
தீமையை நீக்கும் சக்திகளைக் குருவான உயிரிடம் வேண்டுவது தான் “குருக்ஷேத்திரப் போர் என்பது…!”
குருக்ஷேத்திரம் என்பது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் குருவான (உயிர்) நிலைகள் கொண்டு அது
வளர்த்துக் கொண்ட நிலைகளில்
1.நாம் எதை எடுக்கின்றோமோ அந்த நிலைகொப்ப ஞானத்தை உருவாக்கி
2.அவன் உபதேசிக்கும் உணர்வின் நிலைகள் தான் குருவுடன் அணுகி
3.நமக்கு எப்பொழுது துன்பம் வருகின்றதோ அவனை நினைக்கும் போது அந்த
ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் உருப் பெறச் செய்கின்றது.
இது கீதா உபதேசத்தின் நிலைகள் கொண்டு அன்று கண்ணன் சொன்னது.
நாம் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது பிறர் செய்யும் தவறை உணர்கின்றோம். அப்படி உணர்த்திய நிலைகள் கொண்டு அவன்
நிலைகளிலேயே என்னை இயக்குகின்றது.
ஆகவே என் நிலையைக் காக்க வேண்டும் என்றால் அவன் உணர்வுகள் என் உடலுக்குள் சென்று
தீய விளைவுகளாக உருவாக்காதபடி தடைப்படுத்த வேண்டும்.
அப்படித் தடைப்படுத்தும் நிலைகளுக்குத் தான் கீதா உபதேசத்தை அன்று வியாசகர்
காட்டினார்.
1.ஓ…ம் இந்த உணர்வின் உணர்ச்சி ஓங்கார நாதம் வானை
நோக்கி ஓதுகின்றான்.
2.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய பல எண்ண அலைகளை அடக்கி ஓம் என்ற நாதத்தில்
உயிரில் சுருதியை ஏற்றி
3.இந்த உடலுக்குள் குருவான உணர்வின் தன்மை கொண்டு விண்ணிலே ஏகி அந்த ஓ…ம் என்ற ஓங்காரத்தைச் செலுத்தி
4.மனித உடலுக்குள் சிற்றலைகளை அமுக்கி உணர்வின் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி
5.மெய் உணர்வை ஊட்டிய மகரிஷியின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று
விண்ணை நோக்கி ஏகி
6.அந்த மெய் ஒளியை எனக்குள் சேர்ப்பேன்…! என்ற இந்த உணர்வின்
தன்மை கொண்டு
7.எங்கே என்னைத் தாக்க வேண்டும் என்று எண்ணினார்களோ அந்த எண்ணத்தை அங்கேயே
வீழ்த்த வேண்டும்.
அம்பைக் கொண்டு அல்ல. புறத்தால்
காட்டப்பட்ட அம்பை எய்து அந்த உடலை வீழ்த்துவது அல்ல.
உடலை வீழ்த்த வேண்டும் என்று… அந்த உடலுக்குள் நின்று இந்த உணர்வு இயக்கியதை அங்கே வீழ்த்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்…” இதைத்தான் குரு எனக்கு
உபதேசித்தார்.
குருவே எதிரிகளின் பக்கம் இருந்து அந்த விஷத்திற்குள் சிக்கிய பின் அந்த உணர்வின்
சக்திகளை எப்படி நீக்குவது…?
குருவிற்குள் தன்னை அறியாது வந்தாலும் அந்தக் குருவின் நிலையை அவர் அறியாது நுகர்ந்த உணர்வு இயக்கும் நிலைகள் தான்.
1.பாசத்த்தின் வலையில் நாம் சிக்கப்படும் பொழுது குரு என்ற நிலையில் மரியாதை… சகோதரர் என்று மரியாதை…
2.ஆனால் அவர்கள் செய்வதோ தவறு.
3.எனக்குள் இருக்கக்கூடிய வலிமை கொண்டு அவரை வீழ்த்தி விட்டால்… “நான் யாருக்காக வேண்டி வாழ்கிறேன்…!” என்ற
4.இந்த உணர்வின் சோகங்கள் இங்கே தூண்டும் பொழுது தீயதை வளர விடும் நிலையும்
நல்லதைக் காக்கும் திறன் இழக்கின்றது.
மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இந்தப் பாசத்தின் நிலைகள் எல்லை கடந்து
செல்லும் பொழுது நம்மால் அதை வீழ்த்த முடியவில்லை… பலமிழந்த நிலையில் அது நம்மையே
வீழ்த்தி விடுகின்றது.
அர்ஜுனன் என்பது சகல வல்லமையும் கொண்ட உணர்வின் நிலைகள் தான். தன் உயிரான நிலைகள் கீதை
உபதேசிக்கப்படும் பொழுது
1.நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் நீ வருகின்றாய்.
2.எதை நினைத்தாலும் அந்தக் கண்ணின் வழி கொண்டு தான் அறிய முடியும்.
3.நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலில் விளைகின்றது.
4.நீ எதை நினைக்கின்றாயோ அதன் நிலையில் கொண்டு அதுவாகின்றாய்.
5.யார் எதைச் செய்தாலும் என்னிடமே வந்து சேர்வாய்… என்
நிலையை நீ அறிவாய் என்று
6.இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு நினைவுகள் என்ன ஆகின்றது…? என்று அங்கே காட்டுகின்றார் வியாசகர்
கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்ற நிலையில் அவர் அறியாத நிலைகள் அங்கு நுகர்ந்த தீமையான
உணர்வின் சத்து இயக்குகின்றது.
அது இந்த உடலை ஆட்டிப்படைக்காதபடி கண்ணின் நிலையை அவனுடன் ஒன்றி கண்ணா…! என்று நாம் எண்ணி… கண்ணின் நிலைகள் உயிரோடு ஒன்றி நம்
நினைவை விண்ணிலே செலுத்தி… அந்த மெய் ஒளியின் தொடரை ஈர்க்கும்
நிலையாக அதை நமக்குள் ஊட்டிக் கொண்டிருக்கும் குருவான உயிரிடம் வேண்டுவது தான் “குருக்ஷேத்திரப்
போர் என்பது…!”
தீமையான
உணர்வைச் சுவாசித்து உயிரான குருவிடம் பட்டுத்
தான் அதை அறிய முடிகின்றது. இருந்தாலும் அந்தத் தீமையான
உணர்வுகள் உடலுக்குள் செல்லாதபடி
1.அருள் உணர்வுகளைப் பெருக்க ஈஸ்வரா என்று உயிரிடம் ஏங்கி…
அந்த மெய் உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியைக் கூட்டப்படும் பொழுது
2.அந்த உணர்வின் தன்மை தான் எனக்குள் வலுக்கூட்டி என் நினைவின் எண்ண அலைகளை
உயிரோடு ஒன்றி ஒளியாக்கும் தன்மைகள்…!