சாமி புத்தகம் – அகத்தியர் 1
24.07.2011 (பக்கம் 6-11)
இந்த பூமிக்குள், பல கோடி மனிதர்கள் நாம் எப்படி சுழன்று கொண்டுள்ளோமோ, அதே போல் விண்வெளிகளில்
மனிதனாகி, உயிரின் ஒளியை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள், சப்தரிஷி மண்டலமாக ஒளி சரீரம் கொண்டு பேரண்டத்தில் விளையும், ஆற்றல் மிக்க சக்தியின் தன்மையை தான் அடக்கி, அந்த உணர்வின் ஆற்றலை ஒளியாக
மாற்றி விண்ணுலகைப் படைக்கவல்ல
அணுவின் சிதறல்கள், அவர்களுடைய மூச்சலைகளின் தன்மைகள் விண்வெளியில்
படர்ந்து கொண்டிருக்கின்றது.
இதைத்தான் நம் சாஸ்திர விதிகள் மறைமுகமாக முப்பத்து முக்கோடி தேவாதிதேவர்கள் என்று சொல்கின்றது. அவ்வாறு ஆற்றல்
பெற்ற, அந்த மகரிஷிகளின் அருள் ஒளி, நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கிறது.
அதை, நமது குருநாதர் ஈஸ்வராய குருதேதேவர், அவர் காட்டிய அணுவுக்குள்
அணுவின் தன்மையும், மகரிஷிகள் எவ்வறு அந்த அணுவின் தன்மை பெற்றார்கள்? என்று அதை எனக்கு உணர்த்தச் செய்து, அந்த உணர்வின் அருள் ஒளியை எமக்குள் பதியச் செய்தார்.
அவர்கள் பெற்ற ஆற்றலின் துணை கொண்டு அந்த உணர்வின் சக்தியை உணர்ந்து, அந்த உணர்வின் அணு அலைகளை, நாம் எப்படி “tape” ல் பதிவு செய்து அந்த உணர்வைப் பரப்பியபின், அந்த உணர்வின் ஒளி அலைகளை, நாம் கேட்டு உணர்கின்றோமோ, இதைப் போன்று மனிதனுக்குள், இந்த ஈர்ப்பின் தன்மைகள் பதிவாகி, அது இயக்கச் சகதியாக
மாற்றப்படும்போது, நாம் எப்படி ஒரு வித்தை பூமியிலே பதியச் செய்தபின், சரியாக நீர் ஊற்றினால், அது காற்றிலிருந்து தன் இனமான சக்தியை எடுத்து, தாவர இனங்கள் வளருகின்றது.
இதைப் போன்றுதான், ஒரு மனிதனுக்குள் எக்குணத்தின் தன்மையை நாம் பதிவு
செய்கின்றோமோ, அந்த பதிவின் உணர்வுகளில், நமக்குள் வித்தாக செயல்படுத்தும்போது, அதன் ஆற்றலின் சக்தியைக் காற்றிலிருந்து நுகர்ந்து, அந்த
உணர்வின் சக்தியை அமிலமாக மாற்றி, அந்த அமிலங்கள் நம் உடலுக்குள் இணைந்து, தசைகளாக மாறி, அந்த தசைகளுக்குள் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் அணு செல்கள் விளைகின்றது.
ஒரு வித்தைப் போட்டால் எப்படி தன் இனத்தினுடைய தன்மையை விருத்தி செய்கின்றதோ, அதைப் போன்று ஒரு வித்தின் ஆற்றல் நமக்குள் பதிவு பெற்றவுடன், அந்த மகரிஷிகளின் எண்ண உணர்வின் அலைகளை நமக்குள் பதிவு செய்யும்பொழுது, அந்த எண்ணத்தை இயக்கக்கூடிய அந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள்,
எத்தனை கோடி
ஆண்டுகள்
அவர் ஜெபம் பண்ணிய
சரீரங்களில் வந்தாலும்
அந்த ஆற்றல் மிக்க
அணுவாக
அவர் உணர்வுகளில் ஒளிகளிலே வெளிப்படும்போது,
அவருடைய
உடலிலிருந்து, இயற்கையிலே
தான் வளர்த்த
உண்மையின் சக்தியை உணர்வாக,
ஒளியாக
வெளிப்படுத்திய, அந்த உணர்வின் அலையும்,
அந்தக் காலங்களில் அவர்கள் வெளிட்ட
மூச்சின் அலைகள்
கொண்டு,
தன் உடலில் ஆவியாக
சத்தாக வெளிப்படும் நிலைகளிலே,
அதுவும், இன்று நம் பூமியிலே மிதந்து கொண்டுதான் இருக்கின்றது.
