ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2025

திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து


யாகங்கள் செய்த வீடுகள் எல்லாம் நன்றாகத் தானே இருக்க வேண்டும். நன்றாக இருக்க வேண்டும் என்று தானே அதைச் செய்கின்றோம். அந்த உணர்வின் தன்மை கவை எதுவாகின்றது..?
 
ஜாதகம் பார்த்துத் தானே எல்லாத் திருமணங்களும் செய்கின்றோம். நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஜாதகத்தைக் குறி வைத்துப் பார்த்துச் செய்யப்படும் பொழுது அவர்கள் நன்றாகத் தானே இருக்க வேண்டும்.
 
ஆனால் இவ்வளவும் செய்து எத்தனையோ குடும்பங்கள் ஏன் பிரிந்து வாழுகின்றது…?
 
முழுமையாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதற்குத் தானே ஜாதகம் பார்க்கின்றோம். இடைவெளியில் ஏன் மடிந்து விடுகின்றார்கள்…? அல்லது பிரிந்து விடுகின்றார்கள்…?
 
1.ஜாதகம் மனச்சாந்திக்க வேண்டுமென்றால் அவன் சொன்ன உணர்வை எடுத்துக் கொள்ளலாம்.
2. ஏனென்றால் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தால் தப்பு வந்து விடுமே என்று தான் செயல்படுத்துகின்றோம்.
 
அப்படி எண்ணவில்லை என்றாலும் கூட ஜாதகம் பார்ப்பவர்கள் என்ன செய்கின்றார்கள்…? எதிர்ப்பு நிலை ஒன்றாகும்.
1.ஒருவருக்கொருவர் கோபக்காரராக இருப்பார்கள். இது ஒத்து வரும் என்று சொல்லிவிடுவார்கள்.
2.அதே சமயத்தில் ஒருவர் கோபமாக இருப்பார் ஒருவர் சாந்தமாக இருப்பார் ஆனால் ஜாதகப்படி ஒத்து வராது என்று சொல்லிவிடுவார்கள்.
3.அடிக்கடி வேதனைப்படுபவராக இருப்பார்கள். ஆண் பெண் இரண்டு பேருமே அப்படித்தான் இருப்பார்கள்.
4.இது ரண்டும் பொருத்தம் சரியாக இருக்கிறது என்பார்கள்.
5.ஆனால் திருமணமான பின் வேதனையைத் தான் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
 
ஆக பொருத்தம் எங்கே இருக்கின்றது…? இந்த உணர்வின் நினைவுகள் வரப்படும் பொழுது இரண்டு விஷமும் அதற்குள் ஒடுங்குகின்றது. இப்படித்தான் பொருத்தம் பார்க்கின்றார்கள்.
 
இது எல்லாவற்றிக்கும் மேலாக தாலி இத்தனை மணிக்குள் இந்த நேரத்திலே கட்ட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அலங்காரம் செய்து முடித்து ஒரு நிமிடம் தாமதமாகிவிட்டது என்றால் என்ன ஆகிறது…?
 
தாமதம் ஆகிவிட்டால் என்ன செய்கிறது…! என்ற இந்த உணர்வோடு தான் தாலி கட்டும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
 
அந்தக் குறித்த நேரம் வரும் பொழுது எதைப் பார்க்கின்றார்கள்…? ஏன் இன்னும் காலதாமதம் செய்கின்றீர்கள்…? “மேளத்தைக் கொட்டையா… கொட்டையா…” என்பார்கள். அங்கே மந்திரம் சொல்வது முழுமை பெறுகின்றதா…? இல்லை…! பரபரப்பு தான் அங்கே வருகின்றது.
 
தாலி கட்டப்படும் பொழுது எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்று மந்திரம் சொல்பவர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் ஏழ்மையான வீட்டில். பணக்காரர்கள் வீட்டிலே மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருப்பார்.
 
1.தாலி அவரிடம் கொடுத்துத்தான் வாங்கி கட்ட வேண்டும் என்று முறை வைத்திருப்பார்கள்.
2.இப்படிப்பட்ட எண்ணங்களோடு தாலியைக் கொடுத்துக் கட்டச் சொன்னால் என்ன ஆகிறது…?
 
மந்திர ஒலிகளைப் பதிவு பண்ணி இறந்தால் அதே மந்திரத்தை ஜெபித்தால் அதன் வழியில் ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்த இது உதவும்.
 
நல்லவை ஆனாலும் கெட்டவை ஆனாலும் உணர்வுகளைப் பதிவு செய்து பதிவு செய்து கவர்ந்து கொள்கிறார்கள். அதைத்தான் நாம் நம்புகின்றோம்…”
 
(ஏனென்றால் உணர்வின் இயக்கங்கள்… எண்ணங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். சீதாராமா…! நம் எண்ணங்கள் எப்படி உருப்பெறுகிறது…? அந்த எண்ணத்தின் உணர்வுகள் அதன் சக்தி கொண்டு எப்படி இயக்குகின்றது…?)
 
ஆஅகவே… கல்யாணராமனைப் பற்றிச் சொல்லிப் புதிதாகத் திருமணமாகும் அந்தக் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எங்கே பார்ப்பது…?
 
ஏனென்றால் தாலி கட்டும் நேரத்தில் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நேரம் ஆகிவிட்டது நேரம் ஆகிவிட்டது என்று தாமதமாகும் போது இந்த இடத்திலும் பகைமை வந்து விடுகின்றது.
 
