ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2025

தாயை மறந்தால்... எந்த ஒரு நல்லதையும் நம்மால் பெற முடியாது…!

தாயை மறந்தால்... எந்த ஒரு நல்லதையும் நம்மால் பெற முடியாது…!


நம்மை மனிதனாக உருவாக்கியது யார்…? அம்மா அப்பா தான்… அவர்கள் தான் கடவுள். ஒன்றும் அறியாத வயதிலிருந்து விவரம் தெரியும் வரை நம்மைக் காத்தது நம்முடைய தாய் தந்தையர் தான். அவர்கள் தான் நமக்குத் தெய்வங்கள்.
 
பல தீமைகளிலிருந்து விடுபட்டு என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று ஞானத்தை ஊட்டி நம்மைக் காத்த தெய்வம் நம் தாய் தான்…” இது நல்லதப்பா இது கெட்டதப்பா உன் வாழ்க்கையில் இப்படி இருக்க வேண்டும்…! என்று சொன்ன குருவும் தாய் தந்தையர் தான்…”
 
தை எல்லாம் மறந்து விட்டு
1.ஆயிரம் சாமியார்களைத் தேடினாலும் சரி
2.ஆயிரம் கடவுளைத் தேடினாலும் சரி
3.நம்மை மனிதனாக உருவாக்கிய தெய்வமான தாயை மறந்து விட்டால்
4.நம்மைக் காப்பாற்றிய அந்தத் தெய்வத்தை மறந்து விட்டால்
5.நமக்கு நல்ல வழிகளைக் காட்டிய குருவை மறந்து விட்டால்
6.எங்கு சென்றாலும் நல்லதை ஒன்றும் எடுக்க முடியாது.
 
இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
 
தாய் தந்தையர் சொத்தைச் சம்பாதித்த பின்பு இன்று அனாதை இல்லங்களில் இருக்கின்றார்கள். அங்கே இருந்தாலும் கூட பென்ஷன் வாங்கச் சென்றால் உனக்கு எதற்கு வ்வளவு காசு…? இத்தனை ரூபாய் பத்தாதா…?” என்று அதையும் தட்டிப் பறிப்பதற்குத் தான் இன்றைய குழந்தைகள் இருக்கின்றது.
 
இது போல் இன்று நிறைய நாம் கேள்விப்படுகிறோம்.
 
உழைத்தேன் பிள்ளைகளை வளர்த்தேன் படிக்க வைத்தேன்…! என்று தாய் தந்தையர் இருந்தாலும்… குழந்தைகளோ…
1.நான் ஆடம்பரமாக வாழ வேண்டும்
2.உனக்கு எதற்குப் பணம்…? என் பிள்ளைகளுக்குத் தேவை…! என்று பிடுங்கிச் செல்கிறார்கள்.
3.இது மட்டுமல்ல தாய் தந்தையரை உதைப்பவர்களும் இருக்கிறார்கள்.
 
தகப்பன் சம்பாதித்து விட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுத்த பிற்பாடு மூன்று லட்சம் கையிலே பணம் வைத்திருக்கின்றார்கள்.
 
மூன்று இலட்சத்திற்கு உனக்கு என்ன வேலை…? உனக்கு மாதம் வேண்டிய பணத்தை நாங்கள் கொடுத்து விடுகின்றோம் அந்த மூன்று லட்சம் ரூபாய் எங்களிடம் கொடு கொடுக்க வேண்டியது தானே…! என்று கேட்கின்றார்கள்
1.ஆனால் பணத்தைக் கொடுத்த பின் அடுத்து சோறு போடுவார்களா…?
2.இது எல்லாம் இன்றைய காலத்தில் கொடுமையிலும் கொடுமை.
 
அரக்க உணர்வுகள் தாய் தந்தையரை மறக்கச் செய்து விட்டது.
 
யாம் சொன்ன முறைப்படி தாய் தந்தையரை மதித்துச் செயல்படுத்தினால் காட்டிற்குள் சென்றால் ஒரு புலியே தாக்க வருகிறது என்றாலும் அம்மா…” என்று உங்கள் தாயை அழைத்தால் போதும். அந்தப் புலி தாக்காது.
 
தெருவிலே நாய் விரட்டி வந்தாலும் அய்யய்யோ அய்யய்யோ…! முருகா…! என்று சொன்னாலும் கூட லபக் என்று பிடிக்கும். ஆனால் அம்மா…!” என்று அழைத்துப் பாருங்கள். அந்த நாய் உங்களைக் கடிக்கிறதா..? என்று பார்க்கலாம்கடிக்காது.
 