அத்தகைய அந்த மெய்ஞானியின் அருள் ஒளியை, நம் குருநாதர் காட்டிய அருள்
வழிப்படி, அவர் எமக்கு உணர்த்திய அருள் வழிப்படி அதைப் பெற்று, அவர் கண்ட பேருண்மையின் நிலையும், பேரண்டமும்,
ஆதியிலே எப்படி சக்திகள் தோன்றியது?
அந்த சக்தியின் தன்மையில் அணுக்கள் எப்படி உருப்பெற்றது?
உருப்பெற்றபின், கோள்கள் எவ்வாறு உருவானது?
கோள்களிலிருந்து வளர்ச்சி பெற்று சூரியனாக எவ்வாறு ஆனது? சூரியன் ஆன பின், அதன் வளர்ச்சியின் தன்மையில் கோள்களை உருப்பெறச்செய்து, அது நட்சத்திரங்களாக உருப்பெறச்செய்து, அந்த நட்சதிரங்களிலிருந்து
வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகள் ஒரு சூரியனாக உருப்பெறும்போது, ஒரு பிரபஞ்சமாகி, விண்ணின் ஆற்றலின் தன்மையை, அந்த பிரபஞத்திற்குள் அசுத்த அலைகள் வராதபடி, நட்சத்திரங்கள் எப்படிக் காத்தது? அந்த காத்த உணர்வினுடைய சக்திகள், எப்படி உணர்வின் சத்தாக அது மாற்றியது? நட்சத்திரங்கள் கதிரியக்க சக்தியாக மாறினாலும், கோள்களினுடைய சக்தியை வளர்க்க செய்வதும், அதனின்று வரும் ஆற்றலை,
சூரியன் கவர்ந்து எடுத்து ஒளி அலைகளாக
மாற்றி, ஒரு பிரபஞ்சத்திற்குள் உயிர்களையும், உயிரணுக்களையும்
எவ்வாறு வளர்த்தது?
அப்படி வளர்ந்த பின், அது எவ்வாறு நம் பூமியின் தன்மையை அடைந்தது? இந்த பிரபஞ்சத்திற்குள் இருக்கக்கூடிய நமது பூமி எவ்வாறு செயல்பட்டது? அந்த செயல்பட்ட நிலைகள் கொண்டு, தாவர இனங்கள் எவ்வாறு வளர்ந்தது?
தாவர இனங்கள் வளர்ந்த பின், அதிலே உயிரணு தோன்றி இந்த உணர்வின் சத்துகளை, அது உணர்வின் ஆற்றலாக, ஒலி, ஒளியாக அது எவ்வாறு மாற்றிக்கொண்டு, அது மனிதனாக தோன்றியது? என்ற இந்தப் பேருண்மைகள் அனைத்தையும் அகத்திற்குள் அறிந்துணர்ந்தவர் அகஸ்திய மாமகரிஷி.
அவரின் ஆற்றலின் உணர்வைத் தொட்டு, உணர்ந்து, உணர்வின் சக்தியைக் கண்டபின், விண்ணின் ஆற்றலின் தன்மையை என்னால் கண்டுணர முடிந்தது.
அணுவுக்குள் இயக்கமும், அணுவின் மாற்றங்கள் எவ்வாறு உருப்பெற்றது என்ற
நிலையும், இந்த மனித சரீரம் எங்கிருந்தாலும், குருநாதர் காட்டிய அருளின் வித்து,
“விண்ணில் எவ்வாறு ஒரு சூரிய குடும்பமான பின், இது எவ்வாறு பல சூரிய
குடும்பங்களாக, ஒரு பேரண்ட குடும்பமாகி, 2000
சூரியக் குடும்பமாக எவ்வாறு இயங்குகின்றது,
அந்த 2000 சூரியன்களும், அது வெளிப்படும்போது, அந்த உணர்வின் அலைகள், இந்த பேரண்டத்திற்குள் ஒன்றுக்குள் ஒன்று கலந்து, அது ஆற்றல் மிக்கதாக மாறுகின்றது என்ற நிலையும்,
அந்த 2000 சூரியன்களும், அது வெளிப்படும்போது, அந்த உணர்வின் அலைகள், இந்த பேரண்டத்திற்குள் ஒன்றுக்குள் ஒன்று கலந்து, அது ஆற்றல் மிக்கதாக மாறுகின்றது என்ற நிலையும்,
பேரண்டத்தில் இந்த 2000 சூரியக் குடும்பம் போல,
எத்தனையோ 2000 சூரியக் குடும்பத்தில்
விரிந்து படர்ந்து
கிடக்கக்கூடிய ஆற்றல்மிக்க சக்திகளை,
அந்த அகஸ்திய
மாமகரிஷி உணர்ந்தறிந்து”,
அந்த உணர்வை
தனக்குள் வெளிப்பட்ட உணர்வின் அணுவை, எமது குருநாதர் அந்த அருள் வழி கொண்டு, எம் உணர்வுக்குள் பதியச் செய்தார்.
