்தவன். இந்த ஆறாவது அறிவின் தன்மை, கெட்டதை நீக்கி நல்லதை
இணைத்து, உருப்பெறும் சக்தியாக இருக்கிறது. இதைத்தான், பிரம்மாவை சிறைப் பிடித்தான்
முருகன், என்று சொல்கிறார்கள்.
நாம் மிருக நிலைகளிலிருந்து மனிதனானோம் என்பதைக் காட்டுவதற்கு, மிருகத்தின்
தலையை, மனிதனின் உடலில் பொருத்தி, அவன் முழுமுதல் கடவுள் என்று சொல்லியுள்ளார்கள் ஞானிகள்.
முதல் கடவுள் என்றால், நாம் எண்ணியதைச்
செயல்படுத்தும் முதன்மை பெறுகின்றோம். நாம் கடவுளாகும் பொழுது, நமது உயிர்
ஒளியாக இருக்கின்றது. உடலின் தன்மை, நமக்குள் வரும் மணத்தின் நிலையைக் கொண்டு, ஒவ்வொன்றையும்
உருவாக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்ட உணர்வுதான், ஆறாவது அறிவு என்று, அன்று தெளிவாக
எடுத்துக் கூறியுள்ளார்கள் ஞானிகள்.
(பக்கம் 33-37)
நான் இந்தப் பரமாத்மாவுடன் சேரப் போகின்றேன்,
என்று எல்லோரும் சொல்வார்கள். யார் இறந்தாலும்,
பரமாத்மாவில்தான் சேருவோம்.
நமக்குள் உயிராத்மாவாக இருந்து, நமக்குள் ஆண்டவனாக ஆண்டு கொண்டிருக்கும், இந்த
உணர்வின் ஒளியுடன், அது ஒளிச்சுடராக,
நமது உடலைத் தீயில் போட்டு கருக்கினாலும்,
நமது உடல் முழுவதும் கருகினாலும்,
தசைகளில்
இருந்த உணர்வுகள், கருகிய உணர்வு கொண்டு ஆன்மாவாக மாறுகின்றது. ஆனால், உயிர் கருகுவதில்லை.
அதே போல, அந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை, கருகாநிலை பெற்று, அவனை ஒன்றி,
அவனின் நிலையாக வளரும் நிலைதான், யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் ஆற்றல். அதே நிலையைக்
கொண்டு, ஒளியாக மாறுவதுதான் கருகாநிலை. இதை வேகாக்கலை என்பார்கள்.
வேகாக்கலையைக் கற்றுக் கொண்ட மெய்ஞானிகள்,
இன்றும் விண்ணுலகில்,
எத்தகைய நஞ்சானாலும்
ஊடுருவாதபடி,
வைரம் எப்படித் தன் நஞ்சினை அடக்கி,
ஒளியின் சிகரமாக இருளை விலக்கி,
பொருள் காணும் நிலையாகக் காட்டுகிறதோ,
அதைப் போல,
விண்ணுலகிலிருந்து வரும்,
ஆற்றல்மிக்க நஞ்சினைத் தனக்குள் மாற்றி,
ஒளியின் சிகரமாக
“என்றும் பதினாறு”
என்ற நிலையை
அடைந்து,
மெய்ஞானிகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த மெய்ஞானிகளின் உணர்வை நாம் பெறுவதற்கு, மெய்ஞானியின் உணர்வாற்றல் இங்கு
உண்டு. அதைப் புராணங்களாகக் காட்டப் பெற்று, அதில் ரிஷிகளாக வர்ணிக்கப்பட்டு, ரிஷியின்
மகன் நாரதன் என்று நமக்கு தெளிவு படுத்தப்பட்டது. அந்த நாரதன் கலகப் பிரியன்.
நமது மனித வாழ்க்கையில், நமக்கு வேண்டிய ஆசைகள் கொண்டு; பிறருடைய ஆசைக்கேற்ப,
நாம் செயல்படும் இந்த நிலைகளில் இருந்து, விடுபட வேண்டும்.
உதாரணமாக நான் கோபக்காரன், நான் ஒருவனுக்கு உதவி செய்கிறேன். உதவி செய்தாலும்
கூட, ஒரு சமயம் எனக்கு தாழ்ந்துவிட்டால், உதவி செய்திருக்கிறேன் என்ற நட்புடன், அங்கே
செல்கிறேன்.
“நீங்கள் இருங்கள், நான் டவுன் வரைக்கும் போய்விட்டு வந்துவிடுகிறேன், கொஞ்சம்
கூடவருகின்றீர்களா” என்பார்கள்.
அதே சமயம் அவர், இதைக் காட்டிலும் முக்கியமான நிலைகளில் இருப்பார். அவர் ஒருவருக்குச்
சொல்லி இருப்பார். காக்கும் நிலையாகக் காத்துக்கொண்டு இருப்பார். இப்பொழுது, ஒரு பிரசவத்திற்குப்
போகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில், நண்பனைத் துணைக்குக் கூப்பிட்டால்,
அது முக்கியமாகின்றது. “எனக்கு உதவி செய், துணையாக வா” என்று கேட்கின்றார். இதுவும்
முக்கியமாகின்றது. முக்கியத்தில் எதை செய்வார்.
அவர் கூப்பிட்டு, இங்கே வரவில்லை என்றால், இவருடன் சென்று விட்டால் “இங்கே பார்,
நல்ல நேரத்தில் வருகின்றேன் என்று சொன்னான், ஏமாற்றி விட்டான். பாவிப்பயல்” என்று நினைக்கத்
தோன்றும். அப்பொழுது பகைமை உண்டாகிறது.
இதே சமயத்தில், இங்கே கூப்பிட்டு வரவில்லை என்றால் “உதவி செய்தேனே! வரவில்லையே”
என்று எண்ணும்பொழுது, “கூப்பிட்டால் வரமாட்டேன் என்று ஏமாற்றுகிறான்” என்ற இந்த உணர்வு
இங்கே வளர்ந்து, இங்கே பகைமையாகி விடுகின்றது.
அங்கே வரவில்லை என்றால், அவர் நன்றி
கெட்டவராக எண்ணுகிறார். இங்கே வரவில்லை என்றால், இவர் நன்றி கெட்டவர் என்கிறார்.
பார்க்கும் பொழுதெல்லாம், நன்றி கெட்டவன் என்று சொல்வார்கள். அதே உணர்வு இங்கு
வரப்படும்போது, பகைமையின் நிலைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். இதை யார் நிறுத்துவது?
நாம் தவறு செய்யவில்லை. நாம் எடுத்துக்
கொண்ட நிலைகள்,
சந்தர்ப்பம் இந்த உணர்வுகளை இணைத்து,
பிரம்மமாக்கி,
உணர்வின் தன்மை, நமக்குள் எண்ணமாக மாறி,
அதே எண்ணத்தின் வித்து,
நினைக்கும் பொழுதெல்லாம்,
அந்த அலைகளைத் தனக்குள் வளர்த்துக்
கொள்கின்றது.
பல உணர்வின் சத்து, ஒரு வித்தாக மாறும்
பொழுது,
அந்த வித்தின் சத்து, தன் இனத்தைக்
கவர்ந்து, வளரத்தான் செய்யும்.
எவ்வாறு, பூமியில் தாவர இனங்கள் வளருகின்றதோ, அவ்வாறே மனிதனுக்குள் மற்ற உணர்வின்
எண்ணங்கள் கலந்து, அது உயிருக்குள் பிரம்மமாகி, அந்த உணர்வின் சத்து வித்தாகும் பொழுது,
யாரைப் பற்றி எண்ணியதோ
அந்த உணர்வின் தன்மையை,
இந்தக் கண்,
அந்த மனிதனைப் பார்த்ததுமே,
அந்த மனிதனின் உடலில் இருந்த உணர்வை,
தான் கவர்ந்து, உணர்வின் தன்மை உயிருடன் இணைத்துவிடுகின்றது.
இணைந்த நிலைகளில், உணர்வு கலந்து, கலந்த நிலைகளில் எண்ணமாகி, அந்த வெறுப்பின்
எண்ணங்கள் பதிவானதும், மீண்டும், அதை எண்ணும் பொழுது, நினைவின் அலைகளை இயக்கும்.
தவறு யாரும் செய்யவில்லை. சந்தர்ப்பம் நமக்குள் பிரம்மமாகி, பகைமையை உண்டாக்குகின்றது.
ஆனால், இதே உணர்வின் வித்து வரப்படும் பொழுது,
இந்தப் பகைமையுணர்ச்சி, நாளுக்கு நாள் நண்பர்களுக்குள் பகைமையை வளர்த்து, அதிகமாக ஆக்கி
விடுகின்றது.
இப்படிப் பல நண்பர்கள் பகைமை ஆகும் பொழுது, இதே மாதிரி பகைமையான உணர்வுகள் நமக்குள்
சேர்ந்து, நல்ல உணர்வு இயங்கவிடாதபடி, கவலையும், சஞ்சலமும், வெறுப்பும், சோர்வும்,
நமக்குள் கலந்தே வந்துகொண்டு இருக்கும்.
இதைத் துடைப்பதற்காக, அந்த ஆறாவது அறிவைக்
கொண்டு, இத்தகைய நிலைகளை வென்று விண்ணுலகம் சென்ற,
அந்த மெய்ஞானியின்
உணர்வின் தன்மையைப்
பருகுவதற்குண்டான
மார்க்கத்தை,
மகரிஷிகள் காட்டினர்.
அதன் வழியில், நாம் அனைவரும் செல்வோம். எமது அருளாசிகள்.
(பக்கம் 38-45)
ஒரு மாங்கனி அது இனிப்பாக
இருக்கும்பொழுது, அந்த சுவையின்
மணத்தையே வெளிப்படுத்தும். காயாக இருக்கும் பொழுது, புளிப்பின் உணர்ச்சியைத் தூண்டும். இதைப் போல, மனிதனாக இருக்கும் நாம் காயின் பருவத்தில்
இருக்கும்பொழுது, கனியாகும்
உணர்வின் தன்மையை நாம் கவர்ந்தால், கனியும் தன்மையை அடைகின்றோம்.
ஆனால், கனியாவதற்கு முன்
வெப்பத்தின் தணல் அதிகமாக
இருந்தால், வெம்பி மரத்திலிருந்து
விழுந்து விடும்.
வெம்பிய நிலைகள் கொண்டு, வித்து உருவாகாது.
