(பக்கம் 7-10)
நமது வாழ்க்கையில், நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்தாலும், ஒருவர் வேதனைப்படுவதைப்
பார்க்காமல் இருக்க முடியாது. அவர் உடலில் இருந்து வரும், வேதனையான உணர்வு வெளிப்படுவதை
உற்றுப் பார்த்து, நுகர்ந்து அறிகின்றோம்.
அவர் உடலில் விளைந்த வேதனை உணர்வு, நமக்குள் தோன்றுகின்றது. நமது உடலுக்குள்,
அது கருவாக உருவாகி விடுகின்றது. பின், அது நாளடைவில் அணுவாக உருவாகி விடுகின்றது.
அவர் உடலில் எத்தனை நோய் உருவானதோ, அத்தகைய அணுவின் தன்மை நம் உடலிலும் உருவாகி, நம்
உடலுக்குள்ளும் நோய் வரத் தொடங்கி விடுகின்றது.
இதைப் போன்று, ஒருவர் வெறுப்படையும் செயலைச் செயல்படுத்துகின்றார் என்றால்,
அவர் உடலிலிருந்து அவருடைய செயலாற்றல்கள் வெளிப்படுகின்றது. அவரை உற்றுப் பார்த்து, உணர்வுகளை நுகர்ந்து, நுகர்ந்து, அவர் தவறான
செயல் உள்ளவரென்று அறிகின்றோம்.
உணர்ந்தாலும், அந்தத் தவறான செயல்களைச்
செயல்படுத்தும் கருவாக, உருவாகிவிடுகின்றது. பின், அது அணுவாக உருவாகின்றது. அந்த அணுவின் தன்மை, நம் உடலில்
பெருகத் தொடங்கி விடுகின்றது.
இதைப் போன்று, நாம் எண்ணிலடங்கா குற்ற
இயல்புகளைப் பார்க்கின்றோம். வேதனைப்படுபவரையும் பார்க்கின்றோம். அவர்கள் வேதனைப்பட்டு
உடல் நசிந்து, அவருடைய ஆன்மாக்கள் எத்தனை சினத்துடன் வெளிப்படுகின்றது? என்பதையும்
பார்க்கின்றோம்.
அவ்வாறு பார்க்கப்படும் பொழுது, அவர் உணர்வுகள் எவ்வாறு நசிந்து வெளிப்படுகின்றதோ,
அதை நுகர்ந்தபின், நமக்குப் பயமும், அச்சமும், ஏற்படுகின்றது.
இதைப் போன்ற உணர்வுகளை நுகரப்படும்பொழுது,
அது உடலுக்குள்
கருவாகின்றது.
அணுவாக உருவாகின்றது.
இவையெல்லாம் அணுவாக உருவானபின்,
நம் உடலில் இணைந்து
விடுகின்றது.
எத்தனையோ கோடி சரீரங்களில், இத்தகைய தீமைகளை வென்று, தீமைகளை வென்றிடும் மனித
உடலைப் பெற்ற நாம், அன்பு, பண்பு, பரிவு கொண்டு வாழ்ந்தாலும், பிறருக்கு உதவி செய்ய
வேண்டும், என்ற எண்ணங்கள்தான் நமக்கு உண்டு.
மனிதனென்று வந்தால், பிறருக்குத் துன்பத்தைத் துடைத்து அவர்களுக்கு நல்வாழ்க்கை
அமைத்தல் வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் படும் வேதனையையும், துயரத்தையும்
நுகர்ந்து அறிய நேருகின்றது. நுகர்ந்தறிந்த இந்த உணர்வுகள், உடலுக்குள் கருவாகி அணுவாக
உருவாகி விடுகின்றது.
நமது உடலென்ற இந்திரலோகத்திற்குள், விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான். அப்படியென்றால்,
நமது உடலுக்குள் அந்தக் கருவின் தன்மை உருவாகத் தொடங்கிவிடுகின்றது. அது அணுவாக உருவாக்கப்படும்
பொழுது, நாம் எந்தக் குணத்தை எண்ணினோமோ, அது பிரம்மமாக உருவாகிவிடுகின்றது.
இதைத்தான் பிரம்மா உருவாக்குகின்றான் என்பது. எத்தகைய குணங்கள் உருவாகின்றதோ,
அந்தந்த உணர்வுக்குத் தக்க, அதனின் ஞானமாக அந்தந்த அணுக்கள், அது இயங்கத் தொடங்கி விடுகின்றது.
மனிதனின் வாழ்க்கையில், அன்பும் பாசமும் கொண்டு, பிறருக்கு உதவி செய்தாலும், தீமை நன்மை
என்று உணர்ந்தாலும், உணர்ந்த நிலைகளில் அதற்குத்தக்க செயல்களைச் செயல்படுத்துகின்றோம்.
இருப்பினும், நம் உடலுக்குள் அந்த அணுக்கள்
விளைந்தபின், எத்தனை உணர்வுகளை வளர்த்தோமோ, அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
இதில், எந்த குணத்தின் தன்மையை அதிகமாக வளர்க்கின்றோமோ,
அதற்குத் தக்க அடுத்த உடலை உருவாக்குகின்றது என்று, நமது ஞானிகள் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள்.
நாம் எண்ணக் கூடியது அனைத்தும்,
ஓம் நமசிவாய என்று, நம் உடலாக
மாறுகின்றது.
இந்தக் கணக்கின்படி நந்தீஸ்வரன், சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சிவத் தத்துவத்தில்
கூறப்பட்டுள்ளது.
(பக்கம் 10-17)
நாம் சுவாசித்த உணர்வுகளில்
எது அதிகமோ, அதன்படிதான்,
நமது வாழ்க்கையில் எதுவும் நடக்கும்.
நமக்கு நோய் வருவதும்,
இந்த உடலில் பல அணுக்கள், ஒன்றுடன் ஒன்று மோதி,
பல மனக்கலக்கங்கள் ஏற்படுவதும்,
தீமையின் அணுக்கள் பெருகி, உடலுக்குள் உறுப்புக்கள் சேதமாவதும்,
மனநோய் வருவதும், உடல் நோய் வருவதும்,
மனநிலை கெடுவதும், சிந்தித்துச் செயல்படும் சக்தி இழப்பதும்,
இவை அனைத்துமே, நாம் சுவாசித்த
உணர்வுப்படிதான் நமக்கு வருகின்றது. தன் வாழ்க்கையைச்
சீர்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது.
நாம் வேதனை கொண்டு, அடுத்ததை வேதனைப்படுத்தி ரசித்துக் கொண்டிருப்போம் என்றால்
புலி, நரி, நாய் போன்ற உணர்வுகள் நமக்குள் தோற்றுவிக்கப்படுகின்றது.
அதன் உணர்வு அதிகரித்தால், அதன்
கணக்கின்படி இந்த உடலில் கடுமையான நோய்கள் வருகின்றது. பின்,
அந்த வேதனை அலைகொண்டு ஆன்மா வெளியே சென்றால், நரியோ, நாயோ, புலியோ
போன்ற நிலைகளை உருவாக்குகின்றது.
இதைப் போன்று, நமது வாழ்க்கையில் பிறருக்குத் தெரியாமல் பல செயல்களைச் செய்கின்றோம். இவை அனைத்தையும் நமது உயிர் உருவாக்கியே தீரும். இதிலிருந்து எவரும் தப்பவே முடியாது.
நான் உங்களை ஏமாற்றலாம், ஆனால்,
நான் ஏமாற்றியதை எனது உயிர் கருவாக்கி, அணுவாக்கி, உடலாக
உருவாக்கிவிடுகின்றது.
ஒருவரை வேதனைப்படுத்தி, மறைமுகமாக ரசிப்போமென்றாலும்,
பிறரைத் துன்புறுத்தியோ,
பிறர் துன்பப்படும் நிலைகளை
உருவாக்கியோ,
இத்தகைய செயல்களைச்
செயல்படுத்தினால்,
அவர்கள் உயிரிடமிருந்து தப்பவே முடியாது.
இன்றைய வாழ்க்கையில், எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ
அதன்படி நோயும், இந்த உடலைவிட்டுச்
சென்றபின், மனிதனல்லாத உருவையும் உருவாக்கிவிடும் உயிர்.
நாம் பல கோடி சரீரங்களில், தீமைகளை வென்றிடும்
உணர்வை நுகர்ந்து, நுகர்ந்து, தீமைகளை
வென்றிடும் அமைப்பை நமக்குக் கொடுத்ததும்,
நமது உயிரே.
தீமைகளை வென்றிடும் ஆற்றலை,
நாம் சரியாகப் பயன்படுத்தவில்லையென்றால்,
“இன்றைய செயல் நாளைய சரீரமாவதில்” சந்தேகம் இல்லை.
நாளை புலியோ, பாம்போ, ஆடோ, தேளோ என உருவாக்கிவிடும்.
ஒருவர் துன்பப்படுவதைக் கண்டு நாம் இன்பப்பட்டால்,
அதனுடைய நிலைகள் விபரீதமாக இருக்கும்.
ஒருவர் துன்பத்தின் செயலாக
செயல்படும் பொழுது நாம் நுகர்ந்தறிந்தால், நாம்,
அவர் அந்தத் துன்பத்திலிருந்து விடுபடவேண்டும்,
அவர் அருள் ஒளி பெற வேண்டும்.
அவர் மெய் ஒளி காண வேண்டும்
என்று
நம் உணர்வுக்குள் இதை இணைத்து
அந்தத் தீமையின் உணர்வுகள் வளராது காத்துக் கொள்பவர்
எவரோ, அவர் தப்ப
முடியும்.
தீமையின் உணர்வை அடிக்கடி நுகர்ந்தபின், தீமையின் செயலை தன் எண்ணத்தால் உருவாக்கி, அந்த உணர்வின் தன்மை ஆழப்பதிந்து விட்டால்,
மனிதனல்லாத உருவைத்தான் உருவாக்கும்.
பிறரைத் துன்பப்படுத்தி ரசித்து வாழ்பவர்கள், அதனுடைய
முதிர்வு காலத்தில் நிச்சயம் அனுபவித்தே தீர வேண்டும்.
உடல்களில் பல நோய் வரும், டாக்டருக்கும் புலப்படாது, வேதனையிலிருந்து மீளமுடியாது. காச நோயையோ, புற்று நோயையோ, பிறருடைய உடல்களில் நுகர்ந்தாலும், பிறருக்குத் தீமை
செய்து ரசித்தாலும், அந்த உணர்வுகள் நம் உடலில் நிச்சயம்
விளையும், விளைந்தபின்
உடனே ஒன்றும் தெரியாது.