பதிந்த அந்த உணர்வின் தன்மை
கொண்டுதான், விண்ணின் அலைகளை, எம் உணர்வின்
அலைகள் கொண்டு மோதச் செய்து, அந்த உணர்வின் தன்மையை, ஆற்றலின்
தன்மையைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தி, அறிந்துணர்ந்து, அது பெறக்கூடிய ஆற்றலை, “நீ எவ்வாறு
பெற வேண்டும், எந்தெந்த வழிகளில் பெற வேண்டும்” என்று
உணர்த்திச் சென்றார் எமது குருநாதர்.
அவை அனைத்தையும் உங்களுக்குள்
பதியச் செய்வதற்குத்தான், எமது குருநாதர் காட்டிய அருள்
வழிப்படி இதை உபதேசிப்பது.
(பக்கம் 17-21)
“ஞானி” என்பது, மற்றதைப் புரிந்தறிந்து செயல்படும் தன்மை பெற்றவர்கள். மெய்ஞானி என்பது, ஒரு அணுவுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை
சிந்தித்து அறிந்து, அந்த உணர்வை விரித்தாண்டு, நமக்குள் செயலாக்கும் நிலையும், அந்த செயலின் தன்மையை, தம்மை அணுகி உள்ளோரின் நிலைகளில் அதைப் பாய்ச்சும் நிலைகள் பெற்றவர்கள் “மெய்ஞானி”, ஞானமில்லாதபடி ரிஷியாக முடியாது.
முதலில் ஞானம் இல்லாதபடி செடி, கொடிகள் எதுவுமே வளர
முடியாது. உதாரணமாக ஒரு வேப்ப மரத்தை எடுத்துக் கொண்டால்,
ஒரு அணுவின் தன்மை, வெப்பம், காந்தம்;
வெப்பம் ஒன்றை உருவாக்குகின்றது,
காந்தமோ ஒன்றை இணைக்கின்றது,
அந்த வெப்பத்துடன் இணைந்த இந்த காந்தம்,
வேப்ப
மரத்திலிருந்து வரக்கூடிய
கசப்பின் தன்மையை
அது ஈர்த்துக் கொண்டால்
அந்த மணத்தை
வெளிப்படுத்தும் ஞானமாகின்றது.
அதற்குப் பெயர்தான் லட்சுமி,
ஒரு அணுவின் இயக்கத்திற்குள் அது ஈர்க்கும் நிலை வருவதை லட்சுமி என்று, அது ஈர்த்து, தமக்குள் அந்த உணர்வின் சக்தியை இணைத்துக் கொண்டால், அதற்குப் பெயர் ஞானம் – அறிதல்,
மணத்தால் அதனுடைய மணத்தை வெளிப்படுத்துகின்றது,
நாம் அறிய முடிகின்றது.
ஆனால், அதே மணத்தின் தன்மையை நாம் உணர்வாலே சுவாசிக்கும்பொழுது, உடலுக்குள் பட்டவுடன் அந்த மணத்தின் உணர்வு (வேப்ப மரத்தின் கசப்பின்) நம்
வாயிலே உமட்டலாகச் செய்கின்றது.
ஆக இந்த வெப்பம்
தனக்குள்
வெப்பத்திற்குள்
இந்த காந்தம் இழுத்தபின்,
இந்த சத்தின் தன்மை தனக்குள் ஐக்கியமாக ஒரு அணுவின் இயக்கம்.
இந்த சத்தின் தன்மை தனக்குள் ஐக்கியமாக ஒரு அணுவின் இயக்கம்.
இதைப் போன்றுதான், அந்த கசப்பின் தன்மை வரப்படும்போது, அதனுடைய சக்தியினை முழுவதுமாக
அடுக்கடுக்காக வளர்த்து, அதனுடைய நிலைகளை வாழச் செய்வது.
உதாரணமாக எடுத்துக் கொண்டால்,
நம் சொல்லுக்குள் வெளிப்படும் ஒரு உணர்வின் தன்மையை,
நாம் சமைத்து
அனுப்பும்போது, இதற்குள் வெப்ப காந்தம் கலந்திருக்கின்றது.
நாம் பேசும் நிலைகள்,புறத்திலே இருக்கக்கூடிய இந்த காந்த அலைகளைக் கவர்ந்து தான், இந்த உணர்வின் ஆற்றலை, உங்கள் செவிப் புலனறிவிலே பாய்ச்சச் செய்கின்றது.