ஆனால், அதனுடைய சத்தும் நமக்குள் நல்லது ஆகாது.
ஆகவே, கனியின் தன்மையை
அடைந்த கனியைப் போல, உயிருடன் ஒன்றிய
நிலைகள் கொண்டு, வெம்பாத நிலைகள்
கொண்டு, மெய்ஞானியின் உணர்வைத்
தனக்குள் வளர்த்து, உணர்வுகள்
அனைத்தும் கனியாகி, உயிருடன் ஒன்றிய
கனியின் தத்துவமாக, ஏழாவது நிலையின்
ஒளி சரீரமாக அடைய வேண்டும்..
இதைத்தான், கந்தபுராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது. நாரதன் கனியைக் கொண்டு வந்து சிவனிடம் கொடுக்கின்றான்.
சிவன் யார்? நமது சரீரமே. நாரதன், கனியை சிவன் கையில் கொடுத்து, ‘உலகை எவர் ஒருவர் முதலில் வலம் வந்துவிடுகின்றாரோ, அவருக்கு இந்த கனியைக் கொடுத்துவிடு’ என்று சொல்லுகின்றான்.
அப்பொழுது, இந்த ஆறாவது அறிவின் தன்மை,
உலகை அறிந்து கொள்ளும் நிலைகள்
கொண்டு,
எண்ணத்தில் விரிவடைந்து,
புற உலகத்தை எண்ணுவோமேயானால்,
உலகைச் சுற்றத்தான் அந்த உணர்வு செல்லும்
என்ற நிலைகளை சிவன் கண்டவுடனே,
இந்த ஆறாவது அறிவு
தெரிந்துகொண்டேன்
என்ற நிலை வரப்பபடும் பொழுது,
எனக்கு வசதி இருக்கிறது, என்று எண்ணத்தால் எண்ணினாலும்,
ஒன்றை மறந்து விடுகின்றான்.
எவ்வாறு மறந்து விடுகின்றான்?
என்பதைத் தெளிவாக
காட்டுவதற்கு,
அந்த ஆறாவது அறிவின் தன்மையை, ஞானம் இருந்தும்,
தான் உணரமுடியாத நிலைகள் எவ்வாறு ஆகுகின்றது? என்று காட்டுவதற்கு,
இந்த ஆறாவது அறிவைக்
கேட்டவுடன்,
‘நான் ஒரு நொடியில் உலகை வலம்
வந்துவிடுகின்றேன்’ என்று
எண்ணத்தால் வேகமாகச் சென்று விடுகின்றான் முருகன் (ஆறாவது அறிவு)
.
அதே சமயம், சிவன் அருகில் விநாயகன் இருக்கும்பொழுது, அவன் காட்டுகின்றான்,
பேரண்டமும் பெரு உலகமும், உன் அன்னை தந்தைதான்.
பேரண்டத்தையும், அது சுழல்வதற்கும்,
பேரண்டத்தின் ஆற்றல் உன் அன்னை தந்தைக்குள் இருக்கின்றது. இதுதான் உனக்கு
உலகம்.
அவர்களைச் சுற்றி, நீ இந்த வினையாகச்
சுற்றி, நிலைக்கு வந்து
சேர். அந்தக் கனியின் தன்மையை நீ பருகலாம். இது உதாரணமாக,
நமக்குத் தெளிவாக எடுத்துக்
காட்டியுள்ளார்கள்.
கனி, நாரதன் என்று உணர்த்தப்படுவது என்ன? அந்த ரிஷியின் மகன் நாரதன். மனிதனின் உயர்வின் தன்மை, கனியாக்கியவன். அந்தக் கனியின் தன்மை கொண்டு, அங்கிருந்து வரப்படும் பொழுதுதான், நாரதனைக்
கனியாக்கி, கனியின் மணத்தை சிவனிடம் கொடுக்கப்படும்பொழுது, பேரண்டமும் பேருலகமும், “அன்னை தந்தை”, அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நீ அந்தக் கனியைப் பெறு.
அதனுடைய கனியைக் கொண்டு, நீ கனியாகு.
நம் ஆறாவது அறிவு கொண்டு,
“எங்கே இருக்கும்?” என்றும்
“எங்கோ இருக்கும்!” என்றும்
கடவுளைத் தேடாதே.
உனக்குள் உயிரான நிலைகள் அன்னையாகவும்,
தந்தையாகவும்,
அதனின் உணர்வின் சத்து உனக்குள் தாயாகவும், சிவசக்தியாகவும், இயங்கிக்கொண்டு இருக்கும் இந்த உடலை மறவாதே.
சிவனையும், நமக்குள் இருக்கும் சக்தியையும், நமக்கு எவ்வளவு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்.
எதை வினையாகச் சேர்க்கவேண்டும்?
விநாயகன் யார்?
அந்த ஞானியின் உணர்வை உனக்குள் வினையாக்கி, அதை நீ கனியாக்கு. கனியானவன் அவன், என்று தெளிவாக எடுத்துரைத்தான் அந்த மகாஞானி.
நாம் இங்கே என்ன செய்கின்றோம்? அந்த உட்பொருளைக் காணாதவாறு,
கதையைக் கதையாகத் தான் காணுகின்றோமே தவிர, மெய்ப்பொருளைக் கண்டுணரும் ஆறாவது அறிவைத்
தனக்குள் செலுத்தி, உட்பொருளைக் கண்டுணரும் நிலைகள் இல்லை.
மெய்ப்பொருளைக் கண்டுணரவேண்டும் என்று கவிப்புலமை கொண்டு,
உணர்வின் வேட்கை கொண்டு, நாதங்களின் சுருதியாக அதற்குள் பிரித்தாலும், கவிப்புலமைகள்
பல வந்தாலும், புலமை பெற்றவர், அவர் ஒருவருக்கே தெரியும்.
அருணகிரிநாதர், “நாத விந்துகள் ஆதிநமோநமோ” என்று பாடினார்.
நமது உடலுக்குள் எந்த உணர்வின் தன்மை எடுத்தோமோ, அது நமது உயிருக்குள் சேர்க்கப்படும்
பொழுது, அது ஆவியாகின்றது. அந்த உணர்வின் தன்மை நமது உடலாகும் பொழுது, “நாத விந்துகள்
ஆதிநமோநமோ!”
நாம் எதையெல்லாம் எடுக்கின்றோமோ, எந்த குணத்தை எடுக்கின்றோமோ,
அந்த உணர்வின் சத்து, உடலுக்குள் சேர்க்கும் பொழுது,
“ஆதி”
உடலாகச் சேர்க்கும் பொழுது, “நமோ நமோ”.
பாடலின் உட்பொருள் தெரியாமல் பாடிக்கொண்டு போய்விடுகின்றோம்.
இவையெல்லாம் நமது
ஞானிகள் கண்ட பேருண்மைகள். நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது, மிகவும் நலம். எமது
அருளாசிகள்.
(பக்கம் 46-51)
மெய்ப்பொருள் கண்ட மெய்
ஞானியின் உணர்வை யாம் பின்பற்றி, எமக்குள் ஆட்சி புரியும் நஞ்சின் நிலையை வென்று, அந்த
நஞ்சினை அடக்கி, உணர்வினை
ஒளியாக மாற்றிச் சென்ற, மெய் ஞானியின் உணர்வை நாம் பருகுவதற்கு, அவர் காட்டிய நிலைகள், இன்று உங்களுக்குள் உபதேசித்தது, பேசுவது நான் அல்ல.
மெய் உணர்வைத் தனக்குள் எடுத்து, பொருளறிந்து,
உணர்வின் தன்மை நஞ்சினை அடக்கி,
அதையே ஒளியாக மாற்றி,
இன்றும் நிலையாக இருக்கும்,
இந்த உயிரின் நிலைகள் கொண்டு
தனக்குள் ஒளியின் சிகரமாக இருக்கும்
அவரிடம் ஒன்றி, அவராக இருக்கும்
அருள்ஞானியின் உணர்வுகளை,
இங்கே அது நுகரப்படும்போது,
உணர்வுகள் பேசுகின்றன, நான் அல்ல.
எனக்கு ஒரு சந்தர்ப்பம்.
இந்த உணர்வுக்குள்
ஊடுருவி, உணர்வின் செயலாக,
எனக்குள் இருக்கும் நிலைகள்
கொண்டு சேர்ந்து, அகத்தை
அடக்கி,
அந்த உணர்வின் ஆற்றலைப் பருகும் நிலைகளுக்கு,
இங்கே, அந்த உணர்வின் தன்மை,
கேட்டுணர்ந்த அனைவருக்கும் உணர்வின் தன்மை விளையவேண்டும் என்ற ஏக்க நிலைகள்
வரும்போதுதான், இந்த உணர்வின்
தன்மை, எமக்குள் விளைகின்றது.
உங்களால், நான் இதை அனுபவிக்கின்றேன்.
எமக்கு என்று எதுவுமில்லை.
உங்களுக்கு என்று யாம் சொல்லும்பொழுது
இந்த நிலை வருகின்றது. இதைத்தான்,
ஆலயங்களில் செய்து காட்டிய நிலைகள்.
ஆலயங்களில், தெய்வ குணத்தைப் பார்க்கப்படும் பொழுது,
இந்த தெய்வ குணத்தைப் பெறவேண்டும்,
இந்த மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும்,
கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும்.
இந்த மலரைப் போல எங்கள் உடல் முழுவதும் மணங்கள் மணக்க
வேண்டும்..
அந்த மகரிஷிகளின் அருள் ஒளி, எங்களுக்குள் நல் மணமாக மாறவேண்டும்
என்று நாம் எண்ணவேண்டும்,
எங்களைப் பார்ப்போர்க்கெல்லாம், மலரின் மணமும், மகிழ்ச்சியும்
பெறவேண்டும்.
எங்கள் சொல்லின் தன்மை, பிறரை இனிமைப்படுத்தும் நிலையாகப்
பெறவேண்டும்
என்று நாம் எண்ணும் பொழுது, நாம் எண்ணியதை,
அந்த உணர்வின்
தெய்வமாக மாற்றுகின்றது.
ஆலயத்திற்கு வருவோர் அனைவரும்,
அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்.
இந்த நற்குணங்களைக் காத்திடும் உணர்வுகள் வரவேண்டும்.
காத்திட்ட அருள்ஞானியின் உணர்வுகள் இங்கே விளைய வேண்டும்.
வருவோர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும்
என்று நாம் எண்ண வேண்டும்
அவர்கள் அறியாது செய்த தீமைகள் நீங்க வேண்டும்.
