(பக்கம் 5-9)
வியாசர், தமது உணர்வுக்குள் நுகர்ந்தறிந்த உண்மைகளை, உணர்வுகளாக
வெளிப்படுத்தும் பொழுது, அவைகளை
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, அலைகளாகப்
படரச் செய்கின்றது என்பதை, மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவுபடுத்துகின்றார்.
அவ்வாறு வியாசர் அறிந்து வெளியிட்ட நிலைகளில் ஒன்று,
“மேரு என்ற மலையை மத்தாக வைத்து,
வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து,
பாற்கடலைக்
கடைந்தான் நாராயணன்”
என்பது.
“மேருமலை” என்பது, சிறு
சிறு அணுக்கள் ஒன்று சேர்ந்து, மலை
போல உருவான, நமது
பூமியைக் குறிப்பது. சூரியனிலிருந்து
வெளிப்படும் வெப்பகாந்தம் ‘அல்ட்ரா வயலட்’ என்ற
நஞ்சினைக் கவர்கின்றது. இதில் இயக்கச் சக்தியாக இருப்பது, விஷம். வெப்பம் என்பது பராசக்தி, காந்தம்
என்பது லட்சுமி என்று பெயரை வைத்து, “உருவாக்கும்
திறன் கொண்டது வெப்பம், தனக்குள்
அணைத்து வளர்க்கும் சக்தி கொண்டது காந்தம் என்று வியாசர் உணர்த்தினார்.
வியாசரின்
உணர்வுக்குள் தோன்றிய நிலைகள், அவர்
உணர்வுக்குள் விளைந்த நிலைகள் போன்றவற்றிற்கு, அதற்கேற்ப, ஒவ்வொரு
பெயரை வைத்து வெளியிட்ட உணர்வுகளை, சூரியனின்
காந்த சக்தி கவர்ந்து எவ்வாறு அலைகளாக இருக்கின்றது, என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்துகின்றார்.
மேலும், வெப்பகாந்தமானது, சூரியனிலிருந்து கடந்து வரப்படும்போது, சூரியனின் வெப்பத்தால், அதனுடன் கலந்துள்ள நஞ்சானது பிரிக்கப்பட்டு, சூரியனுக்குப் புறநிலைகளில், அவைகள் சுழன்று கொண்டிருக்கின்றது.
சூரியனின் காந்த சக்தி வெளிப்படும்போது,
அந்த அல்ட்ரா வயலட்டில் இருக்கும் காந்தம்,
அது அனைத்தும் பிரபஞ்சத்தில் மிதந்தாலும்,
அது வரும் பாதையில், மற்ற கோள்கள் உமிழ்த்தும்
உணர்வினைத் தனக்குள் எடுத்து,
அலைகளாகப் படர்ந்து கொண்டிருக்கும் அணுக்கள், பல ஒன்று சேர்ந்து, ஒரு மலைபோல உருவானது, என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான், மேரு என்ற மலையை மத்தாக வைத்து, வாசுகி
என்ற பாம்பைக் கயிறாக வைத்து, பாற்கடலைக்
கடைந்தான் நாராயணன், என்பது.
ஆக, வாசுகி என்ற பாம்பைப் போன்ற இந்தக் காந்தப்புலன்கள், ஒன்றுக்கொன்று இணையாக இயங்கி, நமது பூமியைச் சுழலச் செய்கின்றது. உதாரணமாக,
காந்தக் கட்டைகளை, வெவ்வேறு
இடைவெளிவிட்டு வைத்து,
நீரின் வேகத்தினை அதன்மீது செலுத்தி,
அதனைச் சுழலச் செய்கின்ற
பொழுது,
அது தனது காந்தத்தின் துணைகொண்டு,
காற்றில் படர்ந்திருப்பதைக் கவர்ந்து,
கவர்ந்த நிலைகள் கொண்டு,
மற்ற மோட்டார்களை இயக்கச் செய்கின்றது.
அவ்வாறு இயங்கச் செய்வது போன்று, இந்தக் காந்த அணுக்கள் கலந்த உணர்வின் சத்து, மலை போலக் குவிந்து ஒரு பூமியாக ஆனாலும், இந்தக் காந்தப்புலன்கள் உராயப்படும் பொழுதுதான், இந்தப் பூமியே சுழற்சியின் தன்மையை அடைகின்றது என்று வியாசர் கண்டுணர்ந்தார். மேருமலை என்ற நம் பூமியானது, விஷம் மற்றும் காந்தத்தின் தன்மையால், சுழற்சியினைப் பெறுகின்றது.
பாற்கடல் எனும் இப்பிரபஞ்சத்தில், இப்பூமி சுழலும் வேகத்தில், தனது
உணர்வின் சக்திகளைக் கவர்ந்து, பாறைகளையும், மற்றவைகளையும் உருவாக்கி, அந்த
உணர்வின் சத்து ஆவியாகும்போது, தாவர இனங்களாக உருப்பெற்று, உயிரணுக்கள் எந்தெந்தத் தாவர இனங்களின் சத்தை நுகர்கின்றதோ, அதனின் உணர்வுக்கொப்ப உடல் பெறுகின்றன.
மேருமலை என்ற பூமியானது, வாசுகி
என்ற பாம்பால் சுழற்றப்படும்போது, பாற்கடல் எனும் பிரபஞ்சத்திலிருந்து, தனது சத்தை ஈர்த்துக் கொள்கின்றது. அவ்வாறு விழுங்கிய நிலைகள் சூட்சம சக்தியாக, நமது பூமியின் வடதுருவத்தில் உறைகின்றன.
நம் பூமி உறைபடும் நிலைதான் சிவம். இந்தச்
சிவத்துக்குள், மிகவும் உறையும் தன்மை கொண்ட, இந்தப் பனிப்பாறைகள் இருக்கும் இடத்தை “நீலகண்டா”, என்று பெயரை வைக்கின்றார்கள்.
பூமி, விண்வெளியில் இருக்கும் தனது சக்தியைத் தனக்குள் கவர்ந்து கொள்ளும் இந்த உண்மையை உணர்த்துவதற்குத்தான், சிவன் விஷத்தைத் தனது கழுத்தில் நிறுத்திக் கொண்டான், என்று காவியப் படைப்பில் கூறினார்.
துருவப் பகுதியில் உறைந்த பனியானது,
பூமி சுழலும் வேகத்தில் உண்டாகும் வெப்பத்தினால் கரைக்கப்பட்டு,
கடலில் கரைக்கச் செய்யப்படுகின்றது.
அதனின் ஆவியின் தன்மை கொண்டு,
பூமியில் பல உணர்வுகளை அது எவ்வாறு உருவாக்குகின்றது?
என்பதையும்
வியாசர் அங்கே உணர்த்துகின்றார்.
இதையே பிற்காலத்தவர்கள் காவியமாகத் தீட்டி, இயற்கையின்
செயலைப் படமாக வரைந்து, சிவனைக்
காட்டி, சிவன் உலக நன்மையைக் கருதி, ஆலகால
விஷத்தை உண்டு, தன்
கழுத்திலே நிறுத்திக் கொண்டான் என்று எடுத்துரைக்கின்றனர்.
உயிரணுக்கள், அவ்வாறு நம் பூமி கடைந்த, அந்தச்
சத்தினை விழுங்கிய நிலைகள் கொண்டு, அது
அது, அதனதன்
உணர்வுக்கொப்ப உடலமைப்பைப் பெற்றன என்ற நிலையும், மற்றும்
அவர் கண்டுணர்ந்த பிற உண்மை நிலைகளையும், அவருடைய காலத்தில் வாழ்ந்த நிலைகளுக்கேற்ப வெளிப்படுத்தினார், வியாசக பகவான்.
(பக்கம் 9-14)
வியாசர் தாம் கண்டறிந்த உண்மை நிலைகளை, மகாபாரதம்
என்னும் நூலாக வடித்து, அதில்
கண்ணனுக்கு இரு மனைவி, ருக்மணி, சத்தியபாமா என்று உணர்த்தி,
கண்ணைக் “கண்ணன்” என்றும்,
கண்ணில் இருக்கும் கருவிழிக்கு “ருக்மணி” என்றும்,
கண்ணின் ஈர்ப்பின் அலையால், ஈர்த்துத்
தனக்குள் உணர்த்தும் நிலையை “சத்யபாமா” என்றும்
பெயரை வைத்தார்.
ருக்மணி, சத்யபாமா, இந்த
இரு தன்மைகள் சேர்ந்து நடைபெறும் செயலுக்குக் கண்ணா, கிருஷ்ணா
என்று வியாசர் பெயரிடுகின்றார். அந்த வியாசர் அறிந்துணர்ந்த நிலைகளைத்தான், கீதாச்சாரமாக எடுத்துரைக்கின்றோம்.
“கீதாச்சாரம்” என்பது நாம் எவ்வாறு மனிதராக உருவானோம்?
நமக்குள் எவ்வாறு எண்ணங்கள் உருவாயின?
எண்ணத்தின்
தன்மை கொண்டு,
இந்த உடல்கள் எவ்வாறு இயங்குகின்றது?
உயிரணுக்களில்
தோன்றிய உணர்வின் சத்தின் தன்மையை விவரிக்க, “மகாபாரதப்போர்” என்னும் வடிவத்தில் காப்பியத்தை வடித்து, அதில்
கீதை என்ற நிலைகளை வைத்த, அந்த
நிலையை நாம் கீதாச்சாரம் எனும் உருவில் காண்போம்.
உதாரணமாக, கடவுளின் அவதாரத்தில் கூர்ம அவதாரம் என்ற நிலைகளைக் கொடுத்ததும், வியாசர்தான். ஆமை தன் உணவைத் தேடித் திரியும் பொழுது, அது
தாவர இனச் சத்தை எண்ணிய நிலைகள் கொண்டு, ஆமையின் கண், அதற்குண்டான உணவைக் காட்டுகின்றது.
அந்தச் சமயத்தில், ருக்மணியான கருவிழி,
அது படம் எடுத்துக் காட்டுகின்றது.
அந்தத் தாவர இனத்திலிருந்து வரும் சத்தினை,
கண்ணிலுள்ள அந்த உணர்வின் சத்து, கவர்ந்து சுவாசிக்கும் பொழுது,
அது உண்மையைச் சொல்கின்றது, “இது உனக்குகந்தது” என்று.
இவ்வாறு உணவை நுகர்ந்தறிந்து, உயிருக்குள் எண்ணும் பொழுது, அதனின்
உணர்வின் இயக்கமாக, ஆமையின்
உடல் இயக்கம் பெற்று நகர்ந்து செல்கின்றது. இவ்வாறு ஆமை இயக்கப்பட்டுச் சென்றாலும், ஆமைகளை உணவாக உட்கொண்டு வாழும் ஒரு நரி, இந்த
ஆமையைக் கண்டவுடன், இதனை
விழுங்க வேண்டும் என்று எண்ணுகின்றது.