இப்போது நாமே பேசினாலும்,
காதைப் பொத்திக் கொண்டு நாம் பேசினால்
இந்த உணர்வு இயக்கும்
ஆற்றலை,
நாம் எங்கேயோயிருந்து, கிணற்றுக்குள் இருந்த பேசியாதாகத் தான் இருக்கும்.
எனக்குள் உள் உணர்வவினுடைய நிலைகளை அடக்கியதாகத்தான் இருக்கும். சரியாக காதைப் பொத்திக் கொண்டால், நீங்கள் பேசியதை உங்களுக்குள் அர்த்தம் புரிவது கஷ்டமாகத் தான் இருக்கும்.
“ஒலித்ததை கொண்டு, தட்டி
எழுப்பும் நிலைகள்,
உணர்வைத்
தட்டி எழுப்பும் நிலைகள்”.
இதைப் போன்றுதான், ஒரு வேப்ப மரத்தின் கசப்பின் தன்மை, அது வெளிப்படுத்தும்போது, அதை பூமியிலே
விண்ணிலே இருந்து வரக்கூடிய
சூரியனின் காந்த அலைகள் அதைக் கவர்ந்து,
தனக்குள் வேப்ப மரத்தின் கசப்பை தனக்குள் எடுத்துக்
கொண்டால், அந்த சத்தின் பெயர் ஞானம்.
அதற்குத் தான் “சரஸ்வதி” என்று பெயர் வைத்திருக்கின்றார்கள் அதை ஈர்த்து தனக்குள் எடுக்கும் நிலைகள் “லட்சுமி”, லட்சுமி, தனக்குள் ஈர்த்து இணைத்தபின், அந்த அணு வெப்பமாகி, இதை ஐக்கியப்படுத்தச் செய்தது “பராசக்தி”
அதற்குத் தான் “சரஸ்வதி” என்று பெயர் வைத்திருக்கின்றார்கள் அதை ஈர்த்து தனக்குள் எடுக்கும் நிலைகள் “லட்சுமி”, லட்சுமி, தனக்குள் ஈர்த்து இணைத்தபின், அந்த அணு வெப்பமாகி, இதை ஐக்கியப்படுத்தச் செய்தது “பராசக்தி”
ஆக “லட்சுமி, பராசக்தி, சரஸ்வதி”, ஏனென்றால் இன்று நாம் கோயிலிலே பார்க்கலாம், “திரசூலம்”. காளி, மாரி, சரஸ்வதி என்று எத்தனையோ
சக்திகளை உருவம் அமைத்து அதற்கு கதைகளை எழுதியிருப்பார்கள். அந்த தெய்வங்களின்
கையிலே இருப்பது திரிசூலம், திரிசூலத்திற்குள் இருக்கக்கூடிய சக்தியின் தன்மைகள்.
ஒன்று ஈர்ப்பு சக்தி, ஒன்று வெப்ப சக்தி - மையத்தில் இருப்பது, இது ஈர்த்து தனக்குள் அணைத்து, தான் சேர்த்துக் கொண்ட சத்தான நிலைகள் மூன்றும் சேர்த்து, இயக்க சக்தி.
அதனால் தான் கோயிலிலே திரிசூலத்தைப் போட்டு, ஞானிகள் கொடுத்ததை, அதாவது அத்வைதம், சூட்சமமாக இருந்ததை, அதை உருவக நிலைப்படுத்தி அந்த
உணர்வின் நிலைகளைக் காவியங்களாக எழுதி, அதை உணர்ந்தறிந்து கொண்டு, தான் செயல்படுத்துவதற்கு ஞானியர்கள் செய்தார்கள்.
(பக்கம் 23-29)
வேப்ப மரம் அதற்குச் செயல் இல்லை,
புவியின் ஈர்ப்பு
கொண்டு அது இயங்குகின்றது. அது தன் கசப்பின் சத்தை எடுத்துக் கொள்வதற்கு,
எடுத்துக் கொண்டது
அந்த சக்தி.
ஆனால் அந்த கசப்பின் மணம் வெளிப்படும்போது, அந்த வேப்ப மரத்தில் இருக்கக்கூடிய கசப்பின் தன்மையை, தன் இனத்தை அதற்குள் இருக்கக்கூடிய காந்தம் இழுக்கின்றது. ஆனால்,
ஆனால் அந்த கசப்பின் மணம் வெளிப்படும்போது, அந்த வேப்ப மரத்தில் இருக்கக்கூடிய கசப்பின் தன்மையை, தன் இனத்தை அதற்குள் இருக்கக்கூடிய காந்தம் இழுக்கின்றது. ஆனால்,
அது ஈர்த்துச் சேர்ப்பதற்கு
எந்த மணத்துடன் இது
கலந்து,
இந்த மரம்
வளர்ந்திருக்கின்றதோ,
அந்த காந்தம் அந்த
மணத்தை இழுக்கின்றது.