இன்றைய செயல், நாளைய வாழ்க்கையாக அமைகின்றது. இன்று நாம் எந்த
நிலைகளில் நல்ல உணர்வினைப் பெறுகின்றோமோ,
அது நாளைய உடலின் தன்மையாக,
நாளைய செயலாக அமைகின்றது.
நல்ல ஒழுக்கங்களையும், நல்ல பண்புகளையும் நாம் பெற்றாலும், வேதனை என்ற உணர்வுகளை நுகரப்படும்பொழுது, அது மனித
உடலை உருவாக்கிய அனைத்து நல்ல நிலைகளையும், அழித்துவிடுகின்றது.
ஆகவே, நாம் அனைவரும் நமது குரு காட்டிய வழியில், மகரிஷிகளின் ஆற்றல் மிக்க அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து, நம்மையறியாது வரும் வேதனைகளிலிருந்து
விடுபடுவோம். வேதனைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறுவோம். அதைப் போன்று,
நாம் பார்க்கும் அனைவரும்
மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, அவர்களும்
வேதனைகளிலிருந்து மீள வேண்டும் என்று
நாம் தியானிப்போம், தவமிருப்போம்.
(பக்கம்
18-23)
நுகர்ந்த
உணர்வின் அறிவு கொண்டுதான், மற்ற உயிரினங்கள் வாழுகின்றது. மனிதர்கள் நாம் பேசுகின்றோம், உயிரினங்கள் ஒலிகளை எழுப்புகின்றது. ஆனந்தக்
குரல், சோகக் குரல், எதிரிகளைக் கண்டபின் அது எப்படி வாழ வேண்டும்? என்று, எதிரொலிகளை
அனுப்புகின்றது.
உதாரணமாக, கோழியை எடுத்துக் கொண்டால் தன் குஞ்சுகளை வளர்க்கும்
பொழுது, கருடனைக் கண்டால் ஒரு விதமான அச்சுறுத்தும் குரல்களை எழுப்புகின்றது. உடனே
குஞ்சுகள் அனைத்தும், கோழியின் சிறகிற்குள் அடைக்கலம் புகுந்துவிடுகின்றது. இது அதனுடைய
பரிபாஷைகள்.
ஆனால் கோழி, குஞ்சுகளுக்குச்
சொல்லிக் கொடுக்கவில்லை. அதன் உணர்வின் தொடர்பு கொண்டு, இயக்கச் சக்தியாக இயங்குகின்றது.
எலிகளை எடுத்துக் கொண்டாலும், பூனையின் மணத்தை நுகர்ந்தால், அடுத்த
எலிகளுக்கு எச்சரிக்கை செய்கின்றது. அதனுடைய ஒலிகளை எழுப்பியவுடன், மற்ற அனைத்தும்
அமைதியாக இருந்து விடுகின்றது.
பூனையோ, தன் இரைக்காகப் பதுங்கி இருக்கின்றது. ஆனால், எலியின் மணத்தை
நுகர்ந்து, நுகர்ந்து, அதே மூச்சை வெளியிடுகின்றது. அப்பொழுது, இந்தப் பூனையின் மணம்
மறைந்துவிடுகின்றது. இவ்வாறு பூனையின் மணம் மறைந்து, எலியின் மணம் வெளிவரத் தொடங்கியவுடன்,
எலி வெளிவரத் தொடங்கி விடுகின்றது.
பூனை, அந்த எலியின் சிரசை அடித்து விடுகின்றது. ஏனென்றால், எலியின்
மற்ற உடல் பாகம் பிடித்தால், அது கடித்துவிடும் என்று, பிடித்தவுடனே உதறிவிடுகின்றது.
அதன் பலத்தைக் குறைத்து விடுகின்றது. பின்பு அதைக் கொன்று, தனக்கு இரையாக்கிக் கொள்கின்றது.
இது ஒவ்வொன்றும், உணர்வுகளுக்கு ஒப்ப வெளிப்படுத்துகின்றது. மனிதனாக
இருக்கும் நாம், பலப்பல எண்ணங்களை நமக்குள் கலந்து கொள்வோம். பல தந்திரங்களையும் கற்றுக்
கொள்வோம். அவைகளில், ஒரு மாட்டைப் பிரியமாக வளர்க்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த மாட்டிடம், யார் ஒருவர் உணர்வை அதிகமாகச் செலுத்துகின்றாரோ,
அவருடைய குணமெல்லாம் அந்த மாட்டிற்கு உண்டு. அவர் யாரையாவது வெறுக்கும் தன்மை வந்து,
கோபமாகப் பேசுகின்றார் என்றால், அதே போன்று அந்த மாட்டிற்கும் வரும். அது பதிவாகி,
உடனே தாக்க ஆரம்பிக்கும்.
இந்த மனிதனின் உணர்வுகள்
அதனின் உடலில் பதிவாகி, அத்தகைய செயல்களைச் செயல்படுத்தும், ஏனென்றால் அதன் உடலில் உள்ள
காந்தப் புலன் அதைக் கவர்ந்து, அந்த உணர்வுக்குக்கொப்ப அந்த மாடு வளர்கின்றது.
சிலர் நாய் வளர்க்கும் பொழுது, அந்த நாய் யார் மேல் அதிகமாகப் பற்று
வைத்திருக்கின்றதோ, அந்தப் பற்றுக்கொப்ப அதனுடைய உணர்வுகளும், அறிவும், இருக்கும்.
அவர்கள் யாரிடமாவது சீறித் தாக்கித் தன்னிடம் அணுகாது செய்திருந்தால், அதே உணர்வு நாயிற்கும்
வரும்.
ஆனால் மனிதர்கள்பால் வளரப்படும் பொழுது, எத்தகைய உணர்வு கொண்டு
வளருகின்றதோ, நம்மை உற்று நோக்கும் பொழுது, நம்முடைய உணர்வுகள் அதனுடைய உடலில் படருகின்றது.
மனிதன் வளர்க்கும் உயிரினங்கள்,
அது இறந்தபின் யார் அதை வளர்க்கின்றனரோ
அவர்களின் உடலுக்குள் புகுந்து, அது மனிதனாகப் பிறக்கின்றது.
நம் வீட்டிற்குள் ஒரு பாம்பு வந்துவிட்டால், அது தீண்டி விடுமே
என்ற அச்சத்தின் உணர்வாக நுகர்ந்தால், அந்தப் பாம்பின் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை
நாம் நுகர்ந்து, அந்தப் பாம்பின் நினைவே வரும். அந்த நினைவு கொண்டு, எண்ணங்களைச் செலுத்தும்போது,
பாம்பு அவருக்கு நேராகவே வரும்.
பாம்பு, அடிக்கடி அவர் கண்ணுக்குத் தென்படும். இவர் எண்ணத்தின்
மணத்தை நுகரப்படும் பொழுது தன் இனமென்ற நிலைகளில் தாராளமாக வரும். அது வரும் பொழுது,
நாம் அஞ்சி ஓடுவோம். அத்தகைய நிலை வரும் பொழுது, பாம்பைக் கண்டால் அடிக்க மனம் வராது.
அவர் பாம்பைக் கண்டு அஞ்சி ஓடுவார்.
ஆனால் அடுத்தவர்தான் அதை அடிப்பார். இதுவெல்லாம் நாம் அறியாமலேயே நடக்கும் உயிரின்
இயக்கங்கள்.
இதைப் போன்று, நாம்
பல கோடிச் சரீரங்களில், வலுவான உணர்வுகளை நுகர்ந்து, அதன் அறிவாக, அதனிடமிருந்து
காத்துக் கொள்ளும் உணர்வே வலுவாகின்றது. இவ்வாறு, அது வளர்த்துக் கொண்ட உணர்வுகள், கூர்மை அவதாரம்.
எதைக் கூர்மையாக வளர்த்துக் கொண்டதோ,
அந்த உணர்வுகள் அந்த உடலில் பெருகி,
அந்த உடலை விட்டு இறந்தபின்,
எந்த உணர்வு வலுப் பெற்றதோ, அந்த உடலுக்குள் சென்று, அதன் ரூபமாக, அந்த உடலாக மாற்றி
விடுகின்றது. இப்படித்தான், பரிணாம
வளர்ச்சியில் பல வகையிலும் பிறந்துள்ளோம்.
மற்ற உயிரினங்கள், தாவர இனங்களை உணவாக
உட்கொள்கின்றன. மற்ற உடல்களை (மாமிசத்தை) உணவாக உட்கொள்பவை, புல்லைத் தின்பதில்லை.
புல், பூண்டுகளை உணவாக உட்கொள்பவை சைவம், மாமிச உணவை உணவாக உட்கொள்பவை, அசைவம்.
உணர்வால் இயக்கப்பட்ட உணர்வின் சக்தி
பெற்ற,
அந்த உணர்வை நுகர்ந்து, உடலான பின்
அத்தகைய உணர்வை எடுத்துத்தான் அதைக்
கொன்று புசிக்கின்றது. ஆனால், கொன்று புசிக்கும் பொழுது அந்த
உயிர் அதனுடைய உடலுக்குள் சென்று, அது தன் குட்டியானபின், குட்டியைப் பாதுகாக்கின்றது.
இதைப் போன்றுதான், நாம் பல சரீரங்களுக்கு இரையாகி, இரையாகி, நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை,
ஒவ்வொரு சரீரத்திலும் இறையாக்கி, அதன் வலு கொண்டுதான், வராகன் என்ற வலிமை பெறுகின்றது.
எத்தனையோ கோடிச் சரீரங்களை உற்று நோக்கி,
அதனின் வலுவைக் கண்டுணர்ந்து
அதனின்று மீண்டிடும் உணர்வை நுகர்ந்து,
அதன் உணர்வை இறையாக்கி
இறையின் உணர்வாகத் தன் வாழ்க்கையை
நடத்துகின்றது.
வலுவான உடல்கள் கொண்ட உயிரினங்கள்,
மற்றதைக் கொன்று, தனக்கு இரையாக்கி கொள்கின்றது.
வலுவானது, வலு இழந்ததின் தசைகளை இரையாக்கிக் கொள்கின்றது.
ஆனால் வலுவிழந்ததோ, வலுவான உணர்வை இரையாக்கிக் கொள்கின்றது.
பிறிதொரு தீமைகளை நாம் கேட்டுணர்ந்தால்,
தீமையை விளைய வைக்கும் கருவாகி, பின் அணுவாக உருவாகி, நமக்குள் தீமையை விளைய வைக்கும்.
அவ்வாறு விளையும் பொழுது,
மகிழ்ச்சி பெற்ற உடலில் துடிப்பின்
நிலையும்,
அரிப்பின் நிலையும், கொதிக்கும் நிலையும்,
மின்னல் போன்று தாக்கும் நிலையும்
வருகின்றது.
