ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2011

அகச்செல்வமும் அருட்செல்வமும்




சாமி புத்தகம் – அகச்செல்வமும் அருட்செல்வமும் 
(பக்கம் No 48-51)

நாம் சாதாரணமாக இருந்தாலும், திடீரென்று, நம் உடலில் உள்ள அணுக்களுக்கு பசி எடுத்தது என்றால், அந்த உணர்ச்சியைத் தூண்டி, திடீரென்று கோபம் வரும்.  அதே சமயத்தில் குழந்தைகளைப் பற்றி  நினைத்துக் கொண்டிருப்போம்.  அந்த உணர்வு, அணுவாக இருக்கும்.  அதை நினைக்காதபடி சந்தோஷமாக இருந்தால், அதற்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்றால்அந்த உணர்ச்சியை உந்தும். ஏனென்றால், உயிருக்கு வருகின்றது.

உயிருக்கு வந்தவுடன், அந்த உணர்வை எடுத்து, சாப்பாடு எடுக்க ஆரம்பித்து விடுகிறது. அந்த மாதிரி நேரமானாலும், அதற்கு சாப்பாடு கொடுக்க கூடாது. உடனே, ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணினால் உள்ளுக்குள் போகாது. அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி, என் உடலிலுள்ள ஜீவ ஆன்மா பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

நீங்கள் சும்மா இருந்து பாருங்கள். உங்களை அறியாத கவலை, சஞ்சலம் எல்லாம் எங்கிருந்தோ வரும். அப்படி யார் யார் மேலே இருந்ததோ, அவர்கள் மேலே தான் வரும். அவர்கள் நம்மை எப்படியெல்லாம் கெட்டுப் போகவேண்டும் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்களோ, அந்த உணர்வெல்லாம் எடுத்து,  அந்த கெட்டுப் போகும் அணுக்களுக்கு, சாப்பாடு கொடுக்கும். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா?

ஆக, நாம் இந்த நிலையை மாற்றுவதற்குதான், கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வந்து என்ன செய்கிறோம்? இராமேஸ்வரம் அங்கு வந்தவுடன் தான் தனுஷ்கோடி கோடிக்கரை,

நாம் கோடிக்கரையில் இருக்கிறோம். ஒவ்வொரு நிமிடத்திலும், அந்த தீமைகள் வரும் பொழுது, நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நமக்குள் சேர்த்து, சேர்த்து, அந்த விஷ்ணு தனுசைக் கொண்டு மாற்றிடல் வேண்டும்.

இந்த உயிர் தான் விஷ்ணு தனுசு என்பது. ஆக, இந்த உயிரின் தன்மை ஒளியாக மாற்றும், விஷ்ணு தனுசு. இந்த உணர்வை எடுத்து நம் உடலிலுள்ள அத்தனை அணுக்களுக்கும் சேர்க்க வேண்டும்.

இராமேஸ்வரத்தில், இராமன் என்ன செய்கின்றான்? நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்துப் பூஜிக்க தொடங்குகின்றான். இதுதான் தனுஷ்கோடி. இந்த வாழ்க்கையில் இதனுடைய நிலைகள் வரப்படும் பொழுது, நமக்குள்
கோபம் வரப்படும் போது,
வெறுப்பு வரும் போது,
வேதனை வரும் போது,
சலிப்பு வரும் போது,
சோர்வு வரும் போது,
ஆத்திரம் வரும் போது, 
இவை எல்லாவற்றையும் அருள்வழியில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை கொண்டு மாற்றிக் கொண்டு வரும் போது,  எல்லாம் ஒன்றாகின்றது. ஆக தனுஷ்கோடி ஒன்றாகி, ஒரு உணர்வின் தன்மை வலுவாகிறது  என்று பொருள்.

இராமாயணத்தைப் படித்து பாருங்கள். அதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கின்றது.
நாம் எதற்காக வந்தோம்?
எதனால் வந்தோம்?
என்ற உண்மைகள் அனைத்தும், அதிலே காட்டப்பட்டுள்ளது.

இப்போது நம் உடலில் என்ன செய்கின்றது? வேதனை என்ற உணர்வுகள் அணுக்களாகிறது. அந்த வேதனை மணத்தை கொடுத்தவுடன், உடல் அழுகுகிறது. ஆனால், அருளுணர்வைப் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது உடல் நன்றாக செழிக்கின்றது. அப்பொழுது அதனுடைய மலம், நுகர்ந்த உணர்வின் தன்மை,  நல்ல அணுக்களை வளர்க்கப்படும் பொழுது, நமக்கு நன்றாக இருக்கின்றது.
அப்பொழுது நமது என்று சொல்வது எது?
நமது என்று சொல்வது உயிரின் தன்மை.
ஆறாவது அறிவு :கார்த்திகேயா, உயிர் ஒளியானது.
அவன் தான், நான் நான் என்ற நிலைகளில்
இதை அந்த அளவுக்குப் பெற்றதினால்
பிரபஞ்சத்திலே உருவானது  துருவ நட்சத்திரம்
அதை நாம் பெறவேண்டும்..