அந்த மணம், காந்தத்துடன் கலந்திருப்பதனால்
அதற்கு ஞானம் வருகின்றது.
காற்றிலிருந்து தன் சக்தியை இழுத்துக் கொள்கின்றது,
அதே சமயம், இந்த காற்றிலே எத்தனையோ நிலைகள் படர்ந்து, இந்த வேப்ப மரம் பக்கம் மோதினாலும், தன் இனத்தைத்தான், அது தன் ஞானத்தால் எடுத்துக் கொள்கின்றது. அந்த ஞானம் இல்லையென்றால், மரம் ஒரு இனமாக வளரமுடியாது. மரத்திற்கு ஞானம் இல்லையென்றால், அது ஒன்றும் செய்ய முடியாது.
அதே சமயம், இந்த காற்றிலே எத்தனையோ நிலைகள் படர்ந்து, இந்த வேப்ப மரம் பக்கம் மோதினாலும், தன் இனத்தைத்தான், அது தன் ஞானத்தால் எடுத்துக் கொள்கின்றது. அந்த ஞானம் இல்லையென்றால், மரம் ஒரு இனமாக வளரமுடியாது. மரத்திற்கு ஞானம் இல்லையென்றால், அது ஒன்றும் செய்ய முடியாது.
இந்த உணர்வின் தன்மை கொண்டுதான் செடி கொடிகளும்,
அதற்குள்
இருக்கக்கூடிய ஆற்றலை தனக்கு ஞானமாக்கி, அந்த மணத்தை கவர்ந்து கொண்டு
செயல்படுகின்றது.
வெப்பமோ, இதை தாக்கியவுடன் சூடாகி,
அது ஐக்கியப்படுத்தி வளரச் செய்கின்றது.
உணர்வின் அணுவின் இயக்கத்தின் சக்தி,
அது எப்பொருளின் தன்மையானாலும்,
வெப்ப
காந்தத்திற்குள்,
எந்த உணர்வின்
சக்தி கலக்கின்றதோ,
அதற்குப் பின் தான்
இயக்கம்.
இன்று ஒரு வேப்ப
மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அது புவியின்
ஈர்ப்பிலே துணை கொள்ளும்போது,
விண்ணிலிருந்து
படர்ந்து வரக்கூடிய
அந்த காந்தத்தை, தன்னுடன் இழுக்கின்றது.
இதற்குள்
இருக்கக்கூடிய
காந்த அலைகளுடன் மோதுகின்றது,
மோதும்போது, மரம் வெப்பமாகின்றது,
வெப்பத்தில் இருக்கக்கூடிய காந்த சக்தி,
துடிப்பின் நிலைகள் எடுக்கின்றது,
வறட்சியாகும்போது,
கீழே இருக்கக்கூடிய நீரை இழுக்கின்றது.
தன் உணர்வின் சக்தியினுடைய ஆற்றல் வரும்போது, காற்றிலிருந்து, தன் மணத்தின் சக்தியைக் கவர்ந்து கொள்கின்றது. இந்த வேப்ப மரம் அதனுடைய இயக்கம் கவர்ந்து, கசப்பின் தன்மை கொண்டு வளர்கின்றது.
இப்படித்தான் அந்த அணுவின் தன்மை இயக்கப்படும்போது,
தனக்குள் ஞானம்
வருகின்றது. இதைப் போன்று, எந்த சக்தியின் வலுகொண்டு, அந்த வேப்ப மரம் கசப்பாக ஆனதோ,
எந்த மணத்தின்
தன்மை கொண்டு, ஒரு பூச்செடி தன் மணத்தைக் கொண்டதோ,
அந்த மணத்தை
அதிகமாக்கும்போது, அதற்கு அந்த ஞானம் கொண்டு அதனுடைய வலுத்தன்மை அமைகின்றது.
ஆக அதனுடைய வலுத்தன்மை ஆகும்போது காற்றிலிருந்து வரக்கூடிய
எத்தகைய சக்தி இருந்தாலும், அது பாதுகாக்கும் தன்மையில், அதை உந்தித் தள்ளி, தன் இனத்தை மட்டும், கூட்டமைப்புக்குள் இருப்பதை, காற்றில் மிதந்து கொண்டிருப்பதை, தன் இனத்தை இழுத்து, அது ஞானத்துடன் வளர்கின்றது.
