ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2025

அரசு அன்று கேட்கும்… தெய்வமோ நின்று கேட்கும்…!

அரசு அன்று கேட்கும்… தெய்வமோ நின்று கேட்கும்…!


உதாரணமாக நம் பையன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். பாடப் புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கின்றோம். அழகான துணிமணிகளையும் கொடுக்கின்றோம்.
 
அவன் நல்ல நிலையில் தெளிவாக வளர்ந்து வர வேண்டும் என்று இத்தனையும் ஆசை கொண்டு செயல்படுத்துகின்றோம். இவ்வாறு நினைக்கும் போது மூஷிகவாகனா.
 
அந்த உணர்வுகளைச் சுவாசித்து குழந்தைகக்கு வேண்டியதைப் பக்குவப்படுத்தி அவனைச் சீராட்டுகின்றோம் தாலாட்டுகின்றோம். ஆனால் இந்த மகிழ்ச்சி என்ன ஆகின்றது…?
 
பையனோ அவனுடைய உணர்வுக்கொப்ப அந்தப் புத்தகத்தில் இருக்கக்கூடிய பக்கங்களைக் கிழித்து விட்டு விளையாண்டு கொண்டிருக்கின்றான்.
 
நாம் எண்ணியபடி அவன் வரவில்லை என்ற நிலையில் அதைப் பார்த்த உடனே இப்படி நஷ்டம் ஆக்கிவிட்டானே…” என்று வேதனைப்படுகின்றோம்.
 
தேள் நம்மைக் கொட்டி விட்டால் சிந்தனை வருமா…? அந்தப் பொருள் வீணாகிவிட்டதே…! என்ற நிலையைச் சிந்தித்த உடனே விஷமான நிலைகள் கொண்டு கடுகடுப்பாகின்றது.
1.சிந்திக்கும் செயல் இழந்து இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு இப்படிச் செய்து விட்டயாடா…?” என்று ஆத்திரம் வருகிறது.
2.நாம் எதைக் கொண்டு அவனைப்  பக்குவப்படுத்த வேண்டும் என்று விரும்பினோமோ அவனையே அழிக்கும் நிலைகள் வருகின்றது.
 
அது தான் மூஷிகவாகனா…! வேதனையும் எரிச்சலும் இரண்டும் சேர்த்து எனக்குள் சுவாசிக்கும் பொழுது கோபம் வருகின்றது காளி…!
 
அந்தக் காளி என்ன செய்கின்றது…? நாம் பார்க்கும் பொழுது தவறு செய்தால் துர்மார்க்கனை அழிக்கும் நிலை வருகின்றது.
 
அவன் செய்யும் சேட்டையை உணர்ந்து அவன் எதைச் செய்தானோ அதைப் பார்க்கும் பொழுது அதுவாகி அந்த உணர்வின் தன்மை கொண்டு அவன் செயலையே அழிக்கும் நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.
 
அது தான்ம்
1.அவன் செய்த பிழையான உணர்வுகள் அங்கே இருள் அவனுக்குள் எடுத்த உணர்வுகள் வெளி வருகின்றது.
2.அவனைப் பார்த்து நாம் அதை எடுக்கப்படும் போது ஓம் நமச்சிவாய… அந்த உணர்வின் சத்து நமதாக இங்கே பிரணவமாகிறது.
 
அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து அங்கே இருக்கின்றது. அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது
1.“அவனை உதைக்க வேண்டும் என்ற நிலைகளில் அவன் செயல் என்னை இழுத்துச் செல்கின்றது.
2.அது தான் ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம்… அதாவது நமதாக மாறி நம்மிடமிருந்து அதே உணர்வின் இயக்கமாக அங்கே திரும்பச் செல்கிறது.
 
நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக நீ ஆகின்றாய் என்ற நிலையும் இதைப் போன்ற உணர்வின் தன்மை அது எப்படி இயக்குகிறது…? என்ற தத்துவத்தைத் தான் நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது.
 
ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம் என்று சொல்வோருக்கு அபாயம் ஒன்றும் இல்லை என்று எண்ணினால் சரியாகிவிடுமா…?
1.அவன் கொடுத்த தத்துவத்தை அவன் காட்டிய சிவத்தை எதுவாக ஆக்க வேண்டும்…?”
2.எந்த உணர்வின் தன்மையாக உனக்குள் பெருக்க வேண்டும்…?
3.இயற்கையின் நீதிகளின் தன்மைகள் வளர்வதற்கு என்ன வழி…? என்று அன்று மெய் ஞானி உணர்த்தினான்.
 
அதைத் தான் அங்கே பார்க்கப்படும் பொழுது அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்…! நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எனக்குள் நல்ல குணங்களாக வளர்ந்து இருந்தாலும் அவன் செயலைப் பார்க்கும் பொழுது
1.நான் சுவாசித்த நிலைகளால் எனக்குள் இருக்கக்கூடிய குணங்கள் அனைத்தும் அடங்கி
2.வேதனையையும் கோபத்தையும் ஊட்டும் நிலையாக இது எனக்குள் ஆட்சிக்கு வருகின்றது.
3.கணங்களுக்கு அதிபதி கணபதி அவனைத் தாக்கும் நிலைகளுக்கு நான் வந்து விடுகின்றேன்உதைக்கின்றேன்
4.நான் வாங்கி கொடுத்த புத்தகத்தைக் கிழித்து விட்டயாடா பாவி…! என்று அவன் அழுதாலும் இரக்கமற்று அடிக்கின்றோம்.
 