ஏனென்றால்,  உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன்.  எனக்கு குருநாதர் அதைத்தான் சொன்னார்.  அவர் முறைப்படி சொன்னதை, நம் குருநாதர் வழிப்படி, நாம் எல்லோரும் என்ன செய்கின்றோம்?  நாம் அனைவரும், ஆயுள் கால மெம்பராக, அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், இணைகின்றோம். அவர்கள் எப்படி அந்தத் தீமைகளை நீக்கினார்களோ, அதை நாம் நீக்க வேண்டும்.  இப்பொழுது சொல்வது அர்த்தமாகிறதல்லவா. அந்த அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கச் செய்வதற்குத் தான், இந்த உபதேசம். எமது அருளாசிகள்.

 (பக்கம் 57-60)

உங்களை எல்லாம் எங்கே கொண்டு போகின்றோம் என்றால்,  அந்த அகஸ்தியன் உணர்வு கொண்டு,  துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றோம். குருநாதர், என்னை இப்படித்தான் கொண்டு சென்றார். அந்த குரு காட்டிய நிலைகளில் தான், உங்களை அங்கே இணைக்க முடியும்.

ஒவ்வொன்றையும் சேர்த்து,  உங்கள் உடலில், எத்தனை விதமான குணங்கள் இருந்தாலும், அதனுடன் இணைத்து, இணைத்து, அதனின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன். 

உங்கள் கண்ணின் நினைவு, உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் இதைச் சேர்க்கும். அப்படிச் சேர்க்கும் பொழுது, நம் உடலிலுள்ள அணுக்கள், துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏற்கும் பருவம் வருகின்றது.  அதை ஏற்கக்கூடிய பருவத்தைச் செய்தால், தான் ஈர்க்கும், இல்லையென்றால் எடுக்காது.

அதனால் தான், அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு, நமது குருநாதர் கொடுத்த அருள் வழியில், இதை உங்களிடம் சேர்க்கின்றோம். இதைப் பக்குவப்படுத்துதல் உங்கள் கையில் தான் இருக்கின்றது. ஆனாலும், உங்களை ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்டோம்.

வீட்டில், ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்துவிட்டால், ஈஸ்வரா (நமது உயிரை எண்ணி) என்று சொல்லுங்கள். இந்த உணர்வை மாற்றுங்கள். என் பிள்ளை ஞானியாக வேண்டும். அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும், உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால், உடனே ஈஸ்வரா என்று எண்ணி, அதைத் தடுத்துவிடுங்கள். அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். அவர்கள் செய்வது, யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெறவேண்டும், அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள். இவ்வாறு நாம் எண்ணும் பொழுது, அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

ஏனென்றால், ஈஸ்வரா என்று எண்ணி நம் உடலுக்குள் பெறச் செய்துவிட்டு, அந்த உணர்வின் தன்மையைச் சொல்லப்படும் பொழுது, இந்த உணர்வு (நாம் எடுக்கும் அருள் உணர்வுகள்) இரத்தத்தில் கலந்து செல்லும். இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கின்றது.

அப்பொழுது, இதே மாதிரி நம்மை எப்பொழுது திட்டினானோ, இது கொஞ்சம் கொஞ்சமாகப் போய்ச் சேரும். ஆக அவன் திருந்தும் நிலை வரும்.  அவன் எடுத்துக் கொண்ட உணர்வு, திருந்த எண்ணினால் வருகின்றது.  நம்மைத் திட்டும்போது, நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.  சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

இதே மாதிரி, வாழ்க்கையில் நாம்
ஒவ்வொரு நிமிடத்திலும்,
ஒவ்வொரு குணங்களிலும்,
ஒவ்வொரு உணர்விலும்,
ஒவ்வொரு செயல்களிலும்,
துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.

பலவிதமான குழம்பு வைக்கிறோம், பலவிதமான பலகாரம் செய்கின்றோம். இதே மாதிரி, நமக்குள் அந்த உணர்வை (தீமை செய்யும் உணர்வை)  மாற்றி, சுவை மிக்கதாக மாற்றிவிடுகிறோம்.

இப்படி, நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது, நம் உடலிலுள்ள அணுக்களுக்கு எல்லாம் சேர்கின்றது. கொஞ்சம்,  இதில் பொறுமை தேவை.

ஏனென்றால், மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால், ரோட்டில் போகும் பொழுது பார்த்தால், போகின்றான் பார் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரி, ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்த்துவிடுகின்றோம்.. பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அதே உணர்வை எடுத்து, தவறு செய்யும் அணுக்களைத் தான் நாம் வளர்க்கின்றோம்.

ஒருவன் சாபம் விடுகின்றான், அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். அவன், எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். இந்த உணர்வுகள், சாப அலைகள் என்று நமக்குள் எதை எடுத்தாலும், அந்தத் தீமை செய்யும் அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது.

அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுது,  அந்த கணமே ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை, புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும். 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடலிலுள்ள ஜீவ அணுக்கள், ஜீவ ஆன்மாக்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். நம் வாழ்நாளில் இதைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்து, அந்த தீமையான உணர்வுகளை நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து தள்ளிப் பழக வேண்டும். எமது அருளாசிகள்.