மெய்ப்பொருள் காணும் நிலை பெறவேண்டும்.
இந்த தெய்வநிலை அங்கே பெறவேண்டும்,
என்று ஆலயத்தில் யாரொருவர் வணங்குகின்றனரோ,
அவர்கள் அதுவாகுகின்றார்கள்.
இதுதான், ஆறாவது அறிவு கொண்டு பிரம்மாவைச் சிறைப் பிடித்தான்
என்பது. நமக்குள் நட்பற்ற நிலைகள், எத்தனையோ உண்டு. கோபம் உண்டு, அழித்திடும் நிலை
உண்டு குரோதம் உண்டு. பழித்திடும் நிலை உண்டு.
அனைத்தும் இருந்தாலும்,
ஆலயத்தில் காட்டிய, இந்த உணர்வின் தன்மை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று, யாம் எண்ணும் பொழுது,
எனக்குள் அனைத்துச் சக்தியும், எனக்குள் அகந்தையாகப் பேசும் உணர்வுகளுடன், அந்த மெய்ஞானியின்
உணர்வு கலந்து, எனக்குள் அது சென்று, எனக்குள் அகந்தையின் நிலைகளை வீழ்த்தி,
அந்த உணர்வின் ஆற்றலைப் பெறச் செய்கிறது.
மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்த ஞானிகள் காட்டிய நிலைகளில், நீங்கள் அனைவரும் வாழவேண்டும்
ஏன்று யாம் எண்ணும் பொழுது, எமக்குள் அந்த ஞானிகளின் அருள்சக்தி விளைகின்றது.
அதே சமயத்தில், நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு
நாயகனாக, இந்த உடலாக நாம் ஆனாலும், நாம் எந்த வினையை நமக்குள் சேர்க்க வேண்டும் என்ற
நிலையாக, நஞ்சை நீக்கி, மெய் உணர்வின் தன்மை பெற்று, இருளுக்குள் பொருளைக் காணும் நிலைகளைப்
பெற்று, தீமையை வென்று, உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற மகரிஷிகள் உணர்த்தியுள்ளார்கள்.
அதே போன்று, நம்முடைய முன்னோர்கள் நம்மை வாழ வைத்து, மனிதனாக
உருவாக்க, அவர்கள் உடலில் அறியாது நஞ்சைச் சேர்த்து, நஞ்சு கொண்ட உணர்வு கொண்டு, உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த
உயிராத்மாக்களை, நாம் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
நமக்காகப் பல துயரங்களைப்பட்ட, நம் குலதெய்வங்களின் உயிராத்மாக்களை,
கூட்டமைப்பாக, வலுக்கொண்ட எண்ணங்களைக் கூட்டி, நம்மைக் காத்த உயிரான்மாக்களைப் பிறவா
நிலை பெறச் செய்யவேண்டும். அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து, அந்த உணர்வின்
ஆற்றலைக் கலக்கச் செய்து, அடுத்து நஞ்சான உடலாகப் பெறும் உடலைக் கருக்கச் செய்து, அவர்கள்
அங்கே செல்ல வேண்டும்.
பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கி, நம் உடல் வளர்ந்தது.
பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, உணர்வுகள் தோன்றியது.
பூமியின் ஈர்ப்புக்குள், நாம் வாழ்ந்து பழகியவர்கள்.
ஆக, இதைக் கடந்து, நாம் செல்ல வேண்டும் என்றால், இந்தப்
பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூட்சும உடலடைந்த முன்னோர்களை விண்ணுக்குத்
தள்ளி, சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்து,
நம் மூதாதையர்களின் உயிராத்மாக்களை, அங்கே சுழலச் செய்வதுதான் நம் கடமை.
நம்மை ஈன்ற தாய்
தந்தையை, தன்னை வளர்த்திட்ட முன்னோர்களின் உயிராத்மாக்களை நாம் விண் செலுத்துகின்ற
பொழுது, நமது எண்ணமும்
அங்கே செல்கின்றது. இதுவே கூர்ம அவதாரம்.
சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் சுழல்வது போல, முதல் மனிதன்
அகத்தியன் துருவத்தையடைந்து, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானான். அதன் ஈர்ப்பு
வட்டத்தில்,
(சப்தரிஷி மண்டலம்)
அவரைப் பின்பற்றிச்
சென்றவர்கள், எண்ணிலடங்காது, முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.
நாம் அனைவரும், அங்கே செல்ல வேண்டும்.
சாமி புத்தகம் – இயற்கையின் செயல் ஆற்றலும் இயற்கையின் மாற்றங்களும்
(பக்கம் 54-59)
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, பல மைல் உயரத்தில் விமானத்தில்
சென்று, காந்தப்புலனறிவை உயரத்திலிருந்து பாய்ச்சி, நீர் எங்கு அதிமாக உள்ளது? எந்தப்
பாறை உள்ளது? என்று கண்டுணருகின்றனர், விஞ்ஞானிகள். அவர்கள், பூமி தன் ஆத்மாவாக எடுப்பதைத்தான்
அவ்வாறு கண்டுணர்ந்து, அதன் மூலமாகத்தான், இதையெல்லாம் அறியும் நிலை பெறுகின்றனர்.
மகரிஷிகள் பண்டைய காலங்களில், அவர்களது நுகரும் சக்தியால்,
இப்பூமிக்குள் இருக்கும் வெப்ப நிலையையும், அது அனைத்தும் ஆவியாக மாறி, தாவர இனங்களாக
மாறி, பரமாத்மாவில், தாவர இனச்சத்து, சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்டுக் கலப்பதை
அறிந்துணர்ந்தார்கள்.
தம் உடலில் உள்ள, உணர்வின் இயக்கத்தைக் கண்டறிந்த அம்மகரிஷிகள்,
தம் எண்ணத்தைப் பூமிக்குள் செலுத்தி, அதற்குள் இருக்கும் தாவர இனச்சத்தையும் பாறைகளின்
நிலையையும் நுகர்ந்தறிந்தார்கள்.
இன்றைய விஞ்ஞானிகள், இயந்திரத்தின் துணைக் கொண்டு கண்டுணர்கின்றனர்.
அன்றைய நிலையில், மகரிஷிகள் பூமிக்குள்ளிருக்கும் வெப்ப நிலைகளையும், மாற்றங்களையும்,
காடுகள் உருவாகின்றதையும், தம் உணர்வின் ஆற்றலால், கண்டுணர்ந்தார்கள்.
ஒரு உயிரணு, தனக்குள் நுகர்ந்து, உணர்ந்து உடலாகும் நிலையும்,
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையும்,
மனிதனானபின், தன் ஆற்றல்மிக்கச் சக்தியால்,
தாம் கண்டுணரும் சக்தி பெற்று,
இந்த பூமிக்குள் இருக்கும் செயலாக்கத்தை
தன் உடலில் இருக்கும் உணர்வலைகளைச் செலுத்தி,
அதையெல்லாம் அறிந்து கொண்டனர்.
அகத்தியர் என்பவர், முதல் மனிதனாக
இயற்கையின் மாற்றம்
எவ்வாறு ஆகின்றது?
இயற்கையின் அணுவின்
ஆற்றல்,
எவ்வாறு ஆகின்றது?
அணுவின் வளர்ச்சி
எவ்வாறு ஆகின்றது?
என்ற நிலைகளைக் கண்டுணர்ந்தார்.
பூமிக்குள் நடக்கும்
செயல்களையும், உறைந்த நிலைகளும், விண்ணின் ஆற்றல்களையும், வேறு பிரபஞ்சத்தில்
ஏற்படும் சில நிலைகளையும், அவர் அறிந்துணர்ந்தார்.
நமது பூமிக்குள் ஏற்படும் மாற்றங்களையும், பூமியிலிருந்து
வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் பரமாத்மாவாக மாறுகிறது என்ற
நிலையையும் அவர் தெளிவாகக் கண்டுணர்ந்து, அவர் உடலில் வளர்த்துக் கொண்ட, உணர்வின் அலைகளைச்
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, இன்றும் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.
விண்ணுலகின் ஆற்றலைக் கண்டுணர்ந்த, முதல் முதல் மனிதனான
அகத்தியர், புழுவிலிருந்து மனிதனாக மாறி, பேரண்டத்தின் சக்தியையும், பூமிக்குள் இருக்கின்ற
சக்தியையும், பூமிக்குள் இருக்கும் உணர்வலைகளையும், கண்டுணர்ந்தார்.
தனக்குள் (மனித உணர்வுக்குள்) கண்டுணர்ந்ததைச் சக்தி வாய்ந்ததாக
மாற்றி, தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி, எதனையும் அறிந்திடும் ஆற்றல்மிக்க உணர்வின்
சத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு, தனக்குள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டவர்,
அகத்தியர்.
அவர் அணுவின்
ஆற்றலை அறிந்தவர் என்று சொல்வார்கள். இன்று கதைகளில் வரும் அகத்தியர் இவரல்ல. அன்று, பல இலட்சம் ஆண்டுகளுக்குமுன்,
முதல் மனிதனாக, விண்ணின் ஆற்றலைக் கண்டுணர்ந்தவரே, அகத்தியர்.
சந்தர்ப்பவசத்தால்,
அவருக்கு இத்தகைய ஆற்றல் கிடைக்கின்றது.
அவர் கற்றுணர்ந்த இந்த உணர்வுகள்,
அவர் உடலிலே விளைந்த
ஆற்றல்மிக்க சக்திகள், இன்றும், பூமியிலே பரமாத்மாவில் கலந்து, படர்ந்து கொண்டிருக்கின்றது.
அதை நாம் நுகரவே
இந்த உபதேசம்.
நமது சாஸ்திர விதியில், ”ஆதிசேஷன்” என்பார்கள். ஆதிசேஷன் என்றால் விஷம்.
அதன் மேல், நாராயணன் பள்ளி கொண்டான் என்பார்கள். விஞ்ஞானிகள் இதை ”அல்ட்ரா வயலட்
(ultra violet)” என்கிறார்கள். விஷத்தின் இயக்கத்தைத் தனக்குள் வைத்துக்
கொண்டு, நாராயணன் உலகை இரட்சிக்கின்றான் என்று பொருள்படும்படியாகக் காவியமாகத் தீட்டியுள்ளார்கள்.
நாராயணன் என்பது சூரியன். பாற்கடல் என்பது, விண்வெளி.
