
உபதேசத்தைக் கேட்டுவிட்டு “சாமி நன்றாகக் கதை சொல்கிறார்” என்று எண்ணினால் அது உங்கள் இஷ்டம்...!
இன்றைய விஞ்ஞான உலகம் எதிலே இருக்கின்றது…? காற்று மண்டலம் விஷமாகி விட்டது. புழு
பூச்சியைக் கொல்வதற்காக உணவுப் பயிர்களில் விஷத்தைத் தூவுகின்றார்கள். ஆக சாப்பிடும் உணவிலே விஷம்…. உணர்விற்குள் விஷம்.
1.விஷம் கலந்து விட்டால் சிந்தனை இல்லை… ஆனால்
அதைத்தான் கலந்து உணவாகச் சாப்பிடுகின்றோம்.
2.சிந்திக்கும் திறனை இழந்து கொண்டே வருகின்றோம்.
உடலில் ஏதாவது வலி எடுக்கிறதா…? காய்ச்சல் அடிக்கின்றதா…? உடனே ஒரு
இன்ஜெக்ஷன். அந்த ஒரு டோஸ் போட்டதும் நின்று விடும்… நிற்கவில்லை என்றால் இன்னொரு டோஸ் சேர்த்துக் கொடுப்பார்கள். எல்லாம் நின்று விடுகின்றது.
பின் விளைவாக…
உடலுக்குள் இனிப்புச் சத்தை எல்லாம் மாற்றி விடுகின்றது. காய்ச்சலுக்கு ஊசி போட்டேன் அடுத்தாற்போல் சர்க்கரைச் சத்து வந்துவிட்டது.
அதே போல் காய்ச்சல் என்று சொல்லி இன்னும் நான்கு டோஸ் போட்டோம் என்றால்
சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுகிறது. நம் இரத்தங்களில் உப்புச் சத்து வந்து விடுகின்றது.
தலை வலிக்கு என்று மாத்திரை சாப்பிடுவார்கள்.
1.எப்பொழுதெல்லாம் தலை வலிக்கிறதோ அப்பொழுதெல்லாம் மிட்டாய் சாப்பிடுவது போல்
மாத்திரையைச் சாப்பிடுவார்கள்… தலைவலி நின்றுவிடும்…
2.கூடிய சீக்கிரம் கிட்னியில் விஷத்தினைப் பிரிக்கும் நிலையினை அந்த வலுவை
இழந்து விடுகின்றது… கிட்னி சரியாக வேலை செய்யாது.
இப்படிப்பட்ட விஞ்ஞான உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யாரையும் யாம் குறையாகச் சொல்லவில்லை.
1.ஏனென்றால் அவசரத்திற்கு… இந்தத் தலைவலி நீங்கினால்
போதும் என்று விரும்புகிறோம்.
2.ஆனால் சிறுகச் சிறுக நம் சிறுநீரகங்கள் பாதிப்படைவது
நமக்குத் தெரிவதில்லை.
3.கடைசியில் இலட்சக்கணக்கில் அதற்குச் செலவழிக்க வேண்டி வருகின்றது.
இது மட்டுமல்ல அறியாத நிலையில் இருந்தால் மயக்க மருந்தோ மாத்திரையோ கொடுத்து ஆளை
அபேஸ் செய்து ஆஸ்பத்திரியில் நம் உடலில் இருக்கக்கூடிய முக்கியமான உறுப்புகள்
கண்கள் சிறுநீரகங்கள் இதையெல்லாம் திருடி விடுகின்றார்கள். அது வியாபாரம் ஆகின்றது… விஞ்ஞான உலகம் அப்படி இருக்கின்றது.
பண வசதி படைத்தவனுக்கு இந்தக் கண்கள் மற்ற உறுப்புகள் எல்லாம் பயன்படுகிறது. குழந்தைகள் காணாமல் போய்விட்டது
என்று கேள்விப்படுகின்றோம்.கடத்திக் கொண்டு போய் என்ன
செய்கின்றார்கள்…? குழந்தைகளின் மூளையை எடுத்து வடிகட்டி மருந்தாகத்
தயார் செய்கிறார்கள்.
பண வசதி உள்ளவர்கள் வயதானவர்கள் 75 வயதாகி விட்டது… உடல் சுருங்குகின்றது
உணர்வுகள் சுருங்குகின்றது.
