
ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலகம் சென்றானோ அந்த வழியில் நாமும் செல்ல வேண்டும்
அன்னை தந்தையர் அருளாசி பெற வேண்டும் என்று அனு தினமும் நாம் எண்ணி அவர்களிடம் அதைப்
பெற வேண்டும்.
1.பேரண்டமும் பேருலகமும் உன் அன்னை
தந்தையர் தான் என்ற உணர்வு கொண்டு
2.இந்த இணைப்பின் பிணைப்பின் நிலைகள் வரப்படும் பொழுது தான் முழுமை அடைய
முடியும் என்று
3.அதை முதலில் வினையாகச் சேர்க்கச் சொல்லி… நமக்குள் ஊழ்வினையாக
4.”அந்த வினைக்கு நாயகனாக நீ ஆக வேண்டும்…” என்று நாரதன்
ஞானக் கனியைக் கொடுக்கின்றான் என்று
ஞானிகள் அன்று காட்டினார்கள்.
நம் அன்னை தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து சென்று
விட்டால் விநாயகரைப் பார்க்கப்படும் பொழுது எவ்வாறு எண்ண வேண்டும்…? என்ற நிலையையும் அன்று
ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள்.
உடலை விட்டுப் பிரிந்து
சென்ற என் அன்னை தந்தையரின் உயிரான்மாக்கள் எங்கள் குலதெய்மான
உயிரான்மாக்கள்
1.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த அகஸ்திய மாமகரிஷியின்
அருள் வட்டத்திலே இணைந்து
2.என்றும் அழியா ஒளிச் சரீரம்
பெற வேண்டும் என்று இந்த உணர்வினை அங்கே உந்தி
3.இன்னோரு உடல் பெறும் நிலைகளை மாற்றிப்
பிறவாநிலை பெறச் செய்வதற்கு
4.அந்த இணைப்பின் தன்மையைக் கொண்டு வரச் சொன்னார்கள்.
இதை உணர்த்திய ஞானி விண்ணிலே
இருக்கின்றான். அவன் உணர்வை நமக்குள் கூட்டி இந்த உணர்வினை நினைவுபடுத்தி இணைத்துக் கொண்டபின் இந்த உயிரான்மா பிறவா நிலை பெற
வேண்டும் என்று முதலில் செயல்படுத்தும் முறையைச் சொன்னான்.
1.ஆகவே
அந்த வினையை வினைக்கு நாயகனாக ஆக்கி அதனின்
உணர்வு கொண்டு
2.”ஒளியின் சரீரமாக வினைக்கு நாயகனாக நீ ஆகு…” என்ற நிலையை உணர்த்தினார்கள்.
உடலை விட்டுச் பிரிந்து
சென்ற உயிரான்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும். என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும். குழந்தையாக வாழும் காலத்தில் எங்களுக்கு வழி காட்டியது போன்று
1.பொருளறிந்து செயல்படும் உணர்வின் சுடராக எங்கள்
உணர்வுக்குள் நின்று
2.”எங்களுக்கு என்றென்றும் வழி காட்ட வேண்டும்…” என்று
இப்படித்தான்… இந்த வினையை வினைக்கு நாயகனாக்க வேண்டும்.
மனித வாழ்வில் விண் சென்ற மெய் ஞானி எங்கே
அடைந்தானோ எங்கள் அன்னை தந்தையர் அந்த எல்லையை முதலில் அடைய வேண்டும் என்று காட்டி… “அதற்குப் பின் தான் நாம் அங்கே செல்ல முடியும்…” என்பதையும் உணர்த்தினார்கள்.
அன்னை தந்தையர் முதலிலே மனிதனாக ஆனார்கள். அடுத்து நம்மை
மனிதனாக உருவாக்கினார்கள். மனிதனான பின்
1.மனித நிலையிலிருந்து உணர்வினை ஒளியாக மாற்றித்
தான் முதல் மனிதன் அகஸ்தியன் விண் சென்றான்.
2.அணுவின் ஆற்றலை அறிந்தான்… உணர்வின்
தன்மை ஒளியாக மாற்றினான்.
அதே வினையைத்
தன் அன்னை தந்தையருக்கு அது வினைக்கு நாயகனாக
ஆக்க வேண்டும் என்று அவர்களையும் இணைத்தே விண் சென்றான்… ஒருக்கிணைந்து செயல்படும் தன்மையை அங்கே உருவாக்கினான்.
விநாயகரைக்
காட்டப்படும் பொழுது அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள். அந்த அரச மரம் விண்வெளியில் தன்னிச்சையாகத் தன் சத்தை எடுத்து வளர்கின்றது.
அதே போல்…
1.மனிதன் நீ அரசைப் போல் என்றும் நிலையான நிலையில் நீ ஒங்கி வளர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் ஒளி வட்டத்தில் நீ இணைய வேண்டும் என்று உணர்த்துவதற்கு
3.சூட்சும நிலையில் நடப்பதை உருவத்தைக் காட்டிச் சொல்லின் உணர்வு கொண்டு வினையாகப் பதிவு செய்து
4.வினைக்கு நாயகனாகச் சுவாசித்து அதை
உடலாக உனக்குள் சேர்த்துக் கொள் என்று காட்டினான்.
ஓ…ம் நமச்சிவாய
சிவாய நம ஓ…ம் என்று மனிதன் எண்ணிய உணர்வுகள் இங்கே இயங்கினாலும் அதைச்
சிவமாக்கி சிவத்தின் தன்மை ஒளியின் சுடராக என்றும் நிலையாக ஒளியின் சரீரம் பெற
வேண்டும்.
அன்னை தந்தையரை நினைத்து
நீ இதைச் செயல்படுத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.அன்னை தந்தையர் அங்கே ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணினால் தான் அது சரியாக இருக்கும்.
2.அவர்கள்
முன் செல்கிறார்கள்… அவர்கள் வழியில் அடுத்து நாமும்
ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.