அல்ட்ரா வயலட்டுக்குள், வெப்பகாந்தம் ஊடுருவி வரும் பொழுது,
அது கவர்ந்து கொண்ட விஷத்தின் தன்மைக்கு, ஞானிகள் ”இலட்சுமணா” என்று பெயர் வைக்கின்றார்கள்.
இலட்சுமி (காந்தம்) கவர்ந்து,
அந்த விஷத்துடிப்பான மணம்,
வெப்ப காந்தத்திற்குள் இருந்து இயக்கும் நிலையையே,
இலட்சுமணா என்று பெயரை வைக்கின்றார்கள்.
வான்மீகி எழுதிய காவியத்தில், நாராயணன் பூலோகத்திற்குச்
சென்று, இராமனாகப் பிறக்கச் செல்லும் பொழுது, ஆதிசேஷனையும், தன்னுடன் இலட்சுமணா என்ற
பெயரில் அழைத்துச் செல்கின்றான், என்றார்.
அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து,
பிரபஞ்சத்தில் படரப்படும் பொழுது, விஞ்ஞான அறிவுப்படி, “எலக்ட்ரானிக்” என்று பெயர் வைக்கின்றார்கள். மெய்ஞான அறிவுப்படி, “இயக்கச் சக்தி” என்று பெயர் வைக்கின்றார்கள்.
ஒரு அணுவின் நிலை, மற்றொன்றுடன் இயக்கப்படும் பொழுது,
விஷம் கொண்டு தாக்கப்படும் பொழுது, இயக்குகின்றது.
தேள் கடித்துவிட்டால், எப்படி நம்மைத் துடிக்கச் செய்கின்றதோ,
அதைப் போல ஒரு விஷத்தன்மையை
ஒரு அணு கவர்ந்து கொண்டால், துடிக்கச் செய்கின்றது.
இதையே, மெய்ஞானிகள் இயக்கச் சக்தியாகப் பெயர் வைத்தனர். விஞ்ஞானிகள்
எலக்ட்ரானிக் என்றனர்.
அதைக் கடந்து, வெளியிலே செல்கையில், வேறு மணத்தைக் கவர்வதை
விஞ்ஞானிகள், “நியூட்ரான்” என்கிறார்கள். அன்றைய மெய்ஞானிகள், “சரஸ்வதி” என்றார்கள்.
இது வெளியில் செல்கையில், வேறு மணத்தை நுகர்ந்தாலும்,
அல்லது அது தனக்குள் இயக்கிக் கொண்டால்,
எந்தச் சத்தின் மணம், அதனுடன் இயங்குகின்றதோ,
அதன் மணம், இந்தக் காந்தம் இணைத்துக் கொண்ட வெப்பத்தால்,
அதனின் மணம் வெளிப்படும் நிலையும்,
அதனதனுடன் கலந்து, விஷத்தின் ஆற்றல் ஊன்றி,
அது உணர்ச்சிகளைத்
தூண்டும் நிலை பெற்றது என்பதனை சரஸ்வதி – ஞானம் என்று பெயர் வைக்கின்றார்கள். அந்த அணுவின் தன்மை,
முழுமை அடைந்து விடுகின்றது.
விஞ்ஞானிகள் அதைப் “புரோட்டான்” (சத்து) என்று அவர்களின் நிலைக்கேற்ப, பெயர் வைக்கின்றார்கள்.
மெய்ஞானிகள் ஒரு அணு, ஒரு சத்தினைத் தனக்குள் எடுத்துக் கொண்டால், அச்சத்தின் வலுக்
கொண்டு, அச்சத்தின் முழுமையான செயலாக்கும் இந்நிலைக்கு, “காயத்ரி” என்று பெயர் வைத்துள்ளனர்.
(பக்கம் 60-64)
இன்று, காயத்ரி ஜெபிக்கின்றோர் அநேகம். அன்று, வியாசகர்
நாம் எதை ஜெபித்து, எதை முழுமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்? என்று தெளிவுற எடுத்துக்
கூறியுள்ளார்.
நாம் கசப்பைச் சாப்பிட்டால், உள்ளேயிருப்பதை வெளியே தள்ளிவிடுகின்றது,
துவர்ப்பைச் சாப்பிட்டால், உள்ளே மெதுவாகத்தான் செல்கின்றது. அதன் உணர்வின் சுவை, நறுமணம்
வீசுகின்றது. ஆனாலும் அவ்வுணர்வின் சுவை திகட்டுகின்றது.
ஒரு விஷச் செடியிலிருந்து வரும் சத்து, நமது மேலே பட்டால்,
அரிப்பு ஏற்படுகின்றது. அது நமக்கு நம நமப்பாகத் தோன்றுகின்றது. அவ்விஷச் செடியின்
சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால், நமநமப்பை உருவாக்கும் காயத்திரியாக
மாறுகின்றது.
கசப்பான உணர்வுகள் அலைகளாகப் படரும் பொழுது, அக்கசப்பான
அலைகள் உந்து விசை கொண்டதாக இருப்பதால், ரோஜாப்பூவின் மணத்தை எடுத்துக் கொண்ட உணர்வலைகள், இந்த மணம் தாங்காது,
ஓடும் நிலை வருகின்றது.
எடுத்துக் கொண்ட சத்தின் தன்மை ”அப்பு”
இந்த உணர்வின் தன்மை, நகர்ந்து ஓடும் பொழுது, “வாய்வு’
அதைக் கடந்து இந்த மூன்று நிலைகளும் ஒன்று சேர்த்து, ஒன்றுடன்
ஒன்று நகர்ந்து செல்லும் பொழுது, சீரான காற்று வந்தாலும், அதனின் உணர்வு ஒன்றாகச் சேர்ந்து
சுழல் காற்றாக மாறுகின்றது.
அந்தச் சுழல் காற்றாக ஆகும்பொழுது,
மூன்று மணங்களும் ஒன்றாக ஆனாலும்,
இந்த விஷச் செடிப் பக்கம் சென்றவுடன்,
தேள் கடித்தவர் நகர்ந்து செல்லாமல்,
அங்கேயே சுழலுவதைப் போல,
இந்த உணர்வின் சத்து, ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது,
விஷத்தின் தன்மை கொண்டு சுழன்று ஓடுகின்றது.
முதலில், ரோஜாப்பூவின் மணம், விஷத்துக்குள் சிக்குகின்றது.
அது தாங்காது, சுழல ஆரம்பித்து விடுகின்றது. அடுத்து, வேப்ப மரத்தின் கசப்பின் தன்மையைக்
கவர்ந்த அணு வந்து, இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி, பெரும் சுழல் காற்றாக மாறுகின்றது.
ஆனால், இம்மூன்றும்
ஒன்று சேரும் பொழுது, வேப்ப மரத்தின் சத்தையும், ரோஜாப்பூவின் மணத்தின் சத்தையும், விஷச் செடியின் மணத்தின் சத்தையும் இழந்து விடுகின்றன.
மூன்றும் சேர்ந்து
ஒன்றாகும் நிலையே “தேய்வு”. இதைத்தான் “அப்பு”, “வாய்வு”, “தேய்வு” என்று நமது ஞானிகள் பெயர்
வைத்தார்கள்.
முதலில் சேர்த்துக் கொண்ட, இந்த சக்தி இரண்டும் சேர்ந்தவுடன்,
அதனின் சக்தியை இழந்துவிடுகின்றது. அதனால்தான் இதைத் தேய்வு என்று பெயர் வைத்தார்கள்.
இதற்குள், இது சேர்ந்தவுடனே அக்னி. இரண்டுடன் மூன்றாவதும் சேர்த்துச் சுற்றப்படும்
பொழுது, அதுவும் சேர்ந்து அக்னியாக மாறுகின்றது. அதன்பின், அதனின் செயலாக அது மாறுகின்றது.
நாம் ஒரு நெருப்பை
வைத்துத்தான், ஒரு பொருளைப் படைக்க முடியும். ஒரு அணுவின்
தன்மை ஒன்றாக இருந்தாலும், ஓடும் பொழுது வெப்பமாகி, மோதும் பொழுது அதனின் சுவையின்
நிலை கொண்டு, எவ்வாறு மாறுகின்றது? அவ்வணுவின் இயக்கத்தையும், ஆற்றலையும், நாம் கண்டுணர,
அகத்தியர் தாம் கண்டுணர்ந்ததைத் தன் உடலுக்குள் விளைய வைத்து, அவர் வெளியிட்ட உணர்வின்
அலையைச் சூரியனின் காந்த சக்தி கவரப்படும் பொழுது அதுவும் “காயத்திரியாக”, சக்தி வாய்ந்ததாக
இங்கே படருகின்றது.
ஒவ்வொரு பொருளின் இயக்கமும், மணத்தின் சக்தியும், அதனின்
திறனின் சக்தியும், நாம் தெரிந்து கொள்ள இவ்வாறு வைத்தார்கள். இவை அனைத்தும் சந்திக்கும்
சந்தர்ப்பம் ஆகும் பொழுது, இதற்குப் பெயர் “பரப்பிரம்மம்”. சந்தர்ப்பத்தால் ஒன்றுடன்
ஒன்று மோதி, மூன்றும் சேர்ந்து, ஒரு அணுவின் தன்மையாகின்றது.
வெப்பம், காந்தம், இவை இரண்டும் ஒன்றாக இணைந்தாலும், இந்த
மூன்று மணங்களும் இதற்குள் சேர்த்து, ஒன்றாகக் கலந்து காந்தத்தின் ஆற்றல் அதிகமாகும்
பொழுது, பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கி, பூமிக்குள் மறைந்து விடுகின்றது. அவ்வாறு மறைந்த சக்தி, அடுத்து மின்னலும்,
காற்றும், தாக்கப்படும் பொழுது, இது கொதித்து எழுந்து, அதற்குள் எத்தனை உணர்வு கலந்ததோ,
அதைக் கவர்ந்து இழுத்துத் தனக்கு உணவாக எடுத்துக் கொள்ளும் திறன் பெறுகின்றது. அவ்வாறு
உருவானதுதான், கறிவேப்பிலைச் செடி.
கடவுள் எங்கோ இருந்து படைக்கின்றான், எதையோ செய்கின்றான்
என்ற நிலையும், நாம் சிறிது தவறு செய்தாலும் அவன் என்ன பார்த்துக் கொண்டாயிருக்கின்றான்?
