ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 15, 2012

அருள் ஞானம்


DSC00065 (2).JPG       DSC00143.JPG
சாமி புத்தகம்  அருள் ஞானம்
(பக்கம் 8-12) 
 ஒரு விஷத்தின் தன்மை பெற்றால், நல்ல குணங்கள் அழிந்துவிடும்.
அந்த விஷத்தினையே, ஒளியாக மாற்றிடும்
அரும்பெரும் சக்தி பெற்ற அகஸ்தியன்
துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாக
திகழ்ந்து கொண்டிருக்கும், அதனின்று வெளிப்படும் சக்தியை,
நுகரும் சந்தர்ப்பம்தான் துருவ தியானம்.

திரும்பத் திரும்ப சொல்கின்றேன், ஒரு செடிக்கு திரும்பத் திரும்ப, தண்ணீர் ஊற்றினால்தான், அது முளைக்கும். திரும்பத் திரும்ப, அந்த செடி அதன் உணர்வை நுகர்ந்தால்தான், அது வளரும். ஒருவன் தீமை செய்கின்றானென்றால், திரும்பத் திரும்ப அவன் செய்தான், செய்தான் ன்றால் அந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் வளருகின்றது.

வேதனை என்ற உணர்வை, ஒருமுறை பதிவு செய்து, பாவம் அவன் வேதனைப்படுகின்றான் என்று திரும்பத் திரும்ப எண்ணும்பொழுது, அந்த வேதனையின் அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்,
உணர்ச்சியின் தன்மை கொண்டு,
நற்பண்பு கொண்டு, தீமையின் கொடுமைகளை அறிந்தாலும்,
தீமை என்று அறிந்த உணர்வுகள்,
அது, மீண்டும் மீண்டும் நமக்குள் உணர்வுகளை
நினைக்கும் சந்தர்ப்பம் வருகின்றது.

அப்படி, சந்தர்ப்பத்தால் ஒன்றுபட்டபின், அதை நுகரும் உணர்வும், அதை வளர்க்கும் தன்மையும் வருகின்றது. இதைத்தான், உங்களுக்காக மீண்டும் சொல்லுகின்றேன். நமது குருநாதர், அகண்ட நிலைகளை நுகர்ந்து, துருவ நட்சத்திரம் எவ்வாறு ஒளியானது என்று காட்டினார்.

உணர்வுகள் அனைத்தையும்,
உயிர் பெற்ற ஒளியின் சரீரமாக மாற்றி,
இந்த பிரபஞ்சம், அகண்ட அண்டத்தில் தான் பெற்ற நிலையும்,
அகண்ட அண்டத்தில், தன் உணர்வின் நிலைகளைக் கவர்ந்துணர்ந்து,
இன்றும் வேகா நிலை என்ற நிலை அடைந்து,
பேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகளில், மகிழ்ச்சி அடைகின்றது.

அகஸ்தியனும், அகஸ்தியனின் மனைவியும், தீமைகளை வென்றபின், மகிழ்ந்து, 
அந்த மகிழ்ச்சி என்ற உணர்வின் ஒளி அதிர்வுகள்,
இரு உயிரும் ஓர் உயிராய் இணைந்து,
ஒளியின் சரீரமாகி, பேரருளைப் பெற்றனர்.

நாம் ஒன்றைக் கண்டபின், இன்பத்தின் நிலைகளில் எவ்வாறு மகிழ்கின்றோம். அவ்வாறுதான், பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலைகளில், வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். இதைப்போல்,
நம் பிரபஞ்சத்தில் இருப்பது போன்று,
ஏனைய அகண்ட அண்டத்திலும்,
ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும், உருவாகும்  உயிர்கள்,
இவ்வழியேஅதன் வளர்ச்சியைசந்தர்ப்பத்தில் அது எடுக்கின்றது.

ஒரு பிரபஞ்சத்தில் பிறந்த நிலைகள், இந்த பிரபஞ்சத்திலிருந்து வெளிப்பட்டாலும், இதனின் உமிழ்ந்து வெளிப்படும் உணர்வுகளை, பிற சூரியன்களும் கவர்ந்து கொள்கின்றது.  ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்கின்றது. எவையும் பிரிந்து வாழவில்லை,

இன்று உள்ளது நாளை இல்லை என்ற நிலைகளில்தான், அகண்ட அண்டத்தின் செயல் உருமாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே உள்ளது. எவையும் தனித்து இயங்கவில்லை.

இதைப்போன்று மனிதனானபின், எத்தனையோ நிலைகள் உருமாற்றி உருமாற்றி, பிறக்கும் பொழுதும், ரூபத்தின் நிலைகள் வேறு. வளர்ச்சி அடையும் பொழுதும், ரூபத்தின் நிலைகள் வேறு. முதிர்ந்தபின்,
உயிருடன்  ஒன்றி, விளைந்தது எதுவோ
அதைக் கொண்டு, உருக்களை மாற்றிக்கொண்டே உள்ளது, உயிர்.
ஆனால், மனிதன் அதை தடைப்படுத்தி, உயிர் ஒளியானது போன்று, உணர்வினை ஒளியாக மாற்றி, என்றும் நிலையான நிலைகள் செய்தவன், துருவனாகின்றான்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான், மீண்டும் மீண்டும் நினைவாக்கி, துருவத்தினின்று வெளிப்படும் உணர்வை, முதல் நிலைகளில்,
இந்தப் புவிக்குள் புகும் நிலைகளை,
அந்த நினைவை ஊட்ட,
உங்கள் நினைவை அதனுடன் கலக்க, 
அதனின் உணர்வை, நீங்கள் எளிதில் பெறவே, இந்த துருவ தியானம்.

நமக்கு ஒரு முறை வலித்தால், வென்று இழுக்கின்றோம். அப்பொழுது வலி தெரியவில்லை. அந்த வென்று இழுக்கும் பொழுது, உணர்வின் தன்மை அதிக நேரமானால், அந்த வலியின் உணர்வாக, அதன் வழி வருகின்றது.

மீண்டும், எதனால் வலி வந்தது என்று, திரும்பிப் பார்க்கின்றோம். அதன் வழி உணர்வினை நுகர்ந்து, வலிக்குண்டான உணர்வினை, அணுவாக மாற்றுகின்றது நமது உயிர்.அதைப் போன்று,
அரும் பெரும் பேரருளை,
பேரொளியாக மாற்றிய உணர்வினை, நினைவு கொள்ளும் பொழுது,
உங்களுடைய நினைவின் ஆற்றல்,
வான மண்டலத்திற்கே செல்லுகின்றது.

எம்மை, இப்படித் தான் குருநாதர் ஒன்றை உணர்ச்சி வசப்படும்படி செய்வது,  அகண்ட அண்டத்தையும்,  உற்று நோக்கும் சந்தர்ப்பத்தை,  தன்னிச்சையாகவே ஏங்கிப் பெறும்படி செய்தார்.
மணிக்கணக்கில் சொல்லிக் கொண்டே இருப்பார். திடீரென்று, ஒரு உணர்ச்சியை தூண்டச் செய்து, தன் நினைவை, தானே மேலே உற்று நோக்கும்படி செய்தார். அதைத் தான் என் குரு செய்ததை, அவர் வழியில் நீங்கள் பெறவேண்டும்.

DSC00101.JPG

 (பக்கம் 12-21)
எமது ஆசை, நீங்கள் அனைவரும் மெய்ஞானம் பெறவேண்டும் என்று எண்ணும்பொழுது, யாம் எதை ஆசைப்பட்டோமோ, அதை ஓம் நமச்சிவாய என்று, எமது உடலுக்குள் உங்களது உணர்வையும், குரு காட்டிய உணர்வையும் இணைத்து, உணர்வின் தன்மை நுகர்ந்து உருவாக்குகின்றது உயிர்.
எமது உடலிலிருந்து வெளிப்படும், சொல் உணர்வுகளை,
செவிவழி ஊட்டி, உணர்வின் நினைவுகள், கண்வழி அதை ஊட்டி,
அதனையும், உங்களில் யாம் இணைத்தே செயல்படுகின்றோம்.
இவைகளில் நாம் பிரிந்துள்ளோமோ? இல்லை. இதுதான், 
நாம் அனைவரும், இணைந்து வாழும் நிலைகள்.

இதைப் போன்று, ஒருவன் தவறு செய்கின்றான், சில கொடுமைகளும் செய்கின்றான். அதை நாம் உற்று நோக்குகின்றோம். அதை உற்று நோக்கும்பொழுது, அதனின்று வந்த நிலையை, நாம் நுகர்ந்தபின், மீண்டும் அவனின் நினைவே வருகின்றது.

நமது உயிர், நாம் எதை நினைக்கின்றோமோ, அதை ஓம் என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது. அவன் தவறு செய்கின்றான் என்று, ஒரு முறை சொன்னால் போதும். உனக்கு என்ன தெரியும்? என்று, கோப உணர்வு கொண்டு,  அதிகமாக, நமக்குள் எடுக்க ஆரம்பித்து விடுகின்றோம்.

இப்பொழுது, சாமியைப் (எம்மை) பார்த்தால், அவர் சொன்ன அருளைப் பெறவேண்டும் என்று ஏங்கி, எண்ணுகின்றோம். சாமியினுடைய எண்ணங்கள் அங்கே தோன்றியபின், அந்த அருளைப் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் அங்கே தோன்றுகின்றது.

ஆரம்பத்தில், கண்ணில்லாத பொழுது, உயிர் உணர்வை நுகர்ந்து, உடல்பெற்ற நாள் சிவன் இராத்திரி என்றாலும், தன் உணர்வால் அறிந்துதான், தன் வாழ்க்கையை வழிப்படுத்துகின்றது. ஒரு விஷச் செடியை நுகர்ந்தால், அதனால் வேதனைப்படும் நிலைகளிலிருந்து நகர்ந்து சென்றாலும்,
இப்படி, பல மோதல்கள் வரப்படும் பொழுதுதான்,  பார்க்கவேண்டுமே என்ற உணர்ச்சிகள்  தன்னிச்சையாகத்  தோன்றுகின்றது.

உங்கள்  வாழ்க்கையில்  துன்பப்பட்டிருக்கும் பொழுது,
இருளுக்குள்தான்  சிக்கியுள்ளீர்கள்.
வெளிப்புறத்தைக்காணும்  நிலையோ,
அதை  மாற்றும்  நிலையோ,  நமக்குள்  தோன்றுவதில்லை.
இந்தச்  சந்தர்ப்பம், துன்பத்திலிருந்து  மீளவேண்டும்  என்ற  உணர்வுகள்
உங்களிலே உந்துகின்றது.  இது சமயம்,
உங்களுக்கு,  இந்த   சந்தர்ப்பத்தை 
(அருள்ஞானத்தைப் பெறும்) ஏற்படுத்தும் பொழுது,
அதை பெற்று, நாம் மீளும் உபாயம் வருகின்றது.
குரு காட்டிய, உயர்ந்த உணர்வை எடுக்கும் பொழுது,
துன்பத்திலிருந்து, விடுபடும் நிலைகள் வருகின்றது.