நல்ல உணர்வைஸ் சேர்க்கும் நேரங்களில் இப்படி இதைச் சேர்க்கின்றார்கள். பகைமை கலந்தபின் ந்த மாதிரிச் செய்துவிட்டார்களே…!” என்று அந்தப் பற்றுள்ளவர்கள் மன நிலையினைப் பார்த்தால் “கசகச கசகச…” என்று இருப்பார்கள். அப்பொழுது எதை ஊட்டுகின்றோம்…?
 
ஆனால் திருப்பூட்டும் போது எப்படி இருக்க வேண்டும்…?
 
1.எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் டர வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நாங்கள் வாழ வேண்டும்
3.ளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரி போன்று எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணி
6.அந்த இரு மமும் ஒரு மனமாகும் அந்தத் தம்பதியர்கள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்
7/மலரைப் போன்ற மம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
8.அவர்கள் அன்னை தந்தையின் அரவணைப்புடன் என்றுமே வாழ வேண்டும்
9.அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும் மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
10.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும்.
11.அவர்கள் எண்ணங்கள் ஒன்றி இரு மனமும் ஒரு மனமாகி கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும்
12.உலகைக் காத்திடும் உத்தமஞானியாக வளர வேண்டும் பண்பினை வளர்க்கும் அத்தகைய அருள் ஞானக் குழந்தை உருவாக வேண்டும் என்று
13.எல்லோரும் இந்த எண்ணத்தோடு இப்படி வாழ்த்த வேண்டும்.
 
கணவன் மனைவி இருவரும் அந்தத் திருமண நாளை எண்ணினாலே “இந்த முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் வாழ்த்தை எண்ண வேண்டும் நமக்குள் இருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் அத்தனையும் இதற்குள் ஒடுங்கி விடுகின்றது.
 
இப்படி அந்த எல்லோருடைய வாழ்த்துக்களும் அங்கே ஒன்று சேர்க்கப்படும் பொழுது இந்த வாழ்த்து இருவருக்குள்ளும் பதிவாகி அங்கே மகிழ்ச்சியின் தன்மை உருவாகின்றது.
1.இந்த உணர்வு பதிவான பின்
2.அவர்களுக்குக் குழந்தை இல்லை என்ற சொல்லே வராது.
 
ஆகவே திருமணம் நடைபெறும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? என்று வழியறிந்து நாம் செயல்பட வேண்டும்…”

June 28, 2025

செயற்கைக் கோளை விண்வெளிக்குச் செலுத்துவது போல் நம் முன்னோர்களை விண்ணுக்குச் செலுத்த முடியும்

செயற்கைக் கோளை விண்வெளிக்குச் செலுத்துவது போல் நம் முன்னோர்களை விண்ணுக்குச் செலுத்த முடியும்


நம் குலதெய்வங்களான முன்னோர்கள் மூதாதையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டல ஒலி அலைகளுடன் கலக்கச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பெருவீடு பெருநிலை என்ற நிலை அடையச் செய்தல் வேண்டும்.
 
அவ்வாறு அழியா ஒளிச் சரீரம் பெற்று அவர்கள் பிறவி இல்லா நிலை அடைந்து ஒளியின் அறிவாக ஒளியின் உடலாக வாழ்ந்து வளர்ந்து
1.அருள் ஒளியைக் குடும்பத்தில் பாய்ச்சிக் குடும்பத்தில் இருளை அகற்றும் சக்தியை உருவாக்கி
2.விண் சென்ற எங்கள் குலதெய்வங்கள் ருள் வழியில் எங்களைக் காத்திட அருள்வாய் ஈஸ்வரா.
 
ஆனால் குல வழியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் குடும்பத்தில் பற்று கொண்டால் அந்தப் பற்றின் ஈர்ப்பின் துணை கொண்டு யார் மேல் அதிகப் பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் வந்துவிடும்.
 
அவ்வாறு வந்து விட்டால்
1.இந்த உடலை விட்டுப் பிரியும் பொழுது எத்தகைய நோய்வாய்ப்பட்டிருந்ததோ
2.அந்த உணர்வினைப் புகுந்த உடலுக்குள்ளும் இயக்கி
3.பாசத்தால் உள்ளே வந்தாலும் இந்த உடலுக்குள் வந்து அதையே உருவாக்கிவிடும்.
 
முதலிலே மூதாதையர் மனிதனாகப் பிறந்தார்கள் நம் தாய் தந்தையை உருவாக்கினார்கள் தாய் தந்தை நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். இந்த உயிரின் கடைசி முடிவு அழியா ஒளிச் சரீரம் பெறுவது தான்.
 
உயிர் ஒளியானது உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனித உடலில் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற சூட்சும சரீரங்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம் என்றால் அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள்.
 
சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள் ஒளியின் அறிவாக நிலைத்தவர்கள். அந்த அருள் ஒளியுடன் நம் குலதெய்வங்கள் ஒன்றி வாழ… அவர்களைப் பிறவில்லா நிலை அடையச் செய்யம்முடைய உணர்வுகள் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.
 
உதாரணமாக சிலர் எண்ணலாம் இது எப்படி சாத்தியப்படும்…? என்று…!
 
இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர்… அதிலே நாடாக்களில் பதிவு செய்கின்றார்கள். எதெனதன் உணர்வைப் பதிவு செய்கின்றார்களோ ராக்கெட்டிலே அது பொருத்தப்பட்டு விடுகிறது.
 