நம் உடலுக்குள் இருக்கும் இத்தகைய
உணர்வுகள், மற்ற அணுக்களில் தாக்கியபின், எப்படி மின்னல் தாக்குகின்றதோ அதைப் போன்று,
விஷத்தின் தன்மை ஊடுருவும் பொழுது, ஒரு அணுவின் உணர்வின் மணம், நல்ல உணர்வின் மணங்களை தாக்கும்
பொழுதுதான், “பளீர் பளீரென்று” மின்னும் சக்தி பெறுகின்றது.
மனிதனின் வாழ்க்கையில், தன் சுய நலன்களுக்காக
பிறருடைய நிலைகளை எண்ணிப் பார்க்கும் பொழுது, இவ்வாறு வருகின்றது. நட்பின் தன்மை கொண்டு
பழகும் பொழுது, சூதுகளுடன் தன் வாழ்க்கைக்காகத் தவறுகளைச் செய்து, தவறின் உணர்வை நுகர்ந்தால்
உயிர் அதை உருவாக்கி விடுகின்றது. அந்த அணுவின் மலம் உடலாகின்றது.
பிறரைக் கெடுக்க வேண்டுமென்றோ, பிறருடைய
நிலைகளுக்காகத் தவறு செய்ய வேண்டுமென்றோ, தவறை ரசிக்கும் தன்மை வந்தால், நமது உயிர்
அதைக் கருவாக்கி, அணுவாக்கி, அணுவின் மணத்தை நம் உடலாக்கும்.
பிறரைத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நமக்குள் எண்ணினால், துன்பத்தின் தன்மை கருவாகி,
அந்தத் துன்பத்தை உருவாக்கும் அணுவாக, நமக்குள் உருவாகின்றது.
அப்படி உருவாகி விட்டால்,
அந்த உணர்வின் மணங்கள்,
நம் உடலுக்குள், நம் உணர்வின் மணங்களை,
மின்னலைப் போன்று, ஊடுருவிச் செல்லும் சக்தி பெறுகின்றது.
பின் அதனால், நல்ல அணுக்களின் செயலாக்கங்கள்
தடைப்படுகின்றது. ஆகவே, நமக்கும் வேதனையும், வெறுப்பும், வருகின்றது.
நம் உடலுக்குள் வேதனையையும், வெறுப்பையும்
உருவாக்கி விட்டால், நம் சொல் கொண்டு பிறரிடத்தில் பழகினாலும், செயல் பட்டாலும், இந்த
விஷத்தின் தன்மை நம் சொல்லுடன் கலந்து, அவருடன் உறவாடும் பொழுது, அவர் உதவி செய்வது
போன்று இருக்கும். அதே சமயத்தில், அது நமக்குள் எதிரியை உருவாக்கும்.
பிறரைக் குறை கூறும் உணர்வுகளை நமக்குள்
வளர்த்து,
அந்த உணர்வின் அணுக்கள் பெருகிவிட்டால்,
நாம் சொல்லும் உணர்வுக்குள்ளும் அது
கலந்து,
கேட்போர் உணர்வுகளில் அது பதிவாகி,
அந்த உணர்வின் தன்மை கொண்டு,
நம் உடலில் பிறரைக் கெடுக்க வேண்டுமென்ற,
பிறருக்குத் தீங்கு செய்ய வேண்டுமென்று எண்ணிய உணர்வுகள், நமக்குள் மகிழ்ச்சியை
உருவாக்கினாலும், அந்த
மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்காது.
நமது வாழ்க்கையில், நாம் எந்தக் காரியத்திற்குச்
சென்றாலும், நம் சொல்லின் தன்மை அவர்கள் செவிகளில் படும்பொழுது, கண்வழி ஈர்க்கும் சக்தி
வருகின்றது.
நம் உடலில் உருவான வேதனையின் உணர்வுகள், கேட்போர் உணர்வுகளில் பட்டு, நண்பரைக் கூட பகைமை ஆக்கி
விடும். சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்துவிடும். இதைப்
போன்றுதான், நாம்
வேடிக்கையாகப் பார்த்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் கருவாகி, அணுவாக உருவாகி விடுகின்றது.
நாம் எதை உற்று நோக்குகின்றோமோ,
எதை அறிய விரும்புகின்றோமோ,
அறிந்த பின், அந்த உணர்வுகள் நமக்குள்
கருவாகி,
அணுவாகி, உருவாகி விடுகின்றது.
இது போன்ற நிலைகளில் இருந்து, நாம் மீள்வது எங்கே? அதற்கு குருபலம் வேண்டும்.
(பக்கம் 33-38)
நமது வாழ்க்கையில், நாம் தீமையான உணர்வுகளை நமக்குள் புகாதபடி,
நம் குரு காட்டிய அருள் வழி கொண்டு, அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தல் வேண்டும்.
அதற்கு, குரு பக்தி வேண்டும்.
குரு
கவர்ந்த, அந்த உணர்வின் சக்தி,
குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ
அவர் நினைக்கும் பொழுதெல்லாம்
குரு, தான் நுகர்ந்த அந்த உணர்வின் சக்தி எளிதில் கிடைக்கும்.
எளிதில் செயல்படுத்த முடியும்.
தீமை என்ற நிலைகள், தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.
குரு பக்தி குறைந்து, எவரொருவர் அதை அலட்சியப்படுத்துகின்றாரோ கிடைத்த சக்தியை உதறிவிட்டது போன்று, ஆகிவிடும்.
நாம் எடுக்கும் நிலைகளை, தெய்வத்தைச் சீர்படுத்திக் கொள்ளலாம்.
நாம் எண்ணும் எண்ணங்களே தெய்வமாகின்றது. கோபத்தின் உணர்வானால், அந்த கோபத்தைச் செயல்படுத்தும் தெய்வமாகின்றது. வேதனையை நுகர்ந்தால், அந்த வேதனையைச்
செயல்படுத்தும் தெய்வமாகின்றது.
ஆனால், இவை அனைத்தையும் ஒடுக்கி, தீமைகளை அகற்றி, அசுர உணர்வுகளைத்
தடுத்து, உணர்வினை ஒளியாக மாற்றும், மெய் ஒளியின் உணர்வைப் பெருக்கியவர் அகஸ்தியர்.
அகஸ்தியர் துருவனாகி, துருவ
மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானார். அதனைப் பின்பற்றி, “குரு என்ற வழிகளில்” நாம் பெற்றோமானால், நமது வாழ்க்கையில் வரும் தீமைகளில்
இருந்து விடுபட முடியும். இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலைகள்
அடைய முடியும்.
குரு கொடுத்த உணர்வினைக் கெடுத்து, தன்னைத் தாழ்த்திக் கொண்டு,
குருவிற்கு நாம் தவறு செய்தால், அந்தத் தவறின் பலன், முன்பகுதி சந்தோசத்தைக் கொடுக்கலாம்.
ஆனால், பின்பகுதி அதனின் அனுபவத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உடலிலே, தான் செய்யும் தவறின் உணர்வை, உயிர் உணர்த்திவிடும்.
யாரிடத்திலும் பொய் பேசிடலாம். ஆனால் உயிரிடமிருந்து தப்ப முடியாது. பிறருக்கு, நாம் தீங்கு விளைய
வைத்து விடலாம். ஆனால், உயிரிடமிருந்து தப்பவே முடியாது. நாம் தவறு செய்யவில்லை. ஆனால், உயிரிடமிருந்து
தப்ப முடியாது.
குருவுக்கு விரோதமான நிலைகளில் எவர் நடக்கின்றாரோ, அதன் பலன்கள்
நிச்சயம் தெரிந்துவிடும்.
அவருடைய வாழ்க்கையில், உயிரே அவருக்குள் உணர்த்தி,
நல்ல பயனைப் பெறும் நிலையைத் தடைப்படுத்தி,
தனக்குத் தவறென்ற உணர்வை உணர்த்திவிட்டால்,
உணர்வின் அறிவை, நிச்சயம் பெற்றேதான் ஆகவேண்டும்.
ஆகவே, நமது வாழ்க்கையில் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம். இந்த
உடலை விட்டு எப்போது சென்றாலும், குரு காட்டிய அருள் வழியில், அருள் மகரிஷிகளுடன் தொடர்பு
கொண்டு, நாம் அங்கே செல்ல வேண்டும்.
ஒருவன் தீங்கு செய்கிறான்
என்றால், அந்தத் தீங்கின் தன்மை
பற்று கொண்டால்,
அதுவே குருவாகின்றது.
அந்தத் தீங்கின் விளைவுகள் குருவாக்கப்படும் பொழுது, அந்தத் தீங்கின் விளைவே உருவாகின்றது.
தீமையை
அகற்றிடும் நிலைகளை,
குருவாக
ஏற்றுக் கொண்டால்
“தீமையை
அடக்கிடும் குரு”
என்ற நிலைகள் அடைகின்றது.
இன்றைய செயல், நாளைய நிலைகளாக அடைகின்றது. ஆகவே நாம் எதனின் நிலைகளை
வளர்க்கின்றோமோ, அதுவே நமக்குள் குருவாகின்றது.
ஒருவரை வேதனைப்படுத்தும் உணர்வினை எடுத்துக் கொண்டால், அந்த வேதனை
உணர்வே நமக்குள் உருவாகின்றது. அதுவே குருவாகி, நரகலோகத்தைச் சந்திக்கும் நிலையை உருவாக்குகின்றது.
திருடன் என்ற நிலைகள் வந்தால்,
அதுவே குருவாகி, திருடன் என்ற நிலைகள் அடைந்து,
பிறருடைய துன்பங்களை அறியாது,
தவறு செய்யும் நிலைகளே வருகின்றன. அதுவும் குருதான்.
மனிதனின் வாழ்க்கையில், நம் குரு காட்டிய அருள் வழியில், நஞ்சினை
வென்று, உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஒளி என்ற நிலைகளில், நாம் எந்த குருவைப் பின்பற்றுகின்றோமோ,
அந்த “குரு உபதேசித்த உணர்வை”, தனக்குள் எடுத்தால், தீமைகளை அகற்றி, அருள் ஒளி என்ற
சக்திகளை ஊட்டும்.
அரும் பெறும் உணர்வை, நாம் பெறுவோம். இந்த வாழ்க்கையில் வரும் இருளை
அகற்றுவோம். மெய்ப்பொருள் என்ற நிலைகளை உருவாக்குவோம்.
அனைத்து
உலக மக்களின்
உயிரையும், ஈசனாக மதிப்போம்.
அனைத்து உலக மக்களும், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று,
தவம் இருப்போம்.
ஒருவரைப் புகழ்ந்து கூறும் பொழுது, தவறுகள் நிச்சயம் வருகின்றது.
ஆகவே,
புகழ் கண்டு மயங்காதே!
புகழாரம் பாடாதே!
