Tuesday, September 23, 2014

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 7

ஐந்து புலனறிவு – பஞ்ச பாண்டவர்கள்
சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம், காந்தம், விஷம் இவை இணைந்து தனக்குள் ஈர்த்துச் சேர்த்துக் கொண்ட மணம், உணர்வு என்ற நிலையில் ஐந்து புலனறிவு கொண்டதாக இயங்குகிறது.

இவ்வாறு இயங்குகிறது என்பதற்கு “பஞ்ச பாண்டவர்” என்று காரணப் பெயரிட்டார்கள் ஞானிகள்.
மனித உணர்வின் இயக்கத்தின் நிலைகள்
தான் செல்வத்தை வைத்துக் கொண்டு இதைத் திருடிச் செல்ல,
“திருடன் வந்துவிடுவானோ..,
திருடன் வந்துவிடுவானோ..?”
என்று அச்சத்தின் உணர்வுகளை ஒருவர் தனக்குள் வளர்க்கும் பொழுது இந்த அச்சத்தின் உணர்வுகள் பரத்தில் (வெளியில்) பரவி, திருடனை இவரிடம் அழைத்தே வந்துவிடும்.

இது மனித உணர்வின் நிலைகள்.
கொசு மனிதனாகின்றது? நாம் எப்படி மகரிஷி ஆகவேண்டும்?
மனித இரத்த வாசனையைக் கண்டு
மனிதர்களையே சுற்றி வந்து மனிதர்களைக் கடிக்கும் கொசு,
அது இறந்தபின் கொசுவின் உயிரான்மா
மனித ஈர்ப்புக்குள் சென்று அடுத்து மனித சரீரம் பெறுகின்றது.

இது போன்று, மகரிஷிகளின் அருள் ஒளியின் உணர்வுகளை எண்ணி ஏங்கி தம்முள் வளர்ப்பவர் அருள் ஒளியின் ஆற்றலைத் தம்முள் பெறுவார்கள்.
சந்தர்ப்பத்தை உருவாக்கும் திறன் பெற்றவன் மனிதன்
பிரபஞ்சத்தில் சூரியனின் இயக்க உணர்வுகள்
சந்தர்ப்பத்தால் மோதும்போதுதான் உருமாற்றங்கள் ஏற்படுகின்றது.

ஆனால், மனிதர்கள் அந்த சந்தர்ப்பங்களை உருவாக்கும் திறன் பெற்றவர்கள்.
நாம் எதை எண்ணி ஏங்கி எடுக்க (சுவாசிக்க) வேண்டும்?
பட்டுப் புழு தன்னைச் சுற்றி கூடு கட்டி,
தான் கட்டிய கூட்டிற்குள்ளேயே அடைபட்டுவிடுகின்றது.

பின், தான் கூட்டிலிருந்து வெளியில் வரவேண்டும் என்ற உணர்வை எண்ணி ஏங்கி எடுத்து பட்டுப் பூச்சியாக உருமாறி வெளிப்படுகின்றது.

இதைப் போன்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி தியானிக்கும்பொழுது துருவ மகரிஷிகளின் அருள் சக்தியினை நாம் பெறும் பருவம் பெறுகின்றோம்.

அப்பொழுது, இந்த உடலைவிட்டு அகன்றால் நாம் என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.