(பக்கம் 74-77)

யாம் ஏட்டைப் படிக்கவில்லை. குரு அருள் உணர்வை எடுத்து, நினைத்து, யாம் அதன் வழியில் நடந்தோம்.  காற்றில் இருக்கிறது. அனைத்தையும் நீங்களும் அறியலாம். நல்லதை நீங்கள் சேமிக்கலாம்.

நல்லதை நீங்கள் பெறுவதற்குதான், இதை உபதேசிப்பது. அதாவது, 
தீமை எப்படிச் சேர்கிறது,
தீமையை நீங்கள் எப்படி மாற்றுவது? 
ன்று இந்த உணர்வைச் சேர்க்கும் போது, 
இதை நாம் நுகர்கின்றோம்.

இந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கிறது. கூடுமான வரையிலும்,  உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு, கொஞ்சமாவது போய்ச் சேரவேண்டும்.  இதைப் பெறுவதற்காகத்தான், இன்று இவ்வளவு நேரம் பேசுகின்றோம். நேரம் போய்க் கொண்டு இருக்கிறதே, என்று நினைக்கக் கூடாது.

இப்பொழுது உபதேசிக்கும் இந்த உணர்வு கொஞ்சம் சேர்ந்தவுடன், மற்ற தீய அணுக்கள் கொஞ்சம் மூச்சுத் திணறும். அந்த மூச்சுத் திணறும் போது, இதை (அருள் உணர்வுகளை) கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, இதைச் சேர்க்க வைத்துவிட வேண்டும்.

ஏனென்றால், யாம் இடைவிடாது உபதேசித்துக் கொண்டே இருக்கிறோம். இடைவிடாது நீங்கள் நுகர்ந்து கொண்டே இருக்கின்றீர்கள். உங்களுக்குள் கலந்து கொண்டே இருக்கும். யாம் கலக்கச் செய்கிறோம்.

எமக்கு, குருநாதர் மணிக்கணக்கில் கொடுத்தார். இரண்டு நாட்கள் கூட, பட்டினியாக இருக்க வைத்துவிடுவார். எமக்குச் சாப்பாடு, அந்த அருள் சாப்பாட்டைக் கொடுப்பார். என் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு, அந்தச் சாப்பாடு கிடைக்கும்.

அதனால்தான் சாமி, அதிக நேரம் பேசுகிறார். மூன்று மணி நேரம், ஆறு மணி நேரம் கூடப் பேசுகிறார் என்று சிலர் எண்ணிவிடுவார்கள். இதை எல்லாம் உங்களிடம் அருள் சக்தியை பெறச் செய்வதற்குத் தான், இந்த நிலைகள்.

ஒரு நிமிடத்தில் சொன்னால் என்னவாகும்? அருளுணர்வை உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்து,  கெட்ட அணுக்களை, கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கச் செய்ய வேண்டும். 

அருள் உணர்வுகளை, கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தி வைக்க வேண்டும். எனென்றால், அந்த வழி தெரியவேண்டும்.

விஞ்ஞானி காற்றின் அழுத்தத்தைக் கண்டான். தங்கம் மிகக் கடினமானது. அதை ஒன்றில் போட்டு,
காற்றழுத்தத்தை அதிகமாக்கி,தங்கத்துடன் மோதியவுடன்,
தங்கம் தூசியாகப் போய்விடுகிறது. கரைத்து விடுகிறான்.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா!  இப்போது மனிதன் விஞ்ஞானத்தால், அதைக் கரைக்கும் சக்தியைக் கொண்டு வருகிறான்.

அதைபோல, நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தவுடன்,
இதன் அழுத்தம் அதிகமாகி,
வேகமாகச் சுழற்சியாகிறது.
அப்போது, தீமையான உணர்வுகளுடன் ஊடுருவச் செய்கிறோம். விஷம் எப்படி ஊடுருவி அதன் நிலையை மாற்றுகிறதோ, இதே மாதிரி 
இந்த விஷத்தை மாற்றிய உணர்வுகளை,
இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம். 
உடலில் உள்ள அந்த உணர்வின் அணுக்களுக்குள் ஊடுருவி, அதை மாற்றக்கூடிய சக்தி பெறவேண்டும் என்பதற்குத்தான், மணிக்கணக்கில் பேசுவது.

சிலர், சாமி மணிக்கணக்கில் பேசுகிறார் என்று வெளியே சென்று அமர்வார்கள், வாழ்க்கை நிலைகள் கொண்டு. அந்த மாதிரி செல்பவர்கள் போய்விடுகிறார்கள்.  இதில் மிஞ்சி வருபவர்கள், நீங்கள்,  அதாவது, எப்படி இருந்தாலும், அந்த  குருவின் அருளை பெறவேண்டும் என்ற நிலைகளில் இருப்பவர்கள்தான்,  இங்கே இருப்பார்கள்.

நீங்கள், கொஞ்சம் கொஞ்சம் பேசப் பேச அங்கே அவர்களுக்கும் கிடைக்கும். அவர்களையும் இங்கே அழைத்துவரும்.  நீங்கள் வளர்ச்சி அடைந்தால் தான், உங்கள் மூச்சு, இந்த பூமியில் உள்ள தீமைகளை நீக்கும்.  உங்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களையும், இது திருந்த வைக்கும்.