உதாரணமாக ஒரு கோள் இருக்கிறது என்றால் நட்சத்திரம் இருக்கிறது என்றால்
1.எதன் திசைப் பக்கம் இந்த ராக்கெட் செல்ல வேண்டுமோ நாடாக்களில் அதை இங்கே பதிவு செய்து விடுகின்றார்கள்.
2.ஏனென்றால் நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட அந்த இயந்திரத்தின் செயல் அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
3.எத்திசையின் உணர்வை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றதோ அத்திசைப் பக்கம் அந்தக் கோள்கள் உமிழ்த்தும் உணர்வலைகள் இதற்குள் பட்டபின்
4.அதன் பாதையினை அது அமைத்து அந்தக் கோளைச் சென்று அடைகின்றது.
 
கோளின் உணர்வுகளை நுகர்ந்து அறிகின்றது. அங்கே தனக்குள் பதிவு செய்யும் ஒலி நாடாவின் மூலம்
1.தரையில் இருப்பவர்கள் அதை ஆண்டென்னா போன்று கவர்ந்து
2.இங்கே பதிவு செய்து அதன் பாதையை அமைக்கின்றார்கள்.
 
இதைப் போன்று தான்
1.நம் மூதாதையர்களின் உணர்வுகள் (நமக்கு வழிகாட்டிய உணர்வுகள்) நமக்குள் இருப்பதனால் தன் துணை கொண்டு
2.நாம் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நமக்குள் வலுக் கொண்டு ந்த அருள் ஞானிகளின் சக்தியை எடுத்து
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய உந்தித் தள்ளினால்
4.அங்கே சென்ற பின் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.
 
வழிகாட்டிய அறிவின் ஒளியாக நிலைத்து விடுகின்றது. உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு அதற்கு வருகின்றது.
 
அதன் வழி கொண்டு அவர்கள் வளர அவரின் உணர்வுகள் நமக்குள் பெருக் அவர்களை எண்ணும் பொழுது அருள் ஒளி கொண்டு நம் இருளைப் போக்க அவர்கள் உதவுவார்கள்.
 
இதற்கு முன் நாம் செய்யத் தவறியதால்… பாசத்துடன் பண்புடன் நம் உடலுக்குள் புகுந்து இருப்பினும் அதை நாம் இவ்வழியில்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்த உணர்வுகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றதுநமக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்களுக்கும் அந்த உணர்வு கிடைக்கின்றது
3.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைய இதனின் வளர்ச்சி அருள் ஒளியின் சுடராக நம்மையும் மாற்றும்.
4.அதுவும் வளர்ந்து அதனின் உணர்வு நாம் வெளியே சென்ற பின் அந்த ஆன்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
5.நாமும் அதே வழியில் இணையும் தருணம் வருகின்றது.
 
ஞானிகள் காட்டிய இந்த அருள் வழியில் செல்வோம் என்றால் இந்த உயிர் என்றுமே அழியா ஒளிச் ரீரம் பெறுகின்றது. நமது குருநாதர் காட்டிய அருள் வழி இது…!

June 27, 2025

ஆலயத்தை உருவாக்கிய ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?

ஆலயத்தை உருவாக்கிய ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?


மனிதன் தனது வாழ்க்கையில் ஆறாவது அறிவை வைத்து எப்படி வாழ வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள். நம் கண்களின் இயக்கங்களைப் பற்றி அன்று வியாசகர் தெளிவாகக் கொடுத்துள்ளார்.
1.கண்களால் காணும் உணர்வுகளைப் பதிவாக்குவதும்
2.கண்களால் கவர்ந்த உணர்வை உயிருடன் இணைப்பதும்
3.உயிரின் நிலைகள் அதை இயக்கிச் செயலாக்குவதும்
4.அதன் உணர்ச்சிகள் நம்மை எப்படி உருவாக்குகிறது…? என்பதையும் அறியச் செய்தார்.
 
தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து அந்தச் சிலையின் குணங்களை நாம் எடுக்கும் பொழுதுஇந்தத் தெய்வ குணம் நாங்கள் பெற வேண்டும்இந்த ஆலயம் வருவோர் எல்லாம் அந்தத் தெய்வ குணம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
 
இப்படி எண்ணும் பொழுது நாம் அதுவாகவே ஆகின்றோம்.
1.பண்படுத்தும் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது
2.நம் சொல் பிறரைப் பண்படுத்தும் நிலையும் உருவாக்குகின்றது.
 
ஆக இந்த உடலுக்குள் இருக்கும் சக்தியின் நிலைகளைத்தான் தெளிவாக்கி நீ எதை எப்படி வளர்க்க வேண்டும்…? எதன் வழிகளிலே இந்த வாழ்க்கை வாழ வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள்.
 
யாகம் என்றால் என்ன…?
 
நமது உயிர் ஒரு நெருப்பு. அதிலே அருள் உணர்வைச் சுவாசிக்கும் பொழுது உடல் முழுவதும் படர்கின்றது.
1.நம் மூச்சு வழி சொல் வழி கூடி இந்த உணர்வலைகள் வெளிப்படுகின்றது.
2.கேட்போர் உணர்வுகளை மகிழச் செய்கின்றது
 
ஆனால் யாகத் தீயிலே பல நல்ல பொருள்களைப் போட்டவுடன் கருகிப் புகை மண்டலமாக வெளி வருகின்றது. நம் கண்ணிலேயும் படுகின்றது சுவாசித்தால் நெடியும் வருகின்றது.
 
