
பிறிதொரு ஆன்மா இல்லாத மனித உடலே இல்லை…!
“சரியான நேரத்தில் நீங்கள் எனக்கு உதவி
செய்திருக்கின்றீர்கள்” என்று நம் மூலமாக அந்த உதவியைப் பெற்றவர் என்ன செய்வார்…?
1.வேறு
யாரும் உதவி செய்யவில்லை… இந்த மனிதர் தான் எனக்கு உதவி செய்தார்…! என்று கடைசியிலே அவர்
எண்ணினால் போதும்.
2.அந்த ஆன்மா நேராக நம் உடலில் புகுந்து விடும்… அவர் உடலில் ஏற்பட்ட தொல்லைகளை எல்லாம் இங்கே
செயல்படுத்தும்.
ஒரு வயதான கிழவியாக இருந்தது. அவர்கள் வீட்டில் யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை. ஆனால் பெரியம்மா
என்ற நிலையில் நாம் சந்தர்ப்பத்தில் உதவி செய்தோம் என்றால்… “இறக்கப்படும்போது அந்த அம்மாவிற்கு நம் நினைவு தான் வரும்…”
அதற்கு
முன்னாடி உதவி செய்திருக்க மாட்டோம். கடைசியிலே அது இறப்பதற்கு
ஒரு நான்கு நாளைக்கு இந்த உதவி செய்திருந்தால் போதும்…! மற்ற நிலைகளை எல்லாம் மறந்து இது அந்த அம்மாவின்
முன்னணியில் வந்து விடும். அது எந்தெந்த வேதனைப்பட்டதோ அதெல்லாம் நமக்குள் வந்து இயக்கத்
தொடங்கும்.
இப்படிப்
பல நிலைகள். ஏனென்றால் ஒரு மனிதன் இறந்து பின்
அவன் இன்னொரு உடலுக்குள் வந்தால் மனிதனாக உருப் பெறும் கருவாக உருவாவதில்லை.
அந்த
உடலுக்குள் சென்று அவனை உருக்குலையச் செய்து அவனைச் சின்னாபின்னமாக்கி இந்த உடலிலே விஷத்தைக் கலந்து… ஒரு மிருகம் எப்படி விஷமான
சத்து கொண்ட தன் உடலைப் பாதுகாத்துக்
கொள்கின்றதோ அது போன்று மனித சிந்தனைகள் ஒவ்வொன்றாகக்
குறைந்து மனித நிலை அற்ற பிற்பாடு மிருகத்தின் ஈர்ப்புக்குள்
செல்கிறது.
உதாரணமாக
பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் மனிதருடைய நினைவு இழக்கப்பட்டு பாம்பினுடைய ஈர்ப்பிற்குள் சென்று
பாம்பாகத்தான் பிறக்க நேரும்.
ஆனால் அதே
சமயத்தில் “கொசு கடிக்கிறதே…” என்று கொசுவை
நாம் அடிக்கிறோம் என்றால் அது நம் உடலுக்குள் வந்து கொசு
மனிதனாகப் பிறக்கும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
இப்படி எத்தனையோ மாற்றங்கள்
ஏற்படுகின்றது. இது போன்று தான் ஒன்றுக்குள் ஒன்று எடுத்துக்
கொண்ட உணர்வுக்குள் ஏப்படி எல்லாம் மாறி வருகிறது என்ற
நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதிலிருந்து
எப்படி நாம் தப்புவது…?
ஒரு சிலர் அடுத்தவரின் ஏச்சையும் பேச்சையும்
பொறுக்க முடியாமல் “பேயாகச் சென்றாலும் நான்
உன்னை விடமாட்டேன்…! என்று பேசுவார்கள்.
எனக்கு இப்படிச் செய்தார்களே பாவிகள்…! என்று இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் இங்கே வந்து விடுகிறது.
குடும்பத்திற்குள்ளோ மற்றதற்குள்ளோ எதைச் செய்தாலும் இந்த உணர்வுடன் இறந்தபின் அதே உணர்வின் ஒலி கொண்டு இங்கே
வந்துவிடுகிறது. அதற்குத் தான்… நீ செய்த தொல்லைகளுக்குப் பேயாகப் போ என்று ரிஷி சாபமிடுவதாகக் காட்டுகின்றார்.