ஒருவரை புகழ்ந்து பாடத் தொடங்கிவிட்டால்,
புகழ்ந்து பாடிய உணர்வுகள்,
ஏமாற்று வித்தையாகத்தான் இருக்கும்.
புகழைத் தேடி நாம் சென்றால்,
அந்தப் புகழின் ஏக்கத்தில் இருப்போம்.
நாம் ஏமாற்றத்தில்தான் சிக்குவோம்.
நாம் புகழுக்காகச் செல்லுகின்றோமென்றால்,
நம் வாழ்க்கை நிச்சயம் தடைப்படும்.
இன்னல்
கண்டு கலங்காதே! நாம் எத்தகைய இன்னல்கள் வந்தாலும், பிறரை
இகழ்ந்துரைக்கும் எண்ணங்களைத் தவிர்த்தல் வேண்டும். ஒருவருடைய நிலைகளில் இன்னல்கள்
வருகின்றதென்றால், அதைக் கண்டு இகழ்ந்துரைப்பது தவறு.
ஒருவர் இன்னலில் சிக்கும் பொழுது, அந்த இன்னலிலிருந்து, “அவர் மீள வேண்டும் ஈஸ்வரா”, என்று அருள் உணர்வைத் தனக்குள் எடுத்து, அந்த இன்னலில் இருந்து மீள வேண்டும்
என்றால், அந்த உயர்வு நமக்குள் கிடைக்கின்றது. ஆகவே,
நமது வாழ்க்கையில் பிறரை இகழ்ந்துரைப்பதும்,
இன்னல் கண்டு கலங்குவதும்,
நமக்கு நாமே தண்டனை கொடுப்பது போன்றதாகும்.
எத்தகைய
இன்னல்கள் வந்தாலும், துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும், எங்கள் வாழ்க்கையில் தெளிந்த
நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணி,
பிறர்
சொல்லால், பிறர் பார்வையால்,
நமக்குள் வரும் தீமைகளைத் தவிர்த்துப் பழக வேண்டும்.
பிறவி இல்லா நிலை பெற வேண்டுமென்றால்,
துருவ தியானத்தில் பெறும் அந்த அருள் ஒளியைக் கூட்டி,
இந்த வாழ்க்கையில் வரும், இன்னல்களைத் தவிர்க்க வேண்டும்.
(பக்கம் 39-43)
நாம் எதனைச் சுவாசிக்கின்றோமோ, அந்த உணர்வே வாழ்க்கையை நடத்துகின்றது.
அந்த உணர்வின் தன்மையே கருவாகின்றது. அதுவே அணுவாக உருவாகின்றது. ஆகவே, தீமைகளை நீக்கிடும்
அருளை நாம் பெற்றோமென்றால், அது நமக்குள் உருவாகும்.
நமது ஆறாவது அறிவின் துணை கொண்டு, எல்லாவற்றையும் அறிகின்றோம்.
தீமை என்ற நிலைகள் வரும்
பொழுது,
அது உடலுக்குள் புகாதபடி
பாதுகாப்பதே
ஆறாவது அறிவின் வேலை.
அதனால்தான் கந்த புராணத்தில், முருகனை (ஆறாவது அறிவு) சேனாதிபதி
என்று காட்டியது. முருகா
என்றால், மாற்றி அமைக்கும் சக்தி என்று பொருள்.
தீமைகளை வென்றவர் துருவ
நட்சத்திரம். அதனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம். அதனின்று வரும் உணர்வை
நாம் நுகர்ந்து, எப்பொழுது தீமையைக் காணுகின்றோமோ, அந்தத் தீமையின் உணர்வுகள் வலு பெறுவதற்கு
முன், அருள் ஒளியை நாம் பெற வேண்டும்.
மகரிஷியின் அருளாற்றல் நாங்கள் பெற வேண்டும், எங்கள் பார்வையால்,
அனைத்தும் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை இணைத்துவிட்டால், இந்த உணர்வுகள் பிரம்மம்
ஆகின்றது. அது கருவாகின்றது, உருவாகின்றது. தீமை என்ற உணர்வின் சக்தி, நமக்குள் வராதபடி
பாதுகாப்பாகின்றது. அதற்கு குரு பலம் வேண்டும்.
நமது குருநாதர், மிகவும்
சக்தி வாய்ந்தவராக இருந்தார். அவரின் உணர்வை நுகர்ந்தேன். நுகர்ந்த உணர்வை எனக்குள் வளர்த்தேன். வளர்ந்த உணர்வை, உங்களுக்குள்
பதிவாக்குகின்றேன்.
பதிவானதை மறந்து, ஆசையின் நிலைகளை உங்களுக்குள் கூட்டினால், இந்த
அரும் பெறும் சக்தியை நாம் இழந்து, ஆசையின் உணர்வுகள் வளர்க்கப்பட்டு, கொடுத்த வாக்கினை
இழக்கும் தன்மை வரும்.
அருள் ஒளி பெறும் உணர்வை
உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது, ஆசையின் நிமித்தம் இதில் கூட்டப்படும் பொழுது, யாம் கொடுக்கும் வாக்கும், உங்களுக்குள்
சீராக இயங்காது.
யாம் கொடுக்கும் வாக்கின்
உணர்வுகள் அது கருவாகி, அணுவாக விளைந்தாலும், அதை வளரவிடாது உங்களின் ஆசையின் உணர்வுகள் தடுக்கும். குரு கொடுத்த வாக்கின் தன்மையையும்,
இழக்க நேரிடும்.
நீங்கள் எங்கே சென்றாலும்,
குரு பெற்ற உணர்வினை, நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது, பகைமையான
உணர்வுகளை அகற்றிடும் வல்லமை பெறுகின்றோம்.
நாம் பெற்ற உணர்வின் தன்மையே, நமக்குள் தெய்வமாகின்றது. நாம் எண்ணிய
எண்ணங்களை நுகரப்படும் பொழுது, அந்த உணர்வின் செயல் எக்குணமோ அந்தத் தெய்வமாகின்றது.
இதைப் போன்று, அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்கினால், மற்றவைகளை அதனின்
வலுவை இழக்கச் செய்து, சிந்திக்கும் தன்மையைக் கொடுக்கும்.
இன்று குருவின் வலிமை கொண்டு
மாற்றவர்களை ஏமாற்றுபவர்கள்தான் உண்டு.
குருவின் நிலைகளில் ஏமாற்றிப் பிழைப்போர் நிலைகளில்
கடைசி நிமிடம், உயிர் எதையுமே
மறக்காது.
அந்த உணர்வுகள் கொண்டு,
உயிர் அதை வளர்த்தேதான் தீரும்.
அந்த வினைகளை அனுபவித்தேதான்
ஆகவேண்டும்.
குரு பலம் கொண்டு, குருவினை நினைத்தால்
தீமையின் உணர்வுகள் தனக்குள் வராது தடுக்கலாம்.
இதை மறந்திடலாகாது. மதி மயங்கிடலாகாது.
குருவை எவரொருவர் நிந்திக்கின்றனரோ, அருளொளி காட்டும் உணர்வை எவர் இருளச் செய்கின்றனரோ, அவர்கள் வாழ்க்கையில்
குருவின் தன்மையை இழந்து. இருளின் தன்மை அடைவர். வாழ்க்கையின் கடைசி நிமிடத்தில், சிந்திக்கும்
தன்மை வந்தாலும், எதுவும் வலிமை பெறாது.
குருவின் வலுவை எவ்வாறு
இயக்க வேண்டுமென்றும்,
குருவின் தன்மை கொண்டு,
நம்மை
அறியாது வந்த இருளை எப்படி நீக்குதல் வேண்டுமென்றும், அதைச் செயலாக்குதல் வேண்டும்.
சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் குருவையே மறக்கச்
செய்யும். நண்பர்கள்பால் நண்பன் என்ற நிலைகள் இருப்பினும், அவன் தவறு செய்கின்றான்
என்ற நிலைகள் வரும்பொழுது,
தவறென்ற நிலைகளில் குருவின் தன்மை கொண்டு
தவறைத் திருத்தத் தவறினால், தவறுக்கே உதவி செய்தால்,
தவறின் உணர்வின் அலைகள் சிறிது காலம் நிலைக்கும். பின் அவர் வாழ்க்கையே
சீர்கெடுக்கச் செய்யும் என்பதை மறந்திடலாகாது.
மற்றவர்களிடம் குறைகள்
இருப்பினும், குருவின் துணை கொண்டு, குறைகளைக் களைய வேண்டும்.
புகழ் பாடும் நிலைகள் கொண்டு,
ஆகா! உன்னுடைய வலுகள் என்ன! என்று,
போற்றுவோர் நிலைகளுடன் இணைந்துவிட்டால்,
அதன் உணர்வின் நிலைகளை, சிறிது காலத்தில் உயிர் அதனுடைய உணர்வை
உணர்த்தியே தீரும். உயிரிடமிருந்து எவரும் தப்ப முடியாது.
குரு வாக்கை வாங்கினால்,
அந்த குருவினுடைய நிலைகள் எளிதில் இருக்கலாம். ஆனால், குரு வாக்கின் பலன் மிக சக்தி வாய்ந்தது. அதில் எவரொருவர் தவறுகின்றனரோ,
அந்தத் தவறின் நிலைகள், நிச்சயம் இயக்கிக் காட்டும்.
(பக்கம் 44-46)
குரு என்றால் என்ன? உடலுக்குள்
இருக்கும் அனைத்திற்கும், உயிரே குருவாக இருக்கின்றது. உயிர் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது, அதனின் அறிவாக இயக்குகின்றது. இந்த உடலின் வாழ்க்கையை
ஞானத்தின் நிலைகள் கொண்டு, சிந்தித்து பாருங்கள்.
குருவை நாம் எப்படி மதிக்க வேண்டும்? உங்களைப் பழித்துப் பேசும்
உணர்வுகளையோ, உங்களைத் துன்பப்படுத்தும் நிலைகளையோ நான் எண்ணினேன் என்றால், அது என்
உயிரான குருவிற்கு நான் செய்யும் தீங்கேயாகும்.
இந்த உயிரால் வளர்க்கப்பட்ட உண்மையின் உணர்வை, வளர்க்கப்பட்ட நிலைகளில்
இருந்து நான் எடுக்கும் உணர்வுகள் எனக்குள் வந்தால் குருவிற்கு நான் செய்யும் துரோகம்.
எண்ணிலடங்கா நரக வேதனையின் நிலைகள் உயிரால் உருவாக்கப்பட்டு, எத்தனையோ
நிலைகள், உயர்ந்த நிலைகள் கொண்டு சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டதுதான் இந்த உயிர்.