என்று
பெரும் தவறுகளை நாம் செய்தாலும்,
தவறான உணர்வுகளை நாம் பார்த்தாலும், நுகர்ந்தாலும்,
நமக்குள் இருக்கும் உணர்வுகள், நாம் உயர்ந்த நிலைகள் கொண்டு
அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டிருந்தாலும்,
இத்தகைய விஷம்
கொண்ட உணர்வுகள் நமக்குள் சென்றவுடன்,
நல்ல உணர்வுகள் மறைக்கப்படுகின்றது.
நமக்குள் அறிந்திடும்
உணர்வுகளை, இது மறைத்து விடுகின்றது.
இதைத் துடைத்திடும் நிலையாக, துடைத்திட்ட அந்த மகாஞானிகளின்
உணர்வுகளைக் கவர்ந்து எடுப்பதற்கு, இதைப் பாடநிலைகளாகப் போதிக்கையில், இதனுடைய அறிவினை
நாம் தெரிந்து கொள்ளவேண்டும். மெய்ஞானிகள் கண்ட, இயற்கையின் உண்மையின் உணர்வின் நிலைகளை, நாமும்
கண்டுணரவேண்டும்.
மனித வாழ்க்கையில்,
சந்தர்ப்பத்தால் இருள் சூழச் செய்யும் நஞ்சின் தன்மை நமக்குள் புகுந்தாலும், நஞ்சினை
வென்றிட்ட அந்த ஞானிகளின் உணர்வவை நாம் பெறவேண்டும். அவ்வாறு பெறுவதன் மூலமாகத் தான்,
தீமைகளைத் துடைத்திட இயலும்.
(பக்கம் 66-71)
நாம்
சாலை வழியே செல்கையில், ஒரு மனிதனின் கொடூரச் செயலைப் பார்க்க நேர்ந்தால்,
“இவ்வாறு செய்கின்றானே” என்ற ஆவேசமும், ஆத்திரமும் நமக்குள் தோன்றுகின்றது. ஆனால்,
கொடூரச் செயலைச் செய்யக்கூடிய, அவன் உடலிலிருந்து உணர்வலைகள் வெளிப்படுவதைச்
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, அந்தக் கொடூரச் செயலைச் செய்யும் உணர்வின் அலையாக, அங்கே பதிகின்றது.
அந்த மனிதனைப் படமெடுத்து,
அவன்
உடலிலிருந்து வரக்கூடிய
கொடூரச்
செயல் புரியும் அந்த உணர்வினை
நமது
கண்ணின் காந்தப் புலன் கவர்கின்றது.
அது
கவர்ந்தவுடன், நமது ஆத்மாவாக மாற்றுகின்றது.
ஏற்கனவே, நமது உடலில்,
ஒவ்வொரு உணர்விலும்,
முன்பு பதிவு செய்த நிலைகள்,
நமது ஆன்மாவாகக்
காற்றிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தாலும்,
இந்தப் புதிய, அவன்
செய்யும் தவறான உணர்வினை நாம் கவர்ந்து,
ஆன்மாவுடன்
கலந்தவுடன், நமக்குள் இரண்டும் கலந்து,
சுவாசித்து,
உயிருக்குள் போனவுடன்,
நாம்,
எது? என்ன? என்று நிதானிக்க முடியாதபடி,
அவன்
செய்யும் கொடூர உணர்வுகள், இப்படிச் செய்கின்றானே என்று பதட்டமும், ஆத்திரமும்,
பயமும், தோன்றுகின்றது.
இவ்வுணர்வுகள்
நமது உயிரில் பட்டவுடன், நமது ஜீவாத்மாவில், இத்தகையக் கலக்கங்கள் ஏற்பட்டு,
அதற்குள் ஜீவ அணுக்கள் இரண்டறக் கலந்து, இப்போது நாம் எப்படி மகிழ்ச்சியுடனிருந்தாலும்,
அந்தக் கொடூரச் செயல்கள் நமது உடலுக்குள் பதிவாகி, வெறுமனே தூங்கினாலும்,
நம்மையறியாமலே “திடுக் திடுக்” என்று எழுந்து, பய உணர்வுகளை நாம் கூட்டிக் கொண்டு,
எதை எதையோ, கண்ணிலே உட்புலனறிவால், படங்களாகப் பார்க்கின்றோம். நமது உடலுக்குள் இவ்வாறு பல மாற்றங்களாகி, நமது நல்ல குணங்களை
மறைத்துவிடுகின்றது.
உதாரணமாக,
பூனையின் கண் எலியைப் பார்த்தவுடன், அந்த எலிக்குரிய காந்த உணர்வைத் தனது ஆத்மாவாக
மாற்றி, உயிருக்குள் இயக்கச் செய்கின்றது. இவ்வாறே, எலியின் சத்தைத் தனக்குள்
ஊழ்வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.
பின்,
தன் உணர்வுக்கு ஒத்துக் கொள்ளும் இயக்கம் குறைவாக இருப்பதால், அது தனது உணவாக
எடுத்துக் கொள்ள முடியும் என்ற அந்த உயிரின் நிலைகள் வரப்படும் பொழுது, பூனை
வலுக்கொண்டு, எலியைத் தாக்க ஆரம்பிக்கின்றது.
ஆனால்,
பெருச்சாளியாக இருந்தால், அது சீறிப் பாய்ந்தால், பூனை அதன் அருகில் செல்லாது.
அதனின் உணர்வலைகள் அதற்குள் பட்டவுடன், இதே பூனை அதை எதிர்க்கும் நிலை வந்தால்,
பெருச்சாளியின் உணர்வுகளை
பூனையின் கண் கவரும் பொழுது,
அதனின் உயிரில் படும்
பொழுது, உணர்வுகள் வேகமாகத் துடிப்பாகி,
அதனின் வலு அதிகமாகும்
பொழுது,
இது நிதானித்துச்
செயல்படும்.
மகாபாரதத்தில், பாரதப் போரில்,
கண்ணன் சங்கநாதம் ஊதியபின், குருக்ஷேத்திரப் போர் நடக்கிறது. இங்கே, குருக்ஷேத்திரம் என்பது பூனையின் உயிர், அந்த உடலுக்கு அது
குருவாகின்றது.
அந்தப்
பூனையின் கண் எலியைப் பார்க்கின்றது. எலியின் உடலில் இருந்து வரக்கூடிய
உணர்வலைகளை, கண்ணில் உள்ள கருவிழி என்ற “ருக்மணி” எடுத்து தனக்குள் பதிவு
ஆக்குகின்றது. அந்த கண்ணுக்குள் இருக்கக் கூடிய காந்தப்புலன் “சத்தியபாமா”.
எலியின் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை, இந்தக் கண், காந்தமான அந்த நிலையை
இழுத்து, தன்னுடைய ஆத்மாவாக மாற்றி, தான் சுவாசிக்கும் பொழுது,
குருஷேத்திரத்திற்குச் செல்லுகின்றது.
இந்தக்
குருஷேத்திரத்தில்,
பூனையின்
உணர்வும், அந்த எலியின் உணர்வும்,
இரண்டும்
மோதப்படும் பொழுது,
(கண்ணன்
– கண்கள்) சங்கநாதம் ஊதுகின்றான்.
எலியின்
உணர்வைப் பூனை நுகர்ந்து, அதற்குள் மோதும்போது,
அங்கு,
நாதம் சங்கநாதமாகின்றது.
பூனையின்
உணர்வுகள் வலுக் கொண்டதாக இருக்கின்றது.
சேனாதிபதி
உத்தரவுப்படிப் படைகள் இயங்குவதைப் போல,
தனக்குள்
எடுத்துக் கொண்ட வலுவான நிலைகள் கொண்டு,
தன்
உடலில் இருக்கக் கூடிய
உணர்வுகள் அனைத்தும் உந்தி,
பூனை
எலியைத் தாவிப் பிடிக்கின்றது.
ஆனால், அதுவே பெருச்சாளியாக இருந்தால், இங்கே இவ்வாறு செய், என்று யோசனை கூறுகின்றது.
உணர்வின் அழுத்தங்களும்,
உணர்வின் இயக்கங்களையும்
நாம் அறிந்து கொள்ள, வியாசக பகவான் மகாபாரதத்தை நமக்கு அருளினார்.
குருஷேத்திரப்போரில், முக்கியப்
பங்கு கொண்டவன் கண்ணன் (நம் கண்கள்). அவன் ஒவ்வொரு நிமிடமும், மற்றதை எடுத்துச் “சங்கநாதம்” ஊதியபின்தான், குருக்ஷேத்திரப் போரே நடக்கின்றது, என்று தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார், வியாசக பகவான்.
கண்ணின்
இயல்பான பங்கின் நிலையையும், கண் மற்ற உணர்வின் தன்மை கொண்டு, தனக்குள் எடுத்துக்
கொண்ட உணர்வின் ஆற்றலையும், செயலையும், தெளிவுற எடுத்துக் காட்டியுள்ளார் வியாசக
பகவான்.
இதைத் தெரிந்து கொண்டால் போதும். மனிதன் யார்? நாம் எப்படிச் செயல்பட வேண்டும்? என்ற
உண்மையினை அறிந்து கொள்ளலாம்.
எலி,
குருக்ஷேத்திரப் போரில் தோல்வியைப் பெற்று விடுகிறது. ஆனால்,
மறைமுகமாகக் கண்ணன் காட்டிய வழி கொண்டு,
பூனையின் உடலுக்குள்
வியூகத்தைத் தகர்த்து,
பூனையின் வியூகத்துக்குள்
சென்று,
அதனின் உணர்வை, அதனின் வலுவை எடுத்து
அதே ஆகின்றது. (எலி பூனையாக ஆகின்றது)
இந்தப்
பரிணாம வளர்ச்சியில், எலியைப் பூனை கொன்றாலும், உடல் இறக்கின்றது. அதனின்
உயிரான்மா, அதைக் கண்டுணர்ந்த அந்த உடலின் வலுக் கொண்டு, அதனின் நிலைகள் கொண்டு,
அதனின் உடல் பெறுகின்றது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்,
வியாசக பகவான்.
மகாபாரதத்தில்,
குருக்ஷேத்திரப் போரின் நிலைகளைப் பத்தாம் நாள் போர் என்று சொல்வார்கள். கடவுளின்
அவதாரமும் பத்து.
உணர்வின்
இயக்கங்கள் மாற்றமாவதால்,
ஒவ்வொன்றும்,
ஒவ்வொரு விதமாகச் சிருஷ்டிக்கும் நிலை.