ஆக, நரியின் உணவுக்கு, நரியின்
கண் ஆமையைக் காட்டுகின்றது. நரியின் கண், ருக்மணி
படமெடுத்து ஆமையைக் காட்டினாலும், அதன் கண்ணுக்குள் இருக்கும் சாந்தமான சத்யபாமா, “ஆமை புசிப்பதற்கு உகந்ததுதான்” என்று நரிக்கு உணர்த்துகின்றது.
இந்த உணர்வின் துணை கொண்டு, ஆமையின்
உடலிலிருந்து வரக்கூடிய மணம் நரியால் சுவாசிக்கப்படும் பொழுது, நரியின்
உயிரான குருஷேத்திரத்தில், ஆமையின் உணர்வலைகள் மோதி இயக்கப்படும்போதுதான், நரியிடத்தில், “இனி இதனை எளிதில் கவரலாம்” என்ற
உணர்வின் நினைவலைகளை, இயக்குகின்றது.
அதே சமயம், நரியின் நினைவலையும், ஆமையின் உணர்வும், நரியின் உயிரான குருஷேத்திரத்தில், ஒன்றுக்கொன்று போர் செய்கின்றது.
ஆமையின் உணர்வுகள் எளிதாக இருப்பதனாலும்,
அதே சமயம், நரியின்
உணர்வுகள் வலுவுடன் இருப்பதனாலும்,
நரியின் உணர்வின் தன்மை ஓங்கி வளர்ந்து,
இதை நாம் விழுங்க முடியும்,
இதை நாம் பிடித்துக் கொள்ள முடியும் என்று,
உயிருக்குள் உணர்வுகள் தூண்டப்பட்டு,
நரியானது, ஆமையின் அருகிலே செல்லுமாறு இயக்கப்படுகிறது.
ஆனால், ஆமை நரியைப் பார்த்தபின்,
அதன் உடலிலிருந்து வரக்கூடிய வலுவான உணர்வை
இந்த ஆமை நுகர்ந்து, உணர்ந்து,
இதனின் உயிரான குருஷேத்திரத்தில் போர் நடக்கின்றது.
ஆனால், அதே சமயம் நரியின் உணர்வைக் கண்டு,
தன் சிரசை உள் இழுத்துத் தன்னைக் காத்துக் கொள்கின்றது.
ஆக, இவையனைத்திற்கும் கண்ணே காத்திடும் நிலையாக
இருந்து, செயல்படுத்துகின்றது.
அதே சமயம், நரிக்கும்
அதன் கண்தான் வழிகாட்டுகின்றது. அதனின் வழி நரி சென்றாலும், ஆமையின் உயிரான குருஷேத்திரத்தில், நரியின் உணர்வான நிலைகள் உந்தப்படும் போதுதான், ஆமை
நரியின் வலுவைக் கண்டு, தன்னைக்
காத்திடும் நிலையாக, தனக்குள்
தன் சிரசை உள் இழுத்துக் கொள்கின்றது.
அவ்வாறு, ஆமை தன் சிரசை உள் இழுத்துக் கொண்டாலும், அந்த நரியைப் பார்த்த உணர்வுகள், ஆமையின்
உடலுக்குள் வலுபெறும் நிலையாக ஆகிவிடுகின்றது. இதைத்தான், குருஷேத்திரப்
போரில் கண்ணன் சங்கநாதம் ஊதிய பிறகுதான், குருஷேத்திரப்
போரே நடக்கின்றது என்று வியாசர் எடுத்துரைக்கின்றார்.
ஆக, இங்கே ஆமையின் கண்கள், நரியிடமிருந்து
வெளிப்படும் உணர்வைக் கவர்ந்து சுவாசிக்கும்போது,
உயிரான குருஷேத்திரத்தில் சங்கநாதம்,
அதாவது, உணர்வின் நாதம் வெளிப்படும்போது,
நரியின் உணர்வின் வலுவை அறிகின்றது.
அதன்பின் தான், ஆமையின்
உயிரான குருஷேத்திரத்தில், அதனின் உடலிலிருக்கும் உணர்வும், நரியின்
உணர்வை நுகர்ந்து கொண்ட உணர்வும், இரண்டறக்
கலந்து, அதில் நரியின் உணர்வு வலுவாகும் பொழுது, “அதனிடம்
சிக்கிக் கொள்வோம்” என்ற
நிலையை இது உணர்ந்து, அந்த
உணர்வின் தன்மை கொண்டு, தன்
தலையை இழுத்துக் கொண்டாலும், நரியின் உணர்வுகள் அனைத்தும், இந்தச்
சாந்தமான ஆமையின் உணர்வின் குணங்களுக்குள், இரண்டறக் கலந்துவிடுகின்றன.
அதே சமயம், நரியின்
உணர்வு ஆமையின் சாந்தமான உணர்வுடன் கலந்தவுடன், அந்தப் போரில் நரியின் உணர்வே மேலோங்கி, இந்த
ஆமையைத் தன் உணவாக ஏற்றுக் கொள்ளலாம் என்று உணர்த்தினாலும், அது ஊதிய சங்கநாதம் கொண்டுதான், நரியும் இந்த ஆமையை உணவாக உட்கொள்ள, நகர்ந்து
வருகின்றது.
இவ்வாறு, நரி ஆமையை நோக்கி நகர்ந்து வரும்போது, இந்த ஆமை தன்னைக் காத்துக் கொள்ள, நரியைக் கூர்மையாகப் பார்த்து, அந்த உணர்வின் சாரத்தைச் சேர்க்கச் சேர்க்க, ஆமையின் உணர்வுகள் ஒடுங்குகின்றது.
ஆக, ஆமையின் உடலுக்குள்,
நரியின் உணர்வலைகள் ஓங்கி வளர்ந்தபின்,
ஆமையின் உணர்வுகள் செயலற்றதாக, இதற்குள் ஆகி
ஆமையின் உடலுக்குள் போர் நடந்து,
ஆமையின் உடலைப் பிளந்து,
அதனின்று விளைந்த நிலையை,
ஆமையின் உயிர், தன்னுடன்
அழைத்துச் சென்று,
அந்தக் கண்கள் காட்டிய, கண்ணனின்
வழி கொண்டு,
நரியான அந்த வியூகத்தைத் தகர்த்து, அதனின்
வலுவை,
இதற்குள் சேர்த்துக் கொண்ட, உணர்வின்
துணை கொண்டு,
நரியின் உடலுக்குள் ஊடுருவி, அதனின் மையம் அடைந்து,
அந்த நரியின் உணர்வே, இந்த
ஆமையின் உடலுக்குள்
சேர்ப்பித்து
வளர்த்துக் கொண்டு,
நரியின் உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு,
நரியின் உணர்வின் சத்தை இது கவர்ந்து,
இந்த உணர்வின் துணை கொண்டு, நரியாக உருவாக்குகின்றது.
கண்ணன் காட்டிய வழிப்படி, ஓர் உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைந்து, வலுப் பெறுகின்றது.
(பக்கம் 20-22)
இன்று ஒரு தூக்கணாங்குருவி, அதனின் உடலின் அமைப்புக்கொப்ப, தன்னைப் பாதுகாக்கும் நிலைக்கும், தன் இனமான குஞ்சுகளைக் பாதுகாக்கப் பல தாவர இனங்களின் நாறுகளை எடுத்துவந்து கூடுகட்டி, தன்
குஞ்சைப் பாதுகாப்பதன் செயல் நடைபெறுவதும், அதனுடைய கண்ணின் நிலைகளால்தான்.
மற்ற உயிரனங்கள் தன் இனமான குஞ்சுகளைத் தாக்கி, விழுங்கிடாது
காக்கும் அந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான், மரக்கிளையின் நுனிகளில் தன் கூட்டைக் கட்டி, பிறிதொன்று
இதைத் தாக்கிடாத நிலைகளில், கண்கள்
காட்டிய வழிகொண்டு, தன்
கூட்டைக் கட்டுகின்றது.
அந்த உணர்வின் நிலைகளை நுகர்ந்து, அதன்
சாரத்தின் துணை கொண்டு கூடுகளைக் கட்டி, அந்த
உணர்வுகள் உடலை வளர்த்தாலும், மற்ற தாவர இனங்களை நுகர்ந்தறியப்படும் பொழுது, அந்த
உயிரான குருஷேத்திரத்தில் உராயப்பட்டு, அதனின் உள்புறம் புகும் பொழுது, மற்ற தாவர இனங்களுக்கும் தன் உடலில் இருக்கக்கூடிய, தாவர இனச்சத்தால் உருவாக்கப்பட்ட இந்த தசைகளுக்கும் சேராது, ஒன்றுக்குள் ஒன்று போராகின்றது.
அவ்வாறு போராகும் பொழுது, அதனின் உடல் நலிந்திடும் நிலை வருகின்றது. ஆக, நலிந்திடும் நிலைகள் கொண்டாலும், இந்த உணர்வின் தன்மை இரண்டறக் கலந்து, இதனின் உணர்வுகள், தன்னைக் காத்திடும் ஞானத்தின் வழித் தொடராக, வருகின்றது.
இவ்வாறு, பற்பல தாவர இனச்சத்தின் தன்மை,
ஒன்று வலுக்கொண்டு, வலு இழந்ததை விழுங்கினாலும்,
அதே உணர்வின் சத்து உடலானபின், இந்த
உடலுக்குள் எவ்வாறு போர் முறை செய்கின்றது?
இந்த உணர்வுகளின் தன்மை தனக்குள் வரும்போது, அந்த
உணர்வின் நினைவாகக் கண் அதனின் நினைவலைகளை எண்ணும் பொழுது, தன்னைக்
காத்திடத் தகுந்த இடத்தை நாடி, எவ்வாறு
செயல்படுகின்றது?
அது நுகர்ந்து அறிந்த உணர்வுகள், குருஷேத்திரப்
போராக மீண்டும் மாறி, தனக்குள்
போர் செய்து கொண்டிருக்கும் மற்றொன்றை எவ்வாறு அடக்கச் செய்கின்றது? என்ற இந்த நிலையைத்தான் “மகாபாரதப் போர்” என்று காட்டப்படுகின்றது.
மகாபாரதப்
போர் என்ற இந்த உணர்வுகள் கவர்ந்து,
இந்த உணர்வுக்கொப்ப சரீரங்கள் உருவாவதும்,
அந்த உணர்வின் துணை கொண்டு எண்ணங்கள் உருவாவதும்,
எண்ணத்தின் துணை கொண்டு அந்த உடலை எவ்வாறு உருவாக்குகின்றது? என்ற நிலையும்,
அவை அனைத்திற்கும் வழிகாட்டுவது கண்ணனே.