பல சரீரங்களில் பல தீமைகளிலிருந்து
விடுபட்டு, நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர். அப்படிப்பட்ட உயிரை மதிக்கத்
தவறினால்,
அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். துரோகிளுக்கு
உறுதுணையாகப் போனவர்களின் நிலைகள், நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
நமது குரு, பைத்தியக்காரர் போல் இருந்தார். காட்டிற்குள் செல்லப்படும்
பொழுது, யானையைக் காட்டி,
அந்த யானையிடமிருந்து தப்பிக்க,
யானையுடன் நட்புக் கொள்ள வேண்டும் என்றார்.
பூனை, எப்படி எலியின் உணர்வை நுகர்ந்து,
அந்த மணத்தைக் கொண்டு எலியை உணவாக உட்கொள்கின்றதோ
அதைப் போல, யானையின் மணத்தை நுகர்ந்து கொள்.
திரும்பத் திரும்ப நுகர்ந்து, அந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சு.
அதனுடைய எண்ணங்களுக்கு வரும் பொழுது,
யானை வலுவுடையதுதான் என்றாலும்,
அதன்
வலுவின் தன்மை உனக்குள் சிக்கி, அது தாக்கும் நிலையில் இருந்து நீ தப்பிக்கலாம் என்றார்.
சில நேரங்களில் காட்டுக்குள்
போகும் பொழுது, குருநாதர்
எமக்கு அனுபவத்தைக் கொடுத்தார். அனுபவத்தைச் சொல்லுகின்றேன். நீங்கள் அலட்சியப்படுத்தினால்
எனக்கு ஒன்றும் இல்லை. அலட்சியப்படுத்துவோர்கள் உணர்வுகளுக்கு,
இந்த பாக்கியம் கிடைத்தைத் தவறவிட்டதாக ஆகி விடும்.
எமது கண்ணின் நினைவாற்றலை
விண்ணிலே செலுத்தச் செய்து, நமது பிரபஞ்சம்,
எப்படி 2000 சூரிய குடும்பத்துடன் தொடர்பு கொண்டு
வாழ்கிறது? என்றும், அதன்
கலவையின் நிலைகள், இந்த உடலின் நிலைகளுக்கு உண்டு என்றும், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக்
காட்டினார்.
இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்கள், நட்சத்திரங்கள் அதனுடைய தன்மையைக் கவர்ந்து, நட்சத்திரங்களுக்கு எப்படி வீரிய உணர்வு வருகிறது என்று
காட்டினார். நட்சத்திரங்கள் கவர்ந்து வெளிப்படுத்துவது, தூசிகளாகப் பறக்கப்படும் பொழுது அதை சூரியனின் காந்த
சக்திகள் கவருவதைக் காட்டினார்.
இவை இரண்டும் மோதும்பொழுது
ஒளிக்கதிர்களாக ஓடுவதும், ஒளிக்கதிர்கள்
மற்றொன்றோடு எப்படிச் சேருகின்றது
என்றும், அதன் வழி
மற்றதோடு சேர்ந்து, ஒன்றுடன்
ஒன்று உராய்கின்றது என்று காட்டினார்.
ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது,
எப்படி வெப்பம் வருகின்றதோ
இதைப் போன்றுதான், மின் கதிரின் உணர்வுகள்
மற்றதுடன் கலந்து எவ்வாறு உருவாகின்றது?
என்ற நிலைகளை குருநாதர்
தெளிவாகக் காட்டினார்.
பின், அகண்ட அண்டத்தையும்,
அதன் நிலைகளை நம் பிரபஞ்சம் நுகர்வதையும்,
பிரபஞ்சத்திற்குள் நுகர்ந்த உணர்வின் சக்தி,
‘’நான் கண்ட உணர்வை
உனக்குள் பதிவு செய்கின்றேன், உற்று நோக்கு’’
என்று கூறினார்.
உணர்வின் ஆற்றலை நீ பருக
முடியும்,
அதன் தொடர்பு கொண்டுதான் நீ
வாழுகின்றாய்”.
எண்ணத்தின் வலுகொண்டு,
அதைப் பெறவேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது,
2000 சூரிய
குடும்பங்களிலிருந்து வரும் அனைத்திலும்,
உன் நினைவின் ஆற்றல் ஊடுருவி,
அதனுடன் கலந்து இணையும் சக்தி வருகின்றது.
அந்த இணைந்த உணர்வுகள் நீ பெறும் பொழுது,
உனக்குள் அறிவின் தெளிவும்,
உனக்குள் இருளை அகற்றிடும் ஆற்றல் மிக்க உணர்வுகளும், நீ
பெறுகின்றாய்’’ என்று
உணர்த்தினார்.
‘’நம் சூரியன், மற்ற பிரபஞ்சத்தின் உணர்வுகளின் தன்மை
கொண்டு, ஒளியாகச் சுழன்று இந்தப்
பிரபஞ்சத்தை வளர்க்கின்றது. இதைப் போன்று, அகண்ட
அண்டத்திலிருந்து வரும், மற்ற கோள்களின் உணர்வுகள் ஒன்றுடன்
ஒன்று உராய்ந்து, உணர்வின் ஒளிகள் வெளிப்பட்டு, உன் உடலுக்குள் ஊடுருவும் உணர்வின் தன்மையை உன்னுடைய உயிர்
இயக்குகின்றது’’.
மற்ற மண்டலத்திலிருந்து வருவதை, சூரியன் கவர்ந்து இந்தப் பிரபஞ்சத்தில் எப்படி மாற்றங்களை ஏற்படுத்துகின்றதோ, இதைப் போன்றுதான் உனது உடலிலும், உணர்வின் அறிவாக
அறியும் சக்தியும், அதன் இயக்கத்தைத்
தனக்குள் அடக்கிச் செயல்படுத்தும் நிலையும், வருகின்றது.
உனக்குள் பதிந்த நிலைகளை,
உன்னைப் பின்பற்றுபவரிடம்
பதிவாக்கும் பொழுது,
எவர் இந்த உண்மையின் உணர்வைப்
பின்பற்றுகின்றாரோ,
அவரும் அகண்ட அண்டத்தையும் அறியும் தன்மை
வருகின்றது’’.
அகண்ட அண்டத்தை அறிந்த
அகஸ்தியர், துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அந்த பேரொளியைப் பெற முடியும். அந்த
ஒளியின் தன்மை பெறும்பொழுது, இருளென்ற
நிலைகளை நீக்கி, அந்த வலுவின்
தன்மை கொண்டு, ஒளியின்
சரீரமாக முடியும்.
அனைவரும் ஒளியின் சரீரம் பெற வேண்டும்,
என்ற உணர்வு உனக்குள் வரும்பொழுது,
அவரில் வரும் தீமையின் உணர்வை அடக்கி,
உனக்குள் ஒளியாக்கும் உணர்வின் தன்மையை,
வளரச் செய்யும் முறையே இது என்று குருநாதர் உபதேசித்தார்.
ஆகவே, இந்த மனித உடலில் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி, இந்த வாழ்க்கையில் வரும் சர்வ
தீமைகளிலிருந்தும் விடுபட்டு, சர்வத்தையும்
ஒளிமயமாக்கும் அருள் சக்தி பெறுவோம் என்று
பிரார்த்தித்து, குரு அருள்
உங்களுக்குள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.
நம்மை அறியாது
ஆட்டிப்படைக்கும் சக்தியில் இருந்து மீண்டு, அருள் வாழ்க்கை வாழ்வோம். அனைவரும், தெளிந்த மனம்
கொண்டு வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம், தியானிப்போம். எமது அருளாசிகள்.
(பக்கம் 52-54)
மகாபாரதத்தில், அர்ச்சுனனின் குரு, எதிரிகளுக்கு பக்கபலமாக இருக்கின்றார்.
குரு பீஷ்மர், சகல வித்தைகளையும் கற்றுணர்ந்தவர்.
பாண்டவர்கள் நற்குணங்கள் படைத்தவர்கள்.
கௌரவர்கள், தான் பிழைக்கவேண்டும் என்ற நிலை பெற்றவர்கள்.
தான் பிழைக்க வேண்டும் என்ற உணர்வு வரும் பொழுது, அதன் வலிமையே
அதிகமாகின்றது. அதனுடைய தாக்குதலே அதிகமாகின்றது.
தனது, எனது, என்ற நிலைகள்
வரும் பொழுது, இது கௌரவம்,
நமக்குள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான உணர்வுகளிலும், கௌரவப் பதிவு உண்டு.
ஒன்றை எடுத்து கொண்டால், அது செயலாக்கப்பட வேண்டும் என்ற நிலை வருகின்றது.
கௌரவம் என்ற நிலை வரும் பொழுது,
மற்றவற்றைச் செயல்படுத்தாதபடி,
தன் காரியத்தைச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.
இதைத்தான் மஹாபாரதத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள். குரு பீஷ்மர், பல வித்தைகளைக் கற்றுக்
கொண்ட நிலைகள் இருந்தாலும், கௌரவருடன் இணைந்து செயல்படுகின்றார்.
இவர் (பீஷ்மர்) கொடுத்த குருவின் வலுவை, கௌரவர்களுக்குள் செயல்படுத்தும்
பொழுது, அவர்களுக்குக் கௌரவம் என்ற நிலைகள் கொண்டு தன்னைக் காத்திடவேண்டும் என்ற நிலைகள்
வருகின்றது. கௌரவர்களுடைய நிலைகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றாலும், சூழ்ச்சியின்
நிலைகள் கொண்டு, தனது குடும்பத்திலும் சகோதரர்களைப் பாதிக்கும் நிலைகளுக்குத் தொல்லைகள்
கொடுக்கின்றனர் அதை ரசிக்கின்றனர்.
குரு பீஷ்மர், அவர்களின் தாத்தா, பாண்டவர்களுக்கும் குருவாக இருக்கின்றார்.
அர்ச்சுனன் தனது நிலைகளில், சகோதரர்கள் ஐந்து பேர். கௌரவர்கள் நூறு பேர் என்கின்றபோது,
வலு அதிகமாகின்றது.
தன் தாத்தாவின் வித்தைகளை இருவருமே பெற்றாலும்,
கௌரவர்கள், தவறு செய்யும் உணர்வுடனேயே
தாத்தாவின் வித்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.
அதே சமயம் பாண்டவர்களுக்கு, தர்மத்தையும், தன் வழி கொண்டு தாத்தாவின்
வித்தைகளையும், சீரான வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைகள்தான், வருகின்றது.
கடைசிப் போர்க்களத்தில்,
அர்ச்சுனன் தன் குருவை
எண்ணித்தான்,
அதிகமான வித்தைகளைக் கற்றுக் கொள்கின்றான்.
குருவென்ற நிலைகளை எண்ணி,
தீமைகளை அகற்றிடும் உணர்வின் தன்மை பெறும் பொழுதுதான்,
குரு பலத்தால், அவன் எண்ணும் வலிமையும்,
அண்ட
சராசரத்தின் உணர்வையும்
அறியும் ஆற்றல் வருகின்றது.
