
எமது உபதேசங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்
மனிதனாக இருக்கும்
நாம் பிறர் செய்யும் தவறை நாம் நல்ல உணர்வு கொண்டு பார்க்கப்படும் பொழுது இது
இணைந்து… அவர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் இயங்கி…
நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி நல்ல உடலையும் செயலற்றதாக நலியச் செய்து
அதிலிருந்து தோன்றும் எண்ணத்தையே நலியச் செய்து விடுகின்றது.
இதைப் போன்ற
நிலைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும் என்பதற்குத்தான் எமது குருநாதர் மாமகரிஷி
ஈஸ்வரபட்டர்… காட்டிய அருள் வழியினை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
1.விண்ணின்
ஆற்றலை அருள் ஞானிகள் எவ்வாறு பெற்றனர்…?
2.அந்த
உணர்வின் ஆற்றலை அவர்களுக்குள் எப்படிப் பெருக்கினார்கள்…?
3.அதை எப்படிப்
பருகினார்கள்…? தனக்குள் எப்படி விளைய வைத்தனர்…?
4.இன்றும்
விண்ணிலே எப்படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்…?
5.அவர்களின்
உணர்வை நீ நுகரும் பொழுது உன்னை அறியாது வந்த தீமைகளை எப்படி நீக்க வேண்டும்…?
என்று எனக்கு உபதேசித்தார்.
அவர் சொன்ன
வழிகளில் அதைக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் தீமையை அகற்றிடும் நிலையாக இங்கே எம்மிடம்
வருவோருக்கு
1.”உங்களுக்கு
நோய் இல்லை…” என்று நான் சொல்லும் பொழுது
2.அந்த
வாக்கினை ஏற்று இனி நோய் இல்லை என்று நீங்கள் திரும்ப எண்ணும் பொழுது அந்த நோய்
குறைகின்றது.
ஆகவே இதை நீங்கள்
எண்ணி இந்த உணர்வினை எடுத்துக் கொள்ளும் பொழுது உயிரிலே ஜீவன் பெற்று இந்த
உணர்வினைக் கவரும் நிலை வருகின்றது.
விஞ்ஞான
அறிவால் ஆண்டென்னாவிற்குச் சக்தி கொடுப்பதற்காக அதனுடன் சில வீரியக் கருவிகளைப் பொருத்துகின்றார்கள். அதன் துணை
கொண்டு தான் பல பல ஆற்றல்கள எடுக்கின்றார்கள்.
அதைப் போல
1.அருள்
ஞானிகள் உணர்வின் சத்தை உங்கள் நல்ல குணத்துடன் இணையச் செய்வதற்குத் தான் இந்த
உபதேசம்.
2.அதன் வழி
வாழ்க்கையில் உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து இந்த உணர்வின் துணை கொண்டு
மீட்டிக் கொள்ள முடியும்.
தாவர இனங்கள் வாடி
நலிந்திருப்பதை அதற்குள் உரச் சத்தை இணைத்து அதை ஏற்றுக் கொண்ட பின் தன்னிச்சையாகக்
காற்றிலிருந்து அதன் சக்தியை எடுத்துச் செழித்தோங்கி வளர்ந்து வீரிய வித்தாக அது
உருவாக்கிக் கொடுக்கின்றது.
இதைப் போன்று
தான் மனித வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்ட நாம்…
சந்தர்ப்பசத்தால் நலியும் நிலை வரும் பொழுது அதை மாற்றிட அருள் ஞானிகளின்
ஆற்றல்மிக்க சக்தியை “நீங்கள் எண்ணியவுடன் இந்த உபதேசம் மூலமாகக்
கிடைக்கப் பெறச் செய்கின்றோம்.
ஏனென்றால் இந்த
வாழ்க்கையில் நாம் சந்தித்தோர் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கேட்டு…
1.”திருடன்
திருடன்” என்று சொல்லி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள்
பாய்ந்து நம்மையும் திருட வைத்துவிடும்.
2.இவன் “பொய் சொல்கின்றான் பொய் சொல்கின்றான்” என்று
திரும்பத் திரும்பச் சொன்னால்
3.அவனைக்
காட்டிலும் நாம் பன்மடங்கு பொய் சொல்லும் நிலையே வந்துவிடும்.
4.இவன் “ஏமாற்றுகிறான் ஏமாற்றுகிறான்” என்று எண்ணி மற்றவரிடம்
இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருந்தால்
5.அந்த
ஏமாற்றும் உணவுகள் நமக்குள் விளைந்து இந்த வாழ்க்கையில் நாமும் ஏமாற்றும் நிலை அடைந்து
விடுகின்றோம்.
6.அவன்
செய்தான் நாம் ஏன் செய்யக்கூடாது…? என்ற நிலைகள் இதனின் நிலைகள்
நமக்குள் வந்துவிடும்.
நம் வாழ்க்கையில்
எதனைச் செய்கின்றோமோ இது தான் தியானம் என்பது. மற்றதை எண்ணித் திரும்பத்
திரும்பச் சொன்னால் அதையே தியானிக்கிறோம்… அது விளைகின்றது.
அதைப் போல்… இப்பொழுது
மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பெறும்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றோம்.
1.மகரிஷிகளின்
அருள் சக்தியை நான் பெறுவேன்
2.எனக்குள்
தீமைகள் விளையாது தடுப்பேன்.
3.நான்
பார்ப்பது அனைத்தும் நலம் பெறும் என்று அடிக்கடி எண்ணி எடுத்தால்… அதையே சொன்னால் இது தான் தியானம்.
அடிக்கடி அந்த
அருள் ஞானிகளின் சத்தை நமக்குள் கிடைக்கச் செய்து அதனின் உணர்வை ஓங்கி வளர்க்க
வேண்டும்.
