ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2025

“என் மீது பற்று இருந்தால் தான்” இந்த உபதேசக் கருத்துக்கள் உங்களுக்குள் பதிவாகும்

“என் மீது பற்று இருந்தால் தான்” இந்த உபதேசக் கருத்துக்கள் உங்களுக்குள் பதிவாகும்


ஞானிகள் சென்ற அவர்களுடைய அருள் வழிப் பாதைகளை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணுகின்றேன். அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க
1.குருநாதர் அவர் கண்டறிந்த உணர்வை எனக்குள் பல உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
2.அவர் உடலுக்குள் விளைய வைத்ததை எண்ணத்தின் செயலாக என்னிடம் சொல்கின்றார்
3.அதை நான் உற்று நோக்கும் பொழுது அந்த உணர்வின் சத்து
4.அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப்புலன் ஈர்த்தாலும்
5.அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாக பதிவாகி விடுகிறது.
 
ஊழ்வினை என்றால் என்ன…?
 
ஒரு மரம் விளைந்து அதனின் வித்தாகும் பொழுது அந்த வித்தை எடுத்து நிலத்திலே நாம் அதைப் பதியச் செய்யும் பொழுது அந்த வித்து என்ன செய்யும்…/
 
ந்த மரத்திலிருந்து எந்த உணர்வின் சத்தை வித்தாக வளர்த்துக் கொண்டதோ அந்த வித்தின் உணர்வின் இயக்கமாக பூமியின் துணை கொண்டு இங்கே படர்ந்து இருக்கும் அந்த அலைகளைக் கவர்கின்றது.
 
உதாரணமாக வேப்ப மரத்தில் வித்து உருவாகிறது என்று வைத்துக் கொள்வோம். வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் அந்தக் கசப்பின் உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கிறது.
 
வேப்ப மரத்தின் வித்தை மண்ணிலே பதியச் செய்யும் பொழுது காற்றிலே பரவிப் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் உணர்வின் சத்துக்களை… சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்திருப்பதைப் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு
1.அந்தச் சக்தியைக் கவர்ந்து உணவாக எடுத்துத் தனக்குள் விளைய வைத்து
2.வேப்ப மரமாக வளர்ந்து அதனின் வித்தாகவே” மீண்டும் விளைகின்றது.
 
இது தான் ஊழ்வினை என்ற வித்தின் இயக்கம்…!
 
இதைப் போலத் தான் குருநாதர் அவருக்குள் விளைய வைத்த உணர்வின் சத்தை எமக்கு உபதேசிக்கும் பொழுது செவி வழி நான் கேட்டறிந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக உந்தப்பட்டு..
1.அந்த உணர்வின் ஆற்றலை நினைவு கொண்டு நான் மீண்டும் கூர்ந்து அதை எண்ணும் பொழுது அதைக் கவரும் நிலை ஏற்படுகின்றது.
2.கவர்ந்த உணர்வுகள் என் நினைவுடன் இணைக்கப்பட்டு ஒரு கருவின் தன்மையாக ஊழ்வினையாக வித்தாக எனக்குள் பதிவாகின்றது.
 
அதாவது… அவர் உபதேசித்த உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அதுவே எனக்குள் பதிவாகி அது மீண்டும் என் நினைவுக்கு வரும் போது அவர் உடலில் விளைந்த தீமைகளைக் கண்டறிந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்த உணர்வுகள் எனக்குள் வருகிறது.
 
மெய் உணர்வைத் தனக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி… இன்றும் விண்ணுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அவர் தற்காலத்தில் தான் விண் சென்றவர்…ப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவர்.
 
அவர் உடலிலே விளைந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் இப்பொழுது உபதேசிக்கப்படும் பொழுது கேட்டுணர்ந்தவர் அனைவருக்குள்ளும் ஊழ் வினையாகப் பதிவாகின்றது.
 
பதிந்ததை மீண்டும் எண்ணும் பொழுது
1.குருநாதர் காட்டிய அருள் வழியின் உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை
2.வரின் நினைவு கொண்டு அவருக்குள் விளைந்த உணர்வுகளை நாம் அனைவரும் கண்டுர முடிகின்றது கவர முடிகின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்குகிறது.
4.அதன் மூலம் அவர் கண்ட அனைத்தையும் நாமும் அறிய முடிகிறது.
 
விண்ணுலக ஆற்றலை எடுத்து நஞ்சினை வென்று உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே இருக்கும் குருவின் ஆற்றல் நமக்குள்ளும் வளரும் தன்மை இப்பொழுது உருவாகின்றது.
 
அதைப் பெறுவதற்குத் தான் உங்களுக்குள் விளக்கமாக இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
 
உதாரணமாக… வேப்ப மரத்தின் வித்து மீண்டும் தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து “தன் இனமாகவே” வளர்த்துக் கொள்கின்றது. இதைப் போன்று தான்
1.சாமி மீது உங்களுக்குப்ற்று இருந்தால்
2.இப்பொழுது சொல்லக்கூடிய உபதேசக் கருத்துக்கள் அனைத்துமே உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.
 
ஆனால் மற்றவர்களிடம் சென்று அவரின் (அந்த குருவின்) உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து வைத்திருந்தால் அவர் மந்திரங்களையோ அல்லது மற்ற எதைச் சொன்னாரோ அவர் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து விட்டால் அது வலுக் கொண்டதாக இருக்கும்.
 
நான் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் எட்டாது. அவரின் வலு அதிகமாக இருக்கப்படும் பொழுது நான் சொல்வதை ஒதுக்கிவிடும்.
 
1.என் மீது பற்று கொண்ட நிலையில் இருக்கப்படும் பொழுது தான்
2.நான் உபதேசிக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்ய முடியும் நுகர முடியும் வளர்த்துக் கொள்ள முடியும்.
3.நம் குருநாதர் உணர்ந்த பேருண்மைகளையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
 
இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.