மனித உடலுக்குள் இருக்கும்,
ஒவ்வொரு கௌரவ குணமும் எப்படி
இயங்குகின்றது?
அதன்வழி, அவன் வாழ்க்கை எப்படி இயங்குகின்றது? என்று மகாபாரதப் போருக்குள் காட்டப்பட்டது.
(பக்கம் 56-60)
அர்ச்சுனன் என்றால், வலிமை கொண்டது என்பது பொருள். தன் தாத்தா, சகலகலா வித்தைகள்
பெற்றிருப்பினும், இவன்
வலிமையின் உணர்வு பெற்றவன்.
நமது கண் எதனின் உணர்வினை, தன்னைக்
காட்டிலும் வலு கொண்ட நிலைகள் உள்ளதோ, அந்த வலுவினை நுகர்ந்து, இந்த உடலைப் பாதுகாக்க,
வலுவான உணர்வுகளைத் தனக்குள் சேர்க்கின்றது.
உதாரணமாக, புலி வலிமை கொண்டது. அது,
தன் இரைக்காக மானைத் தாக்க எண்ணுகின்றது. மானின் கண்களோ, புலியைப் பார்த்து அதன் வலிமையைக்
காட்டுகின்றது. அது தன்னைக் கொன்றுவிடும் என்ற உணர்வை, நுகர்ந்து விடுகின்றது.
மான் சாந்தமானது. ஆனால், நுகர்ந்த
வலிமையான உணர்வு கொண்டு, தன்னைக் காக்க இது வலு பெறுகின்றது. ஆகவே, வலுவான உணர்வுகள்
கண்ணால் கவரப்பட்டு, அந்த வலுவின் உணர்வை உயிருடன் இணைத்து, அந்த வலுவின் உணர்வைத்
தன்னுள் வளர்க்கின்றது. அதுவே வலிமையாகின்றது.
இந்தக் கண்கள் எதனின் வலுவைக் கூட்டுகின்றதோ,
அதனிடமிருந்து தப்பிக்கும் உபாயத்தை, உயிரிடம் கொடுக்கின்றது. இப்படி வலிமையான பின்,
புலியின் உணர்வுகள் மானின் உடலில் வலிமையாகின்றது. புலி மானை அடித்து கொல்லும் பொழுது,
மானின் தசையைத் தனக்குள் இரையாக்கிக் கொள்கின்றது.
ஆனால், மானின் கண்களோ, புலியின் வலுவான உணர்வுகளைத் தனக்குள் இறையாக்கி, அந்த வலுவின் தன்மை கொண்டு,
உடலை விட்டுச் சென்றபின், புலியின் உடலுக்குள் செல்லுகின்றது.
இந்தக் கண்கள், எதை உற்று நோக்குகின்றதோ, அந்த உடலுக்குள் ஊடுருவும்
சக்தியைக் கொடுக்கின்றது. இதைத்தான், கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் சென்றான் என்று,
மகாபாரதத்தில் காட்டப்பட்டது.
மானின் உயிரான்மா, புலியின் உணர்வின்
வலிமை கொண்டபின், புலியின் வியூகத்தைத் தகர்த்து, அதற்குள் ஊடுருவச் செய்தது. கண் அகண்ட அண்டத்திலும், எண்ணி
ஓடும் நிலை பெற்றது.
தர்மத்தையும், நியாயத்தையும் கடைப்பிடிக்கும்
பாண்டவர்களை,
கௌரவர்கள் சூதால் கவர்ந்து, அடிமையாக்குகின்றனர்.
சூதுடன் செயல்பட்டாலும், இவர்களின்
நஞ்சு கொண்ட உணர்வுகள்,
கடைசி நிமிடத்தில் கௌரவத்தின் தன்மை
கொண்டு, அழிகின்றனர்.
கௌரவர்களின் துணை கொண்டு, அன்று குரு
என்ற தன்மைகள் இருப்பினும், பீஷ்மர், கௌரவர் செய்யும் தவறுடன் உறுதுணையாக இருக்கின்றார்.
அதனால், அவருக்கு வேதனை வருகின்றது.
குரு என்ற நிலைகள் வரப்படும் பொழுது,
கடைசி நிமிடத்தில் பீஷ்மர், அர்ச்சுனனிடம் நியாயமுண்டு, தான் செய்த பாவத்திற்கு, அவனால்தான் பிராயச்சித்தம் அளிக்க
முடியும்,
என்றார்.
கடைசியில் தாக்கப்பட்டபின், தஷிணாயனத்தில்
நான் இறக்கமாட்டேன். உத்திராயணத்தில்தான் இறப்பேன் என்கிறார். தஷிணாயனம் என்று வரும்
பொழுது, கடும் நெருப்பாகின்றது.
உத்திராயணம் என்று வரும் பொழுது,
துருவத்தின் நிலை கொண்டு,
நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மை கொண்டு,
எனது தீமைகள் கருக்கப்பட்டு,
அருள் ஒளி என்ற தன்மை எனக்குள் நிலைத்திருக்கும்.
அந்த சக்தியைப் பெறவேண்டும், என்கிறார்.
அர்ச்சுனன், தன் குருவென்ற நிலைகள் வரும் பொழுது, தான் தாக்கவில்லை.
ஆனால், குருவின் உணர்வுகள்
வரப்படும் பொழுது,
குருவை ஆட்டிப்படைக்கும்
தீமைகளிலிருந்து, குருவையே மீட்க வேண்டுமென்ற உணர்வினை, இவன் வளர்க்கின்றான்.
மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால், உணர்வின்
வலிமையால் எவ்வழியில் இயங்குகின்றோம்? எதன் வழியில் மனிதனின் உணர்வுகள் மாறுகின்றது?
என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
கௌரவர்கள் பக்கம் இவர் (குரு) இருக்கும்பொழுது.
இவரின் வலுக்கள் தீமையின் பயனாக அமைகின்றது. கௌரவர்கள் செய்யும் பிழைகளுக்கெல்லாம்,
குரு என்ற நிலைகள் வரப்படும்பொழுது, தீமையின் நிலைகள் அனைத்தும் பட்டபின், அந்த அவஸ்தை என்னுள் பட்டுதான் ஆக
வேண்டும் என்ற நிலைகளை, மகாபாரதத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.
இன்று, நான் தவறு செய்வோர் உணர்வுகளுக்கு
உறுதுணையாக இருந்தால், அது நிச்சயம் என்னைச் சாரும். தவறென்ற நிலைகளில் இருந்து மீட்டிட
வேண்டும், என்ற உபாயத்தை உங்களிடம் கூறும் பொழுது, தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை,
நீங்கள் வளர்க்க முடியும்,
உங்களில் வளர்க்கச் செய்யும் உணர்வுகளை, நான் பாய்ச்சினால், எனக்குள் வரும் தீமையின் உணர்வை அல்லது, உங்களால் தீமைகள்
வரும் நிலைகளை நுகர்ந்து அறிந்தாலும், எனக்குள்
தீமைகள் வராது தடுக்கவும் உதவும்.
பிறருடைய தீமையான உணர்வுகள் வரும்
பொழுது
அந்தத் தீமையை அகற்றிடும் அருள் சக்தி
பெற வேண்டும்
என்றுதான் மகாபாரதம் காட்டுகின்றது.
(பக்கம் 60-63)
கர்ணன் சகல வல்லமை பெற்றவன்தான். அவன்
எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டாலும், அவனும் அழிவின் தன்மைகள் அடைகின்றான்.
ஆகவே, குருவை அலட்சியப்படுத்தியோ,
குருவினுடைய நிலைகளை, உங்கள் சார்புடையோர் என்ற நிலைகள் இருக்கப்படும் பொழுது, நீங்கள்
தவறு செய்தால், குருவென்ற நிலைகள் தன் அருகினில் இருக்கின்றாரென்றும், எளிதில் கிடைக்கின்றாரென்றும்,
இதன் வலுவின் தன்மை கொண்டு தவறு செய்தால், கடைசியில் கௌரவர்களுக்கு எந்த நிலை ஆனதோ,
அதை நிச்சயம் அடைவார்கள்.
கர்ணன், அந்த கௌரவர்கள் பக்கம் இணைந்து
வாழ்ந்ததினால், கடைசியில் அந்தத் தீமையின் விளைவுகளிலேயே மடிகின்றான். ஒரு தர்மத்தின்
எல்லை கொண்டு,
தர்மம் செய்கின்றேன், நன்மை செய்கின்றேன் என்று
இன்று சிலர் பிறருக்குச் செய்வதுபோல் செய்து,
அவர்களை அடிமைப்படுத்தி
தன்னுடைய சுயலாபங்களுக்காகச் செய்கின்றார்கள்.
இது ஏமாற்று வித்தை.
தங்களுக்கு வலு இருக்கின்றது என்றால்,
செல்வந்தர்கள் பலருக்குப் பணம் கொடுத்து, அவர்களை ஏமாற்றி இவருடைய சுயநலங்களைப் பெற்றுக்
கொள்வார்கள். மகாபாரதத்தில், கர்ணன் பலருக்குத் தர்மங்கள் செய்தாலும், தீங்கு உள்ளவர்
பக்கம் இருக்கின்றார்.
தர்மம் செய்யும் பொழுது, தீங்கு உள்ளவன் எளிதில் அதைப் பெறுகின்றான். இவன் செய்யும் தர்மத்தின் நிலைகளும், சீர் குலைகின்றது. கௌரவர்களின்
தீமைகளால், கர்ணனுடைய தர்மம் அழிக்கப்படுகின்றது.
இவருடைய தர்மம் நன்மை செய்வதில்லை.
மாறாக தீங்கு செய்வோருக்குதான் உதவுகின்றது. ஆகவே தர்மம் ஒருவருக்குக் கொடுக்க வேண்டுமென்றால்,
அது எதுவாக இருக்க வேண்டும்?
நல்வழியில் வாழும் அதற்குண்டான உபாயத்தைக் காட்டுவதும், நற்குணங்களைக்
காக்கச் செய்வதும், உண்மையான தர்மமாகும் என்பதனையும், உணர்வின் இயக்கங்களையும் தெளிவாகக் காட்டுகின்றது, மகாபாரதம்.
அர்ச்சுனன், பல வலிமை கொண்டு, உணர்வின்
தன்மை எது பெற்றாலும், அவன் நியாயத்தின் எல்லை கொண்டு, குருவை மதித்தான். அதன் உணர்வு
கொண்டு, படை பலம் கொண்டாலும், குருவின் நிலையை நஞ்சை வென்றிடும் குருவின் வலுவை, தனக்குள்
அந்தத் தீமையை வென்றிடும் உணர்வைக் கொண்டு வந்தான்.