யானையே தாக்க வந்தாலும் சரி அந்தத் தாயின் பாச உணர்வு நம் உடலில் இருக்கின்றது. “அம்மா” என்று எண்ணிணால் அந்த அலைகள் குவிந்து நம்மைக் காக்கச் செய்யும்.
 
சந்தர்ப்பத்தில் தொழிலே பெரும் சங்கடங்கள் வருகிறது என்றால் சாமியார்களை நினைப்பதைக் காட்டிலும்
1.யாம் சொன்ன முறைப்படி உங்கள் தாயை வணங்கி அம்மா…! என்று ஏங்கி
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபடக்கூடிய வலிமையும் எனக்கு அந்தச் சிந்திக்கும் ஆற்றலும் வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
3.அந்தத் தாயினுடைய உணர்வு உங்களுக்கு எப்படி வேலை செய்கிறது…? என்று தெரிந்து கொள்ளலாம்.
 
ஞானிகள் நம் தாயைப் பேணிக் காக்கும் முறைகளைக் காட்டியுள்ளார்கள். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் தாய் தந்தையினுடைய அருளால் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.
 
ஆனால் இன்று இதையெல்லாம் மறந்து இருக்கின்றோம். தாய் தந்தையர் கோவிலுக்கு வா…” என்று கூப்பிட்டால் உனக்குப் பைத்தியம் நீ போ…” என்று சொல்லக்கூடிய காலமாக இருக்கின்றது.
 
அரக்க உணர்வுகளாக வளர்ந்து தாயையே இரக்கமற்றுக் கொல்லும் தன்மைகளும் துன்புறுத்தும் நிலைகளும் இன்று கண்களிலே நாம் பார்க்கும் படியாக நடந்து கொண்டிருக்கின்றது.
 
ஆனால் தாய் தன் குழந்தையைக் கர்ப்பத்தில் வளர்க்கப்படும் பொழுது எத்தனையோ இன்னல் படுகின்றது வேதனைப்படுகின்றது. பிறந்த பிற்பாடு அவனை ஆளாக்குவதற்கு எவ்வளவோ சிரமப்படுகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்று அல்லும் பகலும் எத்தனையோ முயற்சிகள் எடுக்கின்றது. அவனுடைய கல்விக்கும் எத்தனையோ சிரமப்பட்டுக் கடனை வாங்கியாவது அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றது.
 
ஆனால் கற்றபின் குழந்தையினுடைய செயல்களைப் பார்க்கப்படும் பொழுது எத்தனையோ தவறான செயல்களை அவர்கள் செயல் படுத்துகின்றார்கள். இது எல்லாம் ஞானிகள் காட்டிய வழிகளை இன்று தவற விட்டதால் ஏற்படுவது தான்… அதனால் நாம் படக்கூடிய வேதனைகள் ஏராளம்.
 
ஆகையினால்
1.என் அம்மாவைப் பற்றி நான் எண்ணினாலே எனக்கு (ஞானகுரு) அழுகை வந்து விடும்.
2.காரணம் என் தாய் என்னைக் காத்த நிலைகள் கொண்டுதான் இந்த ஞானத்தையே நான் பெற முடிந்தது….
3.உங்களுக்கு இதைப் போதிக்கவும் முடிகின்றது.
4.தாயின் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டதனால் இந்தப் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
 
என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஒரு பெண் பிள்ளை போன்று நான் தான் சமைத்துக் கொடுப்பேன் எல்லா உதவிகளும் செய்வேன்.
 
என் பாட்டிக்கும் (தாயின் மாமியார்) என் தாய்க்கும் சண்டை வரும். என் பாட்டி  கண்டபடி பேசும். அதனால் ஒரு சமயம் கோபித்துக் கொண்டு போய் என் தாய் கிணற்றில் விழுந்து விட்டது.
 
நானும் உடனே கிணற்றில் குதித்து என் தாயைத் தூக்கி வந்தேன். எனக்கு வயது அப்போது எட்டு இருக்கும் என் தாயும் நானும் அதிலிருந்து பிரிந்து இருப்பதே இல்லை…. ஏதாவது வேதனைப்பட்டால் மீண்டும் கிணற்றில் விழுந்து விடுமே என்று..!
 
ஏனென்றால் தாயினுடைய பாசத்தை என் தாய் எனக்கு உணர்த்தியது. அந்த உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது
1.ஒவ்வொருவரும் நீங்கள் உங்கள் தாயை வணங்கினாலே போதுமானது.
2.கடவுளை எங்கேயும் தேட வேண்டியதில்லை… நம் தாய் தான் கடவுள்.
 
நம்மைத் தெய்வமாக இருந்து காப்பாற்றியது தாய் தான். குருவாக வழிகாட்டுவதும் தாய் தான். ஆகையினால் இதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துச் செயல்படுங்கள்.
 