இந்த யாக மண்டலத்தில் என்ன இருக்கின்றது…? புறநிலையைக் காட்டி அதனை அகநிலைகளுக்கு ஊட்ட முடியாது.
 
நம்முடைய கண்கள் புறக்கண் உயிர் அகக்கண். நாம் புறக்கண்ணால் பார்ப்பதும் உயிரிலே உராயப்படும் பொழுது அகக்கண்ணாக அது உள் நின்று நம்மை இயக்குகின்றது என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் இது துவைதம்அதாவது உருவம்.
1.சமஸ்கிருதத்தில் துவைதம் - இது உருவம்
2.அதை எண்ணத்தால் எண்ணும் பொழுது அருவம்
3.அருவத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது அதனுடைய உணர்ச்சி.
4.துவைதம் அத்வைதம் விசிஷ்டாத்வைதம் தனக்குள் மறைந்து இயக்கும் என்று உணர்த்துகின்றார்கள்.
 
கண்ணிலே ஒரு பாம்பைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்ச்சி ஐயோ பாம்பு…!” என்று இயக்குகின்றது. ஒரு அழகான பொருளைப் பார்த்தோம் என்றால் ஆஹாஹா…” என்று மகிழ்ச்சி அடைகின்றோம்.
 
பொருள் துவைதம் உருவம் உணர்வை நுகரப்படும் பொழுது அத்வைதம். உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சி. அந்த உணர்வின் தன்மை உணர்ச்சியை ஊட்டும். உயிர் அந்த அணுவாக மாற்றுகின்றது.
 
ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வம் அது உருவம்அந்த உயர்ந்த குணங்களை உன் உடலாக்கு. ஆனால் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்து உருவாக்கினால் உடல் நலிகின்றது சைவ சித்தாந்தப்படி…!” ஏனென்றால் அதன் வழிகளில் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டது.
 
அந்தத் தெய்வச் சிலைக்குப் போடப்பட்டிருக்கும் வைர கிரீடத்தைப் பார்க்கப்படும் பொழுது அது எப்படி ஜொலிக்கின்றதோ அதே மாதிரி என் சொல் ஜொலிக்க வேண்டும். அதாவது என் சொல்லைக் கேட்போருக்கெல்லாம் சந்தோசம் வர வேண்டும்.
 
தங்கம் எப்படி மாங்காது இருக்கின்றதோ என் மனம் எப்பொழுதும் அவ்வாறு மங்காது இருத்தல் வேண்டும். இந்த ஆலயம் வருவோர் அனைவரும் தங்கத்தைப் போன்று மங்காத மனம் பெற வேண்டும்.
1.நீங்களும் நினைக்கின்றீர்கள் நானும் எண்ணுகின்றேன்
2.இருவருமே உயருகின்றோம்.
 
சாமி மீது போட்டிருக்கும் மலர் எதற்கு…?
 
நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த மணம் தான் இங்கே வரும். ஆகவே அந்த மலரைப் போன்ற நாங்கள் மணம் பெற வேண்டும் இந்த ஆலயம் வருவோர் எல்லாம் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
 
மகரிஷிகள் எவ்வாறு தங்கள் பார்வையில் மற்றவருடைய தீமைகளை அகற்றி மகிழ்ச்சி பெறச் செய்தார்களோ
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அந்த உணர்வை இந்த உடலான ஆலயத்தில் சேர்க்க வேண்டும்
2.மகரிஷிகள் அல்லாது நறுமணத்தைக் காக்க முடியாது
3.அதை இணை சேர்க்கவில்லை என்றால் நம் வாழ்க்கையில் நன்மைகள் பெற முடியாது.
 
ஆலயத்தை உருவாக்கியது ரிஷிகள்…! ஆனால் அந்த ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?

உபதேச வாயிலாக யாம் கொடுக்கும் சக்தி “உங்களுக்குள் இயக்கச் சக்தியாக மாற வேண்டும்”

உபதேச வாயிலாக யாம் கொடுக்கும் சக்தி “உங்களுக்குள் இயக்கச் சக்தியாக மாற வேண்டும்”


குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.“துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்குத் தான் அடிக்கடி உங்களுக்கு உபதேசிப்பது…”
2.இந்த உணர்வுகள் பதிவாகி விட்டது என்றால் மீண்டும் நினைவுபடுத்துகின்றேன் அதைப் பெறுவதற்கு.
3.காரணம் பல நினைவுகள் உங்களை மூடி மறைக்கின்றது.
 
நான் சொல்வதைக் கேட்கும் பொழுது உங்களுக்கு வீரியம் பெறுகின்றது. அடுத்தாற்போல் இருவர் சண்டையிடுவதை நீங்கள் பார்த்தால்சாமி என்ன சொல்கின்றார்…? பார்…! இவர்கள் என்ன செய்கிறார்கள்…? என்று
1.நான் சொன்னதை விட்டு விடுவீர்கள் அதை எடுத்துக் கொள்வீர்கள்.
2.தீய அணுக்களுக்கு நிறைய சாப்பாடு கொடுத்து விடுவீர்கள் அதற்கு விரியம் ஜாஸ்தி.
3.நமக்குள் அணுக்கள் அதிகமாக இருக்கப்படும் பொழுது அதை மாற்றும் சக்தியைக் கொடுத்து அதை மடக்கச் செய்ய வேண்டும்.
 
அப்படியென்றால் அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? காலை துருவ தியானத்தில் கொடுத்த சக்தியை நினைவுபடுத்தி வளர்க்க வேண்டும்.
 