காளிக்கு முன்னாடி என்ன இருக்கின்றது…? புலி…! அவன் உணர்வைச் சுவாசித்து அதன் வழியில் காளியின் ரூபமாக என்னை அழைத்துச் சென்று புலியைப் போன்று தாக்கும் நிலைகளை உருவாக்குகின்றது.
 
புலி எப்படி மற்ற உயிரினங்களை இரக்கமற்றுக் கொல்கின்றதோ அவனை அடித்து விட்டோம். இருந்தாலும் சுவாசித்த உணர்வுகள் என் உயிரிலே பட்டு அந்த உணர்வின் சத்தினை எனக்குள் வடித்து என் நல்ல உணர்வுடன் கலக்கப்படும் பொழுது
1.எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணத்தை அழிக்கச் செய்து விடுகின்றது அந்தச் சக்தி…”
2.அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்…!
3.எனக்குள் உருவான அந்தக் காளியான சக்தி நல்ல குணங்களுக்குள் ஊடுருவி இரத்தக் கொதிப்பாக மாறி
4.வேதனை கொண்ட கடுகடுப்பும் வியாதியாகத் தோற்றுவிக்கும் நிலையாக உருப் பெறுகின்றது.
 
அதனால் தான் அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும் என்று சொல்வது. அவனை அடித்த உணர்வுகள் திரும்பத் திரும்ப அதைச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மையே இயக்கமாகிறது.
 
ஒரு ரேடியோவிற்குள் எப்படி அந்தப் பேசிய அலைகளை மீண்டும் நினைவு கூறும் பொழுது அதனின் அலைவரிசையைத் தொகுப்பாக வைத்துத் திருப்பி வைக்கப்படும் போது அந்த உணர்வின் நினைவலைகளை ஊட்டி நாம் அதன் மூலமாகக் கேட்பது போன்று
1.நமக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனின் சக்தி வேகத் துடிப்பு கொண்டு அவனை அடிக்க வேண்டும் என்று எண்ணி எதைச் செயல்படுத்தினேனோ
2.அந்த உணர்வின் காந்தப்புலன்கள் கவர்ந்து நாம் மீண்டும் வேகமாக இழுக்கும் பொழுது
3.அந்த உணர்வலைகள் சுழன்று நின்று என்னைச் சுற்றி நிற்கின்றதுஅதுவே இயக்குகின்றது,
 
உதாரணமாக ஓசோன் திரை இந்தப் பூமிக்கு பாதுகாப்பாக எப்படி அமைந்ததோ… அதாவது விண்வெளியில் தோன்றும் விஷத்தின் அணுக்கள் பூமிக்குள் நுழையப்படும் பொழுது அது வெளிச் செல்லும் போது மீண்டும் காந்தப் புலன்கள் கவர்ந்து இதன் சுழற்சி வட்டத்தில் அந்த விஷத்தின் தன்மையைக் கவர்ந்துமீண்டும் தனக்குள் வரும் விஷத்தைத் தனக்குள் அடுக்கடுக்காகச் சேர்த்து இந்தப் பூமிக்குள் விஷம் வராதபடி அது ஆற்றல்மிக்க நிலையாக ஓசோன் திரையாக அது எப்படி வளர்கின்றதோ இதைப் போன்று
1.நாம் எடுத்த ஆத்திரத்தின் நிலைகள் வேகமாக எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள்
2.ஓசோன் திரை போன்று ஆத்திரத்தை தூண்டும் உணர்வின் நிலைகளாக எனக்குள் ஆன்மாவாகக் “குவித்துக் கொள்கிறது…”
 
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…! அடுத்து நான் ஒரு வியாபாரத்திற்குச் செல்கின்றேன். வாங்க வருபவரிடம் பொருளை எடுத்துக் கொடுக்கின்றேன்.
 
இந்த உணர்வின் தன்மை கொண்டு எடுத்துக் கொடுக்கப்படும் பொழுது நான் எடுத்துக் கொண்ட உணர்வின் (ஆத்திரமான) ஒலிகள் அங்கே அவர் செவிகளில் பட்டு இதே உணர்வுகள் அங்கே உந்தும் பொழுது அவர் என்னைப் பார்க்கின்றார்…”
 
பாலுக்குள் காரத்தைக் கலந்து விட்டால் அது எப்படிச் சுவையற்றதாக மாற்றுகின்றதோ அதைப் போல அந்த ஆத்திரமான உணர்வுகள் அவருடைய சுவாசத்திற்குள் சென்று
1.நான் எப்படி என் பையனை வெறுத்துத் தாக்கினேனோ இதே உணர்வுகள் கண்ணின் புலனறிவுகளிலே பட்டு அங்கே பாய்ச்சப்பட்டு
2.எடுத்துக் கொடுக்கும் பொருளை சொல்லாகச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவருக்குள் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு
3.கையிலே எடுத்துக் கொடுக்கும் பொருளை வெறுக்கச் செய்கின்றது.
 
தன் இனத்தின் தன்மை தான் பாதுகாக்கும் நிலையாகத் தான் செய்த நிலையை உருப்பெறும் உருவாக்கும் சக்தியாக அங்கே உருவாகின்றது.
 
இதைத்தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. இவனை அடித்து விட்டேன் என்று எண்ணினாலும் இந்த உணர்வின் சத்து நாம் செயலாக்கப்படும் பொழுது இது முன்னணியில் வந்து விடுகின்றது.
 
அதைத் தான் இயற்கையின் நிலை அது எவ்வாறு இயக்குகிறது…? என்று அன்று காட்டினார்கள் ஞானிகள்.
 
ஞானிகள் காட்டிய அந்த உண்மைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளைச் சுவாசித்து நல்லது செய்யக்கூடிய பண்புகளாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.