ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2018

தீமையை அகற்றிடும் தியான முறை…!


அம்மா அப்பாவை மனதில் நினைத்து அம்மா அப்பா உயிரைக் கடவுளாக மதித்து நம்மை மனிதனாக உருவாக்கி நம்மைக் காத்து நமக்கு நல் வழி காட்டிய அவர்களைத் தெய்வமாக மதித்து நம் வாழ்க்கையில் என்றுமே வழிபட வேண்டும் என்ற உணர்வினை எடுத்துத் தியானிப்போம்.

குருவாக இருந்து வழி காட்டிய அன்னை தந்தையரின் அருள் துணையுடன் மெய் ஞானிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்ப்போம்.

இந்த உலகில் தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிய துருவ மகரிஷியின் அருள் சக்தியும் அவரைப் பின்பற்றி விண் சென்றவர்கள் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமகரிஷிகளின் அருள் ஆற்றலையும் நாம் பெறுவோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்… பெறுவோம்…! என்று மனதில் ஏக்க உணர்வு கொண்டு நம்முடைய உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்குள்ளும் அந்தச் சப்தரிஷிகளின் பேரருள் பேரொளியையைச் சேர்த்துக் கணங்களுக்கு அதிபதியாக்குவோம்.

அரச சபையை எடுத்துக் கொண்டால் அரசனுக்குக் கீழ் இருக்கும் நிலைகளில் மந்திரிகள் என்றும் படைகலன்களில் சேனாதிபதி என்றும் அதற்குள் எத்தனையோ வகைகள் பிரிக்கப்பட்டுச் சிப்பாய்கள் என்றும் குடிமக்கள் என்ற நிலைகளும் இருக்கின்றது.

அரசன் இடும் கட்டளைப்படித் தான் மந்திரி சேனாதிபதி அவர்களின் செயலாக்கங்கள் இருக்கும். இதைப்போன்று தான்
1.நம் உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைக் கணங்களுக்கு அதிபதியாக்கும் போது அதனின் ஆணைப்படி
2.நன்மை செய்யும் நற்குணங்கள் மந்திரிகளாக இருந்து அது நல்ல வழியில் நடக்கும் ஆலோசனைகளை நமக்குக் கூறுவதும்
3.அதன் வழியில் சேனாதிபதிகளாக ஆட்சி புரியும் வலிமையான உணர்வுகள் நம் உடலுக்குள் வளர்ந்து
4.இந்த வாழ்க்கையில் தீமை அகற்றும் சக்தியாக பொருள் காணும் உணர்வாக நமக்குள் வளர்க்கச் செய்யும்.

அதாவது தீமையை அகற்றும் உணர்வின் தன்மையை நமது சாம்ராஜ்யமாக்கி குடிமக்களின் தன்மை போன்று நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்ற நிலைக்கு நாம் வர வேண்டும்.

நம் அன்னை தந்தையரின் அருளாசியுடன் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் நாம் பெறுவோம்…! அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் அதிபதியாக்க வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.