(பக்கம் 78-81)

நாம் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொன்றிலும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டே வரவேண்டும். அந்த சேர்க்கும் பருவத்தை செய்வதற்குத் தான், இதை உபதேசிக்கின்றோம்.

குழம்பு வைக்கும் பொழுது, ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை சேர்க்கும் பொழுது, ருசியை மாற்றிவிடுகிறோம். அதுபோல நாம் நல்ல குணங்களுடன், இந்த வேதனையான உணர்வுகளை எடுத்தால்,  இதைச் (அருள் உணர்வுகளை) சேர்க்கும் பொழுது, நல்ல அணுக்களாக மாற்றிவிடுகிறது. 

நல்ல அணுக்களை மீண்டும் பெறவேண்டுமென்றால், அந்த உணர்வை, இதற்கு மேல் சேர்த்து மாற்றவேண்டும். அதை அடிமையாக்க வேண்டும்.

கங்கா சேர் வானம் மாதிரி
நமக்குள் ஒவ்வொரு உணர்வு வரும் போது,
அணுவுக்குள் அணு.
ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம்
என்று ஒவ்வொன்றும், பிரணவ தத்துவத்தை கொண்டு வருகிறது. 

அந்தப் பிரணவ தத்துவம், புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், ஒவ்வொரு அணுவையும்  நுண்ணிய அணுக்களாக மாற்றி, மாற்றி,  அந்த உணர்வின் தன்மை கொண்டு சேர்த்துதான் உடலாக மாற்றுகிறது.

ஆக, இந்த உடலின் அணுக்கள், பரிணாம வளர்ச்சி அடைந்த பின் தான், அதற்குத் தக்க மனித உறுப்புகளை உருவாக்கும். மனித உறுப்புகளை உருவாக்கியபின், கொஞ்சம் கொஞ்சமாக விஷத் தன்மையை, நாம்  மனித உடலில் உள்ள அணுக்களை மாற்றினால், ரூபங்களை மாற்றி அதற்கு தக்கவாறு உண்டாக்கிவிடும்.

நாம், புழுவிலிருந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்குத் தக்க, இந்த உறுப்புகள் மாறுகிறது. அப்படி படிப்படியாக வரும்போது, எல்லாவற்றையும் கழிக்கக்கூடிய உடலின் உறுப்புகள் அமைகின்றது.

இந்த உறுப்புகள் உடலில் அமைந்தபின், நாம் அந்த அருள் ஒளியை, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். உயிர் ஒளியானது ஒவ்வொன்றிலும் தனுஷ்கோடி. எல்லாவற்றையும் சேர்த்து உயிர் எப்படி ஆனதோ, ஒன்றாக அமைத்ததோ, இதுதான் தனுஷ்கோடி என்று சொல்வது. இப்பொழுது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா?

அதுதான் கோடிக்கரையில் இருக்கிறோம். எல்லாவற்றையும், இந்த கோடிக்கரை என்று ஒன்றாகச் சேர்கக வேண்டும், என்ற நிலையில் நாம் இன்று இருக்கிறோம். நேரமாகிவிட்டது என்று இராமன் என்ன செய்கிறான்? மணலைக் கூட்டிச் சேர்க்கிறான். இது ஒரே நாளில் முடியுமோ?

இந்த கோடிக்கரையில் இருந்து, நாம் எல்லாவற்றையும் உயிரைப் போன்று உணர்வின் ஒளியாகி, நீங்கள் எல்லோரும் நல்லவராக வேண்டும் என்ற உணர்வை, என்னுடன் இணைத்து விடுகின்றது.

உங்களில் தீமை என்ற உணர்வை நீக்கத்தான், அருள் ஒளி என்ற உணர்வை உங்களில் சேர்க்கிறோம். அதே சமயத்தில், எல்லோரும் அதைப் பெறவேண்டும் என்று எண்ணுகிறோம்.
அவர்கள், அதைப் பெற்றால் பரவாயில்லை.
பெறவில்லை என்றால்,
அவர்கள் பெறவேண்டும் என்ற உணர்வு,
என்னுள் உள்ளது.
என் உடலுக்குள் அந்த உணர்வுகள் பெருகுகின்றது.
நீங்கள் பெறவேண்டுமென்று யாம் எண்ணுகிறோம்.
இந்த உணர்வுகள் எனக்குள் வருகிறது.

ஒருவர் திட்டினார் என்று வைத்துக் கொள்ளுங்கள், உங்களைத் திட்டியவர்களை எண்ணினால், புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.

அப்படி உங்களை நினைக்கும்போது, அந்த துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை நான் பெறவேண்டும், என்று நீங்களே இதைப் பெற்றிடவேண்டும். அதாவது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். என் உடல் முழுவதும் பெறவேண்டும் என் ஜீவாத்மா பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு, அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது, இந்த உணர்வு நமக்குள் வருகிறது. அவர்கள் உணர்வு பதிவாகிறது.  இதனுடன் கலந்து, இதை யாம் மாற்றிவிடுகின்றோம்.