பின்… சண்டை யாராவது போடுகிறார்கள் என்றால் பார்க்கப்படும் பொழுது அவர்களைக் கண் பதிவாக்குகின்றது. தவறு செய்கிறார் என்று பார்க்கின்றோம். அந்த உணர்வு அதே அணுவாக உடலுக்குள் மாற்றி விடுகின்றது.
 
இங்கே என்னிடம் உபதேசங்களைக் கேட்டுச் செல்கின்றீர்கள்
1.நான் ஒருவன் தானே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் பேசுகின்றார்கள் செயல்படுகின்றார்கள்.
3.அது உங்களுக்குள் பெருகிவிடுகின்றது. நான் சொன்னது சிறுத்து விடுகின்றது.
 
கோவிலுக்குச் செல்கின்றோம் அங்கே தெய்வத்தை வணங்குகின்றார்கள். தவறு செய்பவர்களை அங்கே பார்க்க நேர்கிறது. அர்ச்சனை செய்து பரிவட்டம் கட்டிப் பல மரியாதைகள் அவர்களுக்குச் செய்வார்கள்.
 
பல தவறுகள் செய்கின்றான்சாமி அவனுக்குத்தான் உதவி செய்கின்றது என்று எண்ணுவோம். அந்த இடத்தில் கோவிலையே நீங்கள் வெறுக்கின்றீர்கள். அப்பொழுது நம் உணர்வுகள் என்னாகின்றது…? தீமைகள் தான் வருகின்றது.
 
அதே போல்… உபதேசங்களை நான் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதைக் கேட்டு விட்டு
1.வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து உலகம் கெட்டு விட்டது என்று நீங்கள் அதற்குத் தான் சக்தி கொடுப்பீர்கள்.
2.நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்றி அமைக்க முடிகிறதா…? இல்லை.
3.ஏனென்றால் அந்த உணர்வுகள் அவ்வாறு இயக்குகின்றது.
 
நாம் எதற்காக வேண்டி காலையில் துருவ தியானம் செய்கின்றோம்…? ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் உடனுக்குடன் துடைத்துப் பழக வேண்டும்.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி இந்த ஆலயத்திலே படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
சங்கடமாகப் பேசுகின்றார்கள் அவசியமில்லாமல் பேசுகின்றார்கள் என்று பார்க்கின்றோம். அந்த நேரத்தில் ஈஸ்வரா என்று எண்ணி நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
சாக்கடையில் ஒருவன் கல்லைத் தூக்கிப் போடுகின்றான் அல்லது ஒரு பன்றி அதற்குள் விழுந்து போகின்றது வாலை வீசிக்கொண்டு எழுந்து செல்கின்றது. நம் மீது அசுத்தம் பட்டு விடுகின்றது.
 
நான் நல்ல துணியைப் போட்டேன் இவ்வாறு ஆகிவிட்டதே என்றாலும்… அடுத்து நாம் அதை உடனே துடைக்கத் தானே முற்படுகின்றோம் ஐய்யயோ இப்படிப் பட்டுவிட்டது ஐய்யய்யோ இப்படிப் பட்டுவிட்டது என்று சொல்லிக் கொண்டே போகின்றோமா…? இல்லை…!
 
புறத்தால் ஏற்படும் அசுத்தங்களை உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்துகின்றோம். அகத்திற்குள் படும் தீமைகளைத் துடைக்க வேண்டும் என்றால் அதற்குத்தான் அந்த அருள் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
 
அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
1.கண் கொண்டு பார்த்த உணர்வு இங்கே ஆன்மாவாகி சுவாசிக்கச் செய்து உயிரிலே படுகின்றது
2.அந்த உணர்வு தான் அறியச் செய்கின்றது…. உடலில் பரப்பச் செய்கின்றது.
3.அப்பொழுது உங்கள் நினைவு இங்கே செல்கின்றது…?
 
ஈஸ்வரா என்று கண்களின் நினைவுக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.
 
ஆனால் நீங்கள் புருவ மத்தியை நினைக்கின்றீர்களா…?
 
கண்ணின் நினைவை இங்கே இணைத்து விட்டால் அது அகக்கண். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் இன்று இங்கே தடைப்படுத்தும் பொழுது தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது. இது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இடைமறித்து உள்ளே செலுத்த வேண்டும்.
1.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்
2.எல்லோரும் நாம் பழக வேண்டிய நிலைகள்.
 
நாம் தவறு செய்யவில்லை…! அந்த உணர்வுகள் வந்தது என்றால் நம்மை இயக்கிக் குற்றவாளியாக மாற்றுகின்றது.
 
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்திவிட்டு யாரைப் பார்த்தோமோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் இதைக் கலந்து இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்ப வேண்டும்.
 
இதை நாம் பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு வர வேண்டும் நம் ஆன்மாவிலே…!” இப்படிச் செய்யும் பொழுது பிறருடைய உணர்வு நமக்குள் இழுக்காதபடி நாம் எடுத்த உயர்ந்த உணர்வின் நினைவு வந்து நம்மைக் காக்கக் கூடிய சக்தியாக வரும்.
 
1.இது அரும்பெரும் சக்தி…! நாம் எடுத்து எடுத்து எடுத்து இதைக் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
2.வாழ்க்கையில் நாம் இப்படி மாற வேண்டும்.
 
குறையைக் கண்டு தான் விலகிச் செல்கின்றோம். ஆனால் குறைகளை உணர முடியவில்லை என்றால் அதிலே வீழ்ந்து மடிவோம்.
 