1.சிறு குழந்தைகளிடம் இருக்கக்கூடிய மூளைகள் மூலமாக உருவாக்கிய
சத்துக்களை ஊசியாக அவர்களுக்கு செலுத்தப்பட்டவுடன்
2.அவர்கள் வயசுப் பிள்ளையாக மாறிவிடுகின்றார்கள்.
3.குழந்தைகள் சாக வேண்டும் ஆனால் அவர்கள் வயதுப் பிள்ளையாக வாழ வேண்டும்
என்று
4.இன்றைய விஞ்ஞானத்தில் இது நடந்து கொண்டிருக்கின்றது.
விஞ்ஞான வழியில் போக வேண்டும் என்றால் அப்படிப் போகலாம். இந்த உலகம் பூராம் விஷத்தன்மை பாயும்
நேரத்தில் மெய் ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தப்பிக்கலாம்.
காடு மேடலாம் விஷத்தன்மை பரவி விட்டது. மேலை நாடுகளில் எல்லாம் தழைத் பாம்புகளை அது போன்ற சத்துள்ளவைகளை
ஆடு மாடு போன்ற மற்ற தான் வளர்க்கும் உயிரினங்களுக்குக் கொடுத்து நன்றாக வளர்த்து
அந்த மாமிசங்களை இவர்கள் உட்கொள்கின்றார்கள்.
அதே மாதிரி மனிதர்கள் உறுப்புகளை எடுத்து வியாபாரம் செய்வது… மனிதன் தனியாகச் சென்றால் அவனுக்கு
உதவி செய்வது போன்று அழைத்துச் சென்று அவனையே அறுத்து வேக
வைத்துச் சாப்பிட வேண்டியது. அப்படிப்பட்ட காலம்
வந்துவிட்டது.
நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட நிலை உலகிலே உருவாகி விட்டது…!
சில இடங்களிலே நாங்கள் அனாதைக் குழந்தைகளுக்கு உதவி செய்கிறோம் என்று வளர்ப்பார்கள். கடைசியில் எங்களுக்குக் குழந்தை வேண்டும்
(தத்துக்கு) என்று சொல்லி மேலை நாடுகளுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.
வேண்டிய உறுப்புகளை மட்டும் எடுத்துவிட்டுக்
கப்பலில் சென்று மற்றதைத் தூக்கிக் கடலிலே வீசி விடுகின்றார்கள்.
இதெல்லாம் இன்று நடந்து
கொண்டிருப்பது…
1.மனிதன் மிருகம் ஆகிவிட்டான்…
2.இந்த உலகத்தில் தான் இன்று வாழ்கின்றோம்
3.உலகத்தில் மாற்றத்தினுடைய நிலையில் நெருங்கி விட்டது.
இதிலிருந்து நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ள என்ன செய்யப் போகின்றீர்கள்…?
மந்திரத்தினால் யந்திரத்தினால் நன்றாக வேண்டும் என்று எண்ணினால் அந்த வழியில்
செல்லுங்கள். இல்லை என்றால்
இப்பொழுது யாம் உபதேசிப்பது போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
என்று எண்ணி அந்த ஆற்றல் மிக்க சக்திகளை வளர்த்து உங்களை நீங்கள் காத்துக்
கொள்ளலாம்.
உங்களுடைய இஷ்டம் தான் அது…!
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் அனைத்தையும் நான் கண்டேன். பார்த்தேன்
உண்மையைச் சொல்கின்றேன்.
2.நீங்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று உயர்ந்த சக்திகளைக் கொடுக்கிறோம்.
3.அதை எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கலாம்…
4.இல்லை… “சாமி நன்றாகக் கதை
சொல்கின்றார்” என்று நினைத்துக் கொண்டு போனாலும் போகலாம்.
5.”பழைய நிலைகளிலிருந்து மாறாதபடி… அப்படியே இருக்கலாம்…”
இது எல்லாம் உங்களுடைய இஷ்டம் தான்.
நல்ல நிலைகள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன். திட்டியவர்களைப் பற்றி எண்ணியவுடன்
அல்லது காதிலே கேட்டவுடன் அவர்களை உடனே தாக்க வேண்டும் என்று எப்படி அந்த வேகங்கள்
வருகின்றதோ அதே போன்றுதான்
1.நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
2.உங்கள் துன்பங்களை அகற்றிவிட்டு நோய்களை அகற்றிவிட்டு உங்களை மகிழ்ந்து
வாழச் செய்யும்.
