
இந்த உலகை அறிய விரும்பி பூமிக்குள் வந்தாலும்… நீ பட்டது போதும் தாயே மகாலட்சுமி…!
1.மனிதனின்
உயிர் என்ற நிலை வரப்படும் பொழுது “மகாவிஷ்ணு” சர்வத்தையும் எடுத்து வருகின்றது.
2.உயிரில்
உள்ள காந்தம் எத்தனையோ விதமான உணர்வுகளை நமக்குள் சேர்த்தது “மகாலட்சுமி…”
3.நம் உடலிலே
எல்லா வகையான உணர்வுகளையும் வளர்த்து வைத்திருக்கின்றது.
சீதாவை ராவணன்
கடத்திச் சென்று விடுகின்றான் இராமன் எத்தனையோ
போர்களைச் செய்து சீதாவை மீட்டி வருகின்றான். மீட்டி வந்த பிற்பாடு மக்கள் என்ன சொல்கிறார்கள்…?
அசுரனிடத்தில் இவ்வளவு நாள் இருந்ததால் மக்கள்
சீதாவினுடைய புனிதத் தன்மையை சந்தேகப்படுகிறார்கள் என்று
சொல்லி அக்கினிப் பிரவேசம் செய்ய வேண்டும்
என்று கூறுகின்றார்கள்.
அதன் வழி அக்கினிப் பிரவேசம் செய்து சீதா வருகின்றது. வந்தபின் சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. இராமனும் சீதாவும் அரண்மனைக்குச் செல்கின்றார்கள்.
ஆனால் சிறிது
காலத்திலேயே சீதா கர்ப்பம் ஆகின்றது. இதைத் தெரிந்து கொண்ட பின் மக்கள் என்ன சொல்கிறார்கள்.
சீதா ராவணனிடம் சிறைப்பட்டிருந்ததால் அவன்
மோசமானவன்…! ஆகவே இது அவனுக்கு உருவான கரு தான் என்று மக்கள்
கருதுகின்றார்கள்.
இது இராமனின் செவிகளுக்கும் செல்கின்றது. தன் சகோதரன் லட்சுமணனைக் கூப்பிட்டு “சீதாவைக் காட்டிற்குள் சென்று விட்டு விட்டு வந்துவிடு… ஒன்றும் சொல்லாதே…!” என்கிறான்.
தன் மனைவி கர்ப்பிணி
என்றும் தெரிகின்றது… இருந்தாலும் அவ்வாறு சொல்கின்றான்.
அசுர உணர்வுகள்
கொண்டு வாழும் மிருகத்தின் மத்தியிலே கர்ப்பிணியை விட்டுச் சென்றால் என்ன ஆகும்…? உணவுக்கோ பாதுகாப்புக்கோ ஒருவரும் இல்லை என்றால்
அதனுடைய நிலை என்ன ஆகும்…?
அப்போது அங்கே
அந்தக் காட்டிற்குள் வரக்கூடிய ஒரு பெண் “இது
கர்ப்பிணியாக இருக்கின்றது… அனாதையாக இருக்கின்றது… இது யார்…? என்றும்
தெரியவில்லை… இருப்பினும் வான்மீகி மகரிஷி அங்கே தவம்
இருக்கின்றார்… இந்தப் பெண்ணை அங்கே
அழைத்துச் சென்று அடைக்கலம் செய்யலாம்…? என்று கூட்டிச்
செல்கின்றது.
வான்மீகி சீதாவைப் பார்த்தபின் உண்மையை உணர்கின்றார். சரி இங்கேயே இருக்கட்டும் என்று சொல்கின்றார்.
இயற்கையில் இராமனைப் பற்றிய உண்மை நிலைகளையும் தசரதச் சக்கரவர்த்தியின் நிலையையும் உலக நிலைகளையும்
எப்படி இருக்கின்றது…? என்ற நிலையைக்
கருவிலே உருப்பெற்ற குழந்தைக்குக் கர்ப்பிணியிடம் செவி வழி சொல்லி
அதை நுகரச் செய்து அதன் வழி ரத்தத்தில் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு
ஞானத்தை ஊட்டுகின்றான் வான்மீகி.