விஞ்ஞான வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கையாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் மெய் ஞானிகள் காட்டிய அருள் உணர்வு கொண்டு தாயினுடைய பேரன்பைப் பெற முற்படுங்கள். அதை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
எந்த நிலை வந்தாலும் என் தாய் தந்தையின் அருளால் என் செயல் நன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து செயல்படுத்திப் பாருங்கள்.
1.எந்தச் சிக்கல் வந்தாலும் அதை நிவர்த்திக்கக் கூடிய நல்ல உபாயம் வேண்டும் என்று தாயை எண்ணுங்கள்.
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! தாய் நம்மைப் பேணிக் காத்த உணர்வுகள் இயக்கி நமக்கு ஞானத்தை ஊட்டும் தப்பிக்கும் மார்க்கத்தையும் காட்டும்.
3.யாராவது இடைஞ்சல் செய்ய வந்தால் தாயின் உணர்வு வந்து நமக்கு ஊக்கம் கொடுத்து அவர்கள் நம்மைத் தாக்காது தடுக்கவும் செய்யும்.
4.எத்தகைய தாக்கக் கூடிய நிலைகள் வந்தாலும் தாயை எண்ணினால் அதை மறைக்கக் கூடிய சக்தி உண்டு.
 
ஆக அதைப்போன்று தாய் தந்தையரும் தங்கள் குழந்தைகளுக்கு ஞானத்தை ஊட்ட வேண்டும். கோவிலுக்குச் சென்றாலும் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனையைத் தான் வளர்த்து விடுகின்றோம்.
 
இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் மாறிஇனி வரக்கூடிய காலங்களில் இருந்து மீட்டுவதற்கு இந்த முறைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.

July 4, 2025

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்


முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்


இராமனுக்குத் திருமணமாகும் பொழுது முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும் வந்து ஆசீர்வதித்தார்கள்…” அந்த இராமன் யார்…? சீதாராமன்…! சந்தோஷத்தை ஊட்டும் உணர்வுகள்.
 
1.உங்கள் உடலுக்குள் பல பகைமையான உணர்வுகள் இருந்தாலும்
2.சந்தோஷமான வார்த்தையை எடுத்துத் தியானத்தில் எல்லோரும் சொல்லப்படும் பொழுது
3.மகிழச் செய்யும் உணர்வின் இயக்கமாக வருகின்றது.
 
ஒவ்வொரு உடலிலும் எண்ணிலடங்காத குணங்கள் உண்டு. நாம் எத்தனை பேர் கூட்டுத் தியானத்தில் இருக்கின்றோம்…? இத்தனை பேருடைய உணர்வின் ஒலிகள் படரப்படும் பொழுது வீட்டில் எப்படி இருக்கும்…?
 
எல்லோரும் சேர்ந்து வீட்டிற்குள் அருள் உணர்வுகளைப் படரச் செய்யப்படும் பொழுது செவிகளில் கேட்டு இந்த உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடல் எப்படி இருக்கும்…?
 
இது எல்லாம் ஞானிகள் சொன்ன அந்த மார்க்கத்தினை நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.
 
இன்று இந்த உலகமே விஷமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தீமை புகாது வலிமையை நாம் பெறுதல் வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
 
1.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தூக்கி எறிய வேண்டுமென்றால் அதற்குண்டான சக்தி பெற வேண்டும்.
2.அந்த அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியானப் பயிற்சியை கொடுப்பது.
3.எதாவது ஆயுதம் இல்லாது ஒன்றும் செய்ய முடியாது.
 
இந்த மனித வாழ்க்கையில் வரும் வேதனை வெறுப்பு போன்றவைகளுக்கு வலிமை ஜாஸ்தி. அதை நீக்குவதற்கு உங்கள் நல்ல குணங்களால் முடிகிறதா…? அவையெல்லாம் அலறும்.
 
ஆனால் இத்தகைய விஷத்தை வென்று உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதை எடுத்து உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் சேர்த்துப் பழகி விட்டால் அந்த உணர்வுகள் வளர வளர
1.தீமையான உணர்வுகள் அணுகாது அதைத் தூக்கி எறியும் மன வலிமையும்
2.அந்த உணர்வினைப் பற்றுடன் பற்றி உங்களுக்குள் நல்ல உணர்வுகளை வளர்க்கும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.
3.இந்த வாழ்க்கைக்குப் பின் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.
 
சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…!
 
மற்றவர்கள் சிரமப்பட்டாலும் அது உங்கள் செவிகளில் பட்டாலும் அதை மாற்றி அமைத்து
1.சிந்தித்துச் செயல்படும் நிலையாக உங்களுடைய சொல் அவர்களுக்குச் சந்தோஷத்தை ஊட்டும் பொழுது
2.”இன்னார் சொன்னார் நன்றாக இருந்தது…” என்று அவர்கள் அந்த மகிழ்ச்சி பெறக்கூடிய செயலுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் வர வேண்டும்.
 