ஆக, அது உணர்ந்தறிந்த உணர்வின் சாரமாக
அதனின் உடலை இயக்குவதும்,
உணர்வைப் பிணைக்கச் செய்வதும்,
உடலாக மாற்றுவதும்தான், இதனின் நிலை.
ஆகவே, இந்தக் கண்ணின் நினைவலைகள் எவ்வாறு இயக்குகின்றது என்ற நிலையைத் தெளிவுறக் காட்டுவதுதான், :கண்ணன் கீதா உபதேசத்தின்” நோக்கம்.
இந்தக் கண்கள் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், அது
ஒவ்வொரு சரீரத்தையும் காத்துக் கொள்வதற்காக,
“உன்னைக் காட்டிலும் வலுக்கொண்டது, இது. எனவே
அதனின் உணர்வு கொண்டு,
அதனை நுகர்ந்து, தப்பித்துக்கொள்”
என்று, இந்த உடலுக்குள் உணர்வின் சத்தை வளர்த்து, அதனின்
வலுக்கூட்டியபின்,
“நீ இந்த உடலைவிட்டுச் சென்றபின்,
அதனின் தன்மை கொண்டு, இதனைக் காட்டிலும்
வலுக் கொண்ட உடலுக்குள் புகுந்துவிடு”
என்று இந்தக் கண்ணே உணர்த்துகின்றது.
இந்தக் கண்கள் காட்டிய வழிப்படித்தான்,
இந்த உணர்வின் துணைகொண்டு,
அதனின் ஈர்ப்புக்குள் புகுந்து,
அந்த வியூகத்தைத் தகர்த்து,
இந்த உணர்வின் துணை கொண்டு,
அதனின் சத்தைக் கவர்ந்து, “தானே அதுவாக ஆனது”
என்ற அந்த நிலையை உணர்த்துவதற்காகக் கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்” என்று உணர்த்தப்பட்டது.
(பக்கம் 35-39)
இன்று நம் மனித வாழ்க்கையில், நமக்கு ஒருவர்
தீங்கு செய்துவிட்டால், “அவனை விடுவேனா பார், எப்படியும் துன்பத்திற்கு ஆளாக்கிவிடுவேன்” என்ற அகந்தையான
உணர்வுகள், நமக்குள் விளைந்துவிடுகின்றன.
ஏனென்றால், ஒருவன் செய்த தவறான உணர்வுகள்,
அதை நுகர்ந்தறிந்தபின், நல்ல உணர்வுடன்
மோதியபின், அவனின் உணர்வே இங்கே செயலாக்கி விடுகின்றது.
இதுபோன்று, நமக்குள் அகந்தை கொண்டு,
அவனை அழித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் நிலையில்,
நல்ல குணங்களை அடக்கி, அவன் செய்த தீய குணங்கள்
தனக்குள் ஆட்சியாகி, அவனை அழித்திடும் அறிவு வரும்போது,
அதை நாம் எடுத்திடும்போது, அதே உணர்வு நம்மை அழித்திடும்
நிலையாக, நல்ல குணங்களை மறைத்திடும் நிலையாக, எவ்வாறு வருகிறது? என்று தெளிவுற எடுத்துரைத்தவர்,
அருள்ஞானி வியாசர்.
ஆகவே, அவர் காட்டிய அருள் நெறி கொண்டு,
இன்று நாரதனோ கலகப்பிரியன். மனித வாழ்க்கையில்,
இத்தகைய அகந்தை கொண்ட
நிலைகளைத்
தனக்குள் விளையாது, அதை அடக்கி,
அந்த மெய்ஞானிகளின்
சக்திவாய்ந்த
விண்ணின் ஆற்றலைத்
தனக்குள் ஊன்றிச் செலுத்தி,
தனக்குள் மற்ற நஞ்சினை
ஒடுக்கி,
உணர்வினை ஒளியாக மாற்றிச்
சென்று,
அதனின்று வெளிப்படும், இந்த உணர்வை நாரதன் என்று வைத்து,
கண்ணன் காட்டிய நிலைகள்
கொண்டு,
அதை நாம் நுகர்வோமென்றால், அது நம் உடலுக்குள் சென்று,
நம்மையறியாது துன்புறுத்திக்
கொண்டிருக்கும் நிலைகளை,
கலகப்பிரியனாக மாற்றுகின்றது.
உதாரணமாக, ஒருவர்படும் வேதனையைக் கண்டு,
நாம் நுகரும் அந்த வேதனையான உணர்வுகள் நமக்குள் சேர்ந்து, அது வேதனையை உருவாக்கிக் கொண்டிருக்கும். இந்த வேதனைகளை நாம் நீக்க, அருள் ஞானிகளின் உணர்வுகளை
நமக்குள் சேர்த்தவுடனே, அது போராகி, கலகப்பிரியனாகி விடுகின்றது.
நாம் வேதனைப்படுவோரைப் பார்த்து
எடுத்துக் கொண்ட உணர்வுகள், நம்முடன் இணைந்து
கொண்டு, அந்த வேதனையை உருவாக்கும் நிலையை உருவாக்கும் பொழுது,
“அம்மா, அப்பா’ என்று வேதனைப்பட்டுக்
கொண்டிருப்போம்.
ஆக, வேதனையை உருவாக்கப்படும்போது, அதே எடுத்தபின், அதே உணர்வின் சத்தை அது கவர்ந்து,
நமக்குள் சென்று, அதன் பசி தீர்ந்தால்தான்,
“அம்மா, அப்பா’ என்கின்றபோது,
அந்த வேதனை ஒடுங்கி, தனது பசியின் நிலைகளை ஆற்றிக்
கொள்கின்றது.
உணர்வுகள், தன் தன் இனத்தின் உணர்ச்சியைத் தூண்டி,
நம்முடன் படர்ந்திருக்கும் அந்தச்
சக்தியினைக் கவர்ந்து,
அதனதன் நிலைகளில் எவ்வாறு வளர்கின்றது? என்ற நிலையும்,
இதில் கண் தன் உணர்வைக் காட்டியும்,
மற்றும் அதன் சாரம் எத்தகையது என்பதையும்,
நமக்குக் கீதா உபதேசத்தின் வாயிலாக
உணர்த்தப்பட்டது.
நமது குருநாதர், உணர்வின் செயல்கள்
எவ்வாறு இருக்கின்றது?
என்று, எமக்கு
உபதேசித்த உணர்வின் சாரத்தை, நீங்களும் அறிந்து கொள்வது நலமென்றுதான் “கீதாச் சாரம்” என்ற நிலையில்
தெளிந்திடும் நிலையாக, தெளிந்து உணர்ந்திடும் நிலையாக, நீங்கள் அறிந்து, அதன் வழிகளில் உங்களையறியாது
வந்த தீமைகளை அகற்றிடும் செயலாக, உங்கள் நல்ல உணர்வுடன் இணைக்கப்படும்போது, நினைவு கூர்ந்து இதை எண்ணுவீர்களேயானால், தீமையை அகற்றிடும் ஞானம் கொண்டு, அதனின் துணை
கொண்டு, உங்கள்
வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றவும், நல்லதைச் செய்ய, பிறர்
செய்யும் தீமையிலிருந்து, நம்மைக் காத்துக்கொள்ளவும்,
இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவட்டும்.
உங்களையறியாது
நல்லது செய்யும் நிலைகளை எண்ணி ஏங்கி, தீமையை
அகற்றிடும் பாசத்தினை எடுத்து, தீமையினைக்
கண்டுணர்ந்து, தீமையை அகற்றிடும் செயலாகச் செய்தாலும், பிறிதொருவர் செய்த தீமைகள் உங்களுக்குள் வளர்ந்திருக்கும் நிலையிலும்,
இந்தத் தீமைகள் நீங்குவதற்கான உணர்வுகளை,
உங்களுக்குள் பதிவு செய்து,
அருள் ஞானிகளின் உணர்வின் துணை கொண்டு,
இதை நீக்கிடும் ஆற்றலை,
நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான்,
“கீதாச் சாரம்” என்கிற நிலை உணர்த்தப்பட்டது.
இயற்கையில்
உணர்வின் இயக்கம் எவ்வாறு ஆகிறதென்று, நமது குரு எமக்கு உபதேசித்த உணர்வுகளை நீங்களும் அறிந்துணர்ந்து, நீங்கள் நன்மை செய்த நிலைகளில், உங்களையறியாது
உட்புகந்த தீமைகளிலிருந்து மீண்டு, மனிதனான
உணர்வை நீங்கள் நுகர்ந்தறிந்து, உங்களைத் தீமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.
காரணம், கண்ணன் உபதேசித்த வழிகளில், அந்த
மகரிஷிகளின் அருள் ஒளியை எவ்வாறு அணுக வேண்டும் என்ற நிலைதான், “நரசிம்ம
அவதாரம்” என்பது. ஆக, கண்ணனோ திருட்டு வழியைக் காட்டுகின்றான்.
விண்ணுலகம் சென்ற அருள் ஞானிகளின் நிலைகளை,
அதைக் கூர்ந்து நுகர்ந்து,
அந்த உணர்வின் நினைவலைகளை நமக்குள் கவர்ந்து,
அதனை வலுக் கொண்ட நிலையாக,
அதை நமக்குள் இணைத்துக் கொள்ளும் நிலையாக
உணர்த்துவதற்கே, அந்த அருள்ஞானி வியாசகர், காவியப்படைப்பின்
மூலம் தெளிவுறக் காட்டினார்.
விண்ணை நோக்கி ஏங்கி, எவ்வாறு
நாம் அந்தச் சக்தியைப் பெறவேண்டும்? என்று அந்தக் கண் காட்டிய நிலைகளில் நாம் தெரிந்து கொள்வதற்காக, எந்தக் கண்ணின் இயல்பான செயல் எவ்வாறு? என்று, வியாசகப் பகவானால் காட்டப்பட்ட இந்த நிலைகள் கொண்டுதான்,
“அதோ வருகிறான் பார், நாரதன்”
என்று வானை நோக்கி ஏகி,
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அந்தச் சக்தியை, நாங்கள்
பெற வேண்டும் என்று இந்தக் கண்ணனின் நினைவு கொண்டு, உயிரான
நிலைகளில் ஒன்றி, அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி,
அந்த நினைவைக் கண்ணனுடன் ஒன்றச் செய்து,
அந்த உணர்வின் சக்தியைக் கண்ணை மூடி,
நினைவினை உட்செலுத்தச் செய்வதுதான்,
கண்ணன் காட்டிய அருள் வழி.
(பக்கம் 40-44)
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, எங்கிருந்தோ
ஒளிப்பரப்புவதை வேறொரு இடத்தில், தொலைக்காட்சி
பெட்டி (T.V.) அதைப் படமாகக் காட்டுகின்றது.