உதாரணமாக, நாம் மாவைப் பிசைகின்றோம். அதில் சிறிது உப்பைப் போடவேண்டுமென்று அதை போட்டபின், அதிலிருந்து நாம் சிறிதளவு எடுத்தாலும், மேலே இருக்கும் மாவில், உப்பு வந்து அளவு மாறி, உப்பு அதிகமாகின்றது.

முன் பகுதியில் கொத்தி எடுக்கின்றோம். பின்புறத்தில் ஒட்டி இருக்கும் மாவில், உப்பு அதிகமாகிவிட்டால், நாம் கலந்தவுடன், இதைத் தான் எண்ணுகின்றோம். உப்பு ஒட்டிவிடும் என்பதை மறந்துவிடுகின்றோம். நமக்குள் செயலில் இருந்தாலும், இதை அறியவில்லையென்றால், உப்பு ஒட்டிவிட்டது, இதை சிறுத்துவிடுவோம் என்றால், அளவு சரியாக இருக்கும், சுவையும் நன்றாக இருக்கும்.

இதைப் போன்றுதான், நாம் சுவையைக் கூட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அளவின் எண்ணங்கள்,  மற்றவர்கள் செய்வதையும் சேர்த்து விடுகின்றது. இதைப் போன்று, நாம் நுகரும் சந்தர்ப்பங்கள், ஏராளமான நிலைகள் உருவாகின்றது.

எதையும் நம் உயிர் விடுவதில்லை. இதை நம் இயக்க சக்தியாக மாற்றி, நம் உடலாக மாற்றுகின்றது. உயிரோட வேலை அதுதான். ஒரு நெருப்பை வைத்து, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, ஒரு பொருளைப் போட்டால், எப்பொருளோ அதன் சுவையைத் தான் மாற்றுகின்றது. அதைப்போல, நம் உயிரின் வேலை, எதை நுகர்கின்றோமோ, அதன் வேலையைச் செய்தே தீரும்.

இப்படித்தான்,
"பார்க்க வேண்டும்" என்ற உணர்வுகள் உந்தி, கண்கள் தோன்றியது.
பார்த்தபின், அதன் உணர்வின் தன்மை அறிய நேருகின்றது.
அறிந்துணர்ந்து, உணர்வின் தன்மை மீண்டும் நுகர்ந்து,
இது தீமை, என்ற நிலைகளில் விலகிச் செல்கின்றது.

தீமை என்று எப்பொழுது உணர்கின்றது? அதன் உணர்வின் வலிமை கண்டுதான் ஓடுகின்றது. ஆனாலும், சிறுகச் சிறுக அதன் உணர்வுகள் சேர்க்கப்பட்டு, தன் உணர்வுகளிலும் மாற்றமடைகின்றது.

இப்படி, ஒரு அணுவின் தன்மை வரும் பொழுது, அதன் நிலை மாறுகின்றது. செடிகளில் ஒரே இனத்தைப் போன்று, சிறிது சிறிது மாற்றங்களாக, பல செடிகள் உண்டு. மரங்களில் ஒரே மரத்தைப் போன்று, பல பல உணர்வுகள் மரங்களிலும் உண்டு. 

இதைப்போன்றுதான், ஒரு உணர்வின் தன்மை வரும்பொழுது, நம்முடைய எண்ணங்களில் அவ்வப்பொழுது, மாற்றமாகும் பொழுது,  நுகர்ந்த மாற்றத்தின் அணு செல்கள், கருத்தன்மையில்  மாறிக் கொண்டே உள்ளது.

இவ்வாறு, நாம், உற்றுப் பார்க்கும் பொழுது, கண்கள் எப்படி வந்ததோ, அதைப் போன்று, நாம் மறைவிடத்தில் மறைவாக இருக்கும், உணர்வின் தன்மையை, அருள்ஞானிகளின் உணர்வை, நுகரவேண்டுமென்று எண்ணும்பொழுது,  நமக்குத் தெரிவதில்லை.

எண்ணத்தின் வலு கூட்டும் பொழுது, அதனின்று வரும் உணர்வைக்  குவிக்கின்றது. அந்த குவித்த உணர்வின் தன்மை, நம் புலனறிவிற்கு ஒன்றாகப்படும் பொழுது, ரூபத்தின் தன்மை, உள் உணர்வாக உயிரின் நிலைகள் கொண்டு, உருவத்தைக் காணமுடிகின்றது.

இன்று T.V. க்குள் பல நிலைகளை ஈர்த்து, உணர்வின் நிலைகள் பதிவானாலும், பல வகைகள் இந்த புவியில் கலந்திருப்பதை, எதன் அலைவரிசையில் வைக்கின்றோமோ, அந்த அலைவரிசையில் சூரியன் கவர்ந்து, அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அதன் உணர்வின் வலுகொண்ட அலைவரிசையில் கவரும் பொழுது, குவித்த உருவங்களைக் காட்டுகின்றது.

அது ஈர்க்கும்  நிலைகளில், அதிலிருந்து எத்தகைய ஒலியின் உணர்வுகள் ஒன்றி வந்ததோ, அந்த ஒலியின் உணர்வுகளையும், நாம் செவி வழி கேட்கின்றோம். விஞ்ஞானி அதைச் செய்துள்ளான். இதைப் போன்றுதான்,
பல பல உணர்வுகள் நமக்குள் இருப்பினும், நினைவுகளில், தீமை செய்தவன் உணர்வுகளை எண்ணினால்,
அவன் உருவம் நமக்குள் வரும்.
அவன் செயல்படும் உணர்ச்சியின் எண்ணங்கள்
நம்மை இயக்கவும் செய்யும்.

அதன்வழி அணுப்பெருக்கங்கள், நம்மால், நமக்குள் உருப்பெறுகின்றது. இதுவெல்லாம், பல கோடி சரீரங்களில், தீமை என்ற நிலைகளை, எண்ணத்தால் கண் பெற்று வந்தபின், கண் கொண்டு பார்த்து, நன்மை தீமைகளை நுகர்ந்து அறிந்தது.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வு வலுப்பெறும் பொழுது,
எதன் உடலைப் பார்த்ததோ, அதன் வலுவை நுகர்ந்து,
அதிலிருந்து, விடுபடும் உணர்வுகளை நுகர்கின்றது.
அந்த உணர்வுகளை, கண் கொண்டு பார்த்தபின்,
அந்த வலிமையான உணர்வுகளை நுகர்கின்றது.
அந்த தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகள்,
இந்த உடலிலே விளைகின்றது.

அதனின் வளர்ச்சி அதிகமானபின், அதன் நினைவுகொண்டு, இந்த உடலைவிட்டு உயிரான்மா செல்கின்றது. எத்தனையோ உடல்களை உயிருடன் இருக்கும் பொழுது பார்க்கின்றது. பார்த்தபின், அஞ்சி, தன்னைக் காக்கும் உணர்வுகள் பெறுகின்றது.

அதில் எதனின் உணர்வை வலிமையாகச் சேர்த்து, அதன் ஈர்ப்பில் வலிமை பெற்றதோ, இந்த உடலை விட்டுச் சென்றபின், அதன் ஈர்ப்பிற்குள் சென்று, அதன் ரூபமாக மாறிவிடுகின்றது. ஏனென்றால், அதன் வலு பெறும் பொழுது, இதனுடன் சேர்ந்த நிலைகள், அணுக்களைப் பிரித்துவிடுகின்றது.

அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே பெற்று, அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து, ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார், அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி, நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி, இதனுடன் சுழன்று, உணர்வுகளை தனக்குள் சேர்க்கப்படும் பொழுது,  அகண்ட அண்டத்தில் வருவதையும், உங்கள் உணர்வுக்குள், அது பெறும் உணர்ச்சியின் நிலையை அணுவாக மாற்றும் நிலை கொண்டு, அது உருப்பெற்று விட்டால்,  தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.

உங்களால் நினைத்த நேரத்தில், அகண்ட அண்டத்தினையும், அதன் செயலாக்கங்களையும் காணமுடியும்.
அதில் வெளிப்படும் உணர்வில், அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்த்து, பகைமை உணர்வு உங்களுக்குள் வராது,  பேரின்ப உணர்வினை”  உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது, எமது அருளாசிகள்.


DSC00060.JPG
 (பக்கம் 23-28)
எமது அருள், குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து, அவர் உணர்வு என்னை பக்குவப்படுத்தியது போல், உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன். இதில், எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ, அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும், அடுத்து, சீராக என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும்,  இது உதவுகின்றது.

குறுகிய காலமே இருக்கும்,
இந்த உடலுக்கு, வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும்,
உயிருக்கு, அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.  இதுதான் வாழ்வின் கடைசி எல்லை.
ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர்.
ஒளியின் உணர்வாக, நம் அணுக்களை, ஆறாவது அறிவின் துணை கொண்டு, உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான், பிரம்மாவை சிறை பிடித்தான் என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது. அதே சமயத்தில், அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகும் பொழுது, உயிரைப் போன்றே, உணர்வின் தன்மை ஆக்கப்படும் பொழுது, நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது. இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்தால், ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து,
இது தவறு, இது கெட்டது, என்று உணர்வினை
நுகர்ந்து, நுகர்ந்து, இதனைக் கலந்து, கலந்து,
இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

அவனே உருவாக்கினான். ஈசனாக இருந்து, உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான், கடவுள் என்ற நிலையில், நாம் எதனை நுகர்ந்தோமோ, அவை, நம் உள்நின்று அதனின் துணை கொண்டு, அங்கே இயக்குகின்றது.

அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை. அவன்தான் உருவாக்குகின்றான். ஆகவே, அமைதி கொண்டிருக்கும் நேரத்தில், உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.

நம் குரு, என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து, உங்கள் கண்ணின் நினைவை, என்னிடத்தில் செலுத்தினாலும், நீங்களும், அண்டத்தில் மிதக்கின்றீர்கள். அதனின் உணர்வை, நினைவை கொள்ளும் பொழுது, அதன் அருளை நீங்களும் பெறமுடியும்.

அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன், துருவனாகி, துருவ நட்சத்திரமானான்.
அவன், அகண்ட அண்டத்தில் வருவதை, ஒளியாக மாற்றுகின்றான்.
அதன் உணர்வின் தன்மை, இந்த பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது, 
அகண்ட அண்டத்தில் ருவதையும்,
ஒளியாக மாற்றிடும் திறன்,
நீங்கள் பெற வேண்டும். 

