ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2025

கால் வலியும் அதனின் பின் விளைவுகளும்

கால் வலியும் அதனின் பின் விளைவுகளும்


வேதனையான உணர்வை அதிகமாக எடுத்தால் அந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.புவியின் ஈர்ப்பில் நடந்து செல்லப்படும் பொழுது
2.நமது கால் பாதங்களிலும் முழங்கால் கீழ் உள்ள பாகங்களிலும் வேதனை உணர்வுகள் அதிகமாகப் பரவுகின்றது.
 
இதன் உணர்வுகள் கீழ்பாகங்களில் உறையும் தன்மை ஏற்பட்டால்
1.நாளடைவில் நாம் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுதோ படுத்திருக்கும் பொழுதோ
2.இதனின் உணர்வுகள் நமது இரத்தத்திலே கலந்து மிகக் கடினமாக உறையும் தன்மை கொண்ட நிலையாகி விடுகின்றது…”
 
இப்படிப்பட்ட துகள்கள் இரத்தத்தில் கலந்து கொண்டால் ஆங்காங்கு இரத்த நாளங்களில் நுண்ணிய பாதை இருக்கும் பாகங்களில் இது உறைந்து நின்றால் அந்தந்த பாகங்களில் உள்ள உறுப்புகளை சீராக இயங்க விடாதபடி தடுக்கும்.
 
அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்களுக்கு உணவு போய்ச் சேராது தடைப்படுத்துவதனால் அந்த உறுப்புகளை உருவாக்கும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது. இதனால் அந்த உறுப்பின் தசைகள் குறைவடைகிறது.
 
இது போன்ற பிணிகளுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ மருந்துகளைக் கொடுத்து பக்குவங்களைச் செய்து இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்குகின்றார்கள். விஷம் கலந்த உணவின் உணர்ச்சிகளை இரத்தத்தில் கலக்கச் செய்கின்றனர்.
1.இதன் உணர்வுகள் ஊடுருவி அந்த விஷத் துகள்களை உடைத்தாலும்
2.இயற்கையில் செயல்படுத்தப்பட்ட விஷத்தின் இயக்கங்கள் உடல் முழுவதும் ஊடுருவிச் செல்கின்றது.
3.இரத்தத்தில் உள்ள உணர்வுகளைக் கவர்கின்றது.
 
ஆக விஷ உணர்வுகள் கொண்டு விஷத் துகள்களைக் கரைத்து விடலாம்.
1.”கரைத்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கின்றது.
2.கலந்த உணர்வோ நமது இருதய பாகங்களுக்குச் செல்லப்படும் பொழுது அங்கே வலி ஏற்படுகின்றது…”
 
இங்கே வடிகட்ட முடியாத நிலைகளில் அவை நமது சிறு மூளை பாகம் செல்லும் பொழுது கண்களிலும் இதைப் போன்று உணர்ச்சிகள் தடைப்பட்டு கண்களில் ஈர்க்கும் தன்மை குறைந்து அங்கே அழுத்தம் அதிகமாக உருவாகும் பொழுது நமது கருவிழியில் திரைப்படமாகக் காட்டும் அந்தக் கல்லுக்கு அருகில் இருக்கக்கூடிய உணர்வுகளை இது மறைத்து விடுவதனால் கண்களிலும் பார்வைக் குறைவு ஏற்படுகின்றது…”
 
ஏனென்றால் இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மையை அதிகமாக நுகர்ந்ததனால் புவியின் ஈர்ப்பில் நாம் இருப்பதனால் உடலுக்கு வேளை இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுது வேதனையினால் உருவான விஷத்துகள்கள் கீழ் நோக்கி வந்து நமது காலின் கீழ் பாகங்களில் உறைகின்றது.
 
இதைப் போன்ற நிலைகள் நம் இரத்தங்களில் கலந்து இருதயத்திற்கும் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட நுண்ணிய பாகங்களுக்கும் சென்றால் அங்கே அழுத்தம் அதிகரித்து அதனுடைய பாகங்களும் அடைப்படுகின்றது.
 