அது தான் உண்மையான தியானம்.
 
ஒவ்வொரு உயிரும் கடவுள் ஒவ்வொரு உடலும் கோவில் பல கோடி உடல்களில் சேர்த்து மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் அவை தான் நமக்குத் தெய்வம்…!”
 
எனக்கு குருநாதர் எப்படி வழிகாட்டிக் கொடுத்தார்…?
 
உயிர் கடவுளாக இருக்கின்றது அந்த உடல் கோவிலாக இருக்கின்றது
1.இந்த உடலில் தெய்வங்கள் இருக்கின்றது
2.அந்தத் தெய்வத்திற்கு சேவை செய்ய நான் கொடுத்த அருள் சக்தியை அவர்களை நுகரச் செய்து
3.அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்தி உயர்ந்த குணங்களைத் தெளிவாக்க நீ பிரார்த்தனை செய்என்றார்.
 
அந்தச் சேவையைத் தான் நான் செய்து கொண்டிருக்கின்றேன். குரு வழியில் யாம் சேவை செய்யும் பொழுது உங்களுக்கு அந்தச் சந்தோஷம் வருகிறது. அப்பொழுது எனக்குச் சந்தோசமான சாப்பாடு கிடைக்கின்றது. எனக்குக் கொஞ்சம் பூரிப்பு வருகின்றது.
 
ஆகவே வாழ்க்கையில் வரும் சங்கடங்களை நீக்கி மற்றவருடைய தீமைகளைப் போக்கச் செய்யும் அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்.
 
அதைப் பெறச் செய்வதற்குத் தான் யாம் உபதேசிப்பது

இந்த உலகை அறிய விரும்பி பூமிக்குள் வந்தாலும்… நீ பட்டது போதும் தாயே மகாலட்சுமி…!

இந்த உலகை அறிய விரும்பி பூமிக்குள் வந்தாலும்… நீ பட்டது போதும் தாயே மகாலட்சுமி…!


1.மனிதனின் உயிர் என்ற நிலை வரப்படும் பொழுது மகாவிஷ்ணு சர்வத்தையும் எடுத்து வருகின்றது.
2.உயிரில் உள்ள காந்தம் எத்தனையோ விதமான உணர்வுகளை நமக்குள் சேர்த்தது மகாலட்சுமி…”
3.நம் உடலிலே எல்லா வகையான உணர்வுகளையும் வளர்த்து வைத்திருக்கின்றது.
 
சீதாவை ராவணன் கடத்திச் சென்று விடுகின்றான் ராமன் எத்தனையோ போர்களைச் செய்து சீதாவை மீட்டி வருகின்றான். மீட்டி வந்த பிற்பாடு மக்கள் என்ன சொல்கிறார்கள்…?
 
அசுரனிடத்தில் இவ்வளவு நாள் இருந்ததால் மக்கள் சீதாவினுடைய புனிதத் தன்மையை சந்தேகப்படுகிறார்கள் என்று சொல்லி அக்கினிப் பிரவேசம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
 
அதன் வழி அக்கினிப் பிரவேசம் செய்து சீதா வருகின்றது. வந்தபின் சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. ராமனும் சீதாவும் அரண்மனைக்குச் செல்கின்றார்கள்.
 
ஆனால் சிறிது காலத்திலேயே சீதா கர்ப்பம் ஆகின்றது. இதைத் தெரிந்து கொண்ட பின் மக்கள் என்ன சொல்கிறார்கள். சீதா ராவணனிடம் சிறைப்பட்டிருந்ததால் அவன் மோசமானவன்…! ஆகவே இது அவனுக்கு உருவான கரு தான் என்று மக்கள் கருதுகின்றார்கள்.
 
இது ராமனின் செவிகளுக்கும் செல்கின்றது. தன் சகோதரன் லட்சுமணனைக் கூப்பிட்டு சீதாவைக் காட்டிற்குள் சென்று விட்டு விட்டு வந்துவிடு ஒன்றும் சொல்லாதே…!” என்கிறான்.
 
தன் மனைவி கர்ப்பிணி என்றும் தெரிகின்றது இருந்தாலும் அவ்வாறு சொல்கின்றான்.
 
அசுர உணர்வுகள் கொண்டு வாழும் மிருகத்தின் மத்தியிலே கர்ப்பிணியை விட்டுச் சென்றால் என்ன ஆகும்…? உணவுக்கோ பாதுகாப்புக்கோ ஒருவரும் இல்லை என்றால் அதனுடைய நிலை என்ன ஆகும்…?
 