நீங்கள் சிறிதளவே இருப்பினும், இந்த உணர்வின் தன்மை, உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்த பூமியிலும் பரவுகின்றது.
அதன் உணர்வின் நினைவு கொண்டு, கவருங்கள்.
உங்கள் நண்பர்களிடத்திலும், குடும்பத்திலும், தீமை புகாது தடுக்க,
அருள் ஞானத்தைக் கூட்டுங்கள்.
காலத்தை அறிந்து, அவர்களுக்கு போதியுங்கள்.

காலம் அறியாது போதித்தால், அது நமக்கும் நல்லதல்ல. சோர்வடையச் செய்யும்,  ஈர்ப்புடையதாய் இருக்கின்றது என்று போனால், நமக்குள் சங்கடம் வரும். நமக்குள், நல்ல குணமே, நம்மை சோர்வடையச் செய்யும். இருளச் செய்யும். ஆனால்,
காலமறிந்து, நாம் செயலின் தன்மை உருவாக்கி,
அந்தக் கால அளவுகோல் --  ஒளியின் சரீரமாக,
நமக்குள் உருவாக்க வேண்டும் என்பதற்கே, 
இதைச் சொல்லுகின்றேன்.

சூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு, ஏழாவது ஒளி. இதைத்தான், சூரிய பகவான் வருகின்றான் என்று, வேக ஓட்டத்தைக் காட்டி, ரதத்தைக் காட்டியது. அந்த, ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால், நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும்.

ஆகவே, மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும்போது,
ஏழாவது,  ஒளியின்  நிலைகள் அடைதல் வேண்டும்.
இதுதான்,  ஈரேழு லோகத்தை வென்றவன், விண்சென்றான்  என்பது.

அவன் தனி உலகமாக, ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான்.  அவன், ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

சூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள், ஆறு. ஒளி ஏழு.
மனிதனின் அறிவு ஆறு. மற்றதைத் தெளிந்து உணர்ந்து, ஒளியாக மாற்றுவது, ஏழு. காவியங்களில், ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன், என்று சொல்லுகின்றனர். மனிதனுக்குள், உணர்வுக்குள், இந்த ஏழு லோகத்திற்குள்  தேடி, நாம் காணுதல் வேண்டும்.

மேலே ஏழு, என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு. ஆக, நமக்குள் தேடினால் உண்டு. 

அகண்ட அண்டத்தின் நிலைகள், இந்த பிண்டத்தில் உண்டு. ஆகவே, நாம் விண்ணின் ஒளியாக மாற்றும் உணர்வு பெற்று, உயிர் என்ற நிலை பெற்று, உணர்வின் ஏழாவது ஒளியாக மாற்றும் திறன் பெற்று இருப்பினும், இருள் சூழும் நிலைகளிலிருந்து, மீள்தல் வேண்டும்.

ஒளியாக ஒன்றாக இருக்கின்றது. பல வர்ணங்கள், ஒளியின் நிலையை மறைத்திடும் பொழுது, அந்த வர்ணத்தைத் தான் காட்டுகின்றது. நமக்குள் எந்த குணத்தின் தன்மை வருகின்றதோ, அந்த வர்ணத்தின் செயலாகத்தான், இருள் சூழ்வதும் சிந்திப்பதும், சிந்தனையற்ற நிலைகளும், வருகின்றது.

ஆகவே, பேரருள் என்ற உணர்வினை எடுத்து, நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும். அந்த உணர்வின் தன்மையை, உங்களில் உருவாக்கத் தான், இந்த நிலை.

யாரும் குற்றவாளியல்ல. குற்றத்தைச் செய்பவரும் அல்ல.  சந்தர்ப்பத்தால், நுகர்ந்த உணர்வே நம்மை, அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. நுகர்ந்தது, நமக்குள் விளையாது, அருள் ஒளி என்ற உணர்வைக் கொண்டு, இருளை நீக்கப் பழகவேண்டும்.

இதற்குத் தான் துருவ நேரத்தில், அதனின்று வரும் நிலைகளை நீங்கள் நுகர்ந்து, இருளை மாய்த்து, ஒளி என்ற உணர்வை நீங்கள் பெறவேண்டும் என்று, தியான நிலைகளிலேயே, உபதேசத்தைக் கொடுத்து, அழைத்துச் சென்றது. எமது அருளாசிகள்.


DSC00147.JPG

 (பக்கம் 31-36)
வியாபாரங்களில் கொடுத்தது வரவில்லை என்றால், கொடுத்தேன், வரவில்லை என்ற இந்த உணர்வை எடுத்து, இந்த உணர்வோடு சேர்த்து, இன்னொருவரைச் சேர்த்தால், கடன் வாங்குவார்கள் பின் போய்விடுவார்கள்.
கடன் கொடுத்தோம்,
 இன்னும் வரவில்லை என்று எண்ணும்போது
அதைச் சமாளிக்க, இருந்த பணத்தைக் கொண்டு
சரக்கு வாங்கச் சென்றால்,
மட்டமான சரக்கை வாங்கி வந்துவிடுவோம்.

அந்த மட்டமான சரக்கு, எப்படி விற்கும்? என் வியாபாரமே நின்று போய்விட்டது என்போம். இது சந்தர்ப்பங்கள். உணர்வுக்கொப்ப எண்ணங்களை மாற்றி, நல்லவை என்றாலும், மறந்துவிட்டுச் செய்து விடுவோம்.

எப்படியும் லாபத்தைப் பெறுவோம், என்று செய்தாலும், முதலில் லாபம் வரும். பின், அது தடை என்ற உணர்வுகளை, ஊட்டிவிடுகின்றது. நம் எண்ணம், நமக்கே எதிரியாக உருப்பெற்று, நம்முடைய நினைவும் நல்லதைப் பெறாது, நமக்குள்ளே எதிரியை உருவாக்கி விடுகின்றது. நல்வாழ்க்கையைப் பயன்படுத்தும் நிலையில்லை. 

இதைக் கேட்டுணர்ந்தோர், உங்களுக்குள் இந்த அறிவின் தன்மை வளர்கின்றது.
தீமைகள் வரும் பொழுது அதை மாற்ற,
உங்கள் நினைவின் ஆற்றலை,
துருவ  நட்சத்திரத்தினுள் செலுத்தி,
சிறிது  நேரம் அதிகமாகிவிட்டால்,
 இவனுக்கு வீட்டு கவலை இருக்கின்றதா?
எவனோ சாமியார் சொன்னான் என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்திருக்கிறான் என்பார்கள்.
இது மாதிரி, புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

பெண்கள், எப்படியோ இவர் பாடுபடுகின்றார். ஆனால் உணர்வுகள் அவரை அறியாமல் இயக்குகின்றது. நாம் எப்படியாவது, மன வலிமை பெறச் செய்யவேண்டும் என்று தியானமிருந்தால்,
 கொளுந்தியாலோ, நாத்தனாரோ,
யாராவாது சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால்
கஷ்டத்தை மாற்றிவிடமுடியுமா?
என்ற உணர்வுகளை ஊட்டுவார்கள்.

      அவர் குடும்பத்தின் நிலை அறிந்து, எப்படியும் மாற்றவேண்டும் என்று வீட்டிற்குச் சென்றாலும், சுழன்ற இருளுக்குள் சென்று, அடர்த்தியின் நிலை சென்றடைந்த பின், ஒளியின் தன்மை வெளிப்படாதபடி மங்கிவிடுகின்றது. இப்படி,
நல்வழிப்படுத்த வேண்டுமென்றாலும்
உலக இயல்புகள், விஷத்தன்மை கொண்ட நிலைகளில் மாறி வரும்போது,
பக்தி கொண்ட உள்ளங்கள் அதைப் பற்றிகொண்டு,
அந்த பக்தி என்ற ஒன்றையே, நம்பும் நிலை இருகின்றது.
ஆண்டவன்தான், அந்த தெய்வம்தான் காக்கும் என்ற நிலைகளில் இருக்கின்றனர். ஆனால், அந்த நிலை இருந்தாலும், நான் இப்படியெல்லாம் உன்னையே வணங்கினேனே, எனக்குத் துன்பம் வருகின்றதே என்ற இதுவும் வருகின்றது. நாம், எதன் மேல் பக்தி கொள்கின்றோம்?

யாராவது நல்லவர்களைப் பார்த்தால், சந்தோஷமடைவதற்குப் பதிலாக, பெருமூச்சு விடுவார்கள்.

நாம் இத்தனையும் செய்ய, ஆண்டவன் நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கின்றான் என்பார்கள். இதுமாதிரி சொல்லி, ஒருவரை குற்றவாளியாக்குவோம்.

வசதி இருப்போரைப் பார்த்தோமென்றால், அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம், இவர்கள் எதை நினைக்கின்றார்களோ, அந்த உணர்வின் தன்மையாகி,
அவர்களுக்குத் துன்பம் செய்கின்றான்,
இவர்களுக்குத் துன்பம் செய்கின்றான்,
ஏமாற்றிக் கொண்டே உள்ளான், இந்த தெய்வம் இவனுக்குத் தான் கூரையைப் பிய்த்துக் கொட்டிக் கொண்டே இருக்கின்றது என்பார்கள்.

இவைகளெல்லாம், சந்தர்ப்பம். இது எதை உருவாக்குகின்றது? இப்படி மாற்றும் உணர்வுகள் உருப்பெற்றுவிடுகின்றது. ஆனால், நாம் நன்மை செய்யவேண்டுமென்றால், நம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழந்துவிடுகின்றது.

ஆகையினால், நாம் இதனை உருவாக்க,  யாம் வெளியிட்ட நூலினை, சிறிது நேரம் படிக்க வேண்டும்.  இவர்கள் நினைப்பதை மாற்ற வேண்டுமென்றால், சாமி என்ன சொல்லி இருக்கின்றார்கள், நம்மை எப்படியெல்லாம் தாக்குகின்றது? என்று சிறிது நேரம் சத்தமாக படித்தால், இவர்களின் மாறான உணர்வும் இணைக்கப்படும் பொழுது, அவர்களுக்கு நினைவு வரும்.

என்னடா படிக்கிறாய்? என்பார்கள். படிக்கும் பொழுது, முதலில் படிக்காதே என்று சொல்லுவார்கள். விடாமல் படிக்கும் பொழுது, நல்ல உதாரணங்களைச் சொல்லும் பொழுது, உற்றுக் கேட்பார்கள். சிறிது சிறிதாக, நம் மேல் இருக்கும் வெறுப்புகள் மாறும். நல்லணவைகளை அவருக்குள் புகுத்தி, அந்த நிலையை மாற்றமுடியும்.