அப்பொழுது, துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்துவிடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றிவிடுகிறோம். இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழிவேண்டுமல்லவா!

அது கலந்தவுடன், இதை மாற்றிவிட்டு,  துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும், என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம். அதைக் கொடுத்தவுடன், 
நாம் கலந்து போவதை, எடுத்துப் பழக வேண்டும்.
ஒன்றில்லாது ஒன்றில்லை.
எதுவுமே, ஒன்று இணைந்தால்தான், அது வளரும்.

ஏனென்றால், வடதுருவத்தில் இருப்பது  இழுக்கும்.  தென் துருவத்தில் இருப்பது தள்ளும்.  ஏனென்றால், தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது. வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது.  காந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால், தள்ளிக் கொண்டே போகும்.

இதைப் போன்று, நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

நம் உடலில் உள்ள இரத்தத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும், நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த மகரிஷிகள்  சென்று அடைந்த எல்லையை நாம் அடைய வேண்டும், எமது அருளாசிகள். 
(பக்கம் -88)
எனவேஇந்நேரம் வரையிலும் நமது குரு எமக்கு கொடுத்தது எதுவோஅதை உங்களுக்குள் பெறவேண்டும் என்று எல்லா அணுக்களிலும் சொல்லிவிட்டோம். நீங்கள் மனிதராகப் .பிறந்ததிலிருந்து எது வருகிறதோஅந்த உணர்வுகளுக்கெல்லாம் கொஞ்சம் தொட்டுவிட்டவுடன்நீங்கள் நுகர்ந்த உணர்வுஇரத்தத்தில் கலந்து அது கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட ஆரம்பிக்கும்.

அதை நீங்கள் தொடர்ந்துஅந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வு பெறவேண்டும் என்ற நல்ல சாப்பாடு கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால்ஓரளவு தெளிவாகிவிடும்.

நாம் இயங்கவில்லை. அணுவின் இயக்கமாகத் தான் இருக்கின்றோமே தவிரஆக எடுத்ததை உயிர் இயக்குகிறது.  நாம்உயிராக மாறிவிட வேண்டும். 

அந்த அருள் உணர்வை எடுத்துஇதை எடுத்தோம் என்றால்இந்த உணர்வு ஒளியாக மாறிவிடுகிறது. இப்படியானால், நாம் முழுமுதல் கடவுளாக ஆகி விடுகிறோம்.  

எல்லாவற்றிலும்தீமையை அகற்றி உருவாக்கும் சக்தி பெறுகிறோம். அதனால் தான் முழுமுதல் கடவுள்.

 (பக்கம் 93-95)
ஆக நாம் எதைச் சொந்தமாக்க வேண்டும்நமது உயிருடன் ஒன்றி வாழ்ந்துஇந்த உயிருடன் ஒன்றி வாழும் அந்த ஒளியின் சரீரத்தை நாம் நமக்குச் சொந்தமாக்க வேண்டும்.
ஆகையால், நாம்  ஒவ்வொருவரும், உலகுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நமது கடமைகளிலிருந்து தவறக் கூடாது.
அருள் ஒளி என்ற உணர்வுகளை,
நமது உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுத்து,
துருவ நட்சத்திரத்தின் உணர்வை
குருவழியில் பாய்ச்சி,
அது கடமையாக அமைத்து,
அந்த அருள் வழியில்
ஒளியாக மாற்றும் இந்த உணர்வு பெறவேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. இந்த உயிர்தான் நமக்குச் சொந்தம். அவன் உணர்வைஎல்லாமே ஒளியாக மாற்றிவிட்டால்தனுஷ்கோடிஇதை நமக்குள் எடுத்துலட்சம் என்கிற பொழுது அந்த லட்சம்இந்த லட்சம் என்றும்ஒன்றுஇரண்டுமூன்று என்ற நிலைகள் வரும்போதுபல லட்சம் ஆகிறது. அப்பொழுது,  எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்கும் போதுகோடி என்ற நிலைகளில் தனுஷ்கோடியாகின்றது.  எவ்வளவு அழகாக இராமாயாணத்தில் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆகையால்நாம் அனைவரும் இதனுடைய உணர்வுகளை வளர்த்துஅந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்துஅதனுடன் சேர்த்த உணர்வின் தன்மை ஒன்றாக இணைத்துவரும் விஷ உணர்வுகளைநீங்கள் விடும் மூச்சலைகளால் மாற்றியமைத்துநாளை வரும் விஞ்ஞான அழிவிலிருந்து நீங்கள் எல்லாம் காக்கப்படவேண்டும்.

நியூட்ரான் என்ற நிலைகள் வரப்படும் பொழுதுஎப்படி எல்லாவற்றையும் விரட்டுகின்றதோஇதே போல் அருள் உணர்வை நீங்கள் அனைவரும் பரப்பிஒரு கிராமத்தில் இருக்கின்றோம் என்றால்அங்கே கொள்ளை நோயோகலவரங்களோஇதைப் போன்ற சில நிலைகள் இருந்தால்அனைவரும் கூட்டுத் தியானமிருந்துஅந்த துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்திகளைக் கவர்ந்துஉங்கள் மூச்சலைகளை அங்கே பரப்புங்கள். அப்பொழுதுஅந்த கிராமத்தில் உள்ள தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் மாறுகின்றது.