அப்போது அங்கே அந்தக் காட்டிற்குள் வரக்கூடிய ஒரு பெண் இது கர்ப்பிணியாக இருக்கின்றது அனாதையாக இருக்கின்றது இது யார்…? என்றும் தெரியவில்லை இருப்பினும் வான்மீகி மகரிஷி அங்கே தவம் இருக்கின்றார் இந்தப் பெண்ணை அங்கே அழைத்துச் சென்று அடைக்கலம் செய்யலாம்…? என்று கூட்டிச் செல்கின்றது.
 
வான்மீகி சீதாவைப் பார்த்தபின் உண்மையை உணர்கின்றார். சரி இங்கேயே இருக்கட்டும் என்று சொல்கின்றார்.
 
இயற்கையில் இராமனைப் பற்றிய உண்மை நிலைகளையும் தசரதச் சக்கரவர்த்தியின் நிலையையும் உலக நிலைகளையும் எப்படி இருக்கின்றது…? என்ற நிலையைக் கருவிலே உருப்பெற்ற குழந்தைக்குக் கர்ப்பிணியிடம் செவி வழி சொல்லி அதை நுகரச் செய்து அதன் வழி ரத்தத்தில் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஞானத்தை ட்டுகின்றான் வான்மீகி.
 
1.இராமனுடைய செயல்கள் எப்படி…?
2.உலக மக்களின் செயல்கள் எப்படி…?
3.ராவணனுடைய செயல்கள் எப்படி…? என்று
4.இந்த உண்மைகள் அனைத்தையுமே சீதாவிற்குக் கதையாகச் சொல்லப்படும் பொழுது
5.கர்ப்பிணி காது வழி கேட்டு கண் வழி கவர்ந்து மூக்கு வழி நுகர்ந்து
6.அந்த உணர்வுகள் ரத்தத்துடன் கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த ஞானத்தை ட்டுகின்றது.
 
இதில் எத்தனையோ அற்புதமான உண்மைகள் இருக்கின்றது…!
 
அதற்குப் பின் குழந்தைகள் பிறக்கின்றது லவ குசா என்று இரட்டைக் குழந்தைகளாகக் காரணப் பெயராக வைக்கின்றார்கள். அதாவது…
1.வர்ந்து கொண்ட உணர்வுகள் எதிரொலியாக எப்படிச் செல்கின்றது…?
2.எதைக் கவர்ந்து உருவானதோ அந்த உணர்வின் தன்மை வெளிப்படுத்தி அந்த உணர்வின் தன்மை எப்படிச் செயல்படுத்தும்…? என்பதற்காக
3.இரட்டைக் குழந்தைகள் பிறந்தது என்று காவியப்படி கொண்டு வருகின்றார்கள்.
 
ஆனால் சீதா இல்லாததால் இங்கே ராமன் ஆட்சி செய்யும் இடத்தில் பல இன்னல்கள் சூப்பட்டு விடுகிறது. அதிலிருந்து மீட்கத் தன் தந்தை செய்த அஸ்வமேத யாகத்தை மீண்டும் செய்ய வேண்டும் என்று இராமன் சொல்கிறார்.
 
ஆகவே அரசைக் காக்க வேண்டும் என்று அந்த யாகத்தைச் செய்ய முற்படுகின்றார்கள். தேதியைக் குறித்து அந்த நாளிலே அதைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆயத்தம் செய்கின்றார்கள்.
 
வான்மீகி இதைத் தெரிந்து கொள்கிறார். நாளை அந்த யாகம் தொடங்க இருக்கிறது என்றால் அங்கே மற்ற எல்லோரும் கூடியிருப்பார்கள் என்ற நிலையில்
1.லவ குசாவை அழைத்து நீங்கள் அங்கே செல்லுங்கள்...”
2.அங்கே சென்று தன் சரித்திரத்தை நான் எப்படிப் பிறந்தேன்…? எப்படி வளர்ந்தேன்…?
3.இதற்கு மூலம் யார்…? என்ற தத்துவத்தை எடுத்து ஓதும்படிச் சொல்லி அனுப்புகின்றார்.
 
அதன்படி யாகம் தொடங்கும் வேளையில் அந்த குழந்தைகள் இதையெல்லாம் பாடல்களாகப் பாடி வெளிப்படுத்துகின்றார்கள்.
 
இந்தப் பாடல்களைக் கேட்ட ராமன்… என்னுடைய சுய சரிதம் எனக்கும் சீதாவுக்கும் மட்டும் தான் தெரியும் அப்படி இருக்கும் பொழுது இந்தக் குழந்தைகள் அதைப் பாடுகிறார்கள் என்றால் “இவர்கள் யாராக இருக்கும்…?” என்ற வகையில் அவர்களை அணுகிஉங்களுடைய தாயார் யார்…? எங்கே இருக்கின்றார்கள்…? என்று இராமன் கேட்கின்றார்.
 