சில பேர், வைராக்கியமாக, சாமி சொன்னதை எடுத்துக் கொள்வார்கள். என்னைவிடமாட்டேன் என்றார்களே என்று திருப்பி படித்தால், என்னால் புத்தகமும் படிக்கவில்லை. நாம் எதுவும் செய்யமுடியவில்லை, என்ற உணர்வுகள் கலந்து, நமக்குள் மனச்சோர்வும், மனச்சஞ்சலமும், வந்துவிடுகின்றது.
நாம் நல்லவைகளுக்குத் தானே போகின்றோம்,
இப்படிச் செய்கின்றார்களே, என்ற உணர்வுகள்
விஷத்தின் உணர்வுகளை, நமக்குள் மாற்றப்படும் பொழுது,
நம்முடைய செயலாக்கங்களும், செயலற்றதாக மாறிவிடுகின்றது.

இப்படி வாழும் நாம், ஒவ்வொரு நொடியிலும், நமக்குள் அருள் ஞானத்தைப் பெற வேண்டும். அவர்கள்  செயல்களில், உண்மையை உணரும் பருவம் வரவேண்டும்,  என்ற ஏக்கத்தைச் சிறிது நேரம் எடுத்துவிட்டு, 
அந்த உணர்ச்சியை கண்களால் பார்த்துவிட்டு, 
உணர்வின் அலைகளைப் பரப்பவேண்டும்.

அப்படி செய்யும் பொழுது, அவர்களும் அதைக் கேட்க நேருகின்றது. இப்படி, சில நாள், சிறிது நேரம் மட்டும் படிக்க வேண்டும். அதையே படித்துக் கொண்டிருந்தால், அவர் சங்கடமாக இருக்கும் பொழுது, அதைச் செய்தால், ஏண்டா கத்திக் கொண்டிருக்கிறாய், இருக்கிற துன்பத்தில்?, என்ற நிலைகளில் இதுவும் வந்துவிடும். அமைதி கொண்டு இருக்கும் நேரத்தில், இதனை சிறிது வெளிப்படுத்தி, உற்று நோக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.

நெல் பதரினை நீக்க, சொலவுகளை எடுத்து தூவுவார்கள். காற்று இருக்கும் சந்தர்ப்பத்தில் தூவினால், அந்த பதர் நீங்கும். காற்று இல்லாத சந்தர்ப்பத்தில் தூவினால், போகவே போகாது, திரும்பத் திரும்ப தூவ வேண்டும்.

அப்படி, திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது, சுத்தப்படுத்த முடியாதபடி சோர்வடைந்துவிடுவோம். பதர் அதிகமாகி, பிரியாத நிலைகளில்  அடைப்பட்டுவிடும். இவைகளெல்லாம், சந்தர்ப்பத்தால், நம்மை அறியாமல் தவறுகள் கூடுகின்றது.

இதைப் போன்று, குடும்பத்தின் நிலைகளில், தவறுகளை நீக்கும் நிலைகளை செயல்படுத்த வேண்டும். ஆகவேதான், இவைகளை எல்லாம் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.

சந்தர்ப்பங்கள், எப்படி நாம் நல்லது பெறாதபடி தடைபடுத்துகின்றது? என்று, அந்த சுற்றுப்புறச் சூழ்நிலையை உணரச் செய்கின்றது.

அதற்குத்தக்க, சந்தர்ப்பத்தில் படும்பொழுது செயல்படுத்துகின்றது. ஆக, மற்றவர்கள் உடல்களில் உள்ள, பதர்களை, நீக்கும் சக்தியாக, நம் சொல் ஆகின்றது.

மதில் என்ற நிலைகள் மறைத்தால், அப்பகுதியில் பதரை நீக்கினால் என்னவாகும்? அந்தக் காற்று புகாது. அதே மாதிரி, வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றது. கரை ஓரத்தில் பதரை நீக்குகின்றீர்கள். ஆனால், அங்கே வரும் காற்றினை தடைப்படுத்தினால், பதர் நீங்காது.
பிறருடைய உணர்வுகள்
பல வகையிலும், உணர்ச்சிகளைத் தூண்டி,
வெறுப்பென்ற நிலைகள் வருகின்றது. அந்த வெறுப்பென்ற உணர்வுகளை மாற்ற, உணர்வின் தன்மை புத்தகத்தை படித்தால், நல்ல சொற்கள் நமக்குள் ஆகாதபடி, அவர்கள் உணர்ச்சிகள், நமக்குத் திரை மறைவாக்கிவிடுன்றது.

ஆகவே, திரை மறைவுபடுத்தும் உணர்வினை நீக்க, அருள் ஒளி என்ற உணர்வை, நமக்குள் சேர்த்துக் கொண்டால், நமக்குள் வரும், தீமையின் பதர்களை நீக்க இது உதவும்.

ஆக, தியானவழியில் உள்ள அனைவரும், உங்கள் வாழ்க்கையில் தெரிந்து, தெளிந்து, தெளிவாக வாழச் செய்யும் அந்த அருள்ஞானத்தைப் பெற்று, அருள் சக்தி பெற்று, என்றென்றும், அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில், மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.

 DSC00148.JPG
 (பக்கம் 36-42)
ஒரு இயந்திரத்தை இயக்கப்படும்பொழுது, எது எதை, சந்தர்ப்பம் வரும்பொழுது, ந்தந்தக் காலத்தில் இணைத்தால், அது வலுப்பெறும் என்ற நிலையை, மனிதன் இன்று அனுபவ ரீதியில்தான்,தைக் காணுகின்றான்.

இதைப்போன்றுதான், ஒரு உணர்வின் தன்மை தாக்குகின்றது என்றால், அந்த உணர்வின் தன்மை, நினைவிற்கு கொண்டு வருகின்றோம். ஒருவர், திரும்பத் திரும்ப செய்கின்றார், ஆனால், அது முடியாது போகின்றது.
     
ஒரு இயந்திரம், ஒரு நூல் சாய்ந்திருக்கும். நமக்குப் புரியாது. அதில் பேரிங் (bearing) போட்டிருப்போம். எந்த பக்கம் அழுத்தமாகின்றதோ, அங்கு வெப்பம் ஆகின்றது. நாம் அதை தொட்டுப் பார்த்தாலும், அது தெரியவில்லை.
மனிதனில் இது செயல்படும் பொழுது,
என்ன செய்தாலும் ஆகவில்லை என்ற உணர்வுகளை
எடுத்து கொண்டு, அளவுகோல் பார்த்தால்,
நம் உணர்வுக்குத் தக்க, சரியாகத்தான் இருக்கின்றது என்று நினைப்போம்.

இதைப் போன்று, உணர்வின் அழுத்ததிற்கொப்ப சரி என்று ஏற்றுக்கொள்ளும் பருவம், வருகின்றது. சிறிது சிந்தித்து, இதனுடைய நிலைகளை, எப்படியும் கண்டுணர வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால், அந்தச் சிறு தவறைக் கண்டுகொள்ள முடிகின்றது.
அந்த பேரிங் இருக்கிறதில்,
எந்த பக்கம் வெப்பம் அதிகமாக இருக்கின்றது?
எந்த பக்கம் வெப்பம் குறைவாக இருக்கின்றது?
என்று சிந்தனை வரும்.

இந்த பக்கம் அழுத்தம் அதிகமாக இருக்கின்றது, இதை மாற்றி அமைத்தால், சரியாக வரும் என்ற சிந்தனை வரும். 
மனிதனின் வாழ்க்கையில், 
நுண்ணிய நிலைகள் உண்டு.
இதைத் தெரிந்து கொண்டபின், வாழ்க்கையில், தன் வலிமையின் எண்ணம் கொண்டவர்கள் ஞானியாகி விடுகின்றனர். சந்தர்ப்பத்தில், உணர்வின் வலிமை கொண்டு, அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றனர்.

தியான வழிகளில் உள்ள அன்பர்கள், சில சந்தர்ப்பங்களில், எண்ண வலுவை கூட்டும் பொழுது, உண்மையின் நிலையையும், வாழ்க்கையில் எது வந்தது? என்றும், சிந்திக்க முடியும்.

உணர்ச்சி வயப்படுவதில்லை.

இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால், பள்ளியில் பாடங்களைப் பயின்றாலும், அளவுகோலைக் காட்டி, அனுபவத்தைக் கொண்டு வருகின்றனர். பாட நிலையை மட்டும், படித்துவிட்டு செயல்படுத்துவதில்லை.

சோப்பு செய்ய, இன்னென்னவைகளைக் கலந்தால், சோப்புக் கட்டி உருவாக்கலாம் என்று சொல்லுவர். நான் எல்லாம் தெரிந்து கொள்வேன், என்று சரக்குகளை வாங்கி வந்து, அதில், எதை முதலில் சேர்ப்பது? எதை இடையில் சேர்ப்பது? என்று இருக்கும்.

அப்படிக் கரைத்தாலும், அதனைக் காய்ச்சும் முறை, ஒன்று உண்டு. அதில், விறகிலும் சில பக்குவம் உண்டு. அதிலும், கேவன் விறகிலும், நெருப்பு தெரியும். ஆனால், அழுத்தம் குறைவு, சீக்கிரம் வேகாது. முருங்கை மரத்தின் விறகில், வெப்பத்தின் தன்மை குறைவு.

சோப்பு உருவாக்குவதென்று இதிலே போனால், அழுத்தம் குறையும், சோப்பின் தன்மை, பதம் கெட்டுவிடும். நீண்ட நேரம் ஆகும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, இணைத்து செயல்படும் நிலைகள் இல்லாது, கட்டி உறையாது.

இதெல்லாம், நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவேண்டிய நிலைகள். ஏனென்றால்,
இதைப்போல சந்தர்ப்பத்தை உருவாக்கி,
வாழ்க்கையில் வரும் தன்மையை,
நீங்கள், திறமைசாலியாக வரக்கூடிய அனுபவத்தை,
உங்களுக்குள் நினைவாக்கும் பொழுது,
உற்றுப் பார்த்தால், நினைவு வருகின்றது.
பிழைகளிலிருந்து, மீளச் செய்கின்றது.
அந்த மீளக்கூடிய சந்தர்ப்பம், ஊட்டும் நிலைகள் வருகின்றது.

ஒருவருக்கு, அழுத்தமாக இது இப்படித்தான் என சொல்லப்படும் பொழுது அங்கு வெறுப்பின் தன்மை இருக்கும் பொழுது, ஏற்றுக் கொள்ளும் தன்மை, இல்லாது போகிறது. அங்கே, அழுத்தம் அதிகமான பின், செயல் மாறுகின்றது.

நாம் அதிக நேரம் பேசிவிட்டு, உணவை உட்கொண்டால், உள்ளே போகின்ற மாதிரி இருக்கும். அந்த உணர்வின் தன்மை சுருங்கி சுருங்கி, அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த உணர்வின் தன்மை, அழுத்தம் அதிகமானபின், நம் உணவுக் குழாயே, சிறிது அழுத்தி இருக்கும். முதலில், தெரியாத வேகத்தில், பசி தீர்க்க வேண்டுமென்றால், சிறுகச் சிறுக அடைத்துவிடும்.