இப்பொழுது
ஒருவன் வேதனைப்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பார்க்கின்றோம்… அந்த வேதனையை நுகர்ந்தறிகின்றோம்…
வேதனைப்படுகின்றான் என்று எண்ணுகின்றோம்… வேதனையிலிருந்து காத்து
விடுகின்றோம்.
இருப்பினும்
அவன் பட்ட வேதனை நமக்குள் வந்ததை நீக்க வழி வேண்டும் அல்லவா…!
அதற்குத்தான்
இப்பொழுது அந்த அருள் ஞானிகளின் உணர்வை உங்கள் நல்ல குணங்களுடன் அடிக்கடி இணைத்துக்
கொண்டே வருகின்றோம்.
இந்த உணர்வின்
துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்…
எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
1.அவன்
பட்ட வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவிலே கலந்து விடாது
2.நம்
உடலில் உள்ள ஜீவான்மாக்களில் கலக்காது
3.உயிருடன்
இணைந்து மீண்டும் தொடர்ந்து செயல்படாது இதைத் தடுக்க முடியும்.
ஈஸ்வரா…!
என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது
அந்த உணர்வின் சத்து உங்கள் ஆன்மாவிலே கலந்து தீமைகளை நீக்கி தீமையை நீக்கிடும்
சக்தியாக உங்கள் நல்ல உணர்வுகளுடன் அது இணைந்து அதனின்
உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது “ஓ…” என்று ஜீவனாகி “உங்கள் உடலை ஒளிச் சரீரமாக உருவாக்க
இது உதவும்…!
அதற்கே இந்த
உபதேசத்தின் வாயிலாகச் சக்தி கொடுக்கின்றோம்.
சக்தி வாய்ந்த
ஆண்டென்னாவை வைத்துத் தொலை தூரத்தில் இருக்கும் அலைகளை
எப்படி இழுக்கின்றோமோ இதைப் போன்று அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை சக்தி
வாய்ந்ததாக உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது இதனை நீங்கள் நினைக்கும் பொழுது
1.உங்கள்
கண்ணான ஆண்டென்னா வீரிய நிலை அடைந்து
2.சூட்சமமாக
மறைந்திருக்கும் அருள் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உங்கள் ஆன்மாவாக
மாற்றி
3.உடலுக்குள்
அந்த சக்தியினை வளரச் செய்வதற்குத் தான் இதை உபதேசிப்பது.
ஆண்டனாவிற்கு
அதனுடன் இணை சேர்த்த இயந்திரங்கள் இல்லை என்றால் அதற்குத் தொலை தூரத்தில்
இருக்கக்கூடிய அலைகளை இழுக்கும் திறன் இல்லை.
இதைப் போன்று
தான் விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் கவர்வதற்கு உங்களுக்குள்
“அந்தத் தகுதியினை” ஏற்படுத்துகின்றோம்.
ஏனென்றால்…
1.அந்த மகரிஷிகள்
உடல் பற்றை விடுத்துப் பிறவி இல்லாத நிலை அடைந்தவர்கள்… மிக
மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைப் பெற்றவர்கள்.
2.அவர்கள்
எண்ணங்களைத் தொட வேண்டும் என்றால் நமக்கு அந்தச் சக்தி வேண்டும்.
3.அந்தச்
சக்தியினைப் பெறச் செய்வதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.
எண்ணங்களைக்
கூர்மையாக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று “இந்த
உபதேசங்களை யார் ஒருவர் கூர்ந்து கேட்டு இதைப் பதிவாக்குகின்றார்களோ” அவர்களுக்கு இந்தச் சக்தி எளிதில் கிடைக்கும்.
மான் புலியைக்
கண்டபின் அதனிடமிருந்து தப்பிக்க வலிமையாக எண்ணுவது போன்று தீமைகளிலிருந்து விடுபட
அருள் ஞானிகளின் சக்திகளைப் பெற வேண்டும் என்று “கூர்மையாக நினைவைச்
செலுத்தினால்… வலுவாக நினைவைச் செலுத்தினால்”
இப்பொழுது உபதேசிக்கும் பொழுது அருள் சக்தியாக உங்களுக்குள் அது இணை சேர்கின்றது.
அப்படி இணைந்த
நிலைகள் கொண்டு அந்த ஆற்றலை வலுப்பெறச் செய்வதற்கு நாம் தியானிப்போம்.
எல்லோரும் கூட்டாக எண்ணித் தியானிக்கப்படும் பொழுது அதனின் வலுக் கொண்டு மகரிஷிகளின்
அருள் சக்திகளைப் பெற முடியும்.
ஆகவே… பிறருடைய
வேதனையான உணர்வுகளைக் கண்டுணர்ந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்…
எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று திரும்பத்
திரும்ப எண்ணி அந்த சக்திகளைச் சேர்க்கப்படும் பொழுது தீமையை விளைவிக்கும் நிலைகள்
தடுக்கப்படுகிறது.
அடுத்து… மகரிஷிகளின்
அருள் சக்தி அவர்களும் பெற வேண்டும் என்று நாம் எண்ணி
1.நம்
கண் புலனறிவால் அந்த உணர்வின் ஆற்றல்களை அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது
2.இந்த
உணர்வுகள் அவர் உடலுக்குள் ஊடுருவி அவர்கள் வேதனையைத் தணிக்க உதவும்.
3.அதே சமயத்தில்
அவர்கள் வேதனை நமக்குள் வளராது தடுக்க முடியும்
இதைச்
செயல்படுத்துவதற்குத் தான் “நீ விநாயகனை வணங்காமல் ஆலயத்திற்குள்
சென்றால் பலன் ஏதும் இல்லை…!” என்று தெளிவாக எடுத்துக் காட்டி
உள்ளார்கள் ஞானிகள்.