எதிரிகள் பக்கம், தன் தாத்தா சகலகலா
வல்லமை பெற்றிருந்தாலும், அந்த எதிரிகளுக்கு அவருடைய வலுக்கள், தன் ஆசையின் நிமித்தம்,
பிறருக்குத் தொல்லைகள் கொடுத்து அபகரிக்கும் அவர்கள் பக்கம், செல்வமும் செல்வாக்கும்
இருப்பினும், கண்ணன் பாண்டவர்களை மீட்டுவதாகத் தெளிவாகக் கூறுகின்றது.
கண்ணனின் நிலைகளில், நாம் எவ்வாறு
செயல்படுகின்றோம் என்றும், தீமையின் பக்கம் கண்ணனின் சார்புடையோர் இருக்கும்பொழுது,
இவருடைய தர்மமும் நிலைத்து இருந்ததேயில்லை. அவனின் தர்மத்தைக் கண்ணன் எப்படிப் பறித்துக்
கொள்கின்றான், என்று காட்டப்பட்டது. பிறர் செய்யும் தீமையின் நிலைகள் வரும் பொழுது,
உடலுடன் ஒட்டிய தர்மத்தின் நிலைகளைக் கண்கள், தான் பறித்துக் கொள்கின்றது.
தர்மத்தின் நிலைகள் வளர்ந்தாலும், தீமையின் நிலைகள் அதிகரிக்கப்படும் பொழுது,
இயற்கையில் விளைந்த உணர்வுகள், கண்ணால் பார்த்த தீமையின் உணர்வு அதிகமாகி, உடலில் விளைந்த, தர்மத்தின்
நிலைகளைத் தணிக்கச் செய்கின்றது.
அதனால், கர்ணனுடைய செல்வமும் சகலகலா
வல்லமையும் மடிகின்றது, என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது மகாபாரதம்.
இவையெல்லாம், ஞானிகள் காட்டிய உணர்வை
நாம் உற்று பார்க்கும் பொழுது,
இந்த வாழ்க்கைக்கே வருகின்றது.
குருவின் தன்மையைத் தவறான வழிகளில் பயன்படுத்தினால், இன்று சுகமாக இருக்கும்.
குருவின் தன்மை கொண்டு, அது
சாப அலைகளுக்கே அழைத்துச் செல்லும். இதைத்தான், மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.
(பக்கம் 63-66)
தன் தாத்தாவைத் தாக்கும் நிலைகளில்
நான் இல்லை என்று, அர்ச்சுனன் கூறுகின்றார்.
அவருடைய வித்தைகள் இருக்கப்படும் பொழுது, எப்படி நான் தாக்குவேன்? என்று கூறுகின்றார்.
குரு பீஷ்மர் மானசீகமாக, “நான் செய்த
பிழைகளுக்கு, இப்படி இருக்கும் பொழுது, உன்னுடைய வலுதான், நீ செய்த தர்மத்தின் தன்மைகள்
என்னை ஊடுருவி, எனக்குள் இருக்கும் தீமைகள் நீங்க வேண்டும்” என்று கூறுகின்றார்.
குரு பீஷ்மர், பேடியிடத்தில் தன்னுடைய
வீரத்தைக் காட்டுவது இல்லை. ஆகையால். பேடியை எதிர்க்கும் சக்தி அவருக்கில்லை. பேடியான
உணர்வு கொள்ளும் பொழுது, குரு அவர்களை எதிர்க்க மாட்டார். இதைத்தான் காட்டுகின்றார்.
தனது வலிமையை, “வலு
பெற்ற குரு”,
பேடியினுடைய நிலைகளைத் தன் எண்ணத்தில்
எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதைக் காட்டுகின்றார்.
குரு, அவர் செய்த பிழையின் தன்மை கொண்டு, பேடியால்தான் குருவைத் தாக்க
முடிகின்றது.
குரு, கௌரவர்கள் பக்கம் தீமையின் உணர்வுடன் சென்றதனால், பேடியால் தாக்கும் நிலை வருகின்றது.
அர்ச்சுனன் தன் வலிமை கொண்டு, தன்னை
அறியாது சேர்ந்த தீமைகளில் இருந்து விடுபட்டு, அவருடைய உணர்வுகள் மெய்வழி செல்ல வேண்டும்
என்றுதான், மகாஹாபாரதத்தில் காட்டப்பட்டது.
குரு தாக்கப்பட்ட உணர்வு கொண்டு, தாகம்
எடுக்கின்றது என்று சொல்லுகின்றார்.
எல்லோரும் நீரைக் கொண்டு வருகின்றனர்.
அதை நான் விரும்பவில்லை.
எனக்குள் மோட்சம் என்ற நிலைகள் இருக்கின்றது.
அதனை வானத்தில் ஏகி,
மோட்ச நீர் என்ற நிலைகள் கொண்டு,
அவர் உணர்வு கொண்டு,
எனக்குள் இருந்தால் பாவங்கள் போகும் என்கின்றார்.
“அர்ச்சுனனுக்குத் தெரியும்” எனக்கு எது கொடுக்க வேண்டுமென்று (என்று)சூட்சுமமாகக்
காட்டப்படுகின்றது.
குரு எதை விரும்புகின்றாரோ, அதன் தன்மை
கொண்டு, குருவின் ஆணைப்படி, தீமையின் பக்கம் தீயவர்களால் சார்புடைய உணர்வு வரும்பொழுது,
தனது குருவிற்கும் எப்படி வந்தது என்று காட்டப்பட்டது.
மடியும் தருணம், வடக்கு நிலை கொண்ட
உத்ராயாணம் வரும் பொழுதுதான், தனது ஆன்மா பிரிய வேண்டுமென்றும், உத்ராயாணம் என்றால்
துருவத்தால் கவரும் நிலை கொண்டு, தன் ஆன்மா பிரிய வேண்டுமென்று சொன்னது.
அதன் நிலை கொண்டுதான், அர்ச்சுனன் தன் குருவை, தீமையிலிருந்து விடுபடச்
செய்தான் என்று தெளிவாக்கப்பட்டது.
காவியத் தொகுப்புகளைத் தவறான வழிகளைக்
காட்டி, தவறின் வழிகளில்தான் அழைத்துச் செல்கின்றனர். மகாபாரதப் போரில், உலகில் உள்ள
உணர்வின் தன்மைகளை நுகரும் அறிவு கொண்ட நாம்,
நமக்குள் ஒவ்வொன்றும், நம் உடலுக்குள்
புகுந்து,
உணர்வின் செயலாக்கம் அதனதன் வலிமை
கொண்டு,
நம்மை திசை திருப்பும் நிலைகள் எவ்வாறு இருக்கின்றது
என்று தெளிவாகக் கூறுகின்றது.
(பக்கம் 68-74)
கடைசியில், அம்புப் படுக்கையில் பீஷ்மருக்குத்
தலை தொங்குகின்றது, என்று எண்ணுகின்றனர். உடல் முழுவதற்கும், அம்புகளால் படுத்திருக்கும்
பொழுது, வேதனையில் துடிக்கின்றார்.
எனக்குத் தலையணை கொடு என்று கேட்கின்றார்.
கௌரவர்களோ, உடலில் ரண வேதனை, ஆனால், தலைக்கு மட்டும் பஞ்சின் நிலைகள் கொடுத்தால், இது
எப்படியாகும் என்கின்றனர்.
தலையை நிமிர்த்தினால், அந்த உணர்வின்
தன்மை கொண்டு மேலே தொங்கும் பொழுது, அழுத்தம் இந்த அம்புகளில்தான் வேதனை நிலைகளை அதிகமாக்குமே
தவிர, உன்னால் தணிக்க முடியாது என்று எவ்வளவு சூட்சுமமான நிலைகளைக் கூறியுள்ளார்கள்.
அர்ச்சுனன், தனது அம்புகளால் குறி வைத்து, தலை தொங்காது சமப்படுத்தி, வேதனை நிலைகளை தாங்கும் சக்தி
இவருடைய அம்புக்கு உண்டு என்ற நிலையும், சிரசு தொங்காது, வேதனையைத் தாங்கும் உணர்வினைப் பாய்ச்சி,
சிரசினைத் தாங்கி நிறுத்தினார், அர்ச்சுனர்.
என்னால் வேதனை தாங்க முடியவில்லை,
தாகம் எடுக்கின்றது என்று கேட்க, எல்லோரும் ஓடி ஓடி நீர் கொண்டு வருகின்றனர். ஆனால்
அவனுக்குத் (அர்ச்சுனன்) தெரியும், அந்த நீரின் சக்தி என்கின்றார் பீஷ்மர். எந்த நீர்
வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாது, என்று தெளிவாகக் கூறுகின்றனர் காவியத்தில்.
இதை நாம் படித்துணர்ந்தோமா? காவியத்தொகுப்பை அவரவர் உணர்வுக்கொப்பத்தான்
செய்திருக்கின்றார்கள். மகாபாரதப்
போரில், “உயிரை
எப்படி மதிக்க வேண்டும்?” என்று காட்டப்பட்டுள்ளது.
நம்மிடம் கெட்டதும் உண்டு. நல்லதும்
உண்டு. நம்மிடத்தில் தீமை செய்யும் உணர்வு உண்டு. உயிரில் பலம் கொண்டு அதை இயக்கக்
கூடிய சக்தியும், உயிருக்கு உண்டு.
நாம் எதன் வலு கொண்டு இருக்கின்றோமோ,
தீமை செய்யும் உணர்வுகளுக்கு நாம் எடுக்கும் பொழுது, உயிரான குருவிற்கு நாம் எதைச்
செய்கின்றோம்?
தீங்கின் உணர்வு வந்தால், தீமையை நீக்கிடும்
அருள் உணர்வை எடுப்பதை விடுத்து, இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு, குருவை படுபாதாளாத்திற்கு
வீழ்த்துகின்றோம் என்பதை, மகாபாரதம் காட்டுகின்றது.
அம்புப் படுக்கையில் பீஷ்மர், உத்ராயணத்தில்தான் நான் இறக்க வேண்டும் என்கிறார்.
அதாவது துருவ நிலைகள் கொண்டு,
துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் நான் செல்ல வேண்டும் என்கின்றார்.
அதற்குண்டான உபாயமும், அதற்குண்டான சாந்தமும் எனக்கு வேண்டும், என்று பீஷ்மர் கூறுகின்றார்,
எனத் தெளிவாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
சற்றுச் சிந்தியுங்கள்
சிந்தனையைச் செலுத்திப் பாருங்கள்.
நான் சொல்வது இந்த குருவல்ல. “உயிரான குரு”. அது, நீங்கள் நினைப்பதற்கெல்லாம்
சீராக வருகின்றது.