நமது பூமியை எடுத்துக் கொண்டால் “ஓசோன்” திரையென்று சொல்வார்கள். நமது பூமி சுழற்சியாகி, சூரியனிலிருந்து வரக்கூடிய “ULTRA VIOLET” என்ற
அந்த விஷத்தினுடைய தன்மைகள், நம் பூமியில் படும்போது,
பூமி சுழலும்போது இதனுடைய காந்த சக்தி,
ஏனென்றால்
நமது பூமிக்குள் காந்தங்கள் எந்த அளவுக்குப் பதிந்திருக்கின்றதோ,
நமது பூமிக்குள் அது எந்தெந்த சக்தியின் நிலைகள் கொண்டு
இந்த பாறைகள் அமைந்திருக்கின்றதோ,
இதற்குள் ஈர்த்துக் கொண்ட வெப்பத்தின் நிலைகள் கொண்டு,
ஆவியாக வெளிப்படுத்தும்போது, இதனின்று பூமியின்
சுழற்சியினுடைய நிலைகள் காந்தத்துடன் வெளிப்படுத்தும் இந்த மோதலில், அதே சமயம் சூரியனிலிருந்து வரக்கூடிய
அந்த விஷத்தின் தன்மையை நமது பூமி கவர்ந்து
கொண்ட நிலைகளுக்கொப்ப, இது வழிப்படுத்தும் நிலைகள் கொண்டு ஒன்றுடன் ஒன்று மோதி, இந்தச் சக்தி கிடைக்கின்றது.
பூமி சுழலும்போது, சூரியனிலிருந்து தனித்து,
விஷசக்தியின்
நிலைகள் வெளிப்படும்போது, இதனுடன் மோதியவுடன் இந்த வெப்பத்திற்குள்
சிக்கி, அது ஆவியாக வெளிப்படுத்துகின்றது, பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு வெளியிலே,
உந்தித்
தள்ளுகின்றது.
அந்த மோதலின் நிலைகளில், இந்த ஈர்ப்பிற்குள் சிறிதளவே, இந்த விஷத்தின் ஆற்றலை பூமி எடுத்துக் கொள்கின்றது. ஏனென்றால் இதற்குள் எடுத்துக் கொண்ட காந்த சக்தியின் துரித நிலைகள் கொண்டு, அந்த வெப்பத்தினால் அதை ஜீரணிக்க முடியாது
ஒரு இரும்பை நாம் எந்த அளவுக்கு நெருப்பைக் கொண்டு உருக்குகின்றோமோ, அதற்குத் தக்கதான், அந்த இரும்பு உருகுகின்றது நாம் எந்த அளவிற்கு காந்தத்தை இயக்குகின்றோமோ, அதற்குத் தக்கவாறுதான் ஒரு மோட்டாரை இயக்குகின்றோம்.
அந்த மோதலின் நிலைகளில், இந்த ஈர்ப்பிற்குள் சிறிதளவே, இந்த விஷத்தின் ஆற்றலை பூமி எடுத்துக் கொள்கின்றது. ஏனென்றால் இதற்குள் எடுத்துக் கொண்ட காந்த சக்தியின் துரித நிலைகள் கொண்டு, அந்த வெப்பத்தினால் அதை ஜீரணிக்க முடியாது
ஒரு இரும்பை நாம் எந்த அளவுக்கு நெருப்பைக் கொண்டு உருக்குகின்றோமோ, அதற்குத் தக்கதான், அந்த இரும்பு உருகுகின்றது நாம் எந்த அளவிற்கு காந்தத்தை இயக்குகின்றோமோ, அதற்குத் தக்கவாறுதான் ஒரு மோட்டாரை இயக்குகின்றோம்.
அதைப் போன்று நமது பூமி, ஆரம்பத்திலே தன் உணர்வின் சத்துடன்,
எந்த அளவுக்கு
காந்தத்தின் சக்தி தனக்குள் எடுத்துக்கொண்டதோ, இது விண்ணிலெ சுழற்சியாகும்போது,
அந்த உணர்வின்
சக்தியினுடைய நிலைகள், சூரியனிலிருந்து
வரக்க்கூடிய விஷத்தின் ஆற்றல் வந்தாலும், இது பிரபஞ்சத்தில்
ஓடிச் செல்லும்போது, நட்சத்திரங்களில் இருக்கக்கூடிய கதிரியக்கமும் மற்ற கோள்கள் விஷத்தைக்
கக்கும்போது இந்த விஷ அலைகளுடைய நிலைகள் கக்கிய பாதையிலே பூமி ஊடுருவிச்
செல்லும்போது, இது சுழற்சியின் வேகத்தால் ஏற்படும் காந்த உற்பத்தியால், உராயும் தன்மை கொண்டு வெப்பமாகி, இந்த விஷத்தின் சக்தியை, ஆவியாக இந்த பூமிக்கு வெளியிலே வீசப்பட்டு, அதற்குள் இருக்கக்கூடிய ஆற்றலின் தன்மையை பூமி கவர்ந்து
கொள்கின்றது.