அவர்கள் ஒன்றும் சொல்லாமல் சீதா இருக்கும் வான்மீகி ஆசிரமத்திற்கு ராமனை அழைத்துச் செல்கின்றார்கள். ராமனும் உற்றுப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்கின்றான். நாட்டு மக்களும் உணர்கின்றார்கள்.
 
ஏனென்றால் அவர்களும் யாகசாலையில் இந்த பாடல்களைக் கேட்டதால் உலக மக்கள் புரிந்து கொண்டனர். “இனி நாம் சேர்ந்து வாழலாம் என்று இராமன் சீதாவை அரண்மனைக்கு அழைக்கின்றான்.
 
அப்பொழுது தான் பூமாதேவி சீதாவிடம் நீ பட்டது போதும் தாயே…!” என்று சொல்கிறது.
 
உயிரின் இயக்கம் ஈசன்… அதிலே ஏற்படும் வெப்பம் விஷ்ணு ஈர்க்கும் காந்தம் லட்சுமி.
1.இந்த உடலுக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளைச் சேர்த்து வைத்து உலகை அறியும்படிச் செய்தது.
2.நாம் உலகை அறிந்து கொள்ளும் நிலைக்காக எடுத்துச் சேர்த்தது.
 
மகாலட்சுமி நீ உலகை அறிய விரும்பினாய். அந்தச் சுவையின் தன்மை வரும் பொழுது நீ மகாலட்சுமியாக இருந்தாலும் “இந்த உடலில் பட்டது போதும்…”
 
சுவை சீதா என்ற நிலையே பூமியிலிருந்து தான் அது உருவாகக் காரணமானது.
1.பூமியிலிருந்து விளையப்பட்ட சுவைதான் உடலாக விளைந்தது
2.நீ பட்டது போதும் தாயே…! என்று பூமி பிளந்து சீதா என்ற இந்த உடல் மண்ணுடன் மண்ணாக ஐக்கியமாகின்றது…”
 
சீதா உயிரை நோக்கி விஷ்ணுவை நோக்கித் தவமிருந்தது விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததால்
1.அதனுடன் ஐக்கியமாகி சந்தோச உணர்வுடன் இணையப்படும் பொழுது
2.உடல் பிரிந்தபின் உடலில் வரும் இருளை நீக்கிவிட்டு உயிரோடு ஒன்றி அவனுடன் அவனாக ஐக்கியமானது.
 
ஏனென்றால் ஒளி இருக்கும் உயிர் தான் எல்லாவற்றையும் அறிவித்தது அந்த விஷ்ணு…” ஆகவே தான் கண்ட அந்த உணர்வின் சுவையை ஒளியின் சுடராகக் காட்டியது.
 
விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததனால் அங்கே போய் உயிருடன் ஒன்றி ஐக்கியமாகின்றது. அப்படி என்றால் என்ன அர்த்தம்…?
1.உடலில் வந்ததை எல்லாம் நீக்கிவிட்டு
2.உயிருடன் ஒன்றி இனிப் பிறவியில்லா நிலை அடைவது.
 
ராவணனும் அக்க உணர்வை எடுத்து அவனும் விஷ்ணுவை நோக்கித்தான் தவமிருக்கின்றான். (சீதாவோ) லட்சுமி விஷ்ணுவுடன் இணைந்து இயக்கி வந்தாலும் சீதா என்ற சுவையால் உடலாக ஆனாலும்
1.எத்தனையோ வேதனைகள் இருந்தாலும் விஷ்ணுவின் இயக்கத்துடன் நின்று
2.துயரத்தைத் தாங்கிக் கொண்டு அவனின் இயக்கமாகத்தான் இருந்தது.
 
துயரம் என்ற உணர்வுகள் மண்ணிலே தோன்றியது. ஆகையினால்ண்ணுடன் இந்தச் சடலம் போய் விடுகின்றது
1.அதிலே சேர்த்த உணர்வின் ஒளி உயிருடன் இருந்து இருளை நீக்கி ஒளி என்ற உணர்வைப் பெறுகின்றது
2.பிறவியில்லா நிலை அடைவது தான் மனிதனின் எல்லை…! என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது ராமாயணக் காவியம்…!
 
நாம் புரிந்து கொண்டோமா…?