1.இராமனுடைய
செயல்கள் எப்படி…?
2.உலக
மக்களின் செயல்கள் எப்படி…?
3.ராவணனுடைய
செயல்கள் எப்படி…? என்று
4.இந்த
உண்மைகள் அனைத்தையுமே சீதாவிற்குக் கதையாகச் சொல்லப்படும் பொழுது
5.கர்ப்பிணி
காது வழி கேட்டு கண் வழி கவர்ந்து
மூக்கு வழி நுகர்ந்து
6.அந்த
உணர்வுகள் ரத்தத்துடன் கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு
இந்த ஞானத்தை ஊட்டுகின்றது.
இதில் “எத்தனையோ அற்புதமான உண்மைகள்” இருக்கின்றது…!
அதற்குப் பின்
குழந்தைகள் பிறக்கின்றது லவ குசா என்று இரட்டைக் குழந்தைகளாகக் காரணப்
பெயராக வைக்கின்றார்கள். அதாவது…
1.கவர்ந்து கொண்ட உணர்வுகள் எதிரொலியாக எப்படிச்
செல்கின்றது…?
2.எதைக் கவர்ந்து உருவானதோ அந்த உணர்வின் தன்மை
வெளிப்படுத்தி அந்த உணர்வின் தன்மை எப்படிச் செயல்படுத்தும்…? என்பதற்காக
3.இரட்டைக் குழந்தைகள் பிறந்தது என்று காவியப்படி கொண்டு வருகின்றார்கள்.
ஆனால் சீதா இல்லாததால் இங்கே இராமன் ஆட்சி செய்யும் இடத்தில் பல இன்னல்கள் சூழப்பட்டு விடுகிறது. அதிலிருந்து
மீட்கத் தன் தந்தை செய்த அஸ்வமேத யாகத்தை மீண்டும் செய்ய வேண்டும் என்று
இராமன் சொல்கிறார்.
ஆகவே அரசைக்
காக்க வேண்டும் என்று அந்த யாகத்தைச் செய்ய
முற்படுகின்றார்கள். தேதியைக் குறித்து அந்த நாளிலே அதைச்
செயல்படுத்த வேண்டும் என்று ஆயத்தம் செய்கின்றார்கள்.
வான்மீகி இதைத் தெரிந்து கொள்கிறார்.
நாளை அந்த யாகம் தொடங்க இருக்கிறது என்றால் அங்கே மற்ற எல்லோரும் கூடியிருப்பார்கள் என்ற நிலையில்
1.லவ குசாவை
அழைத்து “நீங்கள் அங்கே செல்லுங்கள்...”
2.அங்கே சென்று
தன் சரித்திரத்தை நான் எப்படிப்
பிறந்தேன்…? எப்படி வளர்ந்தேன்…?
3.இதற்கு
மூலம் யார்…? என்ற தத்துவத்தை எடுத்து ஓதும்படிச் சொல்லி அனுப்புகின்றார்.
அதன்படி யாகம் தொடங்கும் வேளையில் அந்த குழந்தைகள்
இதையெல்லாம் பாடல்களாகப் பாடி வெளிப்படுத்துகின்றார்கள்.
இந்தப் பாடல்களைக் கேட்ட இராமன்… என்னுடைய சுய சரிதம்
எனக்கும் சீதாவுக்கும் மட்டும் தான் தெரியும் அப்படி இருக்கும் பொழுது இந்தக் குழந்தைகள் அதைப் பாடுகிறார்கள் என்றால் “இவர்கள் யாராக இருக்கும்…?” என்ற வகையில் அவர்களை அணுகி… உங்களுடைய
தாயார் யார்…? எங்கே இருக்கின்றார்கள்…? என்று இராமன் கேட்கின்றார்.
அவர்கள் ஒன்றும் சொல்லாமல் சீதா இருக்கும் வான்மீகி
ஆசிரமத்திற்கு இராமனை அழைத்துச் செல்கின்றார்கள். இராமனும் உற்றுப் பார்த்து உண்மையை உணர்ந்து
கொள்கின்றான். நாட்டு மக்களும்
உணர்கின்றார்கள்.