கௌரவர்களுடைய நிலைகள், அவர்களுடைய
தன்மையை இயக்குவதற்கு, சகலகலா வித்தைகளைக் கற்றுக் கொண்டவர்கள்.
பீஷ்மர் தனக்குத் திருமணம் வேண்டாம்,
தன் தந்தைக்குச் சுகமான நிலைகள் வரட்டும் என்று சத்தியம் செய்து, கடைசி வரையிலும் காத்தவர்.
சகல வல்லமை பெற்ற அவனும்
தப்ப முடியவில்லை என்று
எவ்வளவு தெளிவாக ஞானத்தின் நிலைகளைப் போதிக்கின்றனர்.
இந்த உயிரான குரு, மனிதனின் நிலைகளில்
எத்தனையோ பகைமைகளைக் கொண்டு வந்தது. “நான், எனது” என்ற அகந்தைக் கொள்ளும் போது, பிறரைத்
துன்பப்படுத்தி, துன்பத்தின் நிலைகளை நுகர நேருகின்றது.
இந்த கௌரவம், தான் பிறருடைய தன்மமையை
ரசிக்கும் தன்மை வரப்படும் பொழுது, இந்த உடலை அமைத்த உயிரான குருவிற்கு, நம்மை அறியாமலேயே
தீங்கு செய்கின்றோம்.
இதன் தன்மை கொண்டுதான்,
உத்ராயணம் வரும் வரை
இதை அனுபவித்தே ஆக வேண்டும் என்கின்றார்,
பீஷ்மர்.
அந்த காலம் வரும்போதுதான், ஜீவன் போக
வேண்டும். அது வரையிலும், நான் செய்த தன்மைக்கு எவருடன் உறுதுணையாக இருந்தேனோ,
அந்த உறுதுணையால் விளைந்த வேதனையை,
என்னில் நீக்குவதற்கு, அர்ச்சுனனுக்குத் தெரியும்.
அந்த உணர்வின் தன்மை கொண்டு,
எனக்கு நோவில்லாமல் செய்பவன் அவனே.
அவனைப்பற்றி நான் எண்ணும்பொழுது, தீமைகள்
ஆகலும் நிலை கிடைக்கும் என்கின்றார், பீஷ்மர்.
“சத்தியத்திற்காக வாழ்ந்த தன் தாத்தாவை,
நான் எப்படிக் கொல்வது?” என்று அர்ச்சுனன் எண்ணுகின்றான்.
அதே சமயத்தில், “அவரை விட்டுவிட்டால்,
உன்னுடைய நல்ல குணங்கள் மடிந்துவிடுமே” என்று கண்ணன் சொல்லுகின்றார். கொல்வதற்குண்டான
உபாயத்தையும், கண்ணன் சொல்லுகின்றார்.
பேடி என்ற நிலைகளை, அவர் என்றைக்கும்
தாக்குவதில்லை. இதை மறைமுகமாக வைத்து, பேடி என்ற நிலையைத் தாழ்த்துவார். ஆனால்,
உன் வலிமையைப் பற்றி, அவர் சிந்திப்பார்.
உன்னைத் தாக்கமாட்டார்.
அப்படி, பேடியின் நிலைகளில் அவர் திருப்பப்படும்
பொழுது, அவர் விழ்ச்சி அடைகின்றார். வீழ்ச்சி அடைந்தபின், தன் உணர்வுக்குத் தக்கவாறு
வேதனை அனுபவிக்கின்றார். எதிர்ப்பு இல்லை என்கின்ற பொழுது, அர்ச்சுனன் தாக்கிவிடுகின்றார்.
சாதாரணமாக, ஒருவர் மேலானவர் என்ற நிலைகள்
இருக்கும்போது
“தாக்கி விடுவான்” என்று உஷாராக இருப்போம்.
ஒருவன் பேடியாக (இரண்டுங்கெட்டானாக)
இருக்கும்போது,
அவன் பயத்தால் நம்முடன் வந்தால்,
“அவன் ஒன்றும் செய்யமாட்டான்” என்று
அசட்டையாக இருந்தால்
அவன் நம்மைத் தாக்கிவிடுவான்.
இந்த உணர்வைத் தெளிவாகக் காட்டுகின்றது,
மகாபாரதம். பேடியைப் போன்று நடிப்பவர் உணர்வுகளில், சூட்சுமத் தன்மைகளும் உண்டு. அவனுள்
தாக்கும் உணர்வுகளே இருக்கும் என்றும், மனித வாழ்க்கையில், பேடி என்று ஒதுக்கப்பட்டால்,
அதன் உணர்வுகள் என்ன செய்யும்? என்றும் காட்டப்பட்டது.
ஒருவன் ஒன்றும் செய்ய மாட்டான்.
இவனிடம் என்ன சக்தி இருக்கின்றது?
என்று நினைத்தால்
அவன்தான் எளிதில் தாக்கும் நிலையாக
வரும்.
வல்லமை கொண்டவன், பேடியை எதிர்க்க
மாட்டான்.
இவனுக்கென்ன? என்ற நிலைகளில் ஒதுக்கப்படும்
பொழுது,
இந்த உணர்வு வருகின்றது.
அப்பொழுதுதான், குருவை மதிக்கின்றான். பேடியால் தாக்கப்பட்ட உணர்வும், தான் தீமையின் சார்புடைய நிலைகளில்
இருக்கப்படும் பொழுது,
அதிலிருந்து அர்ச்சுனன்
எவ்வாறு காத்தான்?
என்று மகாபாரதத்தில் காட்டப்பட்டது.
(பக்கம் 74-78)
அர்ச்சுனன் என்ற நிலைகள் வரப்படும்
பொழுது, அவனுடைய உணர்வுகளும், நீதியின் தன்மை வரப்படும் பொழுது, நீதிக்குள் எத்தனை
சிக்கல் சிக்குகின்றான் என்றும், உணர்வுகள் இயக்கத்தால் அவன் உயிரின் தன்மையில், அவன்
உணர்வுகள் எப்படி மாறுகின்றது என்ற நிலையையும், மகாபாரதத்தில் தெளிவாக்குகின்றனர்.
அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு,
உத்ராயணத்தில் நான் உடலை விட்டு போகவேண்டுமென்று கேட்டது போல், அருள் ஒளி பெற்ற அருள்
ஞானியின் உணர்வின் நினைவு கொண்டு, இந்த உடலை விட்டுச் சென்றபின், “பிறவியில்லா நிலை
அடைவதே கடைசிநிலை” என்று, வியாசர் தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் கூறிய கூற்றை, அவரவர் சுயநலங்களுக்காகக்
காட்டப்பட்டு, தங்கள் சுயநலங்களுக்கு ஒப்பத்தான் நூல்களை வடிவமைத்து, அதைப் படித்தவர்கள்
எல்லாம், இந்த வாழ்க்கைக்குத் தவறு செய்தே வாழ்கின்றனர்.
இந்தத் தவறிலிருந்து, அனைவரும் உண்மையின்
உணர்வை உணர்ந்து, துருவனின் நிலையை நாம் நுகர்ந்து, துருவ மகரிஷியின் உணர்வை நாம் நுகர்ந்து,
இந்த மனித உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை அடைவோம்.
விஞ்ஞானத்தில் வரும் பேரழிவால், எந்த நிமிடத்திலும் நாம் உடலை விட்டுப் பிரியலாம். ஆனால், அந்த உத்ராயணம், அந்த துருவத்தின் நினைவு கொண்டு, இந்த உடலை விட்டுப் பிரிந்தால்,
அவனுடன் ஏகாந்த நிலைகளில் வாழலாம்.
இதைத்தான் மகாபாரதத்தில், தான் செய்த
தவறுகள் இருப்பினும், அர்ச்சுனனுக்குத் தெரியும் என்னுடைய நிலைகள், என்று கூறப்பட்டது.
அர்ச்சுனனுக்குக் கண்ணால் காட்டப்பட்டு,
தீமையினுடைய உணர்வுகளை அகற்றும்
அந்த வலிமையான நிலைகள், தன்னைக் காக்கும் உணர்வுகள்
அவனுக்குத் தெரியும் என்று தெளிவாகக் கூறுகின்றது.
அதன்வழி கொண்டு, என்னுடைய ஆன்மா எப்படி
இருக்க வேண்டும்? என்று அவனுக்குத் தெரியும் என்று மகாபாரதத்தில், வியாசரால் கூறப்பட்டது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள், காண்பித்த அருள் வழியில், யாம் அருள்
உணர்வுகளைப் பெற்றோம். ஆகவே, யாம் குரு அருளைத்தான் போற்றுகின்றோம். வேறு யாரையும் போற்றுவதில்லை.
குருநாதர் காண்பித்த அருள் வழியில்,
யாம் நுகர்ந்து கொண்ட அருள் உணர்வுக்குத்
தக்க
யாம் நன்மைகள் அடைந்தோம்.
அதே போன்று, தியானவழி அன்பர்களும்
குரு காண்பித்த அருள் வழியில்
தாம் நுகர்ந்துக் கொண்ட அருள் உணர்விற்குத்
தக்க
நற்பயன்களைப் பெற முடியும்.
யாம் சந்திக்கும் அனைவருமே அருள்ஞானம் பெறவேண்டும். அருள்சக்தி
பெறவேண்டும் என்று எண்ணி, இதற்காக அனைவரையும் தயார்ப்படுத்த வேண்டும் என்ற ஆசையில்தான்,
யாம் செயல்படுகின்றோம்.
இது எவ்வளவு பெரிய சக்தி!
எத்தனை வருடம் கஷ்டப்பட்டு,
என்னென்ன வழியில் செயல்பட்டு,
எத்தனை சிரமங்கள் அனுபவித்து,
அத்தனை சிரமங்களையும் தாங்கி,
தாண்டி வருகின்றோமென்றால், எதற்காக?
அனைவரும், இந்த அரும்பெரும் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஆசையில்தான்.
தபோவனம் வளர வேண்டும். தபோவனம் எம்மால்
வளரவில்லை. குருநாதரால்தான், வளர்கின்றது. குருநாதருடைய உணர்வுதான் நம் அத்தனை பேருக்கும்
அமைந்துள்ள (நல்) சந்தர்ப்பம் ஆகும்.
“எல்லோருக்கும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும்” என்ற ஆசை உங்களுக்கு
வர வேண்டும்.
நமது வாழ்க்கையில், எந்த நிலைகள் இருந்தாலும்,
உத்ராயணம் என்ற அந்த நிலைகள் வரவேண்டும். அந்த வலிமை நமக்குள் வர வேண்டும் என்று பிரார்த்தித்து,
குரு காட்டிய அருள்வழி கொண்டு, உயிரை ஈசனாக மதித்து, அவனால் உருவாக்கப்பட்ட உடலை, சிவனாக
நாம் மதித்தல் வேண்டும்.