அப்படிக் கவர்ந்து கொண்டதனால் தான் நமக்குப் பாதுகாப்பான நிலைகள் கொண்டு மனிதனாக உருப்பெரும் சக்தியை நாம் பெறுகின்றோம்”.
அப்படிக் கவர்ந்து கொண்டதனால் தான் நமக்குப் பாதுகாப்பான நிலைகள் கொண்டு மனிதனாக உருப்பெரும் சக்தியை நாம் பெறுகின்றோம்”.
ஆக “ஒசோன் திரை” என்று சொல்லும்போது
இது வெளிப்படுத்தி, உந்தித்தள்ளும்
நிலையை,
சூரியனிடமிருந்து வரக்கூடிய வெப்பகாந்தங்கள் கவர்ந்து
இது திரும்பி நிற்கும்போது,
இது திரும்பி நிற்கும்போது,
இந்த க்காந்தங்கள் வந்தவுடன் இது கவர்ந்து கொள்கிறது.
அது குவிந்து, அந்த வெப்ப
காந்தங்கள் ஊடுருவி
நமது பூமிக்குள் வருவதற்குமுன், இது அதைக் கவர்ந்துகொண்டவுடன்,
இதனுடைய சுழற்சியின் வேகத்தின் எதிர்ப்பின் நிலைகள் கொண்டு,
அந்த வெப்ப அலைகள் திரை (ஓசோன்) போன்று ஆவிகளாக அமைகின்றது.
இப்போது பூமியினுடைய நிலைகள் இது உந்தி,
இது ஆவியான
நிலைகள் வெளிப்படும்போது, மேகங்களாக மேலே சுழன்று கொண்டிருப்பது போன்று, இயக்கமற்ற நிலைகளில் பூமியினுடைய நிலைகள் வெப்பங்கள்
காந்தங்களாக ஆக்கப்படும் போது, அந்த ஆவியின் தொடர்பில் இருக்கின்றது.
ஏனென்றால், இவையெல்லாம் மெய்ஞானிகள் சொன்னது, இன்று விஞ்ஞானிகள் கண்டு கொள்வதென்றால் மிகமிகக் கடினம். இன்று கண்டுணர்ந்த அணுவின் தன்மையை, பார்க்க வேண்டுமென்றாலே ஆயுள் பத்தாது. ஒரு விண் அணுவை முழுமையாக அளந்து பார்க்கப்படும்போது, இந்த அணுவின் இயக்கம் எங்கிருந்து வந்தது என்று கண்டுணர்வதற்கு ஆயுள் பத்தாது.
ஏனென்றால், இவையெல்லாம் மெய்ஞானிகள் சொன்னது, இன்று விஞ்ஞானிகள் கண்டு கொள்வதென்றால் மிகமிகக் கடினம். இன்று கண்டுணர்ந்த அணுவின் தன்மையை, பார்க்க வேண்டுமென்றாலே ஆயுள் பத்தாது. ஒரு விண் அணுவை முழுமையாக அளந்து பார்க்கப்படும்போது, இந்த அணுவின் இயக்கம் எங்கிருந்து வந்தது என்று கண்டுணர்வதற்கு ஆயுள் பத்தாது.
மெய்ஞானியோ, தன் உணர்வின் எண்ணத்தை அண்டத்திலே
பாய்ச்சி, அந்த உணர்வின் ஆற்றலை, தன் உணர்வுக்குள் அறிந்துணர்ந்து,
அதை செயலாக்கும்
ஆற்றல் பெற்றவன் மகரிஷி,
அந்த மகரிஷி, அவன் எடுத்துக் கொண்ட
அந்த உணர்வின் ஆற்றலை
எவர் ஒருவர் பெறுகின்றனரோ,
அந்த உணர்வின் ஆற்றலைத்தான் காணமுடியும்.
(பக்கம் 37-40)
எமது குருநாதர் காட்டிய அருள் சக்தியை,
அண்ட வீதியெல்லாம் தேடி அலைந்து,
அந்த சக்தியினுடைய நிலைகள்
அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு
அதை யாம் சுவாசித்து, இந்த உணர்வின் சக்தியினுடைய நிலைகள் என்னைச் சந்திப்போர்
அனைவருடைய உயிரையும் கடவுளாக மதித்து, இந்த உணர்வின் மணமான நிலைகளை, இங்கு ஆராதனை செய்து
கொண்டிருக்கின்றோம்.