ஓரிடத்திலிருந்து அனுப்பப்படும் அலைகள்,
“ஆண்டனா” துணை கொண்டு,
தொலைக்காட்சிப் பெட்டியில், அதற்கான
அலைவரிசை இணைப்பைக் கொடுக்கும் பொழுது,
அந்த ஆண்டனா, காற்றிலே இருப்பதைக் கவர்ந்து,
இங்கே படமாகக் காட்டுகின்றது.
இதைப் போன்றுதான், நமது உடலில், நம் கண்கள் “ஆண்டனா”வாகச் செயல்படுகின்றது.
நமக்குள் பல கோடி எண்ணங்களைப் பதித்து வைத்திருந்தாலும், நாம் எதை நினைக்கின்றோமா, அந்த உணர்வின் துணை கொண்டு, அது
வீரியமடைந்து, அதன் நினைவின் அலையாக, நமக்குள்
கண்ணுக்குள் தெரியாது, புலப்படாது, மறைந்திருக்கும் நிலையில், கண்
கருவிழிக்கு தெரியவில்லையென்றாலும்,
கண்ணின் கருவிழியுடன் இணைந்துள்ள,
காந்தப் புலனின் நினைவின் எண்ண அலைகளை, அது
கவர்ந்து,
அது மறைந்திருக்கும் உணர்வைக் கவர்ந்து,
நமது ஆன்மாவாக மாற்றி,
நம் உயிருடன் இணைந்து, சுவாசிக்கச்
செய்து,
அந்த உணர்வின் நினைவலைகளை உணர்த்துகின்றது.
ஆகவே, எவ்வாறு அது இழுத்துக் கவர்வதை, நம்
கண்ணால் பார்க்க முடிவதில்லையோ, இதைப் போன்றுதான், கண்ணின் கருவிழி பார்க்கவில்லை என்றால், கண்ணுடன்
இணைந்த காந்தப் புலனறிவு, அதை, நாம் எண்ணியது எந்த உணர்வோ, அதனின்
உணர்வைக் கவர்ந்து, ஆன்மாவாகிச்
சுவாசிக்கும் பொழுது, உயிருடன்
இணைந்து, அந்த உணர்வின் தன்மை, நமக்கு உட்புலனாகக் காட்டுகின்றது.
நாம் பிறர் செய்யும் தவறைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, அந்த
உணர்வைக் கவர்ந்து, நமது
ஆன்மாவாக மாற்றுகின்றது. ஆக, இவ்வாறு
ஆன்மாவாக மாற்றியதைத்தான், நரசிம்மன், மடிமீது
அமர்த்தி, வாசல்படியில் அமர்ந்து, இரண்யனைக்
கொன்றான் என்பது.
ஒருவர் வேதனைப்படும் போது, அந்த
வேதனையான உணர்வுகள் உள் சென்றபின், நல்ல
குணங்களைக் கொன்று கொண்டிருக்கும், இதற்கு, இரண்யன்
என்று பெயர் வைத்தார்கள்.
நாம் நல்ல குணங்கள் கொண்டு, ஒருவர்
வேதனைப்படுவதை கண் கொண்டு பார்த்தவுடனே, நம் கண் அவரைப் படம் எடுத்து, அவர்
உடலிலிருந்து வரும் வேதனையான உணர்வை, நம்
கண் கவர்ந்து, நம்
புலனறிவுக்கு உணர்த்திய அந்த உணர்வின் இயக்கம் கொண்டு, அவர்
உடலிலிருந்து வரக்கூடிய, தன்
இனமான சத்தை, நம்
ஆன்மாவாக மாற்றுகின்றது.
இப்பொழுது
ஒரு மரம், தனக்குள்
சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்தின் துணை கொண்டு, காற்றிலிருந்து
எவ்வாறு தன் இனத்தை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றதோ, இதைப் போன்றுதான், நம் உடலில்
ஒருவரை நாம் கூர்ந்து கவனிக்கும்பொழுது,
அவர் படும் வேதனையை ஊழ்வினையாகப் பதிவு செய்து,
இதனின் துணை கொண்டு,
அவர் உடலிலிருந்து வெளிப்படும், அந்த உணர்வலையைக் கவர்ந்து,
நமது ஆன்மாவாக மாற்றி, நம்முள் உட்புகுத்திக் கொள்கின்றோம்.
இவ்வாறு, நாம் சுவாசித்து உயிருக்குள் போனவுடனே, நம்
உயிருக்குள் இது இயங்கியபின், உடலுக்குள் சென்று அவர்படும் வேதனையை உணர்த்துகின்றது. இருப்பினும், நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.
இதிலிருந்து
தன்னைக் காத்திட, நம்
ஆன்மாவாக இருக்கும்பொழுது, அவர் வேதனைப்பட்ட நிலையும், இதுபோன்ற
பல நிலைகள், கண்ணால்
பார்த்த உணர்வுகள், நம்
மடி மீது இங்கே, சுருண்டு
கொண்டுள்ளது.
இவ்வாறு சுருண்டு கொண்டு, நல்ல
சிந்தனை இல்லாது, நம்மை
இயக்கிக் கொண்டிருக்கும் உணர்வின் தன்மைகளை, உயிர், நாம் எண்ணுகின்றவற்றை எல்லாம், அவை
உள் செல்லும் பொழுது, நமக்குள்
உருப்பெறச் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அணுவின் தன்மையை, இந்திரலோகமாகத்
தனக்குள் சிருஷ்டிக்கும் நிலையாக இருக்கும் பொழுது, சிருஷ்டியைத்
தடுத்திடும், இந்த வேதனையான உணர்வுகள் உள் சென்று, அது
செயல்படாது, எவ்வாறு இருக்கிறதென்ற நிலையின் விளக்க உரைதான், கீதா
உபதேசம் என்றாலும், இதனுடைய
சாரம் இதுதான்.
கண்ணால் காட்டிய உணர்வுகளினால்,
உடலுக்குள், அது உணர்வின் செயலாக,
அதனின் சாரமாக இயங்குகிறதென்ற நிலையை,
எமக்கு, நமது குருநாதர் தெளிவுற எடுத்துக் காட்டினார்.
கீதையில் உணர்வின் இயக்கங்களை, வியாசர் காட்டினாலும், உணர்வின் இயக்கம் எவ்வாறு இயங்குகிறதென்ற நிலையைக் காலத்தால் ஞானிகள் வகுத்துக் கொடுத்திருந்தாலும், அதனின் உணர்வுகளை நுகரமுடியாது மறைந்த நிலைகளை, நமது
குருநாதர் எமக்குத் தெளிவுற எடுத்துரைத்து, அதனின் உணர்வின் சாரத்தை வெளிப்படுத்தியதை, நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும், என்ற
நிலையில்தான், இதையும் வெளிப்படுத்துகின்றேன்.
ஏனென்றால், நீங்கள் நல்லது செய்யும் இந்த நிலைகள்
ஒருவரைக் காத்திட நீங்கள் எண்ணினாலும்,
அவர்பட்ட வேதனையின் நிலைகள்
உங்களுக்குள்
நல்ல குணத்தை மறைத்து,
எவ்வாறு நீங்களும் வேதனைப்பட நேருகின்றதோ,
இதனின்று விடுபட்டு
அருள் ஞானி வியாசர் காட்டிய அருள் நெறி கொண்டு,
அந்த உணர்வின் சக்தியை நினைவு கூர்ந்து,
உங்களுக்குள்
கவரச் செய்து,
அருள்ஞானியின்
உணர்வை, சக்தி வாய்ந்த வித்தாக,
உங்களுக்குள்
ஊன்றி, ஊழ்வினையாக மாற்றி,
அதனின் நினைவுகொண்டு நீங்கள் எண்ணும்போது,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் நுகர்ந்து,
உங்களையறியாது உட்புகுந்து, தீமைகள் விளைவிக்கும் இதிலிருந்து
உங்களை மீட்டுக் கொள்ளும் நிலைக்குத்தான், இதை உபதேசிப்பது.
ஏனென்றால், இவ்வாறுதான் நமது குருநாதர் எமக்கு உபதேசித்த அருள்வழியில், எமக்குள் எம்மையறியாது வந்த, எத்தனையோ
தீமைகள் செய்து, எமக்குள்
உட்புகுந்த, அந்தத் தீமைகளை விலக்க, நமது
குருநாதர் காட்டிய அருள்வழியில், தீமையை நீக்கும் நிலையாக, இன்றும்
முயன்று நீக்கிக் கொண்டிருப்பதைப் போன்று, உங்கள்
வாழ்க்கையிலும் இதைப் போன்ற நிலைகளை நீக்கிடும் ஆற்றல் பெறவேண்டும் என்பதற்குத்தான், இதை எடுத்துரைக்கின்றோம்.
உணர்வின் தன்மையின் இயக்கத்தை, “கீதை” என்று வியாசர் சொன்னாலும், அந்த உணர்வின் சாரத்தை குரு காட்டிய நிலைகள் கொண்டு, நீங்கள்
உணர்ந்தறிந்து கொண்டு, நீங்கள்
செய்த நன்மையில், தீமைகள்
எவ்வாறு உட்புகுந்ததோ, அது தீமையாக மாறுகின்றது.
தீமையை அகற்றிடும் சாரத்தை, அருள்ஞானி வியாசகர் காட்டிய அருள் நெறி கொண்டு இதைக் கவர்ந்து, தீமையை அகற்றிடும் சக்தியாக, திறனாக, உங்களுக்குள் விளைய வேண்டும் என்பதற்கே, யாம் இப்பொழுது உபதேசிப்பது. எமது அருளாசிகள்.
(பக்கம் 44-48)
இன்று மனிதனாக
இருக்கும் நாம், நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர்
துடைக்கக் கேட்டுணர்ந்த, அந்தத் துயரமான உணர்வுகள் வந்தபின், அந்த உணர்வுகள்
இரண்டறக் கலந்து, அது ஓங்கி வளர்ந்து,
உடலை மகிழ்ச்சியாக
வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை,
அது செயல்படாது
தடுத்து, உடல்
நலிந்து,
உணர்வுகள்
குறைந்து எண்ணங்கள் நலிந்து,
நம் வாழ்க்கையில்
எதனையுமே வலுவான நிலையில்
செய்யமுடியாத
நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.
இதிலிருந்து
நம்மைக் காத்திட, இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு, நமது குரு காட்டிய
அருள் வழியில், நாம் ஆத்ம
சுத்தி செய்வோம் என்றால், நாம் நம்மைக் காத்திட முடியும் என்பதற்குத்தான்
அருள் ஞானிகள் கண்டுணர்ந்த
இந்த உணர்வின் சாரத்தை,
உங்களுக்குள்,
காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள், இணைத்து,
அதை வலுப்பெறச் செய்யும் நிலைக்குத்தான்,
இதை உபதேசிப்பது.