இயற்கையின்
நிலைகள், ஒவ்வொரு உணர்வின் ஆற்றலின் நிலைகளில், மாற்றங்கள் எவ்வாறு வருகின்றது?
என்ற நிலையை அறிந்து கொள்வதற்குத்தான் மகாபாரதத்தை, வியாசக பகவான் அருளினார்.
இன்றைய நிலையில், பூரணமாக எல்லாவற்றையும் எடுத்துரைத்தால்கூடக் கிரகிக்கும் தன்மை
இல்லை.
இயற்கையின்
தன்மை ஒன்றுடன் ஒன்று இணைந்து, “எண்ணத்தின் தோற்றம் எண்ணத்தின் இயக்கம்” என்ற
நிலைகளில், எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப, உருவாக்கப்படும் போது, தோற்றம், ஒரு
உணர்வின் தன்மை ஒரு உடலுக்குள் சென்றவுடனே, அந்த உணர்வின் மணங்கள் அதை உணர்வாக
இயக்கும் நிலைகள் வேறு.
மெய்ஞானிகள் அவர்கள்
கண்டுணர்ந்ததை, நாம் தெரிந்து கொள்வதற்காகக் கூறிச் சென்றனர்.
(பக்கம் 77-84)
மெய்ஞானிகள், தாம் கண்டுணர்ந்த ஆற்றல் மிக்க சக்திகள்,
மற்றும் உணர்வுகள், அணுவின் ஆற்றலிலே, ஆற்றல் மிக்க சக்தியாக இன்றும், நம் முன் சுழன்று
கொண்டிருக்கின்றது. அதனைப் பருகும் ஆற்றல், நாம் பெறவேண்டும்.
அந்த அணுவின் ஆற்றலின் பெருக்கத்தைத், தனக்குள் கண்டுணர்ந்து,
இயற்கையின் சீற்றத்தையும், இயற்கையின் மாற்றத்தையும், இயற்கையுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு,
தான் வளர்ச்சியான நிலையை, உங்களுக்குள் இது உணர்த்தப்படும் பொழுது ‘கூர்மை’.
பூனையை எலி பார்த்து, அதனின் நிலையை நுகர்ந்து, பூனையின்
நிலைகள் கொண்டு மாறுகின்றதோ, இதைப்போல யாம் சொல்லும் உணர்வினை, அந்த மகரிஷிகளை நினைவூட்டி,
அவர்கள் பெற்ற நிலையும், அவர்கள் அறிந்த நிலையும், அவர்கள் ஆற்றலைப் பெருக்கிய நிலையினையும்,
எண்ணத்தின் கூர்மை கொண்டு நாம் ஏங்கும்போது, அதன் உணர்வின் தன்மை ஆன்மாவாக மாறுகின்றது
பின், இதனின் தன்மை உயிருடன் சேர்க்கப்படும்பொழுது, ஜீவன் பெற்று ‘ம்’ என்று பிரம்மமாகி
ஊழ்வினையாக மாறுகின்றது.
பத்திரிக்கை வாயிலாக, எங்கோ நடக்கும் செய்தியினை நீங்கள்
படித்துணரும்போது, அந்த உணர்வைச் சுவாசிக்கும்போது, அங்கே நடந்த நிகழ்ச்சிகளை, சூரியனின்
காந்தசக்தி கவர்ந்தாலும், நினைவு கூறும்போது, அந்த அலைகள் நமக்குள் குவித்துப் பதட்ட
நிலையாகி, பிரம்மமாகி, சிருஷ்டித்து விடுகின்றது.
இதைப் போலத்தான்,
பல இலட்சம் ஆண்டுகளுக்கு
முன்
நடந்த நிகழ்ச்சியின்
நிலைகள், பல மகாஞானிகள்,
ஒன்றன் பின் ஒன்றாக
மீண்டவர்கள்,
அவர்களின் உணர்வு கொண்டு, அவர்களைப் பின்பற்றி
இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கும்
அந்த மகரிஷிகள்,
அவர்கள் மனிதனாக வாழ்ந்த காலங்களில் வெளியிட்டதை,
சூரியனின் காந்தசக்தி கவர்ந்து,
இன்றும் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது.
அவர்கள் எடுத்துக் கொண்ட, இந்த உணர்வினை
தெளிவுறத் தெரிந்து, நாம் எடுத்துக்கொள்ளும் நிலைக்குத்தான்,
உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி,
இந்த உணர்வினை உங்களுக்குள் ஜீவனாக்கி,
அந்த ஜீவனுக்குள், உடலுக்குள், சிவமாக்கி,
சிவத்துக்குள் சக்தியாக இயங்கச் செய்து,
நினைவு கொண்டு நீங்கள் எடுக்கும்போது,
உங்கள் நினைவுகள் கூர்மையாக அங்கே சென்று,
அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து,
நினைவலைகள் அங்கே சென்று,
அங்கே உங்களுடைய
கூர்மை அவதாரமாக
அவர்கள் பெற்ற ஒளியின் சரீரம், நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான்,
நமது குருநாதர் காட்டிய அருள்வழியில், உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்தது.
நாம் கருணைக்கிழங்கில் இருக்கும் நஞ்சினை, நீக்கத் தெரிந்து
கொள்கின்றோம். நஞ்சினை நீக்கத் தெரிந்தாலும், அந்தச் சிறிதளவு நஞ்சு நம்மை இயக்கா வண்ணம்,
அதைத் தடுத்து நிறுத்தும் முறையாக புளிப்பு, காரம், உப்பு இவைகளை நாம் சேர்த்து, அந்த
நஞ்சினை அடக்கி, சுவை மிக்கதாக மாற்றி, சாப்பிடும் ஆறாவது அறிவைப் பெற்றுள்ளோம்.
இதனின் துணைக்கொண்ட நாம், நஞ்சு கொண்ட ஒருவருடைய வேதனையைக் கண்டறிந்தோம். நமது உடலுக்குள் நஞ்சு பாய்ந்து,
அதே உணர்வுகள் ஈர்ப்பின் மணம் கொண்டு, நம் ஆன்மாவாக வந்து விடுகின்றது. ஆனால் அது நம்மை
நோயாக மாற்றுகின்றது. நமது உடலில், நஞ்சினை நீக்கக் கற்றுக் கொண்ட ஆறாவது அறிவு கொண்டு,
அவர்கள் வேதனைப்பட்ட நிலைகளை, நாம் தெரிந்து கொள்கின்றோம்.
அங்கே நடக்கும் உணர்வினைக் கவர்ந்து, ஆன்மாவாக மாற்றி,
நமது உயிருக்குள் படும்போது, அவஸ்தைப்படுகிறார் என்ற நிலையில், இரக்க உணர்வு, உதவி
செய் என்று சொல்லுகின்றது. நாம் செய்கின்றோம். ஆனால், அந்த உணர்வின் தன்மை இரக்கம்
கொண்டாலும், அதே நஞ்சு நமக்குள் படர்ந்து விடுகின்றது. இதை நாம் துடைக்க வேண்டும்.
இன்று நாம் தங்க
நகை செய்ய, செம்பும் வெள்ளியும் கலந்தாலும், தெரிந்தே தான் கலந்து
செய்கின்றோம். பிறகு அடுத்த நகை செய்யும்போது, செம்பையும் பித்தளையையும் திரவகவத்தில் இட்டுச்
சுத்தப்படுத்தி, அடுத்த நகை செய்யச் செயல்படுகின்றோம்.
நாம் அடிக்கடி, நகை செய்யும்போது, சுத்தப்படுத்தாமல்,
செம்பு பித்தளையைச் சேர்த்துக் கொண்டிருந்தால்,
தங்கம் இருக்காது.
அது காணாமல் போய்விடும்.
இதைப் போல, மனிதன் நம் உடல் மாற்றிய நஞ்சினை நீக்கி,
நல்ல உணர்வினை வளர்த்துக் கொண்டு,
நஞ்சினை நீக்கிடும் எண்ணத்தின் வலுக்கொண்டு,
மற்றதை இணைத்து சிருஷ்டிக்கும் (பிரம்மா) அறிவு கொண்டது,
நம் ஆறாவது அறிவு.
ஒன்றுக்குள் அறிந்திடவும்,
ஒன்றை நீக்கி விடவும்,
ஒன்றை இணைத்திடவும், பயன்படுகின்றது.
ஒவ்வொரு அணுக்களின் சந்தர்ப்பம் மோதும்போது, அது புதுப்புது
விதமாக உருவாகின்றது. நம் சந்தர்ப்பத்தால் வரும் உணர்வுகளை, நாம் எண்ணும்போது அந்தப்
புது எண்ணங்கள் தோன்றி, அதனுடைய உணர்வுக்கொப்ப செயலாக்கி, பிறரைக் காத்திடவும் செய்கின்றோம்,
இதைப்போல, மற்றவர்கள் படும் துயரத்தைக் கேட்டறிந்தாலும்,
ஆறாவது அறிவு கொண்டு, நமது உயிரான நிலைகள், மனித உணர்வின் இருளை வென்ற அந்த மெய்ஞானியின்
உணர்வினை நாம் கவர்ந்து, பிரம்மமாக்கி, சிருஷ்டித்து இருள் சூழ்ந்த நிலையை, தங்கத்தில்
இட்டு ஆவியாக்குவதுபோல, தனக்குள் இருள் சூழும் நிலையை நீக்கி, மெய்ஞானியின் உணர்வை நம்முடன் இணைக்கும் திறன் பெற்றது, மனிதனின் ஆறாவது அறிவு.
நாம் இச்சந்தர்ப்பங்களில், அவற்றை நழுவ விட்டுவிட்டு,
இயற்கை போன போக்கிலேயே, பரிணாம வளர்ச்சியில் வந்ததுபோல, இயற்கையே வாழ்க்கை என்ற எண்ணம்
கொண்டு, இன்றைய சுகமே நல்லது என்று எண்ணினாலும், நாம் புற நிலைகள் கொண்டு,
விஞ்ஞான அறிவு கொண்டு, இங்கே மகிழ்ச்சியைப் பார்த்தாலும்,
“இவை மகிழ்விக்கும்
தீய நிலைகள்”, என்பதை அறியாமலேயே
இருக்கின்றோம்.