பேயின் தன்மை அடைந்தபின்… ஐயனே எனக்கு வேறு வழி இல்லையா…? என்று தன் விமோசனத்திற்குக் என்று
கேட்கப்படும் பொழுது “உயர்ந்த நிலைகள் கொண்ட ஒரு மனிதனை நீ தீண்ட எண்ணுவாய்… அவன் நிழல் பட்டு மீண்டும்
மனித நிலையை அடைவாய்…!” என்று ரிஷி சொல்வார்.
நாம் நல்லதைச் செய்து
கொண்டிருந்தாலும் அந்த நன்மை செய்த நிலைகள் கொண்டு இன்னொரு
ஆன்மா இந்த உடலுக்குள் வந்து இந்த உணர்வின் தன்மை இயக்கமாகின்றது.
அதாவது
பாலிற்குள் விஷம் பட்டால் எப்படி அதனுடைய
நிலைக்கு இட்டுச் செல்கின்றதோ இதைப் போன்று “நாம் உதவி செய்த நிலைகள்…”
1.வேதனையான இயக்கத்தால் இந்த உடலுக்குள் வந்துவிட்டால்… அது அதனின் நிலையையே இங்கே
உருவாக்குகின்றது.
2.நம்முடைய உணர்வும் அதனுடைய உணர்வும் இரண்டும் கலந்து உயிரிலே படும்போது “இரண்டு எண்ணங்கள்”
வருகின்றது.
பேய் பிடித்தவரைப் பாருங்கள். நல்லா இருப்போம் என்று நினைப்போம்… ஆனால் என்னை எங்கேயோ இழுக்கிறதே… என்னை எதுவும் செய்ய விட
மாட்டேன் என்கிறதே… கை கால்கள் குடைகின்றதே… இடுப்பு எல்லாம் வலிக்கின்றதே… என்னைத் தூக்கு போடச் சொல்கின்றதே…
என்னை எங்கேயோ ஓடச் செய்கின்றதே என்று
பேசுவதெல்லாம்
1.தன் நினைவுகள் நல்லதாக இருந்தாலும் அந்த உணர்வுகள் இவ்வாறு இயக்குகின்றது.
2.நாம்
தவறு செய்யாமலேயே இப்படி நடக்கின்றது.
3.இன்னொரு ஆன்மாவின் உணர்வின் தன்மை இவ்வாறு
இயக்குகின்றது.
4.அதை நமக்குள் அடக்க வேண்டும். அதற்கு நமக்குச் சக்தி வேண்டும்.
அந்தச்
சக்தி உங்களுக்குக் கிடைப்பதற்குத் தான் அந்த மெய்ஞானிகள் அருள் வாக்குகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவு
செய்கின்றோம்.
ஒன்றும் தெரியாத மூடனிடத்தில் (என்னிடத்தில்) அந்த மெய் ஞானிகள் உணர்வை
ஊட்டி அந்த வித்தினை வளர்க்கும் முறையைக் காட்டினார் “எனது
குருநாதர் ஈஸ்வரபட்டர்…”
அவர் காட்டிய அந்த உணர்வின் ஓளியை… அவர் தனக்குள் வளர்த்துக்
கொண்ட அந்த ஒளியான வித்தைத்தான் இப்போது உபதேசமாகக் கொடுத்து உங்கள் உடலுக்குள் விதைக்கின்றோம்.
அதன் மூலம்
காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்கே இந்த நிலை.
ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.
உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை அடக்குங்கள். அதன் மூலம் உங்கள் உணர்வுகளை எல்லாம்
ஒளியாக மாற்ற முடியும்… இருளான நிலையிலிருந்து
விடுபட முடியும்.
அத்தகைய சந்தர்ப்பத்தை… அந்த நிகழ்ச்சியை ஏற்படுத்துவதற்குத்
தான் உங்களுக்கு இந்தத் தியான பயிற்சியைக் கொடுக்கின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.