சிந்தித்துச் செயல்படக்கூடிய மனிதராக இருப்பின் இந்த உணர்ச்சிகள் தேங்கி வரும் பொழுது நுண்ணிய அலைகளைச் சீக்கிரம் கிரகித்து அறியும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
 
நமது உடலில் பிற உறுப்புகளை இயக்கும் நுண்ணிய பாகங்களுக்கு ஆணையிடும் சிறுமூளை பாகத்தில் சிறு மூளை பாகத்தில் தடை ஏற்படும் போது நமது இயக்க உறுப்புகள் மிகவும் பலவீனமடைந்து விடுகின்றன.
1.அதனால் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்களுக்குச் சீராக உணவு கிடைக்காது அந்த உறுப்பும் பலம் இழந்து விடுகின்றது.
2.இதனால் உடல் நலியத் தொடங்குகின்றது.
3.விஷத்தின் ஆக்கிரமிப்பு அதிகமானால் நமது சிறுநீரகம் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியை நிறுத்தி விடுகின்றது.
 
இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா…!
 
உதாரணமாக நாம் ஒரு புலியைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புலியை நுகர்ந்து பார்த்த பின் அதனின் வலிமையைக் கண்டபின் அச்ச உணர்வுகள் நமக்குள் தோன்றுகின்றது.
 
ஏனென்றால் புலி மிகவும் கொடூரமானது. அதன் உருவத்தைப் பார்த்தால் புலியிடமிருந்து வரும் உணர்வுகளை நுகர்ந்தால் ஓம் நமச்சிவாய. அதாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நமது இரத்தத்தில் கலந்து மனிதனாக உருவாக்கிய உணர்வுகளுக்குள் இது பதிவாகி நமது உடலில் நடுக்கத்தின் உணர்வு வரப்படும் பொழுது நமது உறுப்புகளின் இயக்கங்கள் மாறுபடுகின்றது.
 
1.இந்த நடுக்க உணர்வுகளால் கல்லீரல் வடிகட்டும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அது சமயம் நுரையீரலும் சீராக இயக்குவதில்லை.
3.இயக்க நிலைகள் பதட்டம் அடைவதால் இரத்தத்தில் உள்ள கழிவைப் பிரிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
 
இப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சீராக இயக்க முடியாத நிலை வருகின்றது.
 
அதே சமயம் பித்த சுரப்பியில் இத்தகைய விஷத்தன்மை அதிகமாகும் பொழுது பித்த சுரபியின் வளர்ச்சியும் அதிகமாகிறது. பித்தத்தின் தன்மை அதிகரித்தால் அதனுடைய இயக்கமும் அதிகமாகின்றது.
1.அந்த பித்தம் உடல் முழுவதும் பரவி மற்ற அணுக்களையும் நடுங்கச் செய்து பலவீனமடையச் செய்கின்றது.
2.நம்மிடத்தில் சிந்திககும் ஆற்றலைக் குறைக்கின்றது தலை சுற்றலும் வருகின்றது.
3.ஏனென்றால் பயத்தால் நுகர்ந்த உணர்வுகள் கொண்டு அதற்குத் தக்க அணுக்களை நமக்குள் சேமித்து அதனின் உணர்வை வளர்க்கின்றது.
 
இப்படி பித்தத்தை நமக்குள் அதிகப்படுத்திப் பழகிவிட்டால் அதிகமான பித்தத்தைச் சுரக்கும் அடுத்த உடலை உருவாக்கி அதன் உணர்வுகளையும் ஜீரணிக்கும் சக்தி கொண்டதாக மாற்றுகின்றது.
 
இது போன்ற நிலைகளை எப்படி மாற்றுவது…?
 
அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்று மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். எப்பொழுது தீமை என்று வருகின்றதோ துன்பம் வருகின்றதோ அடுத்த கணமே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து
4.அந்த உறுப்புகளை உருவாக்கிய் அணுக்கள் துருவ நட்சத்திரத்தினுடைய பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
5.இப்படி ஒரு இரண்டு நிமிடம் அந்த உயர்ந்த சக்தியை எல்லா அணுக்களிலும் பெறச் செய்தோம் என்றால்
6.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த நஞ்சான உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெற விடாதபடி தடைப்படுத்துகின்றது.
 
தீமையிலிருந்து நாம் விடுபடுகின்றோம். இதை நாம் அவசியம் செய்து பழக வேண்டும்.