ஏனென்றால்
அவர்களும் யாகசாலையில் இந்த பாடல்களைக் கேட்டதால் உலக மக்கள் புரிந்து கொண்டனர். “இனி நாம்
சேர்ந்து வாழலாம்” என்று இராமன் சீதாவை
அரண்மனைக்கு அழைக்கின்றான்.
அப்பொழுது தான் பூமாதேவி சீதாவிடம் “நீ பட்டது போதும் தாயே…!” என்று
சொல்கிறது.
உயிரின் இயக்கம்
ஈசன்… அதிலே ஏற்படும் வெப்பம்
விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.
1.இந்த
உடலுக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளைச் சேர்த்து வைத்தது உலகை அறியும்படிச் செய்தது.
2.நாம் உலகை
அறிந்து கொள்ளும் நிலைக்காக எடுத்துச் சேர்த்தது.
மகாலட்சுமி நீ உலகை அறிய விரும்பினாய். அந்தச் சுவையின் தன்மை வரும் பொழுது நீ மகாலட்சுமியாக இருந்தாலும் “இந்த உடலில் பட்டது போதும்…”
சுவை சீதா என்ற
நிலையே பூமியிலிருந்து தான் அது
உருவாகக் காரணமானது.
1.பூமியிலிருந்து
விளையப்பட்ட சுவைதான் உடலாக விளைந்தது
2.நீ பட்டது
போதும் தாயே…! என்று பூமி பிளந்து “சீதா
என்ற இந்த உடல் மண்ணுடன் மண்ணாக ஐக்கியமாகின்றது…”
சீதா உயிரை
நோக்கி விஷ்ணுவை நோக்கித் தவமிருந்தது விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததால்
1.அதனுடன்
ஐக்கியமாகி சந்தோச உணர்வுடன் இணையப்படும் பொழுது
2.உடல்
பிரிந்தபின் உடலில் வரும் இருளை நீக்கிவிட்டு உயிரோடு ஒன்றி அவனுடன் அவனாக ஐக்கியமானது.
ஏனென்றால் ஒளி இருக்கும் உயிர் தான் எல்லாவற்றையும்
அறிவித்தது “அந்த விஷ்ணு…” ஆகவே தான்
கண்ட அந்த உணர்வின் சுவையை ஒளியின் சுடராகக் காட்டியது.
விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததனால் அங்கே
போய் உயிருடன் ஒன்றி ஐக்கியமாகின்றது. அப்படி
என்றால் என்ன அர்த்தம்…?
1.உடலில்
வந்ததை எல்லாம் நீக்கிவிட்டு
2.உயிருடன்
ஒன்றி இனிப் பிறவியில்லா நிலை அடைவது.
ராவணனும் அரக்க உணர்வை எடுத்து அவனும் விஷ்ணுவை நோக்கித்தான் தவமிருக்கின்றான்.
(சீதாவோ) லட்சுமி விஷ்ணுவுடன் இணைந்து இயக்கி
வந்தாலும் சீதா என்ற சுவையால் உடலாக ஆனாலும்
1.எத்தனையோ வேதனைகள் இருந்தாலும் விஷ்ணுவின் இயக்கத்துடன் நின்று
2.துயரத்தைத் தாங்கிக் கொண்டு அவனின் இயக்கமாகத்தான் இருந்தது.
துயரம் என்ற
உணர்வுகள் மண்ணிலே தோன்றியது. ஆகையினால்
மண்ணுடன் இந்தச் சடலம் போய்
விடுகின்றது
1.அதிலே
சேர்த்த உணர்வின் ஒளி உயிருடன் இருந்து இருளை நீக்கி ஒளி என்ற உணர்வைப் பெறுகின்றது…
2.பிறவியில்லா நிலை அடைவது தான்
மனிதனின் எல்லை…! என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது இராமாயணக்
காவியம்…!
நாம் புரிந்து
கொண்டோமா…?