ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2025

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்


முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்


இராமனுக்குத் திருமணமாகும் பொழுது முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும் வந்து ஆசீர்வதித்தார்கள்…” அந்த இராமன் யார்…? சீதாராமன்…! சந்தோஷத்தை ஊட்டும் உணர்வுகள்.
 
1.உங்கள் உடலுக்குள் பல பகைமையான உணர்வுகள் இருந்தாலும்
2.சந்தோஷமான வார்த்தையை எடுத்துத் தியானத்தில் எல்லோரும் சொல்லப்படும் பொழுது
3.மகிழச் செய்யும் உணர்வின் இயக்கமாக வருகின்றது.
 
ஒவ்வொரு உடலிலும் எண்ணிலடங்காத குணங்கள் உண்டு. நாம் எத்தனை பேர் கூட்டுத் தியானத்தில் இருக்கின்றோம்…? இத்தனை பேருடைய உணர்வின் ஒலிகள் படரப்படும் பொழுது வீட்டில் எப்படி இருக்கும்…?
 
எல்லோரும் சேர்ந்து வீட்டிற்குள் அருள் உணர்வுகளைப் படரச் செய்யப்படும் பொழுது செவிகளில் கேட்டு இந்த உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடல் எப்படி இருக்கும்…?
 
இது எல்லாம் ஞானிகள் சொன்ன அந்த மார்க்கத்தினை நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.
 
இன்று இந்த உலகமே விஷமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தீமை புகாது வலிமையை நாம் பெறுதல் வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
 
1.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தூக்கி எறிய வேண்டுமென்றால் அதற்குண்டான சக்தி பெற வேண்டும்.
2.அந்த அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியானப் பயிற்சியை கொடுப்பது.
3.எதாவது ஆயுதம் இல்லாது ஒன்றும் செய்ய முடியாது.
 
இந்த மனித வாழ்க்கையில் வரும் வேதனை வெறுப்பு போன்றவைகளுக்கு வலிமை ஜாஸ்தி. அதை நீக்குவதற்கு உங்கள் நல்ல குணங்களால் முடிகிறதா…? அவையெல்லாம் அலறும்.
 
ஆனால் இத்தகைய விஷத்தை வென்று உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதை எடுத்து உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் சேர்த்துப் பழகி விட்டால் அந்த உணர்வுகள் வளர வளர
1.தீமையான உணர்வுகள் அணுகாது அதைத் தூக்கி எறியும் மன வலிமையும்
2.அந்த உணர்வினைப் பற்றுடன் பற்றி உங்களுக்குள் நல்ல உணர்வுகளை வளர்க்கும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.
3.இந்த வாழ்க்கைக்குப் பின் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.
 
சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…!
 
மற்றவர்கள் சிரமப்பட்டாலும் அது உங்கள் செவிகளில் பட்டாலும் அதை மாற்றி அமைத்து
1.சிந்தித்துச் செயல்படும் நிலையாக உங்களுடைய சொல் அவர்களுக்குச் சந்தோஷத்தை ஊட்டும் பொழுது
2.”இன்னார் சொன்னார் நன்றாக இருந்தது…” என்று அவர்கள் அந்த மகிழ்ச்சி பெறக்கூடிய செயலுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் வர வேண்டும்.
 
அது தான் உண்மையான தியானம்.
 
ஒவ்வொரு உயிரும் கடவுள் ஒவ்வொரு உடலும் கோவில் பல கோடி உடல்களில் சேர்த்து மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் அவை தான் நமக்குத் தெய்வம்…!”
 
எனக்கு குருநாதர் எப்படி வழிகாட்டிக் கொடுத்தார்…?
 
உயிர் கடவுளாக இருக்கின்றது அந்த உடல் கோவிலாக இருக்கின்றது
1.இந்த உடலில் தெய்வங்கள் இருக்கின்றது
2.அந்தத் தெய்வத்திற்கு சேவை செய்ய நான் கொடுத்த அருள் சக்தியை அவர்களை நுகரச் செய்து
3.அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்தி உயர்ந்த குணங்களைத் தெளிவாக்க நீ பிரார்த்தனை செய்என்றார்.
 
அந்தச் சேவையைத் தான் நான் செய்து கொண்டிருக்கின்றேன். குரு வழியில் யாம் சேவை செய்யும் பொழுது உங்களுக்கு அந்தச் சந்தோஷம் வருகிறது. அப்பொழுது எனக்குச் சந்தோசமான சாப்பாடு கிடைக்கின்றது. எனக்குக் கொஞ்சம் பூரிப்பு வருகின்றது.
 
ஆகவே வாழ்க்கையில் வரும் சங்கடங்களை நீக்கி மற்றவருடைய தீமைகளைப் போக்கச் செய்யும் அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்.
 
அதைப் பெறச் செய்வதற்குத் தான் யாம் உபதேசிப்பது