சில ஊர்களில் விவசாயம் மிக மோசமாக இருக்கிறது என்று தெரிந்தால்நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று கூட்டுத் தியானமிருந்துஇந்தப் பயிரினங்களில் இந்த சக்தி படரவேண்டும் என்றும்இதில் உருவாகும் அணுக்கள்தாவர இனத்தை வளர்க்கும் அணுவாக வளர வேண்டும் என்றும்அந்த அருள் உணர்வுகளைப் பரப்ப வேண்டும்.

எனென்றால்காற்றிலிருந்து விஷத்தின் தன்மையை நுகர்ந்துஅது அணுவாகி அதைச் சாப்பிடுகிறது. அதே சமயத்தில்நாம் எடுக்கும் உணர்வு கொண்டுஅந்த விஷத்தன்மையை எடுத்தாலும்இது காற்றிலிருந்து வெளிப்படும் செடியின் சத்தை நுகர்ந்துஅந்த உணர்வின் மலத்தை இடும்போதுஅது உரச் சத்தாக மாறும். அந்த அணுவும் வளரும்சொல்வது அர்த்தமாகிறதல்லவா. 

ஆகநீங்கள் விட்ட மூச்சலைகள் நல்ல அணுக்களாகின்றது. எனவேஇதை போன்ற நிலைகளில்
நாம் நம்மைக் காக்கவேண்டும்.
நாம் ஊரைக் காக்க வேண்டும்
நம் குடும்பத்தைக் காத்தால் தான்,
ஊரையே காக்க முடியும். இதைப் போல் நாம் அனைவரும் செயல்படவேண்டும். எமது அருளாசிகள்.

பக்கம் 98-101)

நமக்குள் எல்லா உயிரும் கடவுள், எல்லா உடலும் கோவில். அந்த கோவிலுக்குள் அசுத்தம் சேராது,  நமக்குள் அருள் ஒளியென்ற உணர்வைப் படரச் செய்து, மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டுவதே, நம்முடைய வேலையாக இருக்க வேண்டும்.

ஆக, பிறரின் உணர்வை நமக்குள் சேரவிடாமல், நாம் நம் உடலான கோயிலுக்குள் அருள் ஞானத்தைப் புகுத்தி, இந்தக் கோயிலை எப்போதும் மகிழ்ச்சி என்ற நிலைகளில் உருவாக்க வேண்டும்.

குருநாதர் எனக்கு இப்படித்தான் உபதேசித்தார். அவர், என்னைப் புருவ மத்தியில் பார்க்கச் சொன்னார். இப்போது, அதே மாதிரி நீங்களும் பாருங்கள். நம் குரு காட்டிய அருள் வழியில் அருளுணர்வுகளைப் பெறுவோம்.

பின்,  அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று  உங்கள் புருவ மத்தியில் ஏங்கியிருங்கள். அது சமயம்,
இந்த உணர்வுக்குள்ளும்,
நம் குரு உணர்வுக்குள்ளும்,
துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள்ளும்,
நம் உணர்வுகள்   எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்க்கிறோம். 
அப்படி ஒன்றாகச் சேர்த்து, வலிமையான நிலைகள் பெறச் செய்கிறோம்.         

இவ்வாறு, நீங்கள் அனைவரும் மெய்பொருள் காணும் திறன் பெற்று,
நம் குடும்பத்தில் அதைப் பரவச் செய்து,
நம் தெருவுக்குள்ளும் அதைப் பரவச் செய்து,
நம் ஊருக்குள்ளும் அதை பரவச் செய்து,
இந்த உலகமே உய்யவேண்டும் என்ற நிலை வரவேண்டும்.

ஆகையினால், அந்த நிலையை நமக்குள் சேர்ப்போம்.  உலகம் அனைத்தும் நம் உடல்.  உலகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், இந்த உடலான உலகிற்குள்ளும், அருள் உணர்வுகள் நலம் பெறும் சக்தியாக மாற வேண்டும். 

எல்லோருடைய உணர்வைச் சேர்த்துத் தான், நம் உடல் இயங்குகின்றது.  நாம் தனித்து வாழவில்லை.  ஆகையினால், இதே மாதிரி செய்து வாருங்கள்.

(பக்கம் 103-105)
உங்கள் ஊரிலும் சரி, சொந்த பந்தங்களிலும் சரி, வருகின்ற அவர்களின் உணர்வுகளை உங்களுக்குள் புகவிடாதீர்கள். அருள் உணர்வு கொண்டு அவர்களை மாற்ற, இந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆக, இந்த அருளுணர்வுகளை உங்களுக்குள் பெருக்கி,  அந்த அகஸ்தியர் காலத்தில் எது நடந்ததோ, அதன் உணர்வுகள் கொண்டு,  தீமைகளை அகற்றி, மெய்பொருள் காணும் சக்தியை நாமும் பெற்று, இந்த உலகில் வாழும் மக்களை அறியாமையில் இருந்து விடுபடச் செய்து, அருள்ஞானிகளின் உணர்வைப் பெருக்கச் செய்யும் அந்தச் சக்திகளை நாம் பெறுதல் வேண்டும். அதற்காகவே நாம் ஆயுள் மெம்பரானோம்.

இவ்வாறு, இந்த அருள் உணர்வுகளை நீங்கள் சொல்லும் போது, பிறருடைய உடல்களில் புகச்செய்து, அவர்களின் அறியாமையை நீக்கச் செய்து, சிந்திக்கச் செய்யும் சக்தியை ஊட்டுகிறது.

இது போன்று நாம் சொல்லும் போது, தியானமெடுத்த உணர்வுகள் வெளிப்பட்டு, யாம் பேசியது உங்கள் செவிகளில் பட்டபின், கண் கவர்கின்றது. உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது. உயிரினுடைய காந்தம் கவர்கின்றது. அந்த உணர்ச்சியை, உங்கள் உடல் முழுவதும் படர செய்கின்றது.

ஆக, ஒவ்வொரு உணர்வுக்குள்ளும், இந்த தீமைகளை நீக்கிய உணர்வுகளை பரவ செய்யும் போது, அந்த உணர்வின் தன்மை ஞானமாகி, நமக்குள் அந்த எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்களானாலும் சரி, எடுத்துக் கொண்ட உணர்வுகளும் சரி,  நம் உடலும் சரி, இந்த உணர்வுக்கொப்ப தான் நம்மைச் செயலாக்கும்.

ஆகையால், நாம் அனைவரும் இந்த உலகிற்காக, குரு காட்டிய வழியில், அகஸ்தியன் சென்ற பாதையில் சென்று, இருளை அகற்றி, அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி, நாம் அனைவரும் அருள் ஞானிகளாக மாறவேண்டும்.

நமது பார்வையும் பேச்சும், பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும்.

நம்முடைய பேச்சும் மூச்சும் பிறரைச் சிந்திக்கும்படி, நல்ல சிந்தனை ஆகும்படி செய்ய வேண்டும்.

நாம் பார்க்கும் பார்வையில், அவர்கள் நலம் பெறும் சக்தியாக மாறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில், வளம் பெறும் நிலையாக இருக்க வேண்டும்.

நமது பார்வையே, பிறருடைய தீமைகளையும் நோய்களையும் போக்கும் சக்தியாக பெறவேண்டும். அவர்களின் நோயின் உணர்வுகளோ, சங்கடங்களோ, நமக்குள் புகாது தடுத்து நிறுத்தும் அருள் சக்தியாக நீங்கள் மாறவேண்டும்.
(பக்கம் 108-113)

நாம் உலகுக்கே எடுத்துக் காட்டும் நிலைகளில், நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகளைப் பெறச் செய்து, இதற்கு முன்னால், அறியாமல் சேர்ந்த நிலைகள் நம்மை இயக்கச் செய்தாலும், தடுத்து பழக வேண்டும்.

ஏனென்றால்,  ஒரு பொருள் கெட்டுப் போய்விட்டதென்றால், மறுபடியும் அதைத் திருப்பிச் செய்கிறோம். ஒரு கட்டத்தில் குறையானால், அதை நிறுத்தி, நாம் செயல்படவேண்டும்.

ஒரு செடியின் தன்மையில் அதன் வளர்ச்சி குன்றினால், அதற்கு என்ன பக்குவம் வேண்டும் என்று வளர்க்கச் செய்கின்றோம். இதைப் போல,  நாம் ஒவ்வொன்றிலும், நம் வாழ்க்கையில் இப்படிச் செய்தேனே, இப்படி இருந்தேனே, என்பதை மறந்துவிடுங்கள்.

நாம் எப்படி இருக்க வேண்டும்? நல்ல உணர்வுகளை வளர்க்க வேண்டும். இருளை அகற்றும் அருள் சக்தி பெறவேண்டும். நம் குரு அருளால், அந்த மெய்ப் பொருளைக் காணும் நிலையும் நமக்குள் வரவேண்டும். அனைவரும் அந்த மெய்பொருள் கண்டு, அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெறவேண்டும். எனவே, இதை உங்களுக்கு சொந்தமாக்குங்கள்.

இன்றைய உலகில் விஞ்ஞான நிலைகள் கொண்டு, எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை, நாம் காண, சுவாசிக்க நேருகின்றது. விஞ்ஞான அறிவால், உலகைக் காக்கவேண்டும் என்ற நிலை இல்லாமல், தன்னைக் காக்க, தன் நாட்டைக் காக்க என்று பிழை கொண்ட உணர்வுகளைத் தான், இன்று செய்கின்றார்கள்.

ஆகவே, இப்போது நாம் உலக மக்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும், நமக்குள் வீரிய உணர்வின் தன்மை இருந்தாலும், நாம் நல்லதை எண்ணும் போது, இதனுடைய (விஷதன்மைகளின்) அழுத்தம் நல்ல குணங்களை சிந்திக்கும்படி செய்வதோ, நல்ல குணங்களை செயல்படுத்தும் நிலையோ இல்லாது போகும்.

அப்போது, நமக்குள் இந்த எதிர்மறையான உணர்வுகளால்,
நல்ல உணர்வுகளைத் தூண்டும்
அந்த அணுக்களின் தன்மையைத் தடைபடுத்தும். 
இதை மாற்ற வேண்டுமென்றால், 
திசை திருப்புவது போல சக்தி வாய்ந்த நிலைகளில்,
நமது குருநாதர், எமக்கு கொடுத்த
அரும்பெரும் அருள் சக்தியை,
அப்படியே உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.
ஒவ்வொரு நொடியிலும், நீங்கள் இதை வளர்க்க வேண்டும்.

உங்கள் பேச்சாலும், மூச்சாலும், ஒருவருக்கு நோய் போக வேண்டுமென்று சொல்லுங்கள். அந்த நோய் உங்களுக்கு வராது. நீங்கள் அனைவரும், பிணிகளை போக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அருள் ஞானத்தை வளர்க்கக் கூடிய நிலைகளில் இருக்க வேண்டும். 

அவர்களின் உணர்வு, உங்களுக்குள் வருவதாகவே இருக்க கூடாது.  நம் உடலில் முந்தைய நிலைகளின் உணர்வுகள் இருந்தால், அது நம்முள் பெருகாது தடைப்படுத்தவும் வேண்டும். அதைத் தடைப்படுத்தி, தீமைகள் புகாத உணர்வின் தன்மையை நம் உடலுக்குள் வளர்க்கின்றோம்.

ஒவ்வொரு நொடியிலும், தீமையைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணுங்கள். அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் தொடர்பு கொள்ளுங்கள்.  அந்த உணர்வு உங்களுக்குள் வலு பெறும். அந்த வலு பெற்று, தீமைகளை நீக்கி பழகுங்கள். இது உங்களுக்குள் ஒன்றி ஒளியாக மாறும். இது தான் விஷ்ணு தனுசு.

ஆக உயிருடன் ஒன்றி, தீமைகள் புகாது, தீமையின் உடலை நமக்குள் உருவாக்கும் நிலையைத் தடைப்படுத்தும் நிலைகளாக உணர்வின் இயக்கங்களைப் பற்றி, இராமாயணத்தில் மிக அழகாகக் கொடுத்திருக்கிறார்கள். அது அனைத்தையும் உங்களுக்குள் உபதேசித்துள்ளோம்.

யாம் கண்ட உண்மையின் உணர்வுகள்,
குருநாதர் பேரண்டத்தைக் கண்ட உணர்வுகள்,
அகஸ்தியன் அறிந்துணர்ந்து கண்ட உணர்வுகள்,
அவன் துருவனான அந்த உணர்வுகள்

இவை  அனைத்தையும்,  உங்களில் நீங்கள் காணலாம்.  அவர்கள் இருளை அகற்றி ஒளியென்ற உணர்வு பெற்ற அந்த நிலைகளை, நீங்களும் பெறுகின்றீர்கள்.

(பக்கம் 108-113)
ஈசனுக்கு முன் நாம் எல்லோரும் ஒன்று.
நாம் உருவாக்கும் நிலைகள் எல்லாம் ஒன்றி, 
நமது உயிர் ஈசனாகின்றது.
அவன் அமைத்த கோட்டை இந்த உடல்.
இந்த கோட்டையை, 
நாம் எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.
அவனுக்குள் ஒன்றி, அவனாகவே ஆகவேண்டும்.

என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா என்று நாம் சொல்லும் இந்த உணர்வுகள், ஒலி, ஒளி என்ற நிலையில் உயிர் என்று ஆகின்றது.
நீயே தான் நான், நானே தான் நீ
என்று உயிரோடு ஒன்றி ஒளியென்ற நிலை நாம் என்றும் பெற்றிடுவோம்.

இந்த உலகில் எது, எப்படி இருந்தாலும்  அந்த அகஸ்தியன் உணர்வு ஒன்றுதான், இந்த உலகை இருளில் இருந்து, மீண்டும் மீட்டும்.  இது நிச்சயம்.
அதனால் தான், தெற்கே தோன்றிய நிலைகளில், சில முக்கிய தத்துவம் உண்டு. பல அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். நமது குருதேவருக்கும், அதில் பங்கு உண்டு.

இருந்தாலும், இதனை எடுத்துப் பெருமைப்பட வேண்டியதில்லை. உங்கள் உணர்வில், நீங்கள் அறிந்து கொள்ளக் கூடிய நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய ஞானத்தின் நிலைகளில் தனக்குள் பெருக்கி, கூடுவிட்டு கூடு பாய்ந்தார் நமது குருதேவர். தெளிந்த மனம் கொண்டு கோடி என்னும் கடைசி நிலையான ஈஸ்வரா: என்ற உணர்வின் தன்மையைப் பெற்றவர்.

இது நேரம் வரை, அந்த அருளைப் பாய்ச்சினார். அவரின் அருள் துணை கொண்டு, அந்த பேரருளைப் பெற்றோம். அந்தப் பேரருளைக் கொண்டு, நாம் அனைவரும் அந்த பேரொளியைப் பெறவேண்டும், பெறுவோம். எமது அருளாசிகள்.