இதனின் நிலைகொண்டு, வியாசர் காட்டிய
அருள் வழியில், கண்ணன்
காட்டிய வழி, நமது கண்கள், நமக்குள் இதை
நினைவு கூர்ந்து எண்ணும்போது, அந்த வலுவின் தன்மை நீங்கள் பெற வேண்டும்; அருள்ஞானிகளின்
உணர்வுகளை நுகர வேண்டும்; உங்களை அறியாது வந்த தீமையை ஒடுக்க வேண்டும்; அருள்ஞானிகளின்
உணர்வுகளை வளர்க்க வேண்டும், என்ற இந்த நிலைக்குத்தான், இதை உங்களுக்கு உபதேசிப்பது.
ஆகவே, மற்றவர்களுடைய
துயரைக் கேட்டறிந்த நிலைகள், உங்கள் உணர்வின் நல்ல குணங்களை நலியச் செய்தது
போன்று, நலிந்த
உணர்வின் தன்மையை, மகரிஷிகளின்
அருள் சக்தி உங்களுக்குள் புகுந்து, நலிந்ததை மீட்டு, நல்லுணர்வாக வளர்த்து, உயிருடன்
ஒன்றும் உணர்வை,
அனைத்தும் ஒளியாக மாற்றிய, அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள்
கலந்து, உணர்வை
ஒளியாக மாற்றும் திறன், நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில், அந்த
மாமகரிஷி காட்டிய, அந்த
உணர்வின் சாரத்தை, உங்களுக்குள்ளும் தெளிவு பெறக் காட்டும்
நிலைகள் வந்தது.
ஆகவே இதைப் போன்று, கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு, “அதோ வருகின்றான் நாரதன்” என்று நாம் எண்ணும்போது, புற நிலைகள் கொண்டு, நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திச் செயல்படுகின்றோம்.
இதைப் போன்று, நம் கண்ணின்
நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி, இப்போது உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின்
வலுவின் துணை கொண்டு, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற
வேண்டும் என்று, கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றப்படும்போது,
“உயிரான
கண் அகக்கண்”
“நம்முடய
கண் புறக்கண்”,
ஆக புறக்கண்ணால், அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு,. அந்த
ஆற்றல் மிக்க சக்தியை நான் பெறவேண்டும் என்று நாம் ஏங்கும்பொழுதுதான்,
“சிவன் நெற்றிக்கண்ணைத்
திறந்தால்,
சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.
நம் உடலான
சிவத்திற்குள்,
உயிர், அகக்கண்ணாக இயக்கும் நிலையில்,
புறக்கண்ணின்
நினைவு கொண்டு, நினைவினை
உயிருடன் ஒன்றி,
“அந்த
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஏங்கி,
அது எங்கள் உடல்
முழுவதும் படர்ந்து,
எங்கள் உடலிலுள்ள
ஜீவஅணுக்கள், ஜீவாத்மாக்கள்
பெற வேண்டும்”
என்று, உள் நினைவில் கண்களை மூடி
“நம்
உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும்
படர வேண்டும்” என்று செய்வதே,
கண்ணன் காட்டிய திருட்டு
வழி.
ஆக கண்ணன் காட்டிய
நிலைகள் கொண்டு, இந்த உணர்வுகளை (மகரிஷிகளின்) உள்
செலுத்தும்போது, அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்”. அந்த ஞானிகளின்
உணர்வுகளை நமக்குள் ஜீவன் செய்யப்படும்போது, ஜீவன் பெற்று வளர்ச்சியாகும் பொழுது,
நாம் ஒரு பொருளைப்
பாத்திரத்தில் போட்டு வேகவைக்கும் பொழுது,
அதனின் சத்து
கொதித்து,
அதனின் மணம்
வெளிவருவதைப் போன்று,
அந்த மணத்தின்
வீரியத் தன்மை
(ஞானிகளின் அருள்சக்தி)
உள் நின்று வெளி வருவதை,
நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை,
இது பிளக்கின்றது.
இப்போது, நாம் பிறருடைய
துயரமான உணர்வுகளை எண்ணி, நம் உடலுக்குள் சேர்க்கும்முன், நம் ஆன்மாவாக, மணமாக மாறுகின்றது.
அது மடிமேல்
ஆன்மாவாக இருந்தாலும், வரும் மகரிஷிகளின் உணர்வுகளை கண்ணின் நினைவு
கொண்டு, உயிருடன்
ஒன்றி “அந்த
மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்”, அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலில்
உள்ள ஜீவ அணுக்கள், ஜீவாத்மாக்கள் பெற வேண்டும்” என்று கண்ணான
கண்ணின் நினைவுகளை,
உள் செலுத்தப்படும்போது, நாம் எண்ணிய உணர்வுகள் “பிராணாயாமம்”.
அது ஜீவன் பெற்று, அந்த மணத்தின்
வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவதை, மடி மீது நம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது
பிளக்கின்றது.
நாராயணன் என்பது சூரியன், நரநாராயணன் என்பது உயிர்.
நமக்குள் பேரண்டத்தின் பெருநிலைகள் இருந்தாலும், உணர்வின் எண்ணங்களாக இயக்கி, நம்மை ஆண்டு கொண்டிருப்பது,
நரநாராயணன்.
ஆக, நமக்குள் இருக்கும் சர்வத்தையும்,
விண்ணில் பிறந்த நிலையும், ஜீவ அணுக்களாக உருவாக்கி
நம்மை உருப்பெறச் செய்து, அதனின் உணர்வின் நிலையாக, நம்மை இயக்கிக் கொண்டிருப்பதும், நரநாராயணான உயிர்,
ஆகவே, உயிரான அவன் வாசல்படி மீது அமர்ந்து,
மடி மீது அமர்த்திய இரண்யனைப் பிளந்தான் என்று எடுத்துரைக்கப்பட்டது.
இதுதான் கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு, அந்த அருள்
மகரிஷிகளின் நிலைகளை நாம் எண்ணும்போது,
உயிரான நிலைகள் “ஓ” பிரணவமாகி,
அந்த உணர்வின் சக்தி
பிரம்மாவாக
உடலுக்குள் அனைத்தையும்
இணைத்து, சிருஷ்டித்து
அதனின் ஜீவனாக ஓங்கி, விண்ணின் வீரிய சத்தாக,
உள்நின்று வெளிப்படும், இந்த உணர்வின் துணை கொண்டு,
நம் ஆன்மாவாக வளர்ந்திருக்கும்
இதைப் பிளந்து, தீமையை அகற்றி,
நாம் மகா ஞானிகளின் உணர்வை, நேர்முகமாக உள் சுவாசித்து, தீமையை அகற்றிய
நிலைகள் கொண்டு, நமக்குள் அந்த உணர்வின் தன்மையை ஓங்கி வளர்க்கும்
தன்மையைத்தான், நரசிம்ம அவதாரம் என்பது.
(பக்கம் 48-50)
நம்முடைய கண்ணின்
கூர்மையை, விண்ணை நோக்கிச்
செலுத்தி, அதனின் உணர்வை வியாசகர் காட்டிய, அருள் நெறியில் நாம் எண்ணுவோமென்றால்,
ஒரு ஆண்டெனா,
எவ்வாறு
தொலைக்காட்சி பெட்டிக்குத் தேவையான
அலைகளைக் கவர்ந்து
இழுத்துக் கொடுக்கின்றதோ,
இதைப்போன்று, நமக்குள் பதிவு செய்கின்ற உணர்வுக்குள்
நம் கண்கள்
“ஆண்டெனா"வாக இருந்து,
நாம் எண்ணிய உணர்வின் வலுக்கொண்டு,
அதனைக் கவர்ந்து, நமக்குள்
கொடுக்கின்றது.
நமக்குள், நாம் எதை எண்ணுகின்றோமோ, அதைப் பதிவு செய்து கொண்டபின்தான், மீண்டும் அதைத் திருப்பி எண்ணும்போது, அதன் செயலாக
வருகின்றது.
நாம் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்தால்தான்,
அந்தக் கண், நமக்குள்
ஊழ்வினையாகப் பதிவு செய்து,
அந்த நினைவின் ஆற்றலை, அது நமக்குள் காட்டும்.
அதன் வழித்துணை கொண்டுதான்,
நாம் செயல்படுத்த முடியும்,
என்று குருநாதர் காட்டிய சாரத்தை,
நீங்களும் அறிந்து கொள்வது நலமே என்று யாம் உபதேசிப்பது.
நீங்கள் நன்மை செய்த நிலைக்குள், மறைந்திருந்து உங்களுக்குள் தீமைகளை விளைவிக்கும், அதிலிருந்து நீங்கள் விடுபட்டு, உங்களை மனிதனாக உருவாக்கிய நற்குணங்களைக் காத்திட, இன்றும் மகரிஷிகள் கண்டுணர்ந்த அருள் வழியில், ஆறாவது அறிவின் துணைகொண்டு, பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.
மாற்றியமைக்கும் சக்தி கொண்ட ஆறாவது அறிவின் துணை கொண்டு, ‘அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்’ என்று கண் காட்டிய, வியாசகர் காட்டிய, அருள் வழியின் துணை கொண்டு, கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றி, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி, நம் உடலுக்குள் அதைச் செலுத்தும்பொழுது, தீமைகளை அகற்றிவிட்டு, தீமையை அகற்றிடும் சக்தியாக விளைகின்றது.
இரண்டு தாவரத்தின்
சாரத்தை (சத்தை) ஒருங்கிணைத்து, நாம் ஒரு ஒட்டுச் செடியின் தன்மையாக, அது
இணக்கப்படும்போது, அதனின் வீரிய சக்திகள் இணைகின்றது.
இதைப்போன்று.
நமக்குள் அருள்ஞானியின் வித்துகளை நல்ல குணத்துடன் இணைக்கும் வகையில், இது
உபதேசிக்கும்போது, கேட்டுணர்ந்து, நுகர்ந்த உணர்வுகள், உங்கள் நல்ல குணத்தைக் காத்திடும் நிலையாக, அருள் ஞானியின் வித்தைப் பதிவு
செய்வதற்கே, இந்த உபதேசம்.
இதனின் நினைவுகொண்டு, இதைப் பெறவேண்டும் என்று எண்ணும்போது, கண்ணின்
நினைவிற்கே வரும்.
அந்த நினைவின்
துணைகொண்டு, உயிருடன்
தொடர் கொண்டு, அந்த
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அந்த உணர்வின்
தன்மை, உங்கள் உடலுக்குள்
படர்ந்து, தீமையை அகற்றிடும் அருள் சக்தியாக, அந்த நல்ல உணர்வுடன் கலக்கின்றது. இதற்குப் பெயர்தான், நரசிம்ம
அவதாரம் என்பது.
