ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2014

துன்பத்தை விட்டுவிடுங்கள் - அது “ஓடிப் போகட்டும்...!”

1. கவலை, சஞ்சலம் போன்ற உணர்வுகள் கெடுதலை எப்படி ஏற்படுத்துகின்றது?
நீங்கள் மோசமான ஒரு துணியைக் கட்டி, சந்தோசமாக இருந்தால், அது பந்தோபஸ்தான நிலையில் இருக்கும். நீங்கள் எந்தப் பொருளை எடுத்தாலும், மனதிற்குத் தக்கவாறு உணர்வுகள் வேலை செய்யும்.

சஞ்சலம் சலிப்புடன் இருக்கும் பொழுது, ஒரு புதுத் துணியைக் கட்டிப் பாருங்கள். எப்படியும் அது கிழிந்தே தீரும்.

ஒரு பெரிய இரும்புக் கம்பியினுடைய தன்மைகள் இருந்தாலும், மனிதன் கவலையும், சோர்வும் அதிகமாக எடுத்து, அந்த நட்டை (NUT) முறுக்கினால், “டக்என்று தெறித்துப் போகும்.

ஏனென்றால், அந்த உணர்வின் அலைகளின் நிலைகள். வேறொன்றும் வேண்டியதில்லை. ஒரு இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்பட்டு, அடுத்து கவலை அதிகமானால், ரிப்பேர் அதிகமாகிவிட்டால். அதைச் சரியாகக் கவனிக்கவில்லையென்றால், “SHAFT” தெறித்துப் போகும்.

அவ்வளவு பெரிய இரும்பு, இந்த மனிதனுடைய உணர்வுகள் பட்டவுடன், அந்த எண்ண அலைகள், “கண் பார்வைஎன்று சொல்கின்றோமே, அது தெறித்துவிடுகின்றது. அந்தப் பொருள் உடைந்து விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளை எப்படி தடுப்பது?
2. துன்பத்தை நினைக்கவே வேண்டாம், அது “ஓடிப் போகட்டும்”
இன்று விஞ்ஞான காலம். காலமே இல்லை. நாம் உண்மையைத் தெரிந்து கொண்டோம். நாம் எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை. ஆகவே, இந்த நிலைகளைத் தெரிந்து கொண்டு, நாம் ஒவ்வொரு நிமிடமும் விழித்திருக்க வேண்டும்.

இப்பொழுதாவது உட்கார்ந்து கேட்கிறோம். வரும் காலங்களில் உட்கார்ந்து கேட்க முடியாது. அந்த மாதிரி நிலை வரும். நாளைக்கு உட்கார்ந்தும் பார்க்கலாம், சிருஷ்டிக்கவும் செய்யலாம்.
அந்த மன உறுதியின் தன்மையும் பெறலாம்.
எந்த உணர்வு தாக்கினாலும்,
இந்த உடலை விட்டு நாம் விண் செல்லலாம்.

ஆகையினாலே, சாமி என்னமோ சொல்கிறார் என்று இல்லாதபடி, இவையெல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். நல்ல விதைகளை விதைக்கின்றோம். இதற்கு நீர் ஊற்ற வேண்டியது தியானம்.

அடுத்து, ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைச் சொல்லியுள்ளோம். ஓம் ஈஸ்வரா என்று, புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ண வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று. நன்றாக ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

உங்கள் உடலிலே எத்தகையை துன்பங்கள் வந்தாலும் சரி, துன்பத்தை விட்டுவிடுங்கள். நீ ஓடிப்போஎன்று அதை நினைக்கவே வேண்டாம்.

இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து, தீமைகளை நீக்கினேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது,
பிறர் காது கொடுத்துக் கேட்டவுடன், அவர்கள்,
எங்கள் கஷ்டமெல்லாம் சுலபமாக விலகிவிடும்,
எங்களுக்கு நன்றாக இருக்கும்என்ற எண்ணங்கள் அங்கே தோன்ற வேண்டும்அதற்குத்தான் யாம் இதைச் சொல்வது.