மகரிஷிகள் காட்டிய அருள்வழிப்படி, அந்த மகரிஷிகளின் உணர்வை,
நாம் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை நம் உடலுக்குள் சேர்த்து, இத்தீய உணர்வான அழுக்கினைத்
துடைத்தால்,
நமக்குள், நாம்,
நம்மைக் காட்டிலும் வென்ற
அந்தக் கூர்மையான நிலைகளில்,
நினைவினை அங்கே செலுத்தப்படும் பொழுது,
அந்த மகரிஷியின்
அவதாரமாகவே, நாம் ஆகின்றோம், எமது அருளாசிகள்.
(பக்கம் 85-90)
நாம் ஞானியின் உணர்வை எடுத்து, நமது உடலுக்குள் செலுத்தப்படும்
பொழுதுதான், நரசிம்ம அவதாரம். வாசற்படியில் அமர்ந்து, இரண்யனை மடிமீது வைத்துப் பிளந்ததாக,
நரசிம்ம அவதாரக் கதைகள் உண்டு.
விஷ்ணுவிடம் ஈரேழு உலகத்திலும் எதிரியும் இல்லை, இறப்புமில்லை
என்ற வரம் வாங்கிக்கொண்டான் இரண்யன். என்ற அசுரன் என்று, கதைகளில் சொல்லியுள்ளார்கள்.
ஒரு மனிதனின் வேதனைப்பட்ட உணர்வுகள், அந்த
உடலுக்குள் சென்று, மற்ற நல்ல உணர்வைச் செயலற்றதாக்கி விடுகின்றது. இதை இரண்யன் என்று பெயர் வைத்தார்கள்.
இவ்வாறு, உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த உணர்வுகள் சூரியனின்
காந்த சக்தியால் கவரப்படும் பொழுது, அந்த நஞ்சான செயல்களைச் செயல்படுத்தும் அணுவாக
மாறுகின்றது. ஒருவர் வேதனைப்படுகிறார் என்னும் பொழுது, அசுரச் செயல்களைச் செய்து கொண்டிருக்கும்,
அந்த உணர்வலைகள் வெளிவருவதை, இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்,
நாம் கண் கொண்டு பார்க்கும் பொழுது, “ருக்மணி”,
அவர்படும் வேதனை என்ற துயரத்தைக் காட்டினாலும்,
“சத்தியபாமா” அங்கே வேதனைப்படுகின்றார் என்ற உணர்வைக் கவர்ந்து
அந்த உணர்வு நமக்கு ஆத்மாவாக மாறிவிடுகின்றது.
ஆத்மாவாக மாறியபின்தான், நமது உயிருக்குள் பட்டு, அந்த
உணர்வின் தன்மை இயக்குகின்றது. உயிருக்குள் இயக்கும் வெப்பம்தான் விஷ்ணு. நாம் வேதனைப்பட்ட
உணர்வின் தன்மையை, நாம் கண் கொண்டு பார்த்து ஆன்மாவாக மாறி,
உயிருக்குள் பட்டு இயக்குவதை,
“விஷ்ணு வரம்
கொடுத்துவிடுகிறான்” என்று கூறியுள்ளார்கள்.
உடலான “இந்திரலோகத்தில்” பல சிருஷ்டிகளும் நடக்கின்றது.
அதனதன் உணர்வுகள் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப, நமக்குள் அதனின் தன்மைகள் உருவாகிவிடுகின்றது.
இந்த உடலான இந்திரலோகத்தில், ஒவ்வொரு உணர்வும் அதனின் நிலைகளில் இயங்குவதை, “தேவாதி தேவர்கள்” என்றனர்.
நமக்குள் உள்ள உணர்வின் தன்மை, பல நல்ல செயல்கள் செய்யும்
இந்த நிலைகளில், வேதனையான அசுரச் சக்திகள் புகுந்தவுடனே, நமக்குள் நல்ல செயல்கள் நடைபெறுவதைத்
தடைப்படுத்தி விடுகின்றது. இவ்வாறு, வேதனையான உணர்வு ஆகியவுடனே, உற்பத்தி செய்யும்
இந்திரலோகத்தில், அது உருவாகும் நிலைகளில் அசுர சக்தி புகுந்து,
“எங்கள் நல்ல
குணங்களைச் செயலாக்க முடியவில்லை” என்று சிவனிடம் முறையிடுகின்றன, தேவாதி தேவர்களான நல்லுணர்வுகள்.
இவ்வாறு முறையிடும் பொழுது,
“விஷ்ணு வரம் கொடுத்து விட்டான்,
வருவதை அணைக்கத்தான் எனக்கு தெரியும்.
அசுரனை அழித்திடும் நிலை எனக்கில்லை” என்று
உடலான “சிவன்”
சொல்லுகின்றான் என்றும் தெளிவாகச் சொல்லியுள்ளனர் ஞானிகள்.
அடுத்தப்படியாக, விஷ்ணுவிடமே கேட்கலாம். நாம் அனைவரும்
போகலாம் என்று சிவன் சொல்லுகின்றான். உடலுக்குள் இருக்கும் வேதனைப்படும் உணர்வுகள்
அனைத்தும், சிவனான உடலிலிருந்து, நினைவான எண்ணங்களைக் கொண்டு, நாம் மீண்டும் தன் உயிரை
எண்ணிக் கேட்கப்படும் பொழுது, அந்த உயிரான விஷ்ணு, எனக்கு வரம் கொடுக்கத்தான் தெரியும்.
இவை அனைத்தும் பிரம்மா அல்லவா உருவாக்குகின்றான். அவனிடம் கேட்போம், என்று கூறி விஷ்ணுவும்
வருகின்றான்.
ஆக இணையும் சந்தர்ப்பம், எதை இணைக்கின்றோமோ, அந்த உணர்வின்
சந்தர்ப்பம் இணையும் பொழுது, அது (பிரணவமாகி) ஜீவன் ஆகி, அந்த அணுவின் சக்தி சக்தியாகி,
உடலுக்குள் சிவமாக மாறி விடுகின்றது.
ஆனால் பிரம்மாவைக் கேட்டாலோ,
“எனக்கு உற்பத்தி
தான் செய்யத் தெரியுமே தவிர,
அழிக்கத் தெரியாது”
என்று கைவிரித்து விடுகின்றான். அங்கே தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டது.
எந்தக் கண்ணால்
நாம் கண்டுணர்ந்தோமோ, அதனைக் கொண்டே,
இவையனைத்தும் கண்ணுக்கே தெரியும்.
கண்ணனுக்குத் தான் தெரியும், என்று இந்திரலோகத்தில் உள்ள
அனைவருமே கண்ணனைத் தேடுகின்றனர்.
நாம் எதனைச் சிந்திக்கின்றோமோ,
அதுவாகி
அந்த சிந்தனைக்குரிய நிலைக்கு வழிகாட்டுவான் “கண்ணன்”.
இந்த உடலுக்குள் நின்று, இவையனைத்தையும் தெளிவாகத் தெரிந்து
கொள்வதற்காக, எவ்வளவு பெரிய காப்பியங்களை எளிதான நிலையில், நாம் வளர்ந்த நிலையும்,
வளர்ந்திட்ட நிலையும், நாம் செல்லும் மார்க்கங்களையும், தெளிவுற எடுத்துரைத்தார் வியாசக
பகவான். அம்மகரிஷியை நாம் மறந்துள்ளோம். அக்காப்பியங்களையும் நம்முடைய நிலைகளுக்கே
மாற்றி கொண்டோம்.
அம்மகரிஷி காட்டிய அறநெறிகளில், நம் மனித வாழ்க்கை --
கடைசி நிலை.
அவர் காட்டிய,
”கல்கியின் அவதாரத்தை
நாம் அடைய
முடியும்” என்ற தன்னம்பிக்கை கொண்டு
இந்த உடலே குப்பையானாலும்,
இந்த குப்பைக்குள் உணர்வின் தன்மை மணியாக்கி,
குப்பைகளை வயலில் போடும்போது,
அதனின் சத்து மணியாவதைப் போல,
பல உணர்வின் தன்மை
நம் உடலுக்குள் வந்தாலும்,
நமது உடலுக்குள்
வைரத்தைப் போல,
அதை மணியாக்க
வேண்டும்.
அந்த ஞானிகள் காட்டிய அருள்நெறிப்படி இதற்கு என்ன செய்வது?
என்ற உபாயத்தைக் “கண்ணாகிய கண்ணன்” காட்டுகின்றான்.
”நீ பிரம்மா ஆகின்றாய். நீ உற்பத்தி செய்வதையே தடைப்படுத்தி
விட்டால், தொல்லையில்லையே,
விஷ்ணு, நீ, வரம் இல்லை என்று சொல்லிவிட்டால் உற்பத்தியாகாதே.
சிவன், நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இது ஒன்றும் ஆகாதே”
என்று கண்ணன் கேட்கின்றான்.
பிரம்மா, “இதுதான் நடக்காது, எனக்கு உற்பத்தி செய்யத்தான்
தெரியும்” என்க,
விஷ்ணு, “எனக்கு வரம் கொடுக்கத்தான் தெரியும்” என்க,
சிவன், “எனக்கு அணைத்துக் கொள்ளத்தான் தெரியும்” என்க
அவரவர் தொழிலை அவரவர்கள் செய்கின்றனர்.
இவையனைத்தும், இவ்வாறு உணர்வின் செயலாக இருந்தாலும்,
கண், வழிகாட்டினாலும்,
உயிர், தன் உணர்வின் தன்மையை இயக்கிக் காட்டினாலும்,
அந்த உணர்வின் தன்மையை,
உயிர் நமக்குள் ஜீவன் பெறச் செய்தாலும்,
உடலின் தன்மை, தனக்குள் இணைத்துச் செயலாக்கினாலும்,
இவை அனைத்துக்கும் மூலமாக, நாம் முன் சேர்த்துக் கொண்ட
வினைகளுக்கு நாயகனாக, இன்று ஆறாவது அறிவு இருக்கின்றது.
இந்த ஆறாவது அறிவு
கொண்டு, நாம் முன்பு சேர்த்துக்கொண்ட வினைகளுக்குச் சக்தியாக, இந்த மனித உடல் அமைந்து
இருக்கின்றது, என்ற இப்பொருளின் தன்மையுணர்ந்து, அதனின் ஆற்றலைப் பருகிடும் நிலையாக, மெய்ஞானிகள்
தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார்கள்.
அங்கே கண்ணன் கேட்கின்றான். “நீங்கள் அனைவரும் இதைச் செய்ய
முடியவில்லையா” என்று கேட்டுவிட்டு, சிறிது நேரம் சிந்திக்கின்றான். நான் சொல்வதைக்
கேளுங்கள், என்கிறான்.