மனித வாழ்க்கையில், தீமைகள் நமக்குள் சேராது, உயிரின் துணை கொண்டு, ஆறாவது அறிவின் துணை கொண்டு, அருள் ஞானிகளின் உணர்வை, நமக்குள் இணைத்தால்தான், பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன். (நம்முடைய சிருஷ்டிக்கும் தன்மைகள்)
இன்று மனிதனாக இருக்கும் நாம், மற்ற தாவர இனங்களை இணைத்து, புதுப் புதுச் செடிகளாக உருவாக்குகின்றோம். இது ஆறாவது அறிவுதான். ஆகவே, ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையும் சந்தர்ப்பம், பிரணவம், பிரம்மம், பிரம்மா என்பது பரப்பிரம்மம்.
ஆகவே, மனிதன் ஆறாவது அறிவு கொண்டு ஒரு உயர்ந்த எண்ணத்தைத் தனக்குள் சேர்த்து, தான் இணைக்கப்படும் போது, இது பிரம்மம். இது பிரம்மாவை சிறை பிடித்தான்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, நாம் உருப்பெறும் சக்தி திறன் பெற்றது. ஆகவே மனிதன் தீயதை நீக்கி, நல்லதை உருப்பெறச் செய்யும் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு, அருள்ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கும் பொழுது, அது மெய்ப்பொருளின் நிலையை நமக்குள் வளர்த்திடும்.
வெளிச்சம், தனக்குள் இருக்கக்கூடிய பொருளைக் காண்பிக்கின்றது. இதே போன்று, நமக்குள் தீது எது? தீதை அகற்றிடும் நிலை எது? என்ற நிலையைக் கண்டுணரும் செயல்தான், “மெய்ப்பொருள்” என்பது.
(பக்கம் 52-54)
உதாரணமாக, ஒருவன் நம்மைக் கெடுத்து விடுவேன் என்று சொன்னால், அவன்
சொல்லை நாம் பதிவு செய்து கொண்டு,
“என்னை இப்படிப் பேசினானே, பேசினானே”
என்று அவனின் நிலையைக் கூர்மையாக எண்ணி, அவனின் நிலையை நம் உடலுக்குள்
சேர்த்த பின், அவன், நாம் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணினானோ, அந்த உணர்வின்
தன்மையை நமக்குள் எடுத்து, அதே வினையாகச் சேர்த்து, நமக்குள் துன்புறும் உணர்வுகள்
விளைகின்றன.
அவன் எண்ணியபடி, நம் மனம்
மாறுகின்றது.
அதன்வழி நமக்குள் வரும்
பொழுது,
“இவன் என்னை இவ்வாறு சொன்னான்,
சொன்னான்” என்று
அவன் உணர்வை, நமக்குள்
வளர்த்துக் கொண்டு,
அவன் உடலில் விளைந்த உணர்வுகள், நம் உடலுக்குள் விளைந்தபின், “ஒருவன் கெட்டுப் போக வேண்டும்”
என்ற உணர்வுகள், நமக்குள்
உள்ள நல்ல உணர்வுகளைக் கெடச் செய்து, அவன் நிலைக்கு, நாம் ஆளாகின்றோம்.
நாம் இந்த உடல் நலிந்த பின், இறக்கப்படும் போது அவனுடைய நிலைகள்
வந்து, அவருடைய உயிரான்மா கண்ணன் காட்டிய வழி கொண்டு, அவன் செய்த தீயதை நாம் மீண்டும்
எண்ணும்போது, “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்”.
அவன் தீயதை விளைவித்ததின் தன்மையை நீங்காது, அவனின் நினைவு கொண்டு
நாம் வருவோமென்றால், அந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்காகி, அவன் சொன்ன சிரமங்கள், நமக்குள்
விளைந்து, இந்த உடல் நலிந்து, அவன் நினைவு கூடி, இந்த உடலை விட்டு, உயிரான்மா பிரிந்தால்,
அவன் யாரைச் சொன்னானோ, அங்கே பழி தீர்க்கும் உணர்வுடன் சென்று, இதே உணர்வு அங்கே விளைந்து,
அவனையும் வீழ்த்தி விடும்.
ஆகவே கீதையில் “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” இதுவும் கூர்மை
அவதாரம்தான். அவன் செய்த தீய உணர்வின் நிலையை நாம் கூர்மையாக எண்ணி, அந்த உணர்வின்
சக்தியை நமக்குள் வளர்த்துக் கொண்டால்,
அவனின் உணர்வு நமக்குள் வலுப்பெற்று,
அதனின் உணர்வு நமக்குள் ஓங்கி வளர்ந்து,
இந்த உடலைவிட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா,
அவனின் மணம் கொண்ட ஈர்ப்பு வட்டத்துக்குள் சிக்கி,
அவனின் பழி தீர்க்கும் உணர்வை
அவனுடைய உடலில் விளைவித்து, அவனையும் வீழ்த்தும்.
இதைத்தான் “ஓம் நமச் சிவாய, சிவாய நம ஓம்” என்று சொல்லுகின்றோம்.
திரும்பத் திரும்ப எண்ணிய உணர்வின் தன்மை சிவமானாலும், சிவத்திற்குள்
சக்தியாக இயங்கி, எதனின் மணமோ அதனின் நிலைகள் கொண்டு, மீண்டும் இயங்கி, அது மீண்டும்
மீண்டும் தனக்குள் எதனைச் சேர்க்கின்றோமோ, அதனின் நிலைகள் கொண்டு மாறிக் கொண்டேயிருக்கும்.
அதைத்தான் கீதையில் “எதை நீ நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்!” என்று எடுத்துரைக்கப்பட்டது.
இதைப் போன்று உயிரினங்கள் தன்னைக் காத்திட, தன்னைக் காட்டிலும்
உயர்ந்த நிலைகள் கொண்டு, அதனின் உணர்வை நுகர்ந்து, பரிணாம வளர்ச்சியை அடைந்து, எதனையும்
காத்திடும் உடலாகப் பெற்றது.
அவ்வாறு பரிணாம வளர்ச்சி அடையச் செய்த,
இந்த உயிரின் துணை கொண்டு,
தீமையை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி,
ஒளிச்சரீரமாக நின்று, என்றும் பதினாறு என்ற நிலையில்
வாழ்ந்துக் கொண்டிருக்கும், அருள் ஞானியின் உணர்வை,
இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளைத் தகர்த்திட,
அது நமக்குள் நிலைத்திடாது தடுத்திட,
அருள் ஞானியின் உணர்வின் தன்மையை
கீதையிலே, கண்ணன் காட்டிய அருள் நெறி கொண்டு, அந்த மகரிஷிகளின்
அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று நம்முள் உட்செலுத்தி, இந்தத் தீமைகளைத் துடைக்க
எண்ணினால், தீமைகள் நமக்குள் வராது.
நாம்
எண்ணிய கூர்மையின் நிலைகள், இந்த வாழ்க்கையிலே, தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள்
ஓங்கி வளர்ந்து,
அந்த அருள் ஞானியின் சக்தி நமக்குள் வந்து, இந்தக் கூர்மையான நிலைகள் நமக்குள் வலுப்பெறுகின்றது.
(பக்கம் 54-58)
உருவமாக இருப்பது அனைத்தும் “துவைதம்” என்றும், மறைமுகமாக இருப்பது
அனைத்தும் சூட்சமம் என்ற நிலையில், “அத்வைதம்” என்றும் பெயரிடுகின்றனர், ஞானிகள்.
அத்வைதத்தில் இருக்கக் கூடிய நிலைகள், சூட்சமச் செயல்களாக இருப்பதால்,
அதனைப் பார்க்க முடியவில்லை.
ஒரு மாங்கனி, இனிப்பின் சுவை கொண்டது.
அதனைப் பார்க்கும்போது
“துவைதம்’
அந்த மாங்கனிக்குள், இனிமையான நிலைகள் வரும்போது,
அந்த உணர்வின் சக்தி நமக்குள்
படும்போது, அது “அத்வைதம்”.
அந்த உணர்வின் சக்தி, ஜீவன் பெற்று உடலாகும்போது “துவைதம்”,
இதைப் போன்றுதான், மெய்ப்பொருளைக் கண்டுணரும் நிலைகள் கொண்டு, கண்ணுற்றுப்
பார்க்கும் நிலையை, மறைந்த நிலைகள் கொண்டு, தான் உறைந்த நிலைகள் ஆவது “துவைதம்”. மறைந்திருக்கும்
உணர்வில் நல்லுணர்வை நாம் எடுத்து, அந்த உணர்வின் சக்தி நமக்குள் உறையச் செய்யும்போது,
அது “துவைதம்”.
சூட்சம நிலைகள் கொண்ட அத்வைதத்தை,
நமக்குள் துவைதம் ஆக்கி,
மறைமுகமாக இருக்கும் நிலைகளின் செயலாற்றல்
எவ்வாறு இந்த உணர்வுகள் செயல்படுகின்றது? என்றும்
அங்கங்களை உருவாக்கி, அதனின் செயலின் எண்ணங்களை,
அது உருவாக்கி, இதை எண்ணும்போது, இதன் உருவ நிலைகள்
எவ்வாறு எண்ணுகின்றாய் என்ற இந்த நிலையை
நமக்கு உணர்த்துவதற்குத்தான்,
சாதாரண மக்களும் அறியமுடியாது
மறைந்திருக்கும் இந்தச் சக்தியை, சிலையைக் கண்ணுற்றுப் பார்க்கும்போது,
கதைகளாக எழுதி, அந்த மெய்ஞானியின் உணர்வுகளை, அவர் காட்டிய நிலைகளில் நாம் எண்ணி,
சூட்சம
நிலைகளில் மறைந்திருக்கும்,
அந்த
சூட்சம உணர்வின் நிலையை, நாம் நுகர்ந்து,
உயிருக்குள் உராய்ந்து
உணர்வை அறிந்தாலும்,
உணர்வின் சத்து, நமது உடல் ஆக்கப்படும் போது,
எதை மகிழ்ச்சியூட்டும் என்று எண்ணுகின்றோமோ,
அது நமக்குள் ஜீவனாக்கி, நம் உடலாக மாற்றுகின்றது.
அதனின் நிலை பெறச் செய்வதற்குத்தான்,
அந்த மகாஞானிகள், இதை “அத்வைதம்”, “துவைதம்” என்று சொன்னார்கள்.
அக்காலத்தில், அரசர்களுடைய நிலைகள் துவைதக் கொள்கையாக இருந்தது.
ஆகையால், ஆதிசங்கரர் மீது மந்திர ஒலிகளை ஏவி, அவருக்கு வயிற்று வலியை உருவாக்கினர்.
