
துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து “அதையே முன்னிலைப்படுத்த வேண்டும்”
ஒரு
குழம்பை வைக்கிறோம் என்றால் பல சரக்குகளை அதனுடன் இணைக்கின்றோம். அதிலே
1.உப்பு
அதிகரித்தால் கைப்பின் நிலையே வரும்.
2.இனிப்பின் சத்தைக்
கலந்து விட்டால் இனிப்பின் நிலையே வரும்.
3.காரத்தை
அதிகரித்து விட்டால் காரத்தின் உணர்வின் செயலாகவே அது உள்ளடங்கும்.
இதை
போலத்தான் மனிதனுக்குள் வளர்த்துக் கொண்ட குணங்கள் பல பல இருப்பினும் ஒரு
குழம்பிற்குள் கூட்டாக வைப்பது போல…
உயர்ந்த குணங்கள் கொண்டு மனிதன் இருப்பினும்… இரக்க
உணர்வு கொண்டு பிறருடைய துயரைக் கேட்டறிந்து நன்மைகள் செய்தாலும்… அந்த இரக்கத்தால் ஈர்த்துக் கொண்ட வேதனை உணர்வுகள் உடலுக்குள் சிறுகச்
சிறுகக் கலந்து விடுகிறது.
குழம்பிற்குள்
நஞ்சைக் கலந்து உணவாக உட்கொண்டால் எப்படி மயக்கப்படும் நிலை வருகிறதோ அது போல நல்ல உணர்வின்
சத்துக்கள் நமக்குள் இருப்பினும்
1.வேதனையான
உணர்வுகளை நம் ஆன்மாவிலே கலக்கப்படும் பொழுது
2.நம்மை அறியாமலே அடிக்கடி
வேதனை என்று சொல்லே
வரும்… வேதனை என்ற
நினைவே வரும்.
3.அதைக்
கொண்டு வாழ்க்கையை பலவீனப்படுத்தச் செய்யும்
4.எதையுமே
சரியாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
வேதனையை
எடுத்தோம் என்றால் அது உமிழ் நீராக
மாற்றப்பட்டு நம் உணவுடன் கலக்கப்பட்டு அந்த வேதனையே உணவுடன் கலந்து இரத்தங்களாக
மாறுகின்றது. வேதனை என்பது நஞ்சு.
பல
பொருள்களைப் போட்டு அதனுடன்
எந்த வாசனையான பொருளை இணைக்கின்றோமோ அந்த வாசனையின் தன்மையாகவே “சுவை”
இருக்கும்.
இதைப்
போலத் தான் நம் உடலுக்குள் உயர்ந்த குணங்கள் இருப்பினும்
1.வேதனையை எடுக்க எடுக்க நஞ்சு கலந்த உணர்வின் தன்மை உணவுடன் கலக்கப்பட்டு உணர்வின் சுவையை மாற்றி விடுகின்றது.
2.அதிலே
கலந்து அது ரசமாக மாற்றப்படும் பொழுது அது இரத்தமாக மாறுகின்றது.
அந்த இரத்தத்தினை உடலில் உள்ள வால்வுகள் இழுத்து உடலுக்குள் பரவச் செய்யும்.
அல்லது அதை வடிகட்டும் நிலையில் கொண்டு கிட்னி கல்லீரல் இவைகளுக்கு எடுத்து
அனுப்பும்.
இரத்தமாக
மாறியதை அனுப்பும் பொழுது
1.முதல் வால்விலே இந்த நஞ்சின்
தன்மை தாக்கிய பின் வீக்கமடைந்து விடுகின்றது.
2.உருவான
இந்த இரத்தத்தை ஈர்க்கும் தன்மையும் அது இழந்து விடுகின்றது… பின்
எரிச்சல் வருகின்றது.
அடுத்த
பிஸ்டன் இந்த இரத்தத்தை உடலுக்குள் இழுப்பதற்கு முன்னால் இது இழுத்தவுடன்
அதனுடைய தொடர் வரிசைக்குக்
கிடைக்கவில்லை என்றால் “அங்கே
பளீர்ர்…
என்று மின்னும்…”
காரணம் அந்த இரத்தத்தை
உறிஞ்சினால் இதற்கு வலு
இருக்காது விஷம் கலந்த நிலைகள் கொண்டால் அந்த நஞ்சினால் மயக்கம் வரும்.
விஷத்தின்
தன்மை அதிகரிக்கும் பொழுது வால்விலே
வீக்கம் ஏற்பட்டு இரத்தம் அதிகமாக அதன் வழி புகும் நிலை இழக்கப்படுகின்றது. அப்பொழுது எரிச்சலாகிறது.
1.ஒரு
பக்கம் எரிச்சலாகும்
2.மறு பக்கம் பளீர்ர்…
என்று மின்னும்.