3.அந்த நிலைக்கு வர வேண்டும் என்றால் யாம் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம்.
“அது உங்கள் இஷ்டம்…”
இன்று வாழ்கின்றோம்… செத்த
பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இறந்த பின் உடலுக்குள் “பேயாக ஆடுவதையும்” தீயிலே குதித்து
இறந்து விட்டது என்றால் அடுத்த உடலுக்குள் சென்று “அய்யய்யோ
அய்யய்யோ எரிகிறது” என்று அலறிக் கிடப்பதையும் பார்க்கலாம்.
இறந்த பிற்பாடு இந்த ஆன்மாக்கள் அடுத்த உடலில் புகுந்து விட்டால் இப்படித்தான்
வேலை செய்யும்.
மருந்து குடித்து இறந்ததென்றால் அந்த ஆன்மா ஒரு உடலுக்குள் சென்றால்… அது மருந்தைக் குடிக்கும் போது “தொண்டை எல்லாம் எப்படி மண்ணையைப் பிடித்து இறுக்கியதோ” இந்த உடலில் அதே மாதிரி
இயக்கும்.
ஆக… இறந்த
பிற்பாடு எங்கே செல்கிறோம்…? என்றால் இன்னொரு உடலுக்குள்
சென்று அவனை வீழ்த்தி விட்டு அந்த விஷத்தின் தன்மை கொண்ட அடுத்த உடல் பெறுவதற்கு… மிருக இனங்களாகச் செல்வதற்குத் தயாராகி விடுகின்றது.
இப்படித்தான்… “நாம் செத்த
பின் சொர்க்கலோகம் போகிறோம்…” என்று சொல்வது.
ஆகையினால் இந்த உண்மை நிலை எல்லாம் நீங்கள் உணர்ந்து கொண்ட பின் மெய் வழியின்
தன்மை பெற வேண்டும் என்றால் இது போன்ற தியானங்களின் மூலம் அந்த ஞானிகள் அருள்
சக்திகளை நீங்கள் எடுக்க முடியும்.
அவர்கள் எல்லாம் பத்தாவது நிலையான கல்கி நிலையை அடைந்தவர்கள். அந்த உயர்ந்த எண்ணங்களை எடுக்க
வேண்டும் என்றால் அதற்குத் திறன் வேண்டும். “அதற்கு வேண்டிய மின்சாரம் தேவை…”
எமது குருநாதர் விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல்களை உடலுடன் வாழும் பொழுது அவர்
எடுத்துக் கொண்டதை அது எப்படி…? என்று எமக்கு உபதேசித்தார்.
1.மெய் ஒளியின் தன்மையைப் பெருக்கும்
நிலையும் மனித உணர்வுகள் அண்டாத நிலையும்
2.அந்த விண்ணுலக ஆற்றலை எடுத்து அதை வளர்த்துக் கொள்ளும் முறையையும்
3.மெய் ஞானிகள் அருள் சக்திகளை எடுக்கும் தகுதியையும் எனக்கு ஏற்படுத்தினார்.
12 வருட காலம் அனுபவமாகப் பெற்றேன். அதைத் தான் சொல்லாக
இப்பொழுது வெளிப்படுத்துகின்றேன். இதை நீங்கள் பதிவு செய்து
கொள்ளுங்கள் நினைவு கொண்டால் ஆத்ம சுத்தியின் மூலமாக அந்த மகரிஷிகளின் அருள்
சக்திகளைப் பெற முடியும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நீங்கள்
எண்ணினீர்கள் என்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளை அகற்ற முடிகின்றது.
கருணைக்கிழங்கினை வேக வைத்து விஷத்தை நீக்கிப் பல சுவை மிக்க பொருள்களைப்
போட்டு அதை உணவாக உட்கொண்டு மகிழ்ச்சி அடைவது போன்று
1.எப்படிப்பட்ட
சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள்
புகுத்தி
2.அந்த ஆற்றலைத் தனக்குள் சேர்த்து உடலுக்குள் தீமை
வராதபடி தடுக்க இது உதவும்.