இப்படிச் சாப்பிட்டவுடன், தண்ணீர் குடித்தவுடன், மிகவும் தேங்கிப் போகும். இந்த மாதிரி நேரங்களில், உணர்வின் அழுத்தம் லேசான நிலைகளில், உராய்வின் அழுத்தம் வந்தால், உள்ளுக்குள் தண்ணீர் இழுத்துக் கொண்டுபோய், புரையோடி, மேல் நோக்கி வந்து, நாம் சுவாசிக்கும் உணர்வுடன் வந்துவிடுகின்றது.

அப்பொழுது, அந்த உணர்வின் சிதறல், வேகமாக மற்ற உறுப்புகளில் ஊடுருவி விடுகின்றது. இப்படி நம்மை அறியாமலேயே, சில பிழைகள் வந்துவிடுகின்றது. மனித வாழ்க்கையில், உடல் உறுப்புகளில் மாற்றமும், உணவுக் குழாய்ப் பகுதிகளில் அடைபடுவதும், சில நேரங்களில் தண்ணீர் குடித்தால், மிகவும் மெதுவாக போகும்.

அந்த உணர்வின் அழுத்தம் வரப்படும் பொழுது, அந்த உணர்வுகள் அங்கு பதிவானபின், தண்ணீர் என்றாலே போகாது. சில பேர் அதிகம் சாப்பிடுவார்கள். தண்ணீர் குடிப்பது, மிகவும் நிதானமாகக் குடிப்பார்கள். சிலர் வேகமாகக் குடித்துவிடுவார்கள்.

இந்த மாதிரி, சலிப்பு சஞ்சலத்தின் தன்மை அதிகமாகி, புரையோடிவிட்டால், தண்ணீரைப் பார்க்கும் பொழுது, அப்பகுதி உணர்ச்சியை ஊட்டி, நமக்குள் அந்த உறுப்புகளை மாற்றிவிடும். இப்படியெல்லாம் சந்தர்ப்பத்தால், வாழ்க்கையில் உடல் உறுப்புகளில், சில மாற்றங்கள் ஏற்படுகின்றதுகுருநாதர், உணர்வின்  ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும், உணரும்படி செய்தார்.

இதைப் போன்று, நம் எண்ணங்களின் தன்மையும், நாம் செயலாக்கும் வலிமையும், நம்மை மாற்றிவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளையெல்லாம், உங்களுக்கு அனுபவரீதியில் கொடுத்துத்தான், எப்படிக் கண்ணில்லாத புழு எண்ணி, கண்ணின் தன்மையைப் பெற்று, உற்றுப் பார்த்து, உணர்வின் தன்மை, தன் அறிவின் வாழ்க்கையாக, பல கோடி சரீரங்களில், கண்டு கண்டு, இன்று நாம் எதனையுமே கூர்மையாக அறிந்திடும், உணர்வுகள் வந்துவிடுகின்றது.

இப்படிப் பெற்ற நாம்,  இந்த உணர்வின் தன்மை பெற்றபின்,
நம் ஒவ்வொரு உணர்ச்சிகளும், ஆயிரம் கண்கள் உடையது. எண்ணிலடங்காத, பல பல ஆயிரம் கண்கள் கொண்டது.

நம் உணர்வின் தன்மை, அறிவின் தன்மை, அறியும் தன்மை பெற்றது. இது மனிதனானபின், இதன் வளர்ச்சியைத் தடைப்படுத்தாது இருக்க வேண்டுமென்பதற்குத்தான், இதனை அடக்கி, மெய் உணர்வின் தன்மையைக் கொண்டு வந்தது. எமது அருளாசிகள்.

DSC00150.JPG

 (பக்கம் 43-45)
குரு அருளைப் பெற்ற நாம், வழியறிந்து செயல்படும், தன்மையும் பெறவேண்டும். எதனை, எக்காலத்தில் பயன்படுத்த வேண்டுமோ, அந்த நிலைகள் கொண்டு, சந்தர்ப்பம் ஏனென்றால்,
அழுத்தமான நேரங்களில், சிலருடைய உணர்வுகளை மாற்றும் நிலைகள் வேறு.
நமது உணர்வின் உணர்வுகளை,
ஒருவர் ஏற்றுக் கொள்ளும் அழுத்தம்,
ஏற்றுக் கொள்ளும் பண்பு, அங்கு குறைந்து இருந்தால்,
அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலையை,
ஈர்க்கும் மனம் பெறவேண்டும்.
ஆகவே, அந்த ஏற்றுக் கொள்ளும் உணர்வுகளை
சமப்படுத்தி வெளிப்படுத்தும் பொழுது, அங்கு பதிவாகும்.
பதிவானால், உற்று நோக்கும் நிலை வரும்.

கண்ணாடியில், எழுத்துக்களைச் சீக்கிரம் எழுதிவிடலாம் என்று, தட்டுதலை அழுத்தமாகத் தட்டிவிட்டால், எழுதும் தன்மையே போய்விடும். கண்ணாடி உடைந்துவிடும். ஒரு கண்ணாடியைப் போன்றுதான், ஆன்மாவின் செயலும்.

பல உணர்வுகள் அழுத்தமாக இருக்கும் பொழுது, சொல்லின் தன்மையானபின், மோதல் அதிகமானால், இதனுடைய அழுத்தம், முன்பகுதியில் அழுத்தமாகச் சென்று, வெறுப்பின் தன்மையில், மனம் உடைந்து சிதறிவிடும். உண்மையின் உணர்வு, பதிவாகும் தன்மையும் இழந்துவிடும்.

உணர்ச்சியின் உணர்வுகளின் தன்மையும் 
நாம் அறிதல் வேண்டும். 
ஏனென்றால், நமக்குள் இருக்கும் உணர்வுகள் எத்தனையோ,
அதனுடைய வேகத் துடிப்பு இருக்கும் பொழுது,
நீங்கள் ஏற்றுக் கொள்ளும் நல்ல பண்பினை,
உங்களுக்குள் புகாது, உங்களையே,
உங்களுக்குள் நின்றே, எதிரிகளை அதிகமாக்கும்.

நீங்கள் ஏற்றுக் கொண்ட, பண்பின் உணர்வினை,
அது, அழுத்தமாகச் சொல்வதற்கு பதில்,
இது உங்களுக்குள் உருவாகி,
உணர்வின் சொல்லால், வெளிவருவது,
அழுத்தத்தின் தன்மை அதிகமாகி, இருந்து வந்துவிடும்.

நீர்க் குழாய்களின் முகப்பில் சிறுத்துவிட்டால், அழுத்தத்தின் தன்மை அதிகமாகிறது. ஒரு பாத்திரத்தை அங்கு வைத்தால், பாத்திரத்திற்குள் விழுந்து, நிறைவது மாதிரி இருக்கும். ஆனால், வெளியில் போய்க் கொண்டே இருக்கும்.

பாத்திரம் நிறைவதற்கு நேரமாக, இதனுடைய அழுத்தம் அதிகமாகும் பொழுது, வேகத்துடிப்பு வந்து, பாத்திரம் நிறைந்துவிட்டது என்று எண்ணுவோம். இந்த வேகத்தின் அழுத்தத்தைக் கொண்டு, பாதிதான் பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும். மீண்டும், அதனுடைய அழுத்தத்தைக் குறைத்தால், பாத்திரத்தை நிரப்பலாம்.

மீண்டும், அதே அழுத்தத்தைக் கொடுத்தால் என்னவாகும்? தண்ணீர் மீண்டும் வெளியேறும். நேரத்தை வீணாக்கியதுதான் மிச்சம். இதை எதற்குச் சொல்லுகின்றேன் என்றால்,
சிலர், சில உணர்வுகளில் இருக்கலாம்.
அந்த உணர்வுடன் இருக்கும் பொழுது,
அழுத்தத்தின் நிலைகள் அதிகமானால்,
உணர்வுகள் உட்புகாதபடி, வெளியில் தள்ளிக் கொண்டே இருக்கும்.
நம் சொல்லின் தன்மைகள், அங்கே ஏற்காது,
வெளியில் தள்ளிக் கொண்டே இருக்கும்.
அங்கே உள்ளே சென்றால் தானே, தங்கும்.

எவ்வழியிலும் சரி, நீங்கள் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, வெறுப்படைந்துவிட்டால், அது பார்க்கும் நிலையே மறந்துவிடும். வெறுப்படைந்து பாருங்கள். சாமானுடைய தரத்தை மறந்து, நமக்கு என்ன? என்ற நிலைகளில் மீண்டும் அது சுத்தமாகவே மறந்துவிடும். அதே சமயத்தில், சொல்லின் ஒலிகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை உள்ளே வந்தவுடன், இதை ஏற்றுக் கொள்ளாது, உள்ளே மாற்றும்.

அதே சமயத்தில், உடலுக்குள் சுவாசித்து, உள்ளே செல்வதை, அழுத்தத்தின் தன்மை நிறுத்திவிடும். உணர்வின் தன்மை அழுத்தமானபின், சுவாசிக்கும் நிலை வரும் பொழுது, ஏதாவது உணவு உட்கொண்டாலும், சுவையை மாற்றிவிடும்.

சுவை மாறும் பொழுது, ஏங்கி பெறும் அணுக்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், உணர்ச்சிகள் வரும். பின், அந்த உணர்ச்சியின் தன்மை, பெறுவது தடைப்பட்டால், சோர்வின் தன்மை வரும். நம்மையறியாமலே, இத்தனை உணர்வுகள்,  நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது.

இதைப் போன்ற நிலைகளை, நாம் பிளத்தல் வேண்டும். அருள்   ஒளியைக் கூட்டுதல் வேண்டும்.  அதனுடைய  அழுத்தத்தின் தன்மையைக் கூட்டி,  இந்த அருள் உணர்வின் நிலைகளாக, வெளிப்படுத்த வேண்டும்.  எமது அருளாசிகள்.

DSC00149.JPG

 (பக்கம் 47-51)
 நமது உணர்வின் தன்மையை வலுப்பெறச் செய்தாலும், காலமறிந்து, சொற்களைப் பிறருக்கு ஊட்டப் பழகவேண்டும். ஆகவே, வீட்டில் அமைதி கொண்டு இருக்கும் பொழுது, அருள்ஞானப் புத்தகங்களை படித்தால், வீட்டிலுள்ளவர்கள் செவிகளில் விழும். அவர்களும், இதைக் கேட்கும் சந்தர்ப்பம் உருவாகும். அந்த உணர்வைக் கேட்டவுடன், நன்றாகத் தான் இருக்கின்றது என்பார்கள். அதே மாதிரி,
இந்த ஏற்புடைய நிலைகள், வேண்டுமென்றால்,
அவர்கள் வழியில் சென்று,
இதைப் புகுத்தினால்,  எதிர்க்கும் தன்மை குறைந்து,
ஏற்கும் தன்மை வரும்.
இதுவெல்லாம், சிந்தனையைச் சீர்படுத்தும் நிலைகள்.