பூச்சிகள் மற்ற பறக்கக்கூடிய வீட்டில் பூச்சிகள் பறந்து வருகின்றது விளக்கு (தீபம்) எரிந்து கொண்டிருக்கின்றது என்றால் ஈர்க்கப்பட்டு அதில் விழுகின்றது. வேகமாக வந்து அதிலே பட்ட பின் கருகுகின்றது.
 
அதற்குத் தெரியாது…! நாம் தெரிந்தவர்கள்…! நம்முடைய தூய்மைப்படுத்தக் கூடிய உணர்வுகள் நஞ்சால் கருக்கப்படுகின்றது. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வேதனைகளைச் சமப்படுத்தத் தெரியவில்லை என்றால் நம் நல்ல அணுக்களை அது கருக்கி விடுகின்றது.
 
விஷம் தாக்கப்படும் பொழுது தான் வெப்பமாகின்றது அதே விஷத்தின் தன்மை தாக்கப்படும் பொழுது நல்ல உணர்வை ஆவியாக மாற்றி விடுகின்றது. இந்த விஷம் நெருப்பாக மாறுகின்றது.
1.விஷத்தால் கவரப்படுவது என்ன செய்கிறது…?
2.எதிலே பட்டாலும் விஷம் அதைக் கெடுக்கின்றது.
3.அதை மாற்றுவதற்குத் தான் உங்களுக்கு ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தையே யாம் கொடுக்கின்றோம்.

June 25, 2025

சிறிதளவு பேரையாவது உண்மைகளை உணரச் செய்து உலகைக் காக்கும் சக்திகளாக உங்களை வளர்க்க வேண்டும் என்பதே எம்முடைய நோக்கம்

சிறிதளவு பேரையாவது உண்மைகளை உணரச் செய்து உலகைக் காக்கும் சக்திகளாக உங்களை வளர்க்க வேண்டும் என்பதே எம்முடைய நோக்கம்


கருப்பை இல்லை… அதனால் குழந்தைப் பாக்கியம் இல்லை என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில் கணவன் மனைவியாக எம்மிடம் வந்து “எங்களுக்குக் குழந்தை வேண்டும்” என்று கேட்டார்கள். யாம் ஆசீர்வாதம் கொடுத்த பின் குழந்தை கிடைத்தது.
1.அதைப் பற்றிப் பெருமைப்பட்டார்கள்.
2.ஆனால் அதற்குப்பின் சாமியைத் திரும்பி பார்த்தார்களா…? என்றால் இல்லை.
3.ஒரு நாள் ஒரு பொழுது கூட என்னிடம் வந்து எதையும் கேட்கவில்லை.
 
ஒரு முறை வீட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பின் எம்மைச் சந்திக்கவும் இல்லை.
 
அப்பொழுது ம்முடைய அருள் உபதேசங்கள் எல்லாம் என்ன…?
 
உங்கள் எண்ணம் தான் உங்களுக்குள் (அந்த உணர்வுக்குள் குழந்தை கருவாகி) எப்படிப் பதிவாகின்றது…? அதனால் நான் செய்தேன் என்று எண்ண வேண்டியதில்லை என்று அவர்களுக்கு உணர்த்தினோம்.
 
ஆக அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்… “சாமி செய்கிறார் என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கின்றது…?” நம் எண்ணத்தால் தானே உருவாகின்றது என்று…!
 
1.எண்ணத்தின் உணர்வு கொண்டு உயிர் என்ன செய்கிறது…? என்று யாம் சொல்கின்றோம்.
2.அதற்குண்டான ஒரு நல்ல கருவை ஞானத்தைக் கொடுக்கின்றோம்.
3.ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்தப் பருவம் வர வேண்டும் அல்லவா.
 
பின் இதை எதற்காகச் (அவர்களுக்கு) செய்தோம்…?
 
1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது அந்த இணக்கங்கள் நல் வழியை உயர்த்தும்
2.இது என் குருநாதர் எனக்குச் சொன்னது…!
 
போற்ற வேண்டும் என்று நான் செய்தேன் என்றால் தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும். நல்லவைகள் மறைந்து கொண்டுதான் இருக்கும்.
1.அனுபவரீதியிலே கொண்டு வருவதற்குத் தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
2.சிறிதளவு பேராவது இந்த உண்மைகளை உணர்ந்தால் தெளிவாக இருக்கும்.
 
ஒரு நோயாளி தன் நோயைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் இதே உணர்வுகள் தான் எல்லோருக்கும் இயக்கப்பட்டு அந்த நோய் தான் மற்றவருக்கும் பரவுகின்றது.
 
ஆனால் அருள் ஒளியைப் பெற்று நல்லதாகும் பொழுது இதே வாக்கினை நீங்கள் சொன்னீர்கள் என்றால் உங்கள் வார்த்தைகளைக் கேட்டால் தீமைகளை அது அகற்றும்.
 
விளம்பரம் செய்யாததின் நோக்கங்கள் என்ன…? என்றால்
1.ஆசையை ஊட்டி விட்டோம் என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.
2.எதை குறிக்கோளாக வைத்து வந்தார்களோ அது தான் கிடைக்கும்.
3.அதன்படி கிடைத்து வந்தாலும் அதைப் பாதுகாக்கும் சக்தி இழந்து விடுகின்றார்கள்.
 
சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…! யாம் கொடுக்கும் அருள் சக்திகளைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் வளர்ப்பதில்லை
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதுமில்லை.
 