“அதோ வருகிறான் நாரதன்”,
அவன் ரிஷியின்
மகன்
அந்த ரிஷி தனக்கென்று
தவம் இருந்து,
தன் உணர்வை வளர்த்துக்
கொண்டவர்.
நஞ்சான உணர்வை
வென்று, தன் உணர்வை ஒளியாக மாற்றியவர்.
அவனுடைய மகன்
நாரதன் வருகின்றான்.
அவனைக் கேட்டு
அறிவோம் என்கிறான், கண்ணன்.
“நாம் பட்ட துயரம் போதாதா, நாரதன் வந்தால் நமக்குள் கலகத்தை
மூட்டி விடுவான்” என்று அனைவரும் அஞ்சுகின்றனர்.
இந்த உயிரின் தன்மை பேரண்டத்தின் நிலைகளை உருவாக்கி, அந்த
உணர்வின் சக்தியை, தனக்குள் உருவாக்கி, துருவம் சென்று அடைந்தவர் “துருவ மகரிஷி”, இந்த உலகில் வாழ்ந்து, நஞ்சினை அடக்கி, உணர்வினை ஒளியாக்கி,
இன்றும்
அவரிடமிருந்து
வந்து கொண்டிருக்கும்,
அந்த ஒளிச்சுடராக
மாற்றும் அந்த உணர்வின் அலையை
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, இங்கே வருகின்றது. அதைத் தான் நாரதன் என்று பெயர் வைத்தார்கள்.
அவனிடம் கேட்டால், அவன் அனைத்தும் ரிஷியின் மகன் ஆனதால்,
அவன் தீமைகள் அனைத்தையும் போக்கும் வழி காட்டுவான்.
ஆக நஞ்சினை நீக்கிவிட்டு. உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியதை
நாரதன் என்று வைத்து, நாம் அறிந்துக்கொள்ளும் வண்ணம், தெளிவாக எடுத்து உரைத்துள்ளார்கள் மகாஞானிகள்.
(பக்கம் 91-95)
கண்ணன் காட்டிய நெறிகள் கொண்டு, இந்த மண்ணுலகில் நஞ்சின்
தன்மையை அடக்கிய, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய, அந்தத் துருவ மகரிஷியின் அருளைப்
பெறவேண்டும் என்று நம் நினைவினை, இந்தக் கண் அதை ஏற்கச் சொல்லுகின்றான்.
“அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும்
ஈஸ்வரா”,
நமது உயிர் நமக்குள் அகக் கண்ணாக இருந்து,
நாம் எண்ணியதை நமக்குள் அறியச் செய்கின்றது.
புறக்கண், பிற நிலைகளில் நடக்கும் இந்த உணர்வை நுகர்ந்து,
அந்த ஈசனான உயிருடன் காட்டப்படும் பொழுதுதான்,
அந்த அகம், உயிர்
உள் நின்று,
கண்ணனாக இருந்து, நம் உடலுக்குள் தெரிய வைக்கின்றது.
உள் உணர்வை அறிய
வைக்கும் உயிராகவும்,
புறக்கண் மற்றக்தை
இழுத்துக் கவர்ந்து
இயக்கச் சக்தியாக,
நாம் அறிந்திடும் நிலையாகவும்,
அவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால்,
சுட்டுப் பொசுக்கி விடுவான்
என்ற நிலை போல,
அந்தக் கண்ணன் நாரதனிடம் கேட்டு, சரி என்கிற பொழுது, அந்தச் சக்தியை நாம் நுகரவேண்டும்
என்று, தெளிவுற எடுத்துக் காட்டுகின்றான்.
அந்தச் சப்தரிஷி மண்டலமும், துருவ நட்சத்திரமும், இந்த
மனிதனாக வாழ்ந்தவன், தான் நஞ்சை வென்று, உணர்வை ஒளியாக மாற்றி, ஒளியின் சரீரமாக உயிருடன்
ஒன்றி, “சப்தரிஷி” -- ஏழாவது அறிவாக அறிந்திடும் நிலையாகப் பொருள் கண்டு, பொருள் உணர்ந்து
செயல்படும் திறன் பெற்றவன், அந்த நிலையைத் தெளிவாகக் காட்டினார்கள்.
அந்த உணர்வின் தன்மையைத்தான் நாம் நுகர்வதற்கு,
“அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும்,
இது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,
எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்”
என்ற நிலை, கண்ணன் காட்டும் திருட்டு
வழி.
கண்ணன், கருவுக்குள் உள்ள குழந்தைக்கும் உபதேசித்தான்
என்ற கதையும் உண்டு. நம் உடலுக்குள் ஒவ்வொரு அணுவும் கருவாக இருக்கின்றது. நாம் பிறர்
திட்டுவதைக் கேட்டு உணர்வதை, கருவுக்குள் இருக்கும் இந்த உணர்வே, அவன் ஏசுகின்றான்
என்று கண் எடுத்து உபதேசிக்கின்றது.
இதே கண்கள், அந்த அருள் ஞானி, இந்த நஞ்சினை வென்றவன் என்ற
இந்த எண்ணத்தை எடுக்கப்படும் பொழுது, “அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும்
ஈஸ்வரா” என்று, கண்ணின் நினைவலையை உயிருடன் ஒன்றி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்ற ஏக்க உணர்வை, நினைவினை உயிருடன் ஒன்ற வேண்டும்.
அவ்வாறு, ஒன்றப்படும் பொழுது, உயிரின் இயக்கம் நமக்குள்
சக்தியாக உணர்த்தும் நிலையும், அந்த உணர்வின் தொடர்பு கொண்டு, விண்ணை நோக்கி ஏகி, மகரிஷிகளின்
அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன், எங்கள் உடல் முழுவதும் படர்ந்து,
எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும், என்ற நினைவின் ஆற்றலை உட்செலுத்தும் பொழுது,
பிராணயாமம். அந்த உணர்வின் சக்தி, நமது உடலுக்குள் ஜீவனாகின்றது.
நாம் துயரப்படுவோரைக் கண்டு, அந்த வேதனையை உணர்ந்தாலும்,
அந்த உணர்வின் தன்மை, நாம் பிறர் பட்ட துயரத்தை எண்ணிப் பார்க்கும் பொழுது, நம் ஆன்மாவாகி,
நமக்குள் உள்ள ஆறாவது அறிவை இயங்கவிடாது அது செயல்படுத்தும்.
இதை மாற்றுவதற்கு, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள்
பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும்
என்ற உணர்வினை உடலுக்குள் செலுத்தும் பொழுது,
அந்த அருள் ஞானியின்
உணர்வுகள் அங்கே செயல்பட்டு,
எப்படி சூறைக் காற்று வரும்
பொழுது,
விஷத்தின் தன்மையை அங்கு ஈர்க்கின்றதோ,
இதைப் போல,
விஷத்தை நீக்கிவிட்ட,
அந்த விஷத்தை அடக்கிவிட்ட
அந்த அருள் ஞானியின்
உணர்வின் தன்மையை,
நமக்குள் வேதனையை
அடக்க உள்ளே செலுத்தப்படும் பொழுது,
உடலிலிருந்து வெளிப்படும் மணம், மாற்றம் பெறுகின்றது.
நமக்கு முன், நாம் வேதனைபட்ட உணர்வை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்
அல்லவா.
அந்த வேதனையான உணர்வே இரண்யன்.
வாசல்படி என்பது மூக்கு. இங்கே அமர்ந்துள்ளான் நாராயணன்.
ஆக, நாராயணன் என்பது சூரியன்.
இங்கே நமக்குள் நரநாராயணனாக, வாசல்படி மீது அமர்ந்து,
மடிமீது வைத்து இரண்யனைப் (நஞ்சினை – தீமைகளை) பிளந்து,
ஒளியின் சுடராக தனக்குள் செயலாக்குகின்றான்.
ஆறாவது அறிவின் துணைக் கொண்டு, மகரிஷிகளின் உணர்வுகளை
எவ்வாறு எடுக்க வேண்டும்? என்று பிரகலாதன் கதையைக் காட்டி, நமக்குத் தெளிவான நிலைகளில்
கூறியுள்ளார்கள் ஞானிகள்.
பிரகலாதன் என்றால்,
நமது ஒவ்வொரு எண்ணங்களும் நமக்குள் பிறக்காமல் பிறப்பது. நாம் எதை எண்ணுகின்றோமோ, அதையெல்லாம், பெறாமல் பெறும் அந்த
உணர்வின் சக்தியாக, நமக்குள் இயக்கியது. பிரகலாதன் என்பதின் பொருள் இதுதான்.
நாம் எண்ணிய உணர்வு நமக்குள் வரும் பொழுது, அந்தக் கதையைக்
காட்டி, இந்த உண்மையின் ஒளிச்சுடராக, அவன் எண்ணிய நிலைகள் கொண்டு அதுவே காட்டுகின்றான்.
பிரகலாதன் என்ன
சொல்லுகின்றான்? “ஹரிவோம் நமோ நாராயணா”,
இந்த சூரியனின்
இயக்கமாக,
அந்த உணர்வின்
சக்தி நமக்காக,
நமக்குள் இருந்து,
ஒளியாக அறிந்திடும் செயலாக
நமக்குள் நின்று, அந்த ”நாராயணன்” இயக்குகின்றான்.
“ஹரிவோம்” எனக்குள் நின்று ஜீவனாக அந்த நாராயணன் இயக்குகின்றான்.
“நமோ” நமது சரீரத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றான், என்று பொருள்பட அன்று வியாசகர் தெளிவாக
எடுத்துரைத்துள்ளார்.
அந்த அருள் ஞானியின் உணர்வு இங்கே இருக்கின்றது. அருள்
ஞானியின் உணர்வை எப்படிக் கவர வேண்டும்? என்று நமது குருநாதர் சொன்னார். அவர் காட்டிய
வழியில் அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
அந்த அறிந்திடும்
சக்தி உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகி, அந்த உணர்வின் தன்மை கொண்டு ஏங்குவீர்கள்
என்றால், உங்களுக்குள்
அனைத்து இருளையும் நீக்கி, ஒளியின் சிகரமாக வாழ முடியும் என்று இதை உபதேசித்தது.
மெய்ஞானிகளின் அருள் ஒளி பெறவேண்டும், என்று ஏங்கி தியானிக்கும்
அனைவரும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற, எமது அருளாசிகள்.