ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 26, 2025

ஈரேழு பதினாலு லோகம் எது…? அதை வென்றவர்கள் யார்…?

ஈரேழு பதினாலு லோகம் எது…? அதை வென்றவர்கள் யார்…?


ஆரம்ப நிலைகள் விண்ணிலே உயிரணுவாகத் தோன்றினாலும் அப்படித் தோன்றிய நிலைகள்
1.பலவாறு அணுவின் தன்மை ஒன்றை ஒன்று விழுங்கி அணுத் தன்மை வளர்ந்து அதன் வழிகளிலே கோளாகி
2.கோளாகி ஆற்றல் பெற்று நட்சத்திரமாகி நட்சத்திரங்கள் சூரியனாகி அதனின்று விளைந்து ஒரு பிரபஞ்சமாகி
3.பிரபஞ்சத்திற்குள் ஒரு கோளாகி அந்தக் கோளுக்குள் மற்ற அனைத்தும் வடிக்கச் செய்து பூமியான நிலைகள் கொண்டு அதிலே உயிரணுக்கள் தோன்றி
4.மற்ற கல்லும் மண்ணும் மற்ற நிலைகள் ஆவியாக மாறி தாவர இனச் சத்துக்களாக மாறி
5.தாவர இனச் சத்துகளின் ஆவிகளைச் சுவாசித்து உயிரணுக்கள் அதை உட்கொண்டு வடித்து
6.அணுத் திசுக்களாக உயிரினங்களின் தோற்றங்களாகி மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.
 
ஒரு அணுவின் தன்மை வளர்ச்சியில் சூரியனாக எப்படி ஆனதோ அதே போன்று பிரபஞ்சத்திற்குள் தோன்றிய உயிரணுவின் துடிப்பு மற்ற உணர்வின் சத்தை எடுத்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் பொழுது எதையுமே அடக்கி ஆளும் சக்தி மனிதனுக்கு உண்டு…”
 
ஆரம்ப நிலையில் அணுவின் தன்மை பெற்ற நாம் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்தாலும் சூரியனாக வளர்ச்சி பெற்று வந்தாலும் சூரியனையே அடக்கியாளும் சக்தி மனிதனுக்கு உண்டு…”
 
அத்தகைய ஆற்றலின் தன்மை
1.எல்லாவற்றிலும் அது வடித்து உணர்வின் ரசத்தின் தன்மையை அது வடிகட்டிய நிலைகள் கொண்டு மனிதனாக உருப்பெற்றான்.
2.அவ்வாறு உருப் பெற்றதன் நிலைகள் தன் எண்ணத்தை சூரியனிடத்திலே பாய்ச்சி இவனுடைய உணர்வுகளை அங்கே இயக்கச் செய்து
3.சூரியனையே திசை திருப்பவும் கோள்களைத் திசை திருப்பவும் கூடிய ஆற்றல்கள் பெற்றவர்கள் அன்றைய மெய் ஞானிகள்.
 
அவ்வாறு பெற்றவர்தான் அகஸ்திய மாமகரிஷி…!
 
மனித உருவாகும் பொழுது தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடல் பெற்றாலும் இந்த வினைக்கு நாயகனாக மனித உடலிலிருந்து வெளிப்பட்டது தான் ஆறாவது அறிவு.
 
சூரியனிலிருக்கக் கூடிய நிறங்கள் ஆறு அதைப் போன்று மனிதனுக்குள் அறிவு ஆறு.
1.சூரியனுடைய ஆறாவது அறிவு ஆறு நிறங்கள் ஏழாவது ஒளி.
2.மனிதனுக்கு அறிவு ஆறு ஏழாவது அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை.
3.பிரபஞ்சத்திற்குள் வரக்கூடிய விஷத்தின் ஆற்றலைச் சூரியன் ஒளியாக மாற்றும் ஒளியாகக் காட்டும்.
4.ஆனால் மனிதன் இருளுக்குள் மறைந்த பொருளை அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் பெற்றவன்… இருளை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன்.
 
இருளான சரீரத்திற்குள் நின்று உயிர் உணர்வுகளை வளர்க்கச் செய்த இந்தத் தசைகளை (உடலை)
1.மீண்டும் இன்னொரு தசைகளின் (உடல்) தன்மை பெறுவதற்குப் பதில்
2.சூரியன் எப்படிப் பிரகாசிக்கின்றதோ இதைப் போன்று தன் உணர்வை ஒளியாக மாற்றி உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் செல்வது
 
இது தான் கடைசி நிலை.
 
சூரியப் பிரபஞ்சத்திற்குள் தோன்றிய எத்தகைய சக்தியின் நிலைகளையும் வென்று அதை ஒளியாக மாற்றி விண் செல்ல முடியும்…” என்ற நிலையை அன்றைய அகஸ்திய மாமகரிஷி நமக்கெல்லாம் உணர்த்திச் சென்றுள்ளார்.
 
அவன் தென்கோடியிலே தோன்றியவன் தான். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் அவனைத் தான் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
1.அவன் வழி வந்த மக்கள் தான் நாம் அனைவருமே.
2.அவன் சென்ற எல்லையினை நாமும் அடைய வேண்டும்.