இந்த ஆராதனையினுடைய மணத்தைத்தான், நீங்கள் எங்கிருந்தாலும் பார்க்கின்றீர்கள், நீங்கள் ஆலயத்தில் சென்று ஆராதனை செய்கின்றீர்கள், ஆனால் உங்கள் காந்த ஈர்ப்பின் துணை கொண்டு, எமது குருநாதர் அருள் வழி கொண்டு, உங்களுக்கு அந்த ஆராதனை செய்கின்றேன்.
அப்பொழுது அந்த மணத்தை நுகரும்போதுதான், உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அந்த மகிழ்ச்சியின் உணர்வாகவே, நீங்கள் வெளியிடும் மூச்சலைகளை, யாம் சுலபமாகப் பெறமுடிகின்றது.
நீங்கள், “சாமி நான் நன்றாக இருக்கின்றேன்” என்று சொல்லும்போது,
அங்கே
மகிழ்ச்சியான மணத்தை, உயிரான ஆண்டவனிடமிருந்து நல்ல மணத்தை, நல்ல வரத்தை
வாங்குகின்றோம்.
மறந்திட வேண்டாம், உங்களிடமிருந்து தான், நல்ல வரத்தை வாங்குகின்றோம். காரணம்,
மறந்திட வேண்டாம், உங்களிடமிருந்து தான், நல்ல வரத்தை வாங்குகின்றோம். காரணம்,
அந்த மகிழ்ச்சியான உணர்வு
ஆராதனை கொடுக்கப்படும்போது,
உங்கள் உயிரான நிலைகள், அது சமைத்து,
அந்த மகிழ்ச்சியான உணர்வலைகள்
அங்கு பரப்பச் செய்கின்றது,
அதை யாம் பெறுகின்றோம்.
ஒவ்வொரு நிமிடமும், எமது குருநாதர் காட்டிய அருள் வழிகொண்டு, பேரண்டத்தில் அலைந்து திரிந்து, உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி, அந்த நறுமணமான நிலையும்,
அந்த
மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மையும்,
அதைச் சுவாசித்து,
அதன் உணர்வுகள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்ற
ஏக்கத்துடன் பிரார்த்திக் கொண்டிருக்கின்றோம்,
எமது பிரார்த்தனை இதுதான்.
ஆக இந்த நிலைகள் கொண்டு,
இந்த மணத்தை, உங்களுக்குள் செலுத்திக்
கொண்டிருக்கிறோம்.
ஆனால் உங்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிற
உணர்வின் தன்மையை,
அதை இன்புறச்
செய்வதற்கு,
ஏனென்றால் உயிரான கடவுள், அவன் சிருஷ்டித்த
ஆலயம் அது.
அங்கே படும் அசுத்தத்தினுடைய நிலைகள் தாங்காது,
அந்த உணர்வின் நிலைகள்தான்,
நமக்குள் நல்லதைச் செயல்படுத்தும்,
அந்த தெய்வகுணத்தின் தன்மையினுடைய நிலைகள் மங்குகின்றது.
அந்த நிலையில், உங்களுக்கு இந்த உயர்ந்த சுவாசத்தின் நிலைகளைப் பெறச் செய்ய, யாம் பிரார்த்திக்கின்றோம்.
நீங்களும் அந்த நிலைகொண்டு, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டுமென்று
நினைவைச் செலுத்தினால்தான், உங்கள் கதவு திறக்கும், அப்பொழுது தான் அந்த மணத்தின் தன்மைகள் அங்கே பிறக்கும். அதனால், அங்கே கிடைக்கக்கூடிய இந்த ஆற்றல் மிக்க
சக்திகள், உங்களிலே துன்பத்தைப் போக்க உதவும்.
யாம் உங்களுக்கு யானையைப் பண்ணுவோம், பூனையைப் பண்ணுவோம் என்றும் செய்ய முடியாது, யாம் பிரார்த்திக்க முடியும், உங்களுக்கு நலம் பெற வேண்டுமென்று எண்ண முடியும். அந்த உணர்வின் சக்தியை உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
பிரார்த்திக்கிறோம். ஏனென்றால், வெளியிலே எடுத்துக் கொண்ட நிலைகொண்டுதான், இந்த உலக இயல்பின் நிலைகள்.
ஆக இதைப் போல,
நாம் இந்த ஓசோன்
திரையைப் போல், நமக்குள் அந்த தீய குணத்தின் தன்மை வராமல்
தடுக்க வேண்டுமென்றால், அந்த மெய்ஞானியின் உணர்வலையை நமக்குள்
சேர்க்கப்படும்போது தான், அதை எந்த அளவுக்கு சேர்த்துக் கொள்கிறோமோ, இங்கு ஓசோன் திரையாகப் பாதுகாக்கும் நிலையாகின்றது.