“நீ விநாயகருக்கு யாகங்கள் செய்தால், உன் வயிற்று வலி நீங்கும்”
என்றும் கூறினார்கள்.
அப்போது ஆதிசங்கரர், “இதுவல்ல உண்மையான யாகம்.
நமக்குள் இருக்கும் உயிரான
நெருப்புக்குள் அந்த அருள் ஞானியின் உணர்வைச் செலுத்துவதே உண்மையான யாகம்.
என்னை இயக்கிக் கொண்டிருக்கும்,
எனக்குள் ஜீவன் பெறச் செய்து கொண்டிருக்கும்
என் உயிரான நெருப்புக்குள்,
அந்த மகாஞானியின் உணர்வைச் செலுத்துவேனென்றால்
என் உடலுக்குள் நீங்கள் ஏற்படுத்திய
தீமையின் விளைவை மாற்றிக் கொள்ள முடியும்”.
நீ புறத் தீயிட்டு, அதில் பொருளைப் போட்டு,
அதனில் வரும் கருகிய மணத்தை நுகர்ந்தால்
எனக்குள் அது வராது.
ஆகவே, தீமையை அகற்றிடும், தீமையை அகற்றிட்ட
அந்த
மெய்ஞானியின் உணர்வை
என்
உயிரான நெருப்புக்குள் போட்டு,
அந்த உணர்வின் தன்மையை
அலைகளாகப் பாய்ச்சும்போது,
எனக்குள் விளைந்த தீதினை,
என்னால் அகற்றிட முடியும் என்று, செய்து காட்டினார், ஆதிசங்கரர்.
இந்த துவைதவாதிகள், எமக்கு அது இல்லை என்றனர். பின் ஆதிசங்கரர்
கங்கைக்கரை சென்றவர்தான். அதற்குப்பின் அவர் சரித்திரம் இல்லை.
ஆனால், அவருக்குப்பின் அரசர்கள் துவைதம் என்ற நிலைகளிலேயே, யாக
கேள்விகள் போன்ற முறைகளிலேயே, அரசாட்சி செய்து வந்தனர். உண்மையில், ஒவ்வொறு மனிதனையும்
கடவுளாக மதி என்றும், அதனின் உணர்வுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொன்ன, ஆதிசங்கரருடைய
நிலைகள் மாறிவிட்டது.
அவரது இறுதிக் காலம் எப்படிப்பட்டது? எங்கே சென்றார்? எங்கே இருந்தார்?
என்பது யாருக்கும் தெரியவில்லை. சரித்திரத்தைச் சொல்லச் சொல்லுங்கள். அவருடைய சீடர்களாக இருப்பவர்கள்,
இன்று அந்த உண்மையான நிலைகளை, ஏன் மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை?
அன்று இந்த மக்களுடைய நிலைகளை, “அறியாது தீது விளைவிக்கும் அரச நிலைகளிலிருந்து, மக்களை நீ மனிதனாக்கு,
அந்த மனிதனை முழுமையாக்கு” என்று, அன்று சொன்னாரே ஆதிசங்கரர். அதனுடைய நல்ல உணர்வின் தன்மையை,
ஏன் பிறரைப் பருகச் செய்யவில்லை?
இன்று ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். அதில் பூஜிக்க வரும் மக்களிடம்,
காசு வாங்கிப் பிழைப்பேன் என்ற நிலைகளில்தான் ஒவ்வொருவரும் செய்து வருகின்றார்களே தவிர,
அங்கே வருபவர்கள் நன்மை பெறுவார் என்ற நிலைகள், யாருக்கும் இல்லை.
நீங்கள் நன்மை பெறுவீர்கள் என்று ஆசையை ஊட்டி,
அதனின் மறைவிலே காசைத்தேடி,
உண்மையுடைய நிலைகளை மறைக்க முடிகின்றதே தவிர,
மறைந்த பொருளை நாம் கண்டுணர்ந்து,
நம்மையறியாது தீது விளைவிக்கும்
நிலைகளிலிருந்து,
காத்துக் கொள்ள முடிகின்றதா? என்றால் அது இல்லை.
இன்றும், விஞ்ஞான உலகில் மனித உணர்வு அனைத்திலும், அழிந்திடும்
வெறித்தன்மையைத்தான் ஊட்டுகின்றார்கள்.
ஆனால், “மக்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்”, ஒவ்வொரு மனிதனும்,
அவன் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும், அவர்கள் உயர்ந்த குணங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை,
நாம் நமக்குள் வளர்த்துக் கொண்டால், நாம் அதுவாகின்றோம். அவனையும் அதுவாக்க வேண்டும்.
இந்த உணர்வின் தன்மையை நாம் பரப்பப்படும் பொழுது, உடலில் வரும் தீதினை நீக்கிவிட முடியும்.
ஆகவே, “மனிதா,
நீ ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயங்கும்
உயிரைக் கடவுளாக மதி” என்ற நிலையும்,
அங்கே கடவுள் வீற்றிருக்கும் ஆலயம்,
அது புனிதம் பெறவேண்டும் என்றும்,
“எந்த மனிதன் இங்கே தீது செய்கின்றானோ,
அந்த உணர்வு அவர் அறியாது உட்புகுந்து, தீதினை விளைவிக்கும்
அந்த நிலை, ஆலயத்தை மாசுபடுத்தும் நிலையும்,
அங்கு ஆண்டு கொண்டிருக்கும்
உயிரான ஈசனுக்கு
தீதான மணங்கள் சேர்ப்பிக்கும்
நிலையிலிருந்தும்,
அதைத்
துடைத்திடும் நோக்கமாக,
நீ
இவ்வாறு செய்”
என்று
அந்த
மகாஞானி ஆதிசங்கரர் சொன்னார்.
(பக்கம் 59-63)
நம் உயிராக நின்று இயக்கிக் கொண்டும், ஆண்டு கொண்டும் இருக்கும்
உயிரே கடவுள். நமக்குள் எண்ணும் எண்ணங்கள், மறைந்திருக்கும் நிலைகள் எதுவோ, அதை நமக்குள்
ஜீவனாக்கி, உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இறையாக்கி, இறையின் செயலாக, அந்தச் செயலின்
நற்குணங்கள் தெய்வமாக நமக்குள் இயங்குகின்றது என்ற நிலையை, மெய்ப்பொருளைக் கண்டுணரும்
செயலாக அன்று மெய்ஞானிகள் காட்டி, அதை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் நிலையாகத்தான் சிலைகள்
வைத்தார்கள்.
இன்றும், (காசிக் கரையில்) ஆதிசங்கரர் மேல், அந்த விநாயகர் நிலைகள்
ஏவப்பட்டு, அதையும் தன் தத்துவ ஞானத்தால், அந்த உணர்வின் தன்மை தனக்குள் சுவாசித்து,
நிரூபித்த இடம், காசியில் கங்கைக் கரையில் உண்டு.
நாம் யாரும் தவறு செய்யவில்லை என்றாலும், நமக்குள் முந்தைய நிலைகளில்,
தான் வாழ்ந்திட, எந்த வகையிலும் உண்மையை நாம் மறந்திட்ட நிலைகளிலிருந்து, உண்மையைக்
காணும் வகையிலேதான், இன்று பக்தியும், மற்ற நெறிகளையும், கடைப்பிடித்து நாம் செல்கின்றோம்.
ஆனால், உண்மையைக் காணும்
நிலைகளிலிருந்து,
அந்த
ஞானிகள் சொன்ன உண்மையைத்தான்,
யாம் உங்களிடம் சொல்கின்றோம்.
இந்த உண்மையை நீங்கள் எடுத்து, அந்த உணர்வின் செயலாக உங்கள் உடலாக்கி,
உடலான உணர்வுகள், எண்ணங்கள் நல்லதைச் செய்விக்கும் உணர்வாக, உங்களுக்குள் செயலாக்க
வேண்டும்.
அவ்வாறு செயலாக்கி, விண்ணை நோக்கிச் சென்ற அந்த நல்வினையின் தன்மையை
ஒளியாக மாற்றிச் சென்ற, அந்த நல்வினையின் தன்மையை நமக்குள் சேர்த்து, இந்த உடலை விட்டுச்
சென்ற, உயிருடன் ஒன்றி, உணர்வின் செயல் ஒளிச் சரீரமாக, என்றும் அழியாச் சரீரமாக பெருவீடு
பெருநிலை என்று அடைந்த, அந்த அருள் ஞானியின் உணர்வுகள், நமக்குள் அது பெருவீடாக, என்றும் பதினாறு என்ற நிலையை அடையச் செய்யும் அந்த மாற்றங்கள்தான், இன்று இருக்கும் ஆலயங்கள்.
நமக்குள், பிறரையும் வாழவைக்கும் இந்தத் தெய்வநிலைகள் பெறவேண்டும்.
மற்றவர்களை நாம் எந்த நிலைகள் பெறச் செய்யவேண்டும் என்று, அந்த ஞானிகள் கற்பித்த நிலைகள், நம் எண்ணத்தால் அதைப் படைக்கும்
சக்தியை விடுத்து, புறநிலைகளில் ஆசை காட்டிப் புறநிலைகளுக்கே, நம்மை அழைத்துச்
செல்கின்றனர்.
இது முறையற்ற நிலைகள் என்று தெரிந்தும், அதைச் செயலாக்க, இன்றைக்கும்
அந்த யாகம் செய்யவில்லை என்றால், நமக்கு ஏதோ குறை வந்துவிடுமோ, என்ற நிலையில் உள்ளவரும்
உண்டு.
ஆகையினால், யாரும் பிழை செய்யவில்லை. எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ,
அதன் உணர்வாக இயக்குகின்றது. இந்த உணர்வை மாற்றியமைத்து, இந்த ஆலயங்களை அமைத்துக் காட்டிய,
அந்த மெய்ஞானியின் உணர்வுகளை, நாம் பெற வேண்டும் என்று எண்ணினால், அந்த உணர்வின் ஆற்றல்,
நமக்குள் மறைந்திருக்கும்,
உண்மையான நிலைகளை உணர்த்தும்.
அதன் வழியில், (மெய்ஞானியின் உணர்வின் ஆற்றல், நமக்குள் மறைந்திருக்கும்
உண்மையான நிலைகளை உணர்த்தும் வழியில்) மெய்ஞானியின் உணர்வின் ஆற்றலைப் பெற்று, நம்மையறியாது
நமக்குள் சேர்ந்த தீய வினைகளை நீக்கிட முடியும்.