July 3, 2025

தினசரி தியானம் எடுத்து முடித்த பிற்பாடு நாம் செய்ய வேண்டியது

தினசரி தியானம் எடுத்து முடித்த பிற்பாடு நாம் செய்ய வேண்டியது


சங்கடமோ சலிப்போ கோபமோ குரோதமோ தொழிலில் சோர்வோ இது எல்லாம் வரும் பொழுது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்துவதற்கு
1.அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை ஒரு நிமிடம் எண்ணிவிட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று கண்ணிலே ஏங்க வேண்டும்.
 
அடுத்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
அப்படிச் செலுத்தி விட்டால் அந்தச் சங்கடமோ பிறருடைய கோபமோ பிறருடைய நோயோ அது எல்லாம் நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
 
1.எங்கள் தொழில் சீராக நடக்க வேண்டும்
2.நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்
3.நன்மை செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.இதைப் போன்று வாழ்க்கையில் நம் ஆன்மாவை ஒவ்வொரு நொடிப் பொழுதும் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
 
எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் யாம் பதிவு செய்திருக்கின்றோம்.
 
நம்மைத் திட்டியவனை திட்டினான் திட்டினான் என்று எண்ணும் பொழுது அனுடைய நினைவு எப்படித் தொடர்ந்து வருகின்றதோ துரோகம் செய்தான் பாவி என்று அவனை எண்ணினால் நம் காரியங்கள் எப்படி அன்று கெடுகின்றதோ அவனுக்கும் கெடுகின்றதோ அதைப் போல்
1.நீங்கள் எப்போது அருள் சக்திகளை எண்ணினாலும்
2.உங்கள் எண்ணத்தால் அந்த சக்திகளை நீங்கள் எளிதில் கவர முடியும்… உங்கள் எண்ணம் உதவி செய்யும்.
 
தீமை செய்வோரைப் பார்த்து இப்படிச் செய்கின்றார்களே…!” என்று நாம் எண்ண வேண்டியது இல்லை… எண்ணக் கூடாது.
 
துரு நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் அவருடைய அறியாத தீமைகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இப்படித் தான் நாம் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
ஏனென்றால் தீமை செய்வோரைப் பார்த்து இப்படிச் செய்கின்றானே என்று ண்ணினோம் என்றால் அவன் உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது. நம் வாழ்க்கையை அது கெடுக்கின்றது.
 
ஆகவே அப்படி அது நமக்குள் வராதபடி இந்த முறைப்படி சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.த்தகைய நிலைகள் வந்தாலும் இது போன்று கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்து வந்தால் பிறருடைய தீமை நமக்குள் புகாது.
 
இருவர் சண்டை இட்டு கொண்டிருந்தாலும் கூட இதைப் போன்று உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்கைமைகள் அகல வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தால் போதுமானது.
 
அதை விடுத்து விட்டு
1.ஏன் இப்படிச் சண்டை இடுகிறார்கள்…? என்று அதை அழுத்தமாக எண்ணினால்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டையிடும் உணர்வை வளர்த்துவிடும்.
 
சொல்வது அர்த்தமாகிறதல்லவா.
 
இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்து சேருகின்றது. அதை மாற்றுவதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி இது போன்ற பயிற்சிகளைக் கொடுப்பது. உங்கள் வாழ்க்கையையே தியானமாகக் கொண்டு வர முடியும்.
 
கையிலோ உடலிலோழுக்குப்பட்டால் உடனே தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா. விஷமான பொருளோ அசிங்கமான பொருளோ நம் மீது பட்டால் உடனடியாக அதை நாம் தூய்மைப்படுத்துகிறோம் அல்லவா.
 
இதே மாதிரித் தான் உடனுக்குடன் உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்தியைக் கொடுக்கின்றோம். கொடுத்ததைச் சரியாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் ஜோசியமோ ஜாதகமோ மந்திரம் எந்திரம் எந்த மாயமும் தேவையில்லை.
 
1.யாம் சொல்லிக் கொடுக்கக்கூடிய முறைப்படி செய்தால்
2.உங்களாலேயே அதை மாற்றிக் கொள்ள முடியும் எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.
 
உங்கள் வியாபாரத்திலும் இது போன்ற அருள் உணர்வுகளைப் பாய்ச்சி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களுக்குப் பொருளைக் கொடுத்தால் வியாபராமும் சீராகும்.
 
எங்கள் வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலம் நலம் பெற வேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
 
எந்தத் துறையாக இருந்தாலும் இதே போன்று அருள் உணர்வைப் பாய்ச்சி அங்கே இனைக்கும்படி செய்து
1.அனைவருக்கும் இதைக் கிடைக்கும்படி செய்து வந்தால் எல்லாமே மகிழ்ச்சியூட்டும் நிலையாக வளரும்.
2.இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
 
இதன் வழி நீங்கள் கடைப்பிடிக்கப்படும் பொழுது தைச் செய்து பார்க்கும் பொழுது
1.அதில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால் என்னிடம் கேளுங்கள்
2.அதற்கு என்ன வழி…? என்று நிச்சயமாக வழி காட்ட முடியும்.