ஆரம்பத்திலிருந்து இதைத்தான் நாம் தெளிவாக சொல்லிக் கொண்டு வருகின்றோம் எத்தனையோ பேர்களை குருநாதர் காட்டிய வழியிலே நாம் தபோவனத்தில் பார்த்திருக்கின்றோம் அல்லவா…!
 
ஆகவே அந்த அசுத்த உணர்வு எப்படிப் போகின்றது…? அதனுடைய தாக்கத்திலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? து மிகவும் முக்கியமானது.
 
ஓசோன் திரை கிழியப்பட்டு எந்தெந்தப் பகுதியில் அதன் வழி விஷத் தன்மைகள் வருகிறதோ அங்கே அது பரவுகின்றது. ஆனால் ஒரே இடத்தில் நிற்காது.
 
விஷத்தன்மைகள் பூமிக்குள் பரவினாலும் தன் இனத்தைச் சேர்த்து ஒரு குவியலாக வரும். குறிப்பிட்ட இடத்தில் தான் சுழன்று கொண்டிருக்கும் எல்லா இடத்திலும் வராது.
 
அப்பொழுது இந்த ஊரையும் தெருவையும் நாம் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
அருள் ஒளி பெற வேண்டும் என்று” எல்லோரும்
1.ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும் பரவச் செய்து இந்த அலைகளைப் பரப்பி விட்டீர்கள் என்றால்
2.இந்த உணர்வு பரவிய பின் அந்த விஷத்தன்மைகளை இது விக்கி விட்டு விடும்.
3.இந்த ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்டு நிற்கும்.
 
தைச் செய்வதற்கு தானே யாம் திரும்பத் திரும்ப இதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

June 24, 2025

“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!”

“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!”


பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்றால் இந்த உடல் பற்று இருக்கக் கூடாது. ஆனால் இந்த உடல் பற்று இல்லாமலும் இருக்க முடியாது.
 
தன் பிள்ளை மீது பாசம் இல்லாமல் இருக்க முடியுமா…? வெளியிலே சென்று சேட்டை செய்து விட்டு வீட்டுக்குள் வருகின்றான். நீங்கள் என்ன செய்வீர்கள்…?
 
பாசத்தினால் ஏண்டா இப்படிக் கெட்டுப் போகின்றாய்…?” என்று கேட்பீர்கள்.
1.பாச உணர்வு இல்லை என்றால் அவனைத் தடுக்க முடியுமா…?
2.எப்படியோ போகின்றான்…! என்ற வகையில் சேட்டை செய்கின்றவனுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா…?
3.அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்…?
 
வாடி வதங்கி அவனுக்குள் விளையும் வேதனை நமக்குள்ளும் புகுந்து நம்மையும் வேதனைப்படச் செய்யும். அவன் உணர்வு நமக்குள் கலந்து பாசத்தால் வெறுப்பின் உணர்வுகளை வளர்த்து அவனையும் வெறுத்துப் போகும் அளவிற்கு வந்துவிடும்.
 
அடிக்கடி வெறுப்பைக் கலந்து அவனிடம் பேசினால் என்ன ஆகும்…? அந்த எண்ணம் மேலும் மேலும் அவனை நல்வழிக்கு அழைத்துச் செல்வதற்கு மாறாக அவனின் வழிகளுக்கே அழைத்துச் செல்ல முடியும். அவனைத் திருத்த முடியுமா…?
1.நம்மிடம் இருந்து அவனைப் பிரிக்கத்தான் முடியுமே தவிர திருத்த முடியாது.
2.திருத்தியவர்கள் யாரையாவது சொல்லச் சொல்லுங்கள்.
 
திருத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு மந்திரவாதிகளிடம் சென்று தாயத்தைக் கட்டினேன் என்று ஆவி நிலைகள் கொண்டு தான் அதைச் செயல்படுத்த முடியும். சிறிது நாள் நன்றாக இருப்பான் மீண்டும் அவன் வழிக்குத் தான் அவன் செல்வான்.
 
அவன் மீது பட்ட வேதனை இங்கே வளரும். அதைத் துடைக்காமல் இருக்க முடியுமா…? துடைக்க வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நமக்குள் வலுக் கூட்ட வேண்டும்.
2.அவனால் நாம் நன்மை பெறுகின்றோம்அவனுக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
 
சாக்கடை வாசனை வருகிறது என்றால் அதை நுகர்ந்தால் எரிச்சல் ஆகிறது அந்த வாசனை நமக்குள் வராது எதையாவது வைத்து அதைத் தடுக்கின்றோம் அல்லவா…!
 
எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!” எண்ணெயாக இருக்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் தான் அதிகமாகும்.
1.அதனால் தான் சோப்பில் என்ன செய்கின்றார்கள்…?
2.”எண்ணெய்ப் பசையைக் கொடுத்து அதைத் தேய்க்கப்படும் பொழுது
3.நுரை வருகின்ற மாதிரிச் செய்துஅது ஊடுருவி எண்ணெயை அகற்றுகின்றதுஇடம் தூய்மை அடைகிறது.
 
எண்ணெயை வைத்துத் தான் எண்ணெயை அப்புறப்படுத்த முடியும்.
 
இதே மாதிரித் தான் நமது வாழ்க்கையில் நஞ்சின் தன்மை கலக்கிறது. ஆனால் நஞ்சினை நீக்கிடும் ஆற்றலை அகஸ்தியன் பெற்றான். அந்த உணர்வை நமக்குள் எடுத்தால் வாழ்க்கையில் வந்த நஞ்சினை நாம் நீக்க முடியும்.
 