ஆகையினாலே, கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும் ஊழ்வினையாக இப்போது பதிவு
செய்தது, உங்களையறியாது எப்போது உங்களுடைய நல்ல உணர்களை மறைக்கும் காலம் வருகின்றதோ,
அப்போதெல்லாம், உங்கள் உயிரான ஈசனை வேண்டி, ‘அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள்
பெற வேண்டும். மெய் பொருளைக் காணும் அந்த நிலைகள் பெற வேண்டும். நாங்கள் பார்ப்பது
நலம் பெற வேண்டும்’ என்ற எண்ணத்தை எடுக்க வேண்டும்.
பின் ‘எங்களைப் பார்ப்பவருக்கு, நல்ல மனம் பெற வேண்டும். எங்கள்
சொல்லைக் கேட்போர், இனிமை பெற வேண்டும். அவர் வாழ்விலே இனிய நிலைகள் கொண்டு வாழ வேண்டும்’
என்று இதைக் கடைபிடிக்க வேண்டும்.
நமக்குள், எத்தனையோ கோடி நல்ல குணங்கள் உண்டு. தீமை விளைவிக்கும்
குணங்களும் உண்டு. அந்தத் தீமை விளைவிக்கும் குணங்களுக்கு இடம் கொடாது, அந்த அருள்
ஞானியுடைய உணர்வுகள், எங்களுக்குள் வளர வேண்டும் என்று எண்ணும்போது, நமக்குள் தீயது
அனைத்தும் ஒடுங்கி, அந்த ஞானியின் உணர்வுகள் ஓங்கி வளரச் செய்வதே, மனிதனின் ஆறாவது
அறிவு.
நாம் ஒரு குழம்பு வைப்போம். சமைக்கும்போது, உப்பு அதிகமாகிவிட்டால்,
அடுத்துச் சமைக்கும்போது, உப்பைக் குறைத்துப் போட வேண்டும் என்று எண்ணுகின்றோம். இதைப்
போன்று,
இன்று எண்ணும்போது, கோபமான
செயல் வந்து,
காரமான உணர்வைக் கொண்டு,
கோபமாகப் பேசிவிட்டால்,
நாளை,
இந்தக் கார குணங்களைக் குறைத்து,
சமப்படுத்தும் நிலைகளும்,
சுவை மிக்கதாக,
நம் சொல்லின் தன்மை அமைய
வேண்டும்
என்று எண்ண வேண்டும்.
இன்று குழம்பு வைக்கும்போது
ஒரு மிளகாய் அதிகமாகப் போட்டுவிட்டால்,
இது காரம் என்று தெரிந்து கொள்கின்றோம்.
நாளை இரண்டு மிளகாயைக் குறைத்துக்
குழம்பைச் சுவை மிக்கதாக, வைக்கின்றோம்.
இதே போன்று, மனித வாழ்க்கையில் நம்மையறியாது பிறருடைய கோப உணர்வுகளைத்
தூண்டி, எரிச்சலூட்டும் செயலாகச் செய்தாலும், எரிச்சலூட்டும் உணர்வுகள், நமக்குள் சென்று,
நம் உடலிலும் எரிச்சலூட்டும் செயலாக நடக்கின்றது. நம் சொல்லைக் கேட்போரின் உணர்வுகளில், எரிச்சலூட்டும் செயலாக்கும்
போது, நம்மை வெறுக்கும் நிலை
வருகின்றது.
இந்த எரிச்சலூட்டும் உணர்வின் நிலைகளை, நாம் தணிக்க “ஈஸ்வரா” என்று
நம் உயிரை வேண்டி, அந்த ஞானியுடைய நிலைகளை “மகரிஷிகள் அருள் ஒளி பெற வேண்டும்” என்றும்
‘அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்’ என்றும், ‘நாளை எங்கள் செயல் அனைத்தும்,
சுவை கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.
காரத்தை நாம் குழம்புக்குள் போட்டவுடனே, சமப்படுத்தும் நிலை வரும்போது
சுவையாகின்றது. சிறிது காரத்தைக்
கூட்டினால், அந்தக்
குழம்புடன், நாம் சிறிது உணவினை அதிகமாகச் சேர்ப்பதன் மூலம், காரத்தைக் குறைத்துக் கொள்கின்றோம்.
இதைப் போன்று, நமக்குள் உயர்ந்த குணங்கள் இருந்தாலும், கார உணர்ச்சிகள்
கொண்டு வந்தால், நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை வெறுத்து, நம் சொற்கள் கார உணர்ச்சிகளைத்
தூண்டும் சொல்லாகவே இருக்கின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து,
நாம் “நாளை நடப்பவைகள், நல்லவைகளாக
இருக்க வேண்டும்.
தீமைகள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் எனக்குள் வளர வேண்டும்” என்று நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும்
ஈசனிடம் வேண்டி,
அந்த ஞானியால் விளைந்த
நிலைகளை
நமக்குள் சமப்படுத்தும்
நிலைகளாக, ஆக்கிக் கொள்ள வேண்டும்.
நாம் குழம்புக்குள் காரம் அளவாகப் போட்டு, அக்குழம்பினைச் சுவை
மிக்கதாக ஆக்கி, சுவை கொண்ட நிலையும், மகிழ்ச்சியூட்டும் உணர்வாக, நாம் உணவை உட்கொள்ளும்போது
மகிழ்கின்றோம்.
அதைப் போன்று, நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும், அது இனிமையைக்
கூட்டும் நிலையும், நண்பனாகக் கூட்டிச் சேர்க்கும் நிலைகளும், நமக்கும் தீயது வராது
தடுக்கும் நிலைகளும், மகிழ்ச்சியின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து, அந்த மெய்யுணர்வின்
தன்மையைப் பெறும் தகுதியை, நாம் பெறுவோம்.
(பக்கம் 66-68)
நாம் அனைவரும், அந்த மகரிஷிகளின்
அருள்வட்டத்தில் கலந்து, நம்மையறியாது சேர்ந்த தீமைகள் நீங்கி, நம்முடைய மூச்சும், பேச்சும் உலக
நன்மை பயக்கும் சக்தியாக, நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் தீமையை
அடக்கும் சக்தியாகவும், நன்மை பயக்கும் சொல்லாகவும், செயலாகவும், நமக்குள் வளரவேண்டும்.
நம்முடைய உணர்வுகள், எண்ணங்கள் அனைத்தும்,
உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும்,
சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும்,
அது வளர்ந்திட வேண்டும்.
அந்த மெய்ஞானியின்
உணர்வுகள், அவர்கள்
எல்லோரும் எவ்வாறு அனைத்தும் உணர்ந்து, உறவாடினார்களோ, அதைப்போன்று நம் உணர்வுகள் அனைத்தும், வெளியிடும்
அனைத்து உணர்வுகளும், நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளும்,
நமக்குள் ஆகாத
உணர்வுகள் வந்தாலும்,
சகோதர
உணர்ச்சியுடன் ஒன்றுபட்டு, சேர்த்து,
தீமையற்ற நிலையாக
வளரும் நாம்,
தனித்த சரீரங்களாக இருந்தாலும்,
சகோதர
உணர்வுகளுடன் வாழ்ந்திடும் உணர்வாக,
நாம் இடும்
மூச்சலைகள், இங்கே
படர்ந்து
அதன் வழிகளில், நம் பூமியான பரமாத்மாவும்,
அது பரிசுத்தப்படும் நிலைகள் ஏற்படும்.
இந்தப் பரமாத்மாவில் இருந்து, நுகர்ந்து
எடுக்கும் அனைத்து உயிரான மக்களும், அந்த
மெய்வழி பெறும் நிலைகள் ஏற்படும்.
நாம் எந்தத் தாவர இனச்சத்தை நுகர்ந்து, உணவாக உட்கொண்டு, உடலாக ஆனோமோ, இந்த மனித
உடலுக்குள் எண்ணிய உயர்ந்த எண்ணங்கள், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து, நாம் எந்த
உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொண்டோமோ, நாம் அதை உணவாக்கியபின், நம்
உணர்வின் எண்ண அலைகள் படர்ந்து, நாம்
செல்லும் இடங்களில் பரவியுள்ள, நஞ்சு கொண்ட உணர்வுகளைத்
தாக்கி, நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது, மனிதனை
வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.
ஆக இதைப்போன்ற
நிலைகளிலிருந்து, நீங்களிடும் மூச்சலைகள்,
இன்று தாவர இனச்சத்தும் சத்தான நிலைகளில்
வளர்ந்து,
அந்த உணர்வின்
தன்மையை,
உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும்,
மெய் உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியாக,
உங்களுடைய மூச்சுகள் அமையவேண்டும் என்றும்,
கேட்டுணர்ந்த உணர்வுகள் இது படர்ந்து,
மெய் உலகைப் படைக்கும்
உணர்வாக
உங்களுக்குள் விளைந்து,
நீங்கள் இடும் மூச்சலைகள்
உலகில் உள்ள தீமையான நிலைகளை நீக்கி,
மெய் உணர்வைப் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று,
எல்லாம் வல்ல
குருநாதர் அருள் வழியில்,
அந்த
மெய்ஞானியின் அருள் வட்டத்திற்குள்,
உங்கள் எண்ணங்கள்
சென்று,
அதன் வழிகளிலே
தீமையை நீக்கி,
நல் உணர்வான, நல்வினைகளைச் சேர்த்து,
நல்வினைக்கு உடல்
அமைத்து,
அது, வினைக்கு நாயகனாக, மெய்ப்பொருள் கண்டுணர்ந்த,
அந்த மெய்ஞானியின்
அருள்வட்டத்தில்,
நாம் அனைவரும் என்றும் நிலையான “பெருவீடு பெருநிலை” என்ற நிலையடைந்து, வளர்ந்து, அதைப் போன்று, என்றும் மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.
இன்றைய நிலையில், நம் பூமியில் வாழும் உயிரினங்கள்,
மிருகங்களிலிருந்து, மனிதன் வளர மிகவும் சிரமமான நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
காற்று மண்டலமோ, நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.
அதே சமயம், மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும்
சிந்தனையற்ற நிலைகள் கொண்டு, மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வுகள் இங்கே படர்ந்து
கொண்டிருக்கின்றது. இத்தகைய உணர்விலிருந்து, நாம் மீள வேண்டும்.
நமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், எமக்கு உணர்த்க்தியருளிய அருள் வழியை,
நீங்களும் பெற வேண்டுமென்ற இந்த ஆசையினால்தான், நம் குருநாதர் காண்பித்தருளிய
உணர்வுகளை, உங்களுக்குள்ளும் விளையச் செய்து, அதை நீங்கள் எண்ணும் பொழுது, அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற்று, உங்களை
அறியாது புகுந்த தீமைகளை நீக்கி, நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும் என்று
பிரார்த்திக்க, நாம் அதனின் சத்தை, ஒருங்கிணைந்து விளையும் சத்தாகச் செயல்படுவோம்.