அவருடைய சிந்தனையைச் சீர்படுத்தும் பொழுது, நம்முடைய உணர்வுகள் கலந்து, உணர்வுகளைச் சீர்படுத்தும் நிலைகள் வரும். சிந்தனையின் தன்மை வேறு பக்கம் இருக்கும் பொழுது, அதனுடைய அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது,  இதனை ஏற்றுக் கொள்ளாது.

இதைப் போன்றெல்லாம், நமது வாழ்க்கையில் நடப்பதால், 
இந்த உடலுக்குப் பின், எதுவென்று
சிந்தனை செய்து கொண்டிருக்க வேண்டும். 
இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

பல துன்பங்களைக் கடந்து, கடந்து, துன்பமில்லாப் பெருவாழ்வு வாழும் இந்த மனித உடலில் விளைந்த அரும் பெரும் சக்திகளை, மிகமிக ஜாக்கிரதையாகப்  பயன்படுத்துதல் வேண்டும்.

ஏனென்றால், இந்த அழுத்தத்தின் உணர்வுகளை, யாம், நீங்கள் பெறவேண்டுமென்று, குருநாதர் காட்டிய அருள்ஞானத்தை உங்களுக்குள் வலுப் பெறச்செய்து, சிந்தித்துச் செயல்படும் உணர்வு, உங்களில் விளைய வேண்டுமென்று, சதா யாம் தியானிக்கின்றோம். 
சற்றுப் பொறுமைகள் வேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, சீக்கிரம் உணவு உட்கொள்ள வேண்டுமென்று அவசரப்பட்டு, நெருப்பினைக் கொளுத்தினால், என்னவாகும்? நெருப்பு, பாத்திரத்தின் கீழ்தான் உண்டு இந்தத் தணலின் தன்மை அதிகமானால், அடிப்பாகம், நெருப்பின் தணல் அதிகமானபின், கருகும் தன்மை வந்துவிடும். அதிக வெப்பாமாகும் பொழுது, அடிப்பாகத்தில் உள்ளது, இழுத்து விடுகின்றது. மற்றதோடு,  இரண்டறக் கலக்கும் தன்மை பிரித்துவிடுகின்றது.

மேலே இருப்பதில், எதுவும் தெரியாது. அடுத்து, பார்த்தோம் என்றால், சுவை கெட்டு இருக்கும். அந்த நேரங்களில், நெருப்பின் தன்மையைச் சிந்தித்து வேக வைக்கும் நிலையாக, அந்தக் காலப் பருவம் பார்த்துச் செயல்பட வேண்டும்.

சாதாரணமாக, பல பொருள்களைக் கலக்கும் பொழுது, எடை கூடுகின்றது. எடையின் தன்மையானபின், தனக்குள் உயிருக்குள் பட்டு,  சிறுகச் சிறுகத் தணல் கூடும் பொழுது, அந்த தணல்கள் கொதிகலனாக, இலேசாக மாறும். அப்பொழுது கலக்கும் தன்மை வருகின்றது.

ஆனால், அதே சமயத்தில் நெருப்பின் தன்மை, அழுத்தம் அதிகமாகும் பொழுது, வெடித்து, மேலே சலித்து அடர்த்தியின் தன்மை கொண்டு வரும். வெப்பத்தின் தன்மை ஆனபின், பாத்திரத்தோடு ஒட்டிக் கொள்ளும். ஆனால், கலக்கும் உணர்வின் தன்மை, இங்கே இருக்கும். அதனுடைய சமபலனை மாற்றிவிட்டு, எடைகூடிய சரக்கு எதுவோ, இதிலே குன்றிவிடும். அதில், சுவை ஊட்டும் தன்மையைக் குறைத்துவிடும்.

உங்கள் சிந்தனைக்கு, இதை வெளிப்படுத்துகின்றேன். காலங்கள் இன்று குறுகியக் காலமாக இருக்கின்றது. மனிதனின் சிந்தனையைச் சிதறச் செய்யும் காலங்கள், அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

ஆகவே, நாம் சிந்தனையின் நிலைகளை வலுப்படுத்த வேண்டுமென்றால், இந்த வாழ்க்கையில் குரு அருளைப் பெற்று, அருள் ஒளியைக் கூட்டும் பருவத்தை, நாம் பெறவேண்டும்.

இதைக் கூட்டி, தீமைகள் புகாத அந்த அழுத்தத்தை, நமக்குள் கூட்டவேண்டும்.  பகைமை உணர்வுகள் உங்களுக்குள் வராது, இந்த அழுத்தத்தின் உண்மையின் உணர்வின் தன்மையை, அருள் ஞானத்தின் உணர்வுகளில், வலுப்பெறச் செய்யத்தான் இந்த உபதேசம்.

உபதேசத்தின் உணர்வுகளைச் சிறிது நேரம் கூட்டி, இந்த ஞானத்தின் தன்மையைப் பதிவு செய்து, நினைவுகொள்ளும் பொழுது, இதன் உணர்வின் இயக்கமாக, நீங்கள் இயங்கி, தீமைகள் உங்களுக்குள் புகாது செய்யத்தான், இதைச் செய்வது.

பிறருடைய தீமைகள் இருந்தாலும், காலப் பருவம் பார்த்து, இந்த உணர்வுகளை ஊட்டும் பொழுது, நமக்கு துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும், அவர்கள் உடலில், துன்பத்தைத் தடைப்படுத்த வேண்டும்.

நாம் போகும் பாதையில், நம் வீட்டிற்குள்ளேயே, எதிரியாகின்றது. நம் உடலுக்குள்ளேயும், எதிரி உண்டு. உணர்ச்சியின் வேகம் அதிகமானால், சிந்திக்கும் தன்மையை இழக்கின்றோம். 

அழுத்தம் அதிகமாகும் பொழுது, உண்மையின் உணர்வை விடாது, நமக்குள் உணர்வைக் கலவையாக்கி,  சுவைமிக்க சொல்லை வெளிப்படுத்துவதை, தடைப்படுத்தும் இதுவும் எதிரிதான். இதுவெல்லாம், நம் சிந்தனைக்கு வரவேண்டும். 

ஆகவே,அருள்ஞானத்தை  நமக்குள் கூட்டி, அந்தப் பேரருளின் உணர்வுகளை, உங்களுக்குள் பெருக்கி, குருவின் அருளும்,  அந்த துருவத்தின் உணர்வுகளில், உங்கள் நினைவுகள், அங்கே செல்ல வேண்டும்.

எவ்வகையிலும் பகைமை என்று எண்ணினால், ஈஸ்வரா என்று புருவ மத்தியில், உயிருடன் தொடர்பு கொண்டு, நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி, அந்தப் பேரருள் உணர்வுகளைக் கவர்ந்து, நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களுக்கும், இணைக்க வேண்டும். எமது அருளாசிகள்.


eswarapattar.jpg

 (பக்கம் 52-55)
அழுக்குத் தண்ணீரிலே நன்னீரை ஊற்றும் பொழுது, முதலில் கலங்கலாக இருக்கும். நன்னீர் அதிகமானபின், கலக்கத்தின் தன்மை சிறிது தெளியும். இதைப் போன்று,  உங்களுக்குள் எத்தனையோ உணர்வுகள், உங்கள் வாழ்க்கையில், அழுக்கு உணர்வாக இருப்பின், அழுக்கு நீரில், அருள்ஞான நீரை விடும்பொழுது, உங்களுக்குள், மனம் தெளியும் நிலைகள் வருகின்றது. 

அதனால்தான், யாம் நேரத்தைக் கொஞ்சம் அதிகமாக, எடுத்துக் கொள்கின்றோம். யாம் சொல்வதெல்லாம், துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பின் தன்மையை இணைத்து, இந்த உணர்வின் தன்மையை,
ஒவ்வொரு அணுக்களிலும் இணையச் செய்து,
நினைவாற்றலை, ஒவ்வொரு உணர்வுகளும்,
நமக்குள் எப்படி இயங்குகின்றது? என்றும்,
அந்த நினைவுடன் இணைத்து,
அருள்ஞானியின் உணர்வைக் கலந்து,
உடலில் நீங்கள் பெற்ற,
ஒவ்வொரு உணர்வும் பெற, இணைக்கின்றேன்.

இந்தக் காலப் பருவம், அருள் ஒளி வெளிப்படும் நேரம் (துருவ தியான நேரம்), நுகரும் ஈர்க்கும் சக்தி, இதனுடைய உணர்வுகள் தொடர்பு கொள்ளப்படும் பொழுது, உங்களுக்குள் சேர்ந்த, சிந்தனையை அடக்கச் செய்யும் நிலைகளிலிருந்து, அதனை அடக்கும் அருள்ஞானியின் உணர்வை, உங்களுக்குள் பெருக்கும் சூழ்நிலையை, உருவாக்கும் நேரம் இது (துருவ தியான உபதேசம்).

உங்களுடைய அழுத்தத்தின் நிலைகளை (எண்ண உணர்வுகளை), அளவுகோலாக வைத்து,
ஒவ்வொரு உணர்வுகளிலும்.
வாழ்க்கையில், எதிர்நிலை வருகின்றதென்றால்,
காலத்தை அளக்கும்.
இதற்கு என்ன செய்யவேண்டும்? என்ற சிந்தனை வரும்.
பருவம் வரும் பொழுது, சொல்லுவோம், என்று விலகிச் செல்லும்.
காலத்தை விரயமாக்காது.

நாம் உயர்ந்த தத்துவத்தை வைத்திருக்கிறோமென்று, அவசரமாகப் போகிறவரிடம் சொன்னால், சரி சரி என்பார்கள். ஏற்றுக் கொள்ளும் தன்மை, இல்லாது போய்விடும். இதுவெல்லாம், உங்களுக்குள் அனுபவரீதியில் கொடுப்பதற்காகத் தான், (யாம்) எதை எடுத்தோம்? எப்படிச் செய்தோம்? எதனுடைய உணர்வுகள்? என்று காட்டியது.

நீங்கள் பிறருக்கு உபதேசிக்கும் பொழுது, எவ்வழியில் சொல்லுதல், வேண்டும்? இது போன்ற சந்தர்ப்பங்களில், வாழ்க்கையில், இந்த உபதேசங்களைக் கேட்ட நீங்கள், ஒவ்வொரு கால நேரத்தையும், யாம் உபதேசித்த வழியில், பயன்படுத்துதல் வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரில், அழுத்தத்தின் தன்மை கொண்டு,
எலக்ட்ரானிக்கை அழுத்தியபின்,
அந்த உணர்வுகள், கால நேரம் வரும் பொழுது,
அழுத்தத்தின் உணர்வுகள், தீமையை தள்ளி விட்டுச் செயல்படுகின்றது.