இந்த நஞ்சினை நீக்கிடும் உணர்வு கொண்டு நல்ல உணர்வுகளை எடுத்துப் பையனிடம் இப்படி வர வேண்டும் என்று நாம் சொன்னோமென்றால் அவனைத் திருத்தவும் முடியும்.
1.அவனால் இந்த அருள் உணர்வை பெற்று நாம் நன்மை பெறுகின்றோம்…!
2.அவனை நல்ல வழிக்கும் கொண்டு வரவும் முடியும்.
 
ஆனால் முதலிலே சொன்னபடி அவனிடம் குறையைச் சொல்லும் பொழுது வெறுப்பு தான் வளரும். நம்மைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வெறுப்பு தான் வரும்.
 
ஆகதவறு செய்கின்றான் என்றால் நல்ல வழியைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியுமா…? ஒருவருக்கு நோய் வந்துவிட்டது என்று தெரிந்த பின்பு நாம் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே வருகின்றது.
 
ஆனால் ஒரு சிலருக்கு அந்த நோயாளி ஆகாதவர் என்றால் அவனுக்கு அப்படித்தான் வேண்டும் என்பார்கள். அந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு அங்கு இல்லை. அப்படித்தான் அவனுக்கு வேண்டும் என்று நினைக்கும் பொழுது அதைக் கண்டு அவன் ரசிக்கின்றான்.
 
ஆனால் பண்பு கொண்ட மனிதன் பாசத்தால் தன் உடலுக்குள் எடுத்துக் கொள்கின்றான். காத்து அவனுக்கு உதவி செய்கின்றான், அந்த உணர்வு இங்கே வளர்கின்றது.
 
மகராசன்என்னைக் காப்பாற்றினான் என்று அவன் சொல்கிறான்.
 
காத்திடும் உணர்வும் நோயான உணர்வும் ரெண்டும் செயல்படுகின்றது. இந்த உணர்வு வளர்ந்த பின் உடலை விட்டு அவன் பிரிந்தால் ஆன்மா இங்கே வருகின்றது. நம்முடைய வலு அவன்பால் இருக்கப்படும் பொழுது அது இங்கே வந்துவிடுகிறது.
1.அதே நோய் இங்கே உருவாகி நம்மை வீழ்த்துகிறது.
2.உதவி செய்கிறோம்… ஆனால் நம்மை வீழ்த்துகிறதுஇதற்கு என்ன செய்வீர்கள்…?
 
உதாரணமாக உணவு அதிகமாக இருக்கின்றது சாப்பிடுகின்றோம். ஆனாலும் வழக்கத்திற்கு அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலுக்கு அது நல்லது செய்கின்றதா…? இல்லை. ஏனென்றால் இது இயற்கையின் நியதி. ஜீரணிக்கும் சக்தி வேண்டும்.
 
ஆகவே தீமைகளை அடக்க வேண்டும் என்றால்
1.தீமைகளை அகற்றிய நஞ்சை வென்ற அருள் ஞானிகள் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.
2.எடுக்கப் பழக வேண்டும் என்றால் அந்தச் சக்தியை யார் பெற்றார்களோ
3.எடுத்தவர்களிடம் விளைந்த சொல் ஞானம் அது நமக்குள் வித்தாக வேண்டும்.
4.பதிந்த வித்தினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அந்த ஞானம் நமக்குள் விளையும்.
 
அப்போதுகஷ்டம் வரும் பொழுது ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அந்தச் சக்தியால் நாம் நலம் பெறுகின்றோம்.
 
இதை எடுக்கவில்லை என்றால் அவனால் நஷ்டம் அடைகின்றீர்கள். அவனையும் நஷ்ட,மடைய வைக்கின்றீர்கள். பையனைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த விஷம் நமக்குள் வளர்ந்து நம்மை நாம் காக்க முடியாது போகிறது.
 
காரணம் அந்த விஷத்தின் அளவுகோல்…!
1.எப்படி ஒரு சோப்பைத் தேய்த்தவுடன் அது எண்ணைப் பிசுபிசுப்பை அகற்றுகின்றதோ
2.இதைப் போல விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானிகள் உணர்வைக் கலந்த பின்
3.அது விஷத்தை ஒளியாக மாற்றுவது போல் நமக்குள் இருளை அகற்றுகிறது.
 
பையனைக் கூப்பிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி உன் உடலில் படர வேண்டும். தீமைகள் நீங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். அவன் இந்த உணர்வை எடுத்துக் கொள்ளும் போது… “கேட்டான்என்றால் அவன் நல்லவனாகின்றான்.
 
இருந்தாலும்எப்படியும் அவன் இதை எடுத்து மாற வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும்போது என்ன ஆகிறது…?
 
முதலிலே உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான்
1.இப்பொழுது இந்த உணர்வை எடுத்து நாம் மாற வேண்டும்என்று எண்ணினால் இந்த உணர்வு என்ன செய்யும்…?
2.அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும்.
3.அதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற அவ்வளவு பெரிய ஆயுதத்தை உங்களுக்கு கொடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை இந்த உபதேசங்கள் வாயிலாகத் தருகின்றோம்.
நீங்கள் அதை எண்ணி எடுத்து வளர்த்தீர்கள் என்றால் உங்கள் உயிர் அதை உருவாக்கும். ஒளியின் சுடராக மாற்றும்.