July 1, 2025

மரண பயம் எதிலே வருகின்றது…?

மரண பயம் எதிலே வருகின்றது…?


சகோதர தத்துவம் நமக்குள் எதிலே இருக்க வேண்டும்…?
1.நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் எனக்குள் அந்தச் சகோதர தத்துவம் வளர்கின்றது.
2.உங்கள் குடும்பம் வளம் பெற வேண்டும் என்று எண்ணினால் எனக்குள் இருக்கும்
3.நல்ல குணமும் எதிர் குணங்களும் நலம் பெறுகின்றது.
4.ஏனென்றால் எனக்குள் எல்லாமே அந்த அணுக்கள் ஒரு குடும்பமாகத் தான் வாழ்கின்றது
5.”நீங்கள்நான்…” எல்லோரும் சேர்த்து இந்த உடலில் ஒரு குடும்பமாக வாழ்கின்றது.
6.ஒரு உலகமாக வாழும்ஒரு ஊராக வளர்கின்றது.
 
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் யார் பிரிந்து இருக்கின்றோம்…? யாரும் யாரை விட்டுப் பிரிந்து இல்லை. ஒரு வேளை சாபமிட்டால் அங்கே இருவருடைய உணர்வும் ஒன்றாகி விடுகின்றது.
 
நட்பாகின்றது அல்லது பகைமையாகி விடுகின்றது. பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் பகைமையைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது. நட்பின் தன்மை வரப்படும் பொழுது அந்த நட்பே நமக்குள் பெருகுகின்றது.
 
பகைமை உணர்வுகள் நமக்குள் வளரும் பொழுது தான் ஐயோ மேல் வலிக்கின்றது தலை வலிக்கின்றது உடல் வலிக்கின்றது முதுகு வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்று வருகின்றது.
 
இந்த உணர்வுகள் வர வர
1.நாம் கோபப்பட்டால் தான் அதற்குச் சாப்பாடு கிடைக்கும்.
2.அல்லது என்னை இப்படிப் பேசினார்களே என்று வேதனைப்பட்டால் அந்த வேதனையான அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.
 
நீங்கள் சும்மா இருந்து பாருங்கள் இனம் புரியாதபடி வேதனைகள் வரும் அறியாத கோபம் வரும் நமக்குள் பகைவர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
 
அந்த நேரத்திலே பகைமை உருவாக்கப்படும் பொழுது புறத்திலேயும் பகைவர்களை உருவாக்கி விடுகிறது. அப்பொழுது மரண பயம் என்ற நிலை வருகின்றது.
 
மரண பயம் எதிலே வருகின்றது…? மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு
1.நமக்கு ஏதும் கிடைக்காமல் போய்விடுமோ…?
2.நம் ஆசை நிறைவேறாமல் போய்விடுமா…?
3.அதல பாதாளத்திற்குப் போய் விடுவோமா…?
4.நம் குடும்பம் சிரமப்பட்டுவிடுமோ…? என்றெல்லாம் எண்ணும் பொழுது மரண பயம் வந்து விடுகின்றது.
 
மரண பயம் வந்து விட்டால் மனிதனைக் காக்கும் நிலை இழக்கப்படுகின்றது. பயத்தால் துடிப்பு நிலை அதிகரிக்கிறது…! எதை எண்ணுகின்றோமோ அதனின் வளர்ச்சி இங்கே வருகின்றது.
 
ஒவ்வொரு குணங்களுக்குள்ளும் மரண பயம் பட்டால் அது மடிந்து விடுகின்றதுசெயலாக்கங்களை இழந்து விடுகின்றது.
 
ஒருவரிடம் விஷயத்தைச் சொல்லி விடுங்கள். உடனே அந்த நல்ல குணங்களுக்கு நாம் சொன்னது தப்பாகி விட்டதோ…! என்று படபட என்று இங்கே துடிப்பாகும். நல்ல குணங்கள் மடியும் தருணம் வந்து விடுகின்றது.
 
என்ன சொல்வாரோ…! ஏது சொல்வாரோ…? இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் மடிந்து விடுகின்றது. இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நம் நல்ல குணங்களைக் காண முடியுமா…?
1.நல்ல குணங்கள் மடிந்து மரண பயத்தை ஊட்டுகின்றது.
2.மனிதனையே மரணமடையச் செய்யும் நிலை உருவாக்கி விடுகின்றது.
3.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
4.மகரிஷிகளின் அருளை நாம் பெறுதல் வேண்டும்
5.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்.
 
எமது அருளாசிகள்.