இதைப் போன்றுதான், உங்கள் அழுத்தத்தின் உணர்வுகள் ஏற்புடையதாக வரும்பொழுது,
இதனுடைய அழுத்தம், தீமையை நீக்குகின்றது.
நல்லவைகளை, ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று,
தீமையை நீக்குகின்றது.

யாம் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது, உங்களின் உணர்வின் தன்மை, சீக்கிரம் போக வேண்டும் என்ற உணர்வு வரப்படும் பொழுது, அந்த காலம் வரும்போது, யாம் உபதேசிப்பதை தள்ளிவிடுகின்றது. அதன் வழி, உங்களை இயக்குகின்றது.

ஆகவே, இத்தகைய தியான, மற்றும் உபதேசத்தைக் கேட்கக்கூடிய, நேரங்களில் வரும்போது, கால மணியை, அந்த அழுத்தத்தை, நமக்குள் பதிவு செய்து கொண்டு, அதனை, நமக்குள் ஏற்புடையதாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு உட்கார்ந்தால், நினைவு வேறு எங்கும் போகாது, இந்த உணர்வின், (அருள்ஞான உணர்வின்) அழுத்தமாகும்.

சீர்புடையதும், சீர்பற்றதும், இந்த உணர்வுகளை தனக்குள் மாற்றி, ஒவ்வொன்றும் சொல்லும் பொழுது, இதற்குள் மாற்றியமைத்து, நமக்குள் பக்குவப்படும் நிலைகள் வரும். 
அந்தப் பக்குவ நிலை ஏற்படுத்துவதே,
குருவின் தன்மை. எமது அருளாசிகள்.

DSC00061.JPG

 (பக்கம் 56-59)
சில பேர் தறியில் நெய்யும் பொழுது, பார்க்கலாம். அவர்கள் கை அடியும், கால் மிதியும் சீராக வரும். நாம் போய் மிதித்தோமென்றால், தடி வேறு பக்கம் போகும். அதில் இருக்கும் நாடா, அறுந்து கொண்டு ஓடிவிடும். விசைத் தறிகளில், ஒரே நேர் கோட்டில் போக வேண்டுமென்றால், உணர்வின் பழக்கம் வேண்டும்.

அவர்கள், திடீரென்று பிரேக்கைப் போடுவார்கள். ஆனால், அந்த நாடா கடைசியில் போய், சரியாக நிற்கும். நாம், நம் உணர்வின் வேகத்தால், போய் நிறுத்தினோமென்றால், நடுப்பகுதியில் வந்தவுடன், அறுந்து ஓடிவிடும். இது, தறிகளின் நிலைகள். இதுவெல்லாம், அனுபவத்தில் கற்றுணர்ந்த உண்மைகள்.

இப்படி, அனுபவ ரீதியில் அறிந்துகொண்ட உணர்வைத்தான், உங்களுக்குள் தெளிவாக்குகின்றேன்.கால அளவினைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்ற மாதிரி, உங்களுக்குள், பதிவு செய்து வைத்து விடுகின்றேன்.

வாழ்கையில், சிந்தித்துச் செயல்படும் உணர்வுகள், உங்களிலே விளைய வேண்டும்.  அருள்ஒளி, உங்களுக்குள் வலிமை பெறவேண்டுமென்று, பதிவு செய்து வைத்து விடுகின்றேன்,

நீங்கள், எந்த அளவிற்குக் கேட்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்களுக்குள் பதிவு இருக்கும். நாம் ஒவ்வொருவரும், அருள் ஒளி பெறவேண்டும். அனைவருடைய நிலைகளும், அதைப் பெறவேண்டுமென்ற உணர்வை நமக்குள் கலக்க வேண்டும்.

நான் தெரிந்து கொண்டேன், என்ற நிலைகளாக நமக்குள் தெரிவதைக் காட்டிலும்,
நாம் தெரிந்து கொண்டோம்,
நம் நண்பர்களும், தெரிந்து கொள்ளட்டும்
என்ற நிலையாக வரவேண்டும்.

ஆனால், சந்தர்ப்பங்களில், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று, அவர்கள் வரும் பொழுது, அவருடைய காலத்தை அறியாதபடி, சொல்லிக் கொண்டே இருப்போம். ஆக, அவரும் தெரிய முடியாது, அவருக்குள் தெரிய வைக்கும் நிலையும், நமக்குள் வராது.

ஆகவே, நாம் அவர் தெரிந்து கொள்ளவேண்டும், என்ற உணர்வை எடுத்து முடிந்தபின், நாம் பார்க்கும் நண்பரும், அது பெற வேண்டும்,  அவர் வாழ்க்கையில் மகிழ்தல்  வேண்டும், என்ற உணர்வினைக்  கூட்டிக்கொள்ள வேண்டும்.

யார் நமது வீட்டில், வெறுப்பு உணர்வுடன் இருக்கின்றார்களோ,
அவரும், அருள் ஞானம் பெறவேண்டும்,
என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டால்,
அவர்களுடைய உணர்வுடன் கலந்து,
அவர்கள் உடலில் சேர்க்கப்படும்போது, அது இணையும்.
இணைந்த உணர்வுகள்,
அவர் உணர்வை, மாற்றியமைக்கும் திறனாக செயல்படும்.

ஒரு மான், சாந்தமானாலும் புலியின் உணர்வை அதற்குள் சேர்த்துக் கொண்டபின், மான் இறந்தபின், புலியின் ஈர்ப்பிற்குள் செல்கின்றது. இதைப் போன்று,
நமது வாழ்க்கையில், யார் நமக்குத்
தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்களோ,
அவர்கள் அறியாத இருளிலிருந்து விடுபடவேண்டும்,
என்ற உணர்வை நாம், நமக்குள் கலந்து,
வளர்த்துக் கொள்ளவேண்டும். 
நாம் தியானத்தின் முடிவில்,
இதை அவசியம் எடுத்துப் பழகவெண்டும்.

ஏனென்றால், அவர்களின் உணர்வுகள் நமக்குள் உண்டு. இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டு, அவர்களின் அறியாமை நீங்கவேண்டும், அவர் பொருள் காணும் நிலைகள் பெறவேண்டும், என்று எண்ணினால்,
நமக்குள், அறியாமை நிலைகளை நீக்கி,
உட்பொருளைப் பார்க்கும் நிலைகள், வருகின்றது.

இப்படி, இந்த உணர்வுகளை நமக்குள் கூட்டும் பொழுதும், அவர்கள் நம்மை எண்ணி ஏசுவார்களென்றால்,
நாம் எடுக்கும்  இந்த உயர்ந்த உணர்வுகள்,
கொஞ்சம் கொஞ்சமாக, அவர்களுக்குள் ஊடுருவும்.
இது அவர்களை மாற்றியமைக்கும். இல்லையென்றால்,
இந்த உணர்வின் நிலைகள், அவருக்குள் தடைப்படுத்தும் உணர்வாகி,
அழுத்தத்தை, அவருக்குள் உணர்த்தும் சக்தியாக மாறிவிடும்.

இன்று, வேதனைப்படும் ஒருவரின் உணர்வுகளை, நாம் நுகர்ந்தால், அந்த உணர்வுகள் நமக்குள் அதிகரித்து, நாம் நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்வதற்கு மாறாக, அந்த உணர்வினை வளர்த்துக் கொண்டால், அவரின் வேதனை உணர்வுகள்தான், நமக்குள் அழுத்தமாகும், நல் உணர்வுகளை செயலற்றதாக மாற்றுகின்றது.

ஆகவே, அருள் ஒளியை நமக்குள் எடுத்து, நல்ல குணங்களைக் காத்திட வேண்டும்.
ஒவ்வொரு நொடியிலும்,
பிறர் பேசும் உணர்ச்சிகள், நம்மைத் தூண்டினால்,
நல்ல குணத்தைக் காக்கும் திறன், நமக்குள் வரவேண்டும்.

ஆகவே, நல்ல குணத்தை நமக்குள் காக்க வேண்டுமென்றால், அருள் ஞானியின் உணர்வை, நமக்குள் சேர்த்தல் வேண்டும். பிறர்படும் தவறென்ற உணர்வை இணைத்திடாது, இது மாற்றுகின்றது. ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் இதைச் செயல்படுத்துதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில், நீங்கள் அனைவரும் இணைந்து, மகிழ்ந்து வாழ்ந்திட, எமது அருளாசிகள்
DSC00161 (2).JPG

(பக்கம் 62-72)
வக்கீல்கள்      எல்லாம்    படித்துவிடுவார்கள்.   சட்டத்தைப்   படிப்பார்கள். ஆனால்,  அவரிடம்  ஏராளமான நூல்கள் இருக்கும். காலநிலை   வரும் பொழுது,   அதனுடைய    உணர்வுக்கொப்ப,  படித்துக்  கொண்டே இருப்பார்கள்.

குருநாதர் கொடுத்த நூல்களைப் படித்து கொள்ளுங்கள். அதை படிக்கப்படும் பொழுது, நினைவாற்றலைக் கூட்டிப் பகைமைகளைப் புகவிடாது உங்களின் வலிமை கொண்டு பகைமைகளை மாற்றியமைத்து விடலாம்.

ஆகவே, நூல்களைப் படித்துவிட்டோம், தெரிந்து கொண்டோம் என்பதைக் காட்டிலும், அந்தந்தக் காலங்களில் அந்தப் புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.

நாம் அனைவருமே, என்றும் பேரருளுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும். எனவே, துரிதநிலை கொண்டு, உங்களை உருவாக்க வேண்டுமென்றுதான், இதைச் செய்வது.

நீங்கள் உருவானால், அனைவரையும் காக்கும் நிலை வருகின்றது. அரிசியைச் சமைத்துத் தன் பசியைப் போக்க முடியாது. அரிசியின் பக்குவத்தை உங்களுக்குள் ஊட்டி, நாமெல்லாம் கூட்டினால், அந்த அரிசி கூடுகின்றது. அது சமைத்துச் சாப்பிட உதவுகின்றது.

ஒரு நெல்லை வைத்துப் பல நெல் என்று சொல்லிக் கொண்டு சமைக்கலாம் என்றால் அது முடியாது. ஒரு நெல்லைப் பல நெல்லாக உருவாக்குதல் வேண்டும். அதனைப் பெறச் செய்ய, குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கின்றது.