ஆனாலும்
திருப்பி எடுக்கும் நிலைகள்
கொண்டு இரத்தம் வரவில்லை என்றால் வாய்வின் தன்மை பளீர்ர்… என்று ஊடுருவிச் சென்று ஆகாரம் இல்லாத நிலைகளாக மற்றதை
இயக்கச் செய்யும். அப்பொழுது அங்கே வலி அதிகமாகும்.
மருத்துவரிடம்
சென்றால் இது ஹார்ட் அட்டாக் என்று சொல்வார்கள்.
1.விஷத்தின்
தன்மை அதிகரித்து விட்டால் நாடியின் துடிப்புகளும்
குறையும்.
2.நாடியின் துடிப்பு ஒரு நொடிக்கு இவ்வளவு இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி
வேதனைப்படுவோருக்கு அது குறையாக இருக்கும்.
3.மருத்துவரும்
இதை உறுதிப்படுத்தி அதற்கு வேண்டிய உதவிக் கருவிகளை
மாற்ற வேண்டும் என்பார்.
4.அதை
வைத்து இந்தத் துடிப்பைச்
சீர்படுத்தினால் தான் வாழ முடியும்…
இல்லையென்றால் இருதயம் நின்று விடும் என்பார்.
விஞ்ஞான
அறிவுப்படி அதைச் செய்தோம் என்றால் அதன் வழி வாழலாம் சிறிது காலம்.
ஆனால்
மெய் ஞானிகள் காட்டிய முறைப்படி யாம் சொல்லும் இந்தக் கூட்டுத்
தியானங்களின் மூலம் ஈஸ்வரா…!
என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் உணர்வை எடுத்து என்ற இந்த இயக்கத்தின் தொடரை
நாம் ஈர்ப்போம்
என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்து ஆகாரத்துடன் கலந்து
2.இரத்தத்தில் உள்ள நஞ்சினைக் குறைக்கச்
செய்யும்… நாடித் துடிப்பின் வேகத்தைக்
கூட்டச் செய்யும்.
ஹார்ட் அட்டாக் வருவதன் காரணமே… மற்றவர்கள் பட்ட வேதனையை… அவர்களுக்குள் துடிப்பு குறைந்த நிலையை நுகர்ந்தது..
அந்த நஞ்சான உணர்வுகள் நம் இரத்தத்திலே
கலந்தது… இருதயத்தின் வால்வுகள்
அதனால் சீராக இயங்க முடியவில்லை.
இந்த
உணர்வின் சத்து உடல் முழுவதும்
பரப்பப்படும் பொழுது மற்ற உறுப்புகளும் செயலற்றதாக ஆகிவிடுகின்றது.
மற்றவருடைய
வேதனைகளைக் கேட்டு உபகாரம் செய்தாலும் அந்த வேதனையான உணர்வுகளை
உயிர் இயக்கி அதை உணர்த்தினாலும்…
உணர்த்திய உணர்வின் சத்து உணவுடன் உமிழ் நீராகச்
சுரக்கப்பட்டு… இந்த அமிலத்தின் சத்து இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது வால்வுகள் சீர் கெடுகின்றது.
இருதயத்திற்குள் சென்ற இதே இரத்தம் கிட்னிக்கு
வந்தால் சிறுகச் சிறுக அதையும் சீராக இயக்க விடாது தடுத்து விடுகிறது. இரத்தத்தில் வரும் தீமைகளை அகற்றும் தன்மையை கிட்னி இழந்து
விடுகின்றது.
இதைப் போல பல நிலைகள் வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்குத் தான் கூட்டுத் தியானங்கள் மூலம்
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
மற்றவர்கள்
துன்பப்படுவதைப் பார்க்க நேர்ந்தால்… அடுத்த கணம்
ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை அவ்வப்போது உடனுக்குடன் நுகர்ந்து பழக வேண்டும்.
உடனுக்குடன் கவரும் அந்தத்
திறன் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக…
1.மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகளை எனக்குள் பதிவு செய்து இது எவ்வாறு இயக்குகிறது…?
என்று
2.உணர்த்திய
உணர்வவினை எனக்கு
உபதேசித்த முறையிலேயே உங்களுக்கும் அதைக்
கொடுக்கின்றேன்.
கேட்டறிந்த
உணர்வுகள் பதிவாகி… மீண்டும் நீங்கள் நினைவு
கொள்ளும் பொழுது அந்த உணர்வின்
ஆற்றல் மகரிஷிகளின் உணர்வுகளைப்
பெறச் செய்கின்றது.
அதை
நுகர்ந்தால் நோய்களை உருவாக்கும் அத்தகைய சக்திகளை மாற்றி
விடுகின்றது அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குச் சொல்கின்றோம்.