ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2014

மனிதனானபின் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பைவிட்டு நாம் அகலவேண்டும்.

எத்தனையோ பேர் பக்தியின் நிலைகள் கொண்டு தெய்வத்தின் மேல் பாசத்தைக் கொண்டிருந்தாலும், அதே தெய்வ உணர்வு கொண்டு ஒரு மனிதன் இருந்தால், இந்த உயிராத்மா அந்த உடலுக்குள் போய் அருளாடச் செய்யும்.

ஆனால் இந்த உடலிலிருக்கும்போது எந்த வேதனையைக் கொண்டு எந்த தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்ததோ, இதே உணர்வுகள் அந்த உடலில் சேர்ந்து
நான்தான் முருகன் என்ற நிலையில் அங்கே ஆடச் செய்து,
துன்பத்தை விளைவிக்கச் செய்யும்
குடும்பத்தில் பல இன்னல்கள் வரும்.

ஆனால் அந்த உடலுக்குள் சென்றாலும், அந்த உணர்வின் தன்மை அந்த உடலுக்குள் சென்று இந்த விஷத்தைச் சேர்த்து அதிலும் விஷத்தை சேர்த்து, இரண்டும் இறந்தபின் இந்த வாசனையினுடைய நிலைகள் வேதனை என்ற வியாதியினுடைய நிலைகளை மாற்றிக்கொள்ளுகின்றது.

அப்பொழுது, இந்த உயிராத்மா வெளியிலே வந்தவுடன் அதாவது ஒரு பொருளுக்குள் விஷம் பட்டால், நம்மைத் தேள் கொட்டிவிட்டால் நம் சிந்தனையெல்லாம் இழந்துவிடுவது போன்று வேதனை, வேதனை என்று விஷத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் இந்த மனிதனுடைய நினைவலைகள் அனைத்துமே அழிக்கப்படுகின்றது. அழிந்தபின்தான் ஒரு உடலுக்குள் செல்கின்றது.

ஆனால் மனிதன் எண்ண அலைகளை வளர்த்துக்கொண்ட பின், ஒரு உடலுக்குள் சென்றுவிட்டால் இந்த உணர்வுகள் அவனை இயக்கி, இவன் நிலைக்கு அவனை இட்டுச்செல்லும்,

மந்திரமோ, தந்திரமோ கற்றவருடைய நிலைகள் இப்படித்தான்.

அந்த மந்திரத்தின் மேல் ஆசைப்பட்டுக் கொண்டு அந்த உணர்வின் தன்மை ஏங்கிக் கொண்டிருக்கும்போது, மந்திரம் செய்துகொண்ட ஒரு ஆத்மா இவன் உடலுக்குள் புகுந்துவிட்டால் அந்த மந்திரத்தின் செயலே அங்கு ஆக்கச் செய்யும்.

ஆனால் அது சென்ற வழிகளில் இட்டுச்சென்று, அதன் வழிகளில் பல வியாதிகளைச் சேர்க்கச் செய்து இதே மாதிரி விஷத்தின் தன்மை அதிகமானவுடன் இந்த மனித உடலில் சேர்த்துக்கொண்ட உணர்வுகளெல்லாம் ஒடுங்கிவிடும்.
அப்படி ஒடுங்கிவிட்டால்
மீண்டும் மனித வாசனையை இழந்துவிடும்.

ஆனால், மிருகங்கள் விஷத்தின் தன்மையை தனக்குள் எப்படிச் சேர்த்துக் கொண்டிருக்கின்றதோ, மிருகத்தின் ஈர்ப்புக்குள் இந்த உயிராத்மா சென்று அந்த உடலுக்குள் புகுந்து அந்த உடலின் தன்மையைப் பெறச் செய்துவிடும்.

உதாரணமாக கொசு நம்மைக் கடிக்கிறதென்றால், அந்தக் கொசுவின் உயிராத்மாவில் மனிதனுடைய வாசனை இருக்கிறது. கொசு இறந்து விட்டால் அது மனிதனின் ஈர்ப்புக்குள் வந்துவிடுகின்றது.

இப்பொழுது நமது இரத்தத்தை குடிக்கின்றது. அதனுடைய உயிராத்மாவில் அது சேர்கின்றது.
ஆனால் கொசு இறந்தபின் அந்த உயிராத்மாவில் மனிதனுடைய வாசனை அதிகமாக இருக்கின்றது. அப்பொழுது அந்த கொசுவின் உயிராத்மாவை நம் உடல் ஈர்த்துக்கொள்ளும்.

நம் உடல் ஈர்த்துக்கொண்டு, நம் சுவாசத்துக்குள் சென்று உடலுக்குள் சென்றவுடன், அது உடலுடன் இருக்கும்போது, நம் இரத்தத்தைக் குடித்து, அந்த உயிரின் அணுவாக சுவாசத்திற்குள் உடலுடன் போனால் கொசு மனிதனாகப் பிறக்கும் தகுதியைப் பெறுகின்றது.

ஆனால், மனிதனோ ஒரு உடலுக்குள் புகுந்து அவனை இயக்கக்கூடிய சக்தியாக மாறுகின்றது. அங்கே குழந்தையாகப் பிறக்கும் தன்மையை இழக்கின்றது.

இதைப் போன்று அந்த இயற்கையினுடைய செயல்களில் இருக்கப்படும்பொழுது, மனிதனானபின் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பைவிட்டு நாம் அகலவேண்டும்.

அப்படி அகல்வதற்குத்தான் யாம் சொல்லும் இந்த பேருண்மையுடைய நிலைகளில் அந்த தாய், தந்தையினுடைய பாசத்துடன் நாம் வளரவேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து, முறைப்படி தியானத்தை எடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கிப் பழகவேண்டும்.

மகரிஷிகளி அருள் சக்திகளை வளர்க்க வளர்க்க, இந்த உடலை விட்டு எந்த நேரம் நாம் பிரிந்தாலும் அந்த சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
பேரானந்த பெரு நிலை என்ற நிலை அடைந்து
அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.