உங்கள் உயிரான ஈசனையும் நேசியுங்கள். உங்கள் உயர்ந்த குணங்களை, உங்களுக்குள் எடுக்கும் பொழுது, உங்கள் உயிரான குரு மெச்சுகின்றது. அதே சமயத்தில், உயர்ந்த குணங்களை எண்ணும் பொழுது, அதுவே குருவாக இருந்து, நம்மை நல்வழிப்படுத்துகின்றது.

எதனையுமே தெளிவாக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் அந்த உணர்வின் தன்மையாக்கப்படும் பொழுது, அது நினைவு வரும் பொழுது, அது குருவாகி நம்மைத் தெளிவாக்கும் தன்மை பெறுகின்றது.

சாமி நன்றாகப் பேசுகின்றார். எங்கள் சாமிக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி விட்டுவிடக் கூடாது. யாம் எல்லாம் தெரிந்து கொள்ளவில்லை. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலேதான், யாம் இருக்கின்றோம்.

நீங்கள் அனைவரும், இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்திலேதான், யாம் இருக்கின்றோம். அந்த ஆசையின் நிமித்தமே, காலத்தையும் அறியாது அந்தப் பருவம் கண்டு, உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

ஆகவே, இதைப் போன்று நீங்கள் உங்கள் குடும்பத்திலும், இந்தப் பதிவினை ஏற்படுத்துங்கள். மனிதனின் உணர்வுக்கும், பற்றுடன் வாழும் பண்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உபதேசிக்கும் சொற்களை, ஏற்கும் பருவம் நமக்கு வரவேண்டும். முதலில் கடினமாக இருக்கும். கால நிலைகளுக்கொப்பச் சொல்லிவிட்டால், சிறிது சிந்திக்கச் செய்யும், “கேட்க வேண்டும்” என்ற உணர்வுகளை ஊட்டும்.

ஆகையால், நாம் ஒவ்வொருவரும் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும். உடலை, அவன் வீற்றிருக்கும் ஆலயமாக மதித்து, அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு
உங்கள்  ஆன்மாவைச்  சுத்தப்படுத்த, 
தபோவனத்தில்  வெளியிடப்பட்டுள்ள,  அருள்ஞானப்
புத்தகங்களை, தனித்த நிலைகளில் படியுங்கள்.
கூட்டமைப்புடன் இருந்து,
அந்த அலைகளைப் பாய்ச்சுங்கள்.
அந்த ஆன்மாக்களைச் சுத்தப்படுத்த, உணர்வுடன் எண்ணுங்கள்.

ஆன்ம நேயத்தை,  நமக்குள் உருவாக்குதல் வேண்டும். குடும்பத்திற்குள்இணைந்து  வாழும்நிலைகளை   உருவாக்குதல்  வேண்டும்.  இதுதான்,   மனிதநேயம் என்பது.

உங்களுடைய செயலாக்கங்களைப் பார்த்து,
நானும் இணைய வேண்டும்,
என்ற உணர்வை ஊட்டி இணைத்தால்,
அது நலம் பெறும்.
ஆகவே, நம்முடைய ஆர்வத்தை, இதிலேதான் கூட்ட வேண்டும். ஆன்ம ஞானத்தைக் கொண்டு, நமக்குள்  ஒன்றி  வாழும்  உணர்வுகள்  வரவேண்டும்.

ஒவ்வொருவரும்,  உணர்ச்சிகளை  வெளிப்படுத்துவதைக்  காட்டிலும்,கேட்போர்  உணர்வுகளில்,உணர்ச்சிகளை ஊட்டும் உணர்வுகளை,நமக்குள்  உருவாக்குதல் வேண்டும்.

நம்முடைய,   இயற்கையின்    உண்மையின்     உணர்வினை   அறிய வேண்டும்    என்பதற்குத்தான்,    இந்தநூல்களைக்      காலப்பருவம்       அறிந்து,அமைதி    கொண்ட    நேரத்தில்    படித்து,   சொல்லால்   நம்   குடும்பத்தினரைக்
கேட்க வையுங்கள்.

குழந்தைகளுக்கும்,   இதைச்    சொல்லுங்கள்.  தாய்   தந்தையருக்குப் படிப்பறிவு இல்லை  என்றால், படித்துச் சொல்லுங்கள்.   கேட்க   மறுக்கும் பொழுது,  டிக்க வேண்டாம்.  ஏற்புடைய  உணர்வு  வரும்போது,  படிக்க வேண்டும்.

இதன்  வழியில்தான்,  அருள்ஞானத்தை  வளர்க்கமுடியும். ஆர்வத்தின் தன்மை கூட்டும் பொழுது, வேகம் கூட்டலாம்.

கண்ணாடி போன்றது  ஆத்மா. அதில், எழுத்துக்களைப் பதிக்க வேண்டும்என்றால்,  சிதையாது பாதுகாக்க வேண்டும்.  ஆன்மாவிற்குள்  அழுத்தமாகி விட்டால்,  இதன்  உணர்வுகள்,  அழுத்தத்தின்   தன்மை   அதிகமாகி விட்டால்,  ஆன்மா   சிதைந்து,   வெறுப்பின்   தன்மை   பெருத்து  விடும். பதியும்  தன்மை  இழந்துவிடுகின்றது.

இதையெல்லாம்  தெரிந்து, அமைதி   கொண்டு  அருள்ஞானத்தைப்  பெருக்குங்கள்.  உங்கள் வாழ்க்கையில் உங்கள் அனுபவம் பெரிதாகின்றது அருள் ஞானத்தைப் பெருக்கும் அனுபவமாக மாறுகிண்றது. அருள் வாழ்க்கை வாழும் தன்மை வருகின்றது, இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து, இருளை அகற்றிப் பொருள் காணும் நிலைகளை, நாம் பெறுகின்றோம். குரு வழியில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற, நாம் தியானிப்போம்.    

   
  DSC00063.JPG

(பக்கம் 73-76)
நம்முள், நம்மை  அறியாது, இதற்கு முன்  பதிந்துள்ள, ஊழ்வினை என்ற தீய வினைகளை அகற்ற, அருள் ஒளியை, இப்புவியில் வாழும் அனைவரும் பெறவேண்டுமென்று எண்ணவேண்டும்.

இப்புவியில் வாழும் மக்களுடன், நாம் தொடர்பு கொண்டே உள்ளோம். நமது வாழ்க்கையில், பிறரைக் கஷ்டப்படுத்தியோ, வேதனைப்படுத்தியோ, துன்பப்படுவோருடைய உணர்வைக் கேட்டுணர்ந்தால், ஓம் நமச்சிவாயா என்று, நம் உடலுக்குள் அணுவாகி விடுகின்றது.

அப்படி அணுவாக உருவாகிவிட்டால், அவர் உடலில் விளைந்த உணர்வினை, இது கவர்ந்து, அவர் செய்யும் தவறையும், அவர் உடலில் விளைந்த நோயையும், நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட,  அருள் ஒளி அனைவரும் பெறவேண்டும், என்று ஏங்கும்பொழுது, அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருப்பதனை, அந்த அனைத்து உணர்வுகளும், அருள் மகரிஷிகளின் உணர்வினைப் பெற்றுப்  பேரருள் பெறவும், நம் நினைவினை நமக்குள் செலுத்துகின்றது.

கண்ணன், கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசிக்கின்றான் என்பது போன்று, நமக்குள் நுகர்ந்தறிந்த உணர்வுகள்,
நமக்குள் கருவாக உருபெற்றிருக்கும் உணர்வுகளுக்குள், 
அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி,
நம் கண் கொண்டு, நினைவினை உடலுக்குள் செலுத்தி, கருவில் விளையும், தீமை விளைவிக்கும் அணுக்களுக்கு,
அருள் ஒளி பாய்ச்சி, 
இருளை அகற்றிடும் அருள் அணுக்களாக,
நாம் உருமாற்றுதல் வேண்டும்.

நம் உடலில், எத்தகைய நிலைகள் சந்தர்ப்பத்தால் நுகர நேர்ந்து, இந்த மனித வாழ்க்கையை சீர்படுத்த உதவினாலும், நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அணுக்களாக விளைந்துவிடுகின்றது.

அதனின்று விடுபட, நம் குரு காட்டிய அருள் வழிப்படி, இந்த தியானத்தின் நிலைகொண்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடலுக்குள் பரவச் செய்து, நம் நினைவின் எண்ணங்களை, நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு, கண் வழி உணர்வினை செலுத்தி, தீமையை அகற்றும் அருள் ஒளி பெற, இது உதவுகின்றது.

அனைவருடன் ஒன்றியே வாழ்கின்றோம். எவரும்  பிரிந்து வாழவில்லை. சூரியன் இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும், அகண்ட அண்டத்தின் உணர்வுடன் ஒன்றியே, வாழ்கின்றது. அது, பிரிந்து வாழவில்லை. இந்தப் பிரபஞ்சம் இவ்வாறு வாழும் பொழுது, இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வுகள் பெறும் அனைவரும் அனைவருடன் ஒன்றியே வாழுகின்றோம். எவரும் பிரிந்து வாழவில்லை. ஆகவே,
நாம், அந்த  ஒன்றி  வாழும் உணர்வினையும்,
இணைந்து  வாழும்  நிலையும், நம்முடன் ஒன்றி,
இருளினை  அகற்றிடும்,  அருள் உணர்வினை
பெருக்கும் பண்பினை, நமக்குள் வளர்த்திட வேண்டும்.

இதுவே மனித நேயம், நமக்குள் அருள் பாலிக்கும் உணர்வுகள் ஒன்றிடும்  நிலையும் பெறவேண்டும். அருள் உணர்வுகள் நமக்குள் பெற்று, இருளை அகற்றி, மெய்ப் பொருள் காணும் உணர்வு பெற்ற நமக்குள், மெய்ப் பொருளைக் காட்டும் உயிருடன் ஒன்றி, பகைமையற்ற உணர்வு பெற்று, மனிதருக்குள்  மனித நேயமாக வாழ்ந்திடும் அருள் ஞானத்தைப் பெருக்கிடல் வேண்டும்.

அனைவரும், ஏகோபித்த மகிழ்ச்சி பெறும் உணர்வினை, ஒன்று சேர்ந்து வாழ்ந்து, எப்பொழுதும் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையில், நமக்குள் உருப் பெறும் நிலையை வளர்த்து, இப்புவியில் பரவச் செய்து,
மனித நேயங்கள் பெருகிட,
மனித பண்பு பெருகிட,
நாம் அருள் தியானத்தில் இருப்போம்.

மதபேதமில்லாத, மொழி பேதமில்லாத,
இன பேதமில்லாத, அரசியல் பேதமில்லாத உலகை,
அந்த மனித நேயத்தை, வளர்த்தோமென்றால், 
பிறவி  இல்லா  நிலை  என்னும்  பேரொளியைப்
பெறும் தகுதி பெறுகின்றோம். எமது அருளாசிகள்.

DSC00157.JPG