
வேதனையாக இருக்கிறது… முடியவில்லை…! என்று சொல்வதற்குப் பதில் “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று சொல்லுங்கள்
மனித வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய
இன்னல்களாக இருந்தாலும் யாம் சொல்லும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்து… நமக்குள் பரிசுத்த நிலைகளை ஊட்டி… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக நமக்குள் கூட்டி… உணர்வின் எண்ண அலைகளை ஒளியாகக் கூட்டி… இந்த உணர்வின் சக்திகள் உயிருடன் ஒளியாக மாறி வெளியில் சென்ற
பின்… எந்தத் தீங்கும் நேராதவண்ணம் தீமையான உணர்வுகளை மாய்த்துத் தனக்குள் ஒளியின் சுடராக என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.
ஆகையினால் யாம் லேசாகச் சொல்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம்.
யாம் கொடுக்கும்
நல் வாக்கினை
எண்ணி “அதைப் பெற வேண்டும்” என்று ஏங்கி இருந்தீர்கள் என்றால் ஆற்றல்மிக்க சக்திகள்
உங்களுக்குள் ஊடுருவி உங்களுக்குள் நன்மைகளை வளர்த்து தீமைகளை விலக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
எல்லாமே வாக்கு தான்…! ஜோதிடம் ஜாதகம் பார்க்கப்படும் பொழுது
1.“கேட்ட நேரம் வருகிறது… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது” என்று அவர்கள் சொன்ன வாக்கினை மனதினிலே ஏற்றி
2.அதன் உணர்வை உருக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நசித்துக் கொள்கின்றீர்கள் அல்லவா…!
ஆனால் சாதாரண ஒலியின் தன்மை தான் அது.
அவன் சொன்ன வாக்கை மீட்டுவதற்கு “உபசாந்திகளைச் செய்… யாகத்தைச் செய்தால் மீள்வாய்… இந்த ஆலயத்திற்குச் சென்றால் மீள்வாய்…” என்று பல பொருள்களைச் செலவழிக்கச் சொல்வார்கள்.
அதை போல் அல்ல யாம் சொல்வது…!
1.நீங்கள் ஒவ்வொருவரும் யாம் சொன்ன முறைப்படி
2.மெய் ஒளியின் சுடரை எடுத்து ஒளியின் சுடராக உங்களுக்குள் வளரச் செய்யுங்கள்.
இந்த மனித வாழ்க்கைக்குத் தான் சொன்ன குறைகளை மாற்றி அமைப்பதற்குச் செய்யப்பட்ட நிலைகள் தான்
1.ஜாதகங்களையும் சாஸ்திரங்களையும் சொல்லி நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
2.ஆனால் “விதிப்படி நடக்கும்…!” என்று இருக்கப்படும் பொழுது கேள்விகளை நடத்தினால் எப்படி மாறும்…?
ஆனால் அதை எப்படி எதன் வழிகளில்
நடத்த வேண்டும்…?
நம் உணர்வின் தன்மை ஒளியாக… ஞானிகளின் அருள் வித்தாக நமக்குள் மாற்றி அமைத்தால் தான்… “இந்த வேள்வியை நடத்தினால்தான் மாற்ற முடியுமே தவிர… புற கேள்விகளைச் செய்து அல்ல...!”
அவன் சொன்ன நிலைகளை நாம் எடுப்பது போல மெய் ஞானியின் அருள் வித்தை உங்களுக்குள் வளர்த்து மெய் ஒளியுடன் நீங்கள் செல்ல
1.அன்று ஆதிசங்கரர் சொன்ன அருள் தத்துவத்தை உங்களுக்குள் ஏற்று
2.மெய் ஒளியாக நல்ல உணர்வினை இயக்கக் கூடிய சக்தியாக தனக்குள் துவைதமாக்கி
3.உணர்வின் மன ஒலியாக அத்வைதமாக இயக்கி
4.அத்வைதத்தின் தத்துவமாக என்றும் நம்முடைய பேச்சு மூச்சம் உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக
5.இருளை நீக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்.
இது ஆதிசங்கரர் சொன்ன உண்மை நிலைகள்…! அதன் வழியில் நீங்கள் பெற வேண்டும் என்று அந்த ஆசையின் நிலைகள்
கொண்டு இதைச் சொல்கின்றேன்.
ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானமும் ஆத்ம சுத்தி என்ற நிலையும் கடைப்பிடித்து உடலிலே எந்த நோயாக இருந்தாலும்… வயிற்று வலியாக இருந்தாலும்…
1,மகரிஷிகளின் அருள் சக்தி அந்த
வலி இருக்கும் இடங்களிலே படர்ந்து
2.அந்த வலிகள் நீங்கி நலம் பெற வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ணுங்கள்.
கேன்சர் நோய் வந்து விட்டது… உங்களால் முடியவில்லை என்று எண்ண வேண்டாம் முடியவில்லை என்கிற பொழுது… “வேதனை… வேதனை…” என்று எண்ணுவது போல “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்” என்று எண்ண வேண்டும்.
உடலில் எங்கே கேன்சர் இருக்கின்றதோ அங்கே
நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தியால்
அந்த வேதனை நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி ஆங்கே
படர்ந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வாக
எனக்குள் விளைய வேண்டும் என்று… கண்ணைத் திறந்து வானை நோக்கி ஏகி பின் கண்களை மூடி அந்த இடத்திலே நினைவினைச்
செலுத்த வேண்டும்.
கண்களை மூடி… கண்களைத் திறந்து இவ்வாறு சிறிது நேரம் செய்ய வேண்டும்.
1.நாள் முழுவதற்கும் ஐயோ வலிக்கிறதே…” என்று வேதனையாகச் சொல்வதற்குப் பதில்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்.
இந்த வாக்கின் சுடரின் தன்மை உங்களுக்குள் அந்த மெய் ஒளியினை உணர்த்த… அந்தத் தீய நிலைகளை மாற்ற… அதனின் தன்மை கொண்டு “நன்மை பயக்கும் நிலையை” நாம் பெற முடியும்.
நாம் எடுத்துக்
கொண்ட நினைவு தான் சுவாசமாகி… அந்தச் சுவாசத்தின் உணர்வு தான் நமக்குள் இயக்கமாகி… அந்த உணர்வின் சக்தி உறைந்து நமக்குள் விளைந்து பரிணாம வளர்ச்சியில் வந்திருக்கின்றோம்.
1.தீமைகளிலிருந்து மீட்டிட ஞானிகள் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடித்து அதைப் பெற வேண்டும்
என்று பிராத்திக்கின்றேன்.
2.ஒரு நாளைக்கு ஆயிரம் முறை கூட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணலாம்.
பத்திரிகையைப் பார்க்கின்றோம் டிவியைப் பார்க்கின்றோம். அதில் எத்தனையோ உணர்வுகளைத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து எங்கள் பேச்சும்
மூச்சும் உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்
நாளை நடப்பது அனைத்தும் நல்லவையாக நடக்க வேண்டும் என்று எண்ண அலைகளைப் பரப்ப வேண்டும்.
அப்போது
அந்தச் சங்கட உணர்வுகள் உங்களுக்குள் சேராது தடுக்க முடியும்.
நோயாளியைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு உங்களுக்கு “இனி நோய் இல்லை நலம் பெறுவீர்கள்…” என்று நல்ல வாக்கினைச் சொல்லுங்கள்.
உணவு உட்கொள்ளும் பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து அந்த அருள் உணர்வுடன் உணவை
உட்கொள்ளுங்கள். அருள் உணர்வுகள் உமிழ் நீராகக் கலந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.
இந்த வாழ்க்கையில் நல்லது என்று பார்க்கும் போது… தீமை என்ற நிலைகளை உணர்த்துகின்றது. அதைத் தெரிந்து தான் நாம் விலகிச் செல்கின்றோம்.
1.விலகிச் சென்றாலும் அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சென்று நோயாக
மாறிவிடுகின்றது.
2.அதை அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படி இல்லாதபடி
கடவுள் செய்வார் யாரோ
செய்வார் எவரோ செய்வார் ஜாதகம் செய்யும் நல்ல நேரம் செய்யும்
என்று அப்படி எண்ண வேண்டியது இல்லை.
1.நல்ல நேரம் எது என்றால்…? “நல்ல உணர்வுகளைச் சேர்க்கும் நேரமே நல்ல நேரம் ஆகின்றது…”
2.மனிதனுக்கு நேரமும் காலமும் ஜாதகமும் ஜோதிடமும் கிடையாது.