
பெரும்பகுதியான மகரிஷிகள் சீடர்களின் உந்து விசையால் தான் விண் சென்றுள்ளார்கள்
குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களைக் குலதெய்வங்களாக எண்ணிக்
கூட்டு குடும்ப தியானங்கள் செய்து… சப்தரிஷி மண்டலத்துடன் அவர்கள் இணைய வேண்டும் என்று அடிக்கடி
இவ்வாறு எண்ணி விண் செலுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.உங்கள் புலனறிவுகளை ஆற்றல்மிக்க சக்தியாக மாற்றுவதற்குத் தான்
2.பௌர்ணமி அன்று உங்களை விண்ணை நோக்கி எண்ணச் செய்து இந்த ஆற்றல் பெறும்படி
செய்கின்றோம்.
உங்கள் உயிரை ஈசனாக எண்ணி அந்த உயர்ந்த ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று
குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை நான் பிரார்த்தித்து
1.விண்ணில் எட்டாத் தூரத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் எண்ண
அலைகள் கலக்க வேண்டும் என்று
2.இந்த உணர்வினை உந்தப்படும் போது உங்கள் புலனறிவுகள் விண்ணை நோக்கி
ஏகுகின்றது.
அப்போது… மனிதனாகி
உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலைப் பெற்ற அந்தச் சப்தரிஷி மண்டலங்களின்
பால் “உங்கள் எண்ணங்கள் ஊடுருவிப் பாய்கின்றது…”
அவ்வாறு எட்டிப் பாயப்படும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி
எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்ற இந்த நினைவினைக் கூட்டி நமக்குள்
பழக்கப்படுத்த வேண்டும்.
இப்படிப் பழக்கப்படுத்தினால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை
விண் செலுத்தச் செய்து அங்கே இணையச் செய்யும் பொழுது… இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாய்த்துவிட்டு
ஒளியின் சரீரமாக மாறிச் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்துடன் அவர்கள் சுழல்வார்கள்.
அவ்வாறு சுழலச் செய்த பின் மீண்டும் அடிக்கடி இந்த நினைவினைக் கூட்டி விண்ணை
நோக்கி எண்ணும் பொழுது நம் உடலுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெருக்கி
1.அதே உணர்வின் எண்ண நிலைகள் மிதக்கும் நிலையாக புவியின் ஈர்ப்பிலிருந்து
மிதக்கப்படும் பொழுது
2.நாம் அனைவரும் ஒன்று சேர்த்த உணர்வின் தன்மை கொண்டு சப்தரிஷி மண்டலத்தை
எண்ணி
3.அவ்வாறு ஏங்கிய உணர்வின் எண்ணங்களை “உந்து விசையாக
உந்தி”
4.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மக்களை அந்தத் தருணத்திலேயே நாம்
அனைவரும் சேர்ந்து விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.
அப்படி விண்ணுக்குச் செலுத்தினால்தான் அந்த ஆத்மா அழியா ஒளிச் சரீரம் பெற
முடியும்.
எந்த ஞானியானாலும் எந்த மகரிஷியானாலும் தன் உடலுக்குள் ஆற்றல்மிக்க சக்திகளைப்
பெருக்கினாலும் அந்த உணர்வின் ஆற்றலாக மற்றவருடைய உள்ளங்களிலே அதைப் பதிவு செய்து… அவர்கள் தீமைகளை நீக்கி
மகிழ்ச்சியூட்டும் உணர்வின் எண்ண வலுவை அங்கே பெருக்கச் செய்து… மெய் வழியின் உணர்வுகளை வளர்க்கச் செய்து… “அதன்
வழி தான் விண் சென்றார்கள்…”
1.போகனோ அகஸ்தியனோ வியாசகரோ வான்மீகியோ இது போன்ற மெய்ஞானிகளோ
2.மனித உள்ளங்களில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்து
வளர்த்துக் கொண்டு
3.அவர்கள் வெளியிலே செல்லும் பொழுது சீடனின் தன்மை கொண்டு விண்ணிலே உந்தித்
தள்ளி
4.அந்த உணர்வினைப் பெறும் தகுதியை ஏற்படுத்திவிட்டுச் சென்றார்கள்.
அவர் வழியிலே தான் நாமும் அங்கே சென்றடைய முடியும். ஆகவே அவர்கள் காட்டிய நல்வழியிலே
நாமும் செயல்படுவோம்… விண் செல்வோம்.