
காற்று மண்டலத்தில் நாம் அனைவரும் பரப்ப வேண்டிய அருள் சக்திகள்
இன்றைய உலகில் ஆசையில் செல்கின்றார்கள். எந்த ஆசையை எடுத்துக் கொண்டார்களோ அதன் தன்மையில் தான் செல்கின்றார்கள்.
1.ஆனால் நாம் அருள் ஞானிகள் காட்டிய உணர்வினை... காவியத் தொகுப்பினை மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
2.நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானிகள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கப்படும் பொழுது அது நமக்குள் வளர்கின்றது.
குறைகளைக் காணும் பொழுது குறை வளர்கின்றது.
அதே போன்று அந்த அருள் உணர்வுகள் எல்லோருக்குள்ளும் வளர வேண்டும் என்றால் துருவ தியானத்தில் நாம் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களையும் அதைக் கேட்க வைக்க வேண்டும்.
1.அந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ளவும்
2.சொல்லாக வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொள்ளவும்
3.கேட்போர் உணர்வுகளில் பதிவாகவும்
4.அதை அவர்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அவர்களை அதை நுகரும்படி செய்ய வேண்டும்.
ஏனென்றால் நமக்குள் உருவான அருள் ஞானிகள் உணர்வின் தன்மையை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்.
எம்மைச் சந்திக்க இரண்டு பேர் வந்தாலும் மூன்று பேர் இருந்தாலும் நான் இந்த அருள் உணர்வுகளைச் சொல்லிக் கொண்டே இருப்பேன்.
இருவருக்குப் பதிவு செய்தாலும் அவர்களுக்குள் அந்த அருள் உணர்வுகளை வளர்த்து
1.அவர்கள் அடுத்து அதைச் சொல்லால் சொல்லும் பொழுது காற்றில் பெருகி
2.அந்த அருள் சக்திகளை மற்றவர்கள் எடுக்க ஏதுவாக இருக்கும்... அவர்களையும் காக்க உதவும்.
அதற்காக வேண்டித் தான் அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை எனக்குள் இந்த உடல் வாழ்க்கையில் வளர்த்துக் கொண்டே உள்ளேன். எல்லோரும் அந்த அருள் ஞான உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இதே வழியினை ஒவ்வொருவரும் செயல்படுத்தும் படி வேண்டிக் கொள்கின்றேன்.
அருள் ஞானத்தை ஒவ்வொருவரும் வளர்த்து வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி நோய்களைப் போக்கி அந்த அருள் உணர்வுகளை வளர்த்திடும் சந்தர்ப்பமாக அமைக்க வேண்டும்.
ஆகவே
1.அருள் ஞானத்தை நாம் அழியாச் சொத்தாகச் சேமிப்போம்.
2.இருளை வென்று ஒளியினை உருவாக்கும் தன்மையை நாம